May 21, 2006

தமிழில் ஆப்பிள்..

ஆப்பிள் மக்கிண்டோஷ் பிரியர்கள் அதுவும் தமிழில் ஆப்பிள் மக்கிண்டோஷ் பயன்படுத்துபவர்கள் வெகு சிலரே. சென்ற வருடம் ஆப்பிள் Mac OS X Tiger வெளிட்யிட்டது. அதில் தமிழும் சேர்த்திருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயமே.

அதை பயன்படுத்த நினைப்போர் System preferenceக்குச் சென்று, International என்கிற பகுதிக்குள் க்ளிக்கிவிட்டு, படத்தில் தெரிவது போல், ஆப்ஷன்களை தேர்வு செய்துகொண்டீர்கள் என்றால் தமிழில் பக்கங்கள் பார்க்க, எழுத உதவும்.

நான் சிலகாலமாக, ஆப்பிள் தமிழ் எழுத்துருக்களைத் (Fonts) தேடிக் கொண்டிருந்தேன், இணைமதியைத்தவிர வேறு என்த True Type யூனிகோடு எழுத்துருக்களும் சரியாக வேலை செய்யவில்லை. விஷயத்தை ஆராய்ந்த போது. ஆப்பிள் பயன்படுத்துவது ATSUI-Apple Type Services for Unicode Imaging. என்கிற Unicode Engine.

தமிழில் இணயத்தில் கிடைக்கும் எழுத்துருக்கள் அனைத்தும் Uniscribe என்கிற Unicode Engine கொண்டு வடிவமைக்கப் பட்டதால். ஆப்பிளில் எழுத்துக்கள் உடைந்து தெரிகின்றது. (முக்கியமாக, உயிர் மெய் எழுத்துக்கள்)ஆப்பிள் OS X 10.3 (Panther)அதற்கு முந்தய பதிவுகள் பயன் படுத்துவோர் தமிழில் எழுத (Uniscribe Open type Font களைப் பயன் படுத்தி ஆனால் அதை ATSUI க்கு ஏற்றார்போல் மாற்றி..என்று நினைக்கிறேன்) Xenotypetech போன்ற நிறுவனத்திடமிறுந்து வாங்கும் மென்பொருள் தேவைப் பட்டது. 10.4 (Tiger)ல் அது தேவை இல்லை.

இது தொடற்பாகத் தேடிப் பிடித்ததில், ஆப்பிள் மக்கின்டோஷில் தமிழ் இந்த ஒரே ஒரு வலிப்பூ தான் இது சம்பந்தப் பட்டதாக இருந்தது.

இந்தப் பதிவு பதிக்க முக்கிய காரணம்,
  1. ஆப்பிளில் கூடவே வரும் ATSUI ல் எழுதப்பட்ட இணைமதி எழுத்துரு தவிர வேறு ஏதும் ஆப்பிளில் பயன் படுத்த ஏதுவான எழுத்துரு இணயத்தில் இருக்கிறதா? என்று கேட்கவும்
  2. தகவல் தெரிந்த்தோர், இணயத்தில் ஆப்பிள் பிரியர்கள் (வெறியர்கள்..என்னைப் போன்ற..) தமிழில் எழுதி தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு சேவகம் செய்ய உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதற்காகவும் தான்.

1 comment:

வஜ்ரா said...

I really do not know how and what to point you to start working with Apple. My opinion may be biased because i am an ஆப்பிள் வெறியன்..!! :))

You have to use it to get the feel of it.

You can browse through Apple website.