June 29, 2006

அண்ணன்-தம்பி, ஒரு அரக்கன்

அடர்ந்த காட்டின் நடுவில் இருக்கும் ஒரு அழகான கிராமம். அந்த கிராமத்தில் வாழ்ந்த ஒரே குடும்பத்தில் பிறந்த அண்ணன் தம்பி இருவர் மிக சந்தோஷமாக வாழ்ந்துவந்தனர். அண்ணன் அதிகம் பேசாது அடிக்கடி காட்டில் தவம் செய்யச் சென்றுவிடுவான். தம்பி வெளிப்படையானவன், எல்லோரிடமும் பழகுவான், பேசுவான் ஊருக்குப் பிரச்சனை என்றால் முன்னின்று தீர்ப்பான். கிராமத்தில் ஆகயால் மிக பிரபலமானவன் அவன்.

அண்ணன் தனிமை விரும்பி. கிராமத்தில் தம்பிக்கு உள்ள மதிப்பு தான் அண்ணனுக்கும். அவன் தனிமை விரும்பி என்பதால் கிராம மக்கள் அதிகம் அவனை கண்டுகொள்ளவில்லை. என்றாவது ஒரு முறை வந்து நல்ல சிந்தனைகளை சொல்லிச் செல்வான். அவன் அவனுள் தேடிய சித்தாந்தத்தைப் ஊர்மக்களிடம் பகிர்ந்துகொள்வான்.

ஒரு இரவு, அந்த அழகான அமைதியான கிராமத்தில் அதி பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. நிலத்தின் அடி ஆழத்திலிருந்து ஒரு கொடூரமான ஒற்றை கை அரக்கன் எழுந்தான். கிராமமக்கள் பீதியுற்றனர். நாலாபுரமும் பயந்து சிதறி ஓடினர். அரக்கன் பலரைக் கொன்று அப்பாவி மக்கள் ரத்தத்தால் பூமியை நனைத்தான்.

விஷயம் அறிந்த தம்பி, அரக்கனுடன் நேருக்கு நேர் மோதினான். கிராம மக்கள் தம்பி இது போல் முன்பு பல அரக்கர்களைக் கொன்று கிராமத்தைக் காப்பாற்றியுள்ளதால் சற்றே நிம்மதி அடைந்தனர். ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை. ஒற்றை கை அரக்கன் இரண்டே அடிகளில் தம்பியை இரண்டாகப் பிழந்தான். ஒரு அடியில் அவன் உடல் பிழந்தது, அடுத்த அடியில் அவன் தலை உடலைவிட்டுத்தனியாகப் பிரிந்தது. அடுத்து நிகழ்ந்தது தான் மிகக் கொடூரமானது.

அந்த அரக்கன் கொன்ற தம்பியின் உடலை உண்ணத் துவங்கினான். பாதி தின்ற பிறகு அந்த ஒற்றை கை அரக்கனுக்கு இன்னொரு கை முளைத்தது. அச்சம், பயம், பீதி, கிராம மக்களிடம் இருக்க, அந்த அரக்கன் அண்ணன் இருக்கும் வீடு நோக்கித் திரும்பினான். வீட்டில் அவனால் முதலில் நுளையமுடியவில்லை. ஆனால் ஒரு வழியாக நுளைந்தான். மிகப் பெறும் சண்டை துவங்கியது.

ஒவ்வொரு முறையும் அந்த அரக்கன் அண்ணனை கொல்ல நினைத்து அடிக்குக் அடி அண்ணன் மேல் விழுந்தாலும் அண்ணன் சளைக்காமல் வீறுகொண்டு எழுந்து நின்றான். சில நேரங்களில் அந்த அரக்கன் வெற்றி பெற்றுவிடுவான் போல் இருந்தாலும் அண்ணன் தோல்வியடைவான் போல் இல்லாததால் சண்டை நீடித்தது. கடைசியாக மரண அடி ஒன்று கொடுக்க அரக்கன் தன் வலைமையெல்லாம் ஒன்று திரட்டி அண்ணன் மேல் பாய்ந்தான். பாய்ந்தவேகத்தில் சுவற்றில் அடித்த பந்து போல் அண்ணன் கொடுத்த அடியில் திரும்பிவந்து சுருண்டு விழுந்தான். யாரும் யாரையும் வெற்றி கொள்ளவில்லை என்கிற நிலையில் இருந்தது.

அண்ணன் ரத்தம் சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்தான், அரக்கன் அண்ணன் கொடுத்த அடி தாங்காமல் விழுந்து கிடந்தான். அவன் தம்பிக்கு என்ன நேர்ந்தது என்பது இன்னும் அண்ணனுக்குத் தெரியாமல் இருந்தது, இருவரிடையே பேச்சுவார்த்தை சற்று நாளாக இல்லாமல் இருந்தது. இந்த வேளையில் சுருண்டு கிடந்த அரக்கனுக்கு இனி சண்டை போடுவதில் யாருக்கும் நன்மையில்லை என்று புத்தி வந்திருக்கும் என்று நம்பி அண்ணன் நட்புக்கரம் நீட்டினான். அப்பொழுதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது.

அந்த அரக்கன் நட்புக்கரத்தை கடித்துக் குதறி தனியாக பிரித்தெடுத்துக் கொண்டான். பிறகு அதையும் தம்பியின் உடலைத் தின்றது போல் உட்கொண்டான். அவனுக்கு இப்பொழுது மூன்றாவது கை முளைத்தது.

ஆச்சர்யத்தில் ஆழ்ந்த அண்ணன் அப்பொழுதுதான் தன் தம்பிக்கு நிகழ்ந்திருந்த அகோரத்தைக் கண்டான். அங்ஞனம் அவனுள் எழுந்த சிந்தனை அவனை துளைத்தது. நாம் போரிடும் அரக்கன் சாதாரண அரக்கன் அல்ல, அவனின் வெற்றி என்பது நாம் கொண்டாடும் வெற்றி போல் அல்ல என்பதை உணர்ந்தான்.

இப்பொழுது அந்த அரக்கனிடம் திருந்திவிட்டான் என்று நம்பி இருக்கும் இன்னொரு கரத்தையும் நீட்டுவதா அல்லது இருப்பதை வைத்து அந்த அரக்கனை முடித்துக் கட்டுவதா? என்கிற கேள்வி அவன் மனதில் எழுந்து நின்றது.

இந்த கதையை நான் ஏன் சொல்கிறேன்...?

இதில் வரும் கிராமம் நாம் வாழும் இந்த உலகம், (அல்லது, ஆசியா என்று வைத்துக் கொள்ளலாம்). அந்த அண்ணன் மற்றும் தம்பி இந்து மற்றும் பாரசீக (Zorastrian) நாகரீகங்கள். அந்த அரக்கன் வேறு யாருமல்ல இஸ்லாம் தான்.

உலகில் எந்த நாகரீகத்துடனும் ஒப்பிடும் வகையில் இருந்தது ஸஸ்ஸானித் ராஜ்ஜியம் (Sassanid Empire).

இஸ்லாம் அரேபியாவில் துவங்கி Cannibalism மூலம் ஈரான் என்கிற நாட்டை ஆக்கிரமிப்பு செய்து விட்டது. அது தம்பிக்கு விழும் இரண்டு அடிகள், காதிச்சிய ( Qadissia) மற்றும் நெஹவெந்த் (Nehevend) யுத்தங்கள், அதுவே zorastrian மதம் உலகைவிட்டு காணாமல் போனதற்குக் காரணம். இப்பொழுது அது இஸ்லாமின் இரண்டாவது கை.

பிறகு அந்த தனிமை விரும்பி அண்ணன் (இந்து) வுடன் தொடரும் யுத்தம்.

கடைசியாக தன் பலத்தைத் திரட்டி அரக்கன் அடிப்பது - அவுரங்கசீப்பின் ஆட்சி, அண்ணன் அடிக்கு பதிலடி - சிவாஜி. சுறுண்டு கிடக்கும் அரக்கன், 18ஆம் நூற்றாண்டின் இருதியில் அடிபட்டுக் கிடக்கும் இஸ்லாம்.

அண்ணன் நட்புக்கரம் நீட்டுவது, மஹாத்மா காந்தி அளிக்கும் அமைதிக்கான நட்புக்கரம். அது கேவலமான பாகிஸ்தானாக (அரக்கனின் மூன்றாவது கை) மாறியது துரதிர்ஷ்டவசமானது.

அந்த அண்ணன் மனதில் எழுந்து நிற்கும் கேள்வியே இப்பொழுது நம் முன் நிற்கும் கேள்வி.

நன்றி

தெரசா-செந்தழல் ரவி-ஒரு விளக்கம்.

சமீபத்தில் அன்னை தெரசா பற்றி ம்யூஸ் அவர்கள் ஏதோ சொல்லப் போக. செந்தழல் ரவி அவர்கள் கோபமாக பதிவு ஒன்று போட்டுவிட்டார்.

அதில் ம்யூஸ் அவர்கள் கருத்து conspiracy theory என்று குமரன் எண்ணம் கருதுவதாகக் கூறியிருந்தார்.

அதற்காக நான் ஒரு பதில் இட்டேன்.

அதன் நகல் இங்கே...


குமரன் (எண்ணம்),

mother teresa is not holier than thou!! She had a personal agenda and not even the vatican would deny it.

சும்மா, கான்ஸ்பிரசி தியரி என்றெல்லாம் இதை ஒதுக்காமல், சிந்திக்கவேண்டும்.

மே. வ கம்யூனிஸ்ட் அரசு ராமகிருஷ்ணா மிஷண் செய்யும் சேவையை ஏக கட்டுபாடு போட்டு துளைத்து எடுத்ததில் அவர்கள் உயர் நீதிமன்றம் சென்று தனியாக minority அந்தஸ்து பெறவேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தப்பட்டது தெரியுமா?

அது எப்படி உங்களால், ராமகிருஷ்ணா மிஷன்/சங்கராச்சார்யார் என்றால் தப்பு செய்யலாம் ஆனால் தெரசா தப்பு செய்திருக்கக்கூடாது என்ற எண்ணத்தோன்றுகிறது.?

(ஒரு உதாரணத்திற்காகத்தான் இங்கே சங்கராச்சார்யார் பற்றி விவாதிக்கிறேன்...)

The "conspiracy theory" may be,

"if it is a hindu, then he or she is guilty unless proven innocent. If it is a christian or mulsim, then he or she is innocent unless proven guilty."

Double standards or என் கண்ணோட்டத்தில் திம்மித்துவம் at its best.


அதற்கு செந்தழல் ரவி பதிலும் தந்திருந்தால் அதில் அவர்,


அப்படி என்ன தப்பு கண்டுபிடித்துவிட்டீர் அன்னை தெரசாவிடம்..? ஷங்கர்...கொஞ்சம் உங்க கருத்தை சொன்னால் ( ஆன்லைன் லிங்க் எதுவுக் கொடுக்காமல்)
நன்றாக இருக்கும்...


இப்படி கேட்க...

யாரோ ஒரு விஷமி, அவர் வைத்திருந்த அதர் ஆப்ஷன் பயன் படுத்தி, என் பெயரில்


வஜ்ரா ஷங்கர் said...
அவர் கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்தார். அவ்வளாவுதான் இப்போது சொல்ல முடியும்.

Thursday, June 29, 2006 1:53:18 PM


இப்படி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டது.

அதை நான் ரவியிடம் தனி மடலில் விளக்கி சொல்ல. ஆனால் ரவியோ, உங்கள் கருத்துக்கும் அந்த பின்னூட்டத்திற்கும் எந்த வேறுபாடுமில்லை என்ற மனோபாவத்திற்கு வந்து அதை நீக்க வில்லை.


Sankar
ravi,
இந்த பதில்...என்னுடயது அல்ல...

வஜ்ரா ஷங்கர் said...
அவர் கொல்கத்தாவில் விபசார விடுதி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்தார்.
அவ்வளாவுதான் இப்போது சொல்ல முடியும்.

Thursday, June 29, 2006 1:53:18 PM

யாரோ ஒரு விஷமி என்பெயரைப் பயன் படுத்தி அதர் ஆப்ஷனில் அந்த பின்னூட்டம்
போட்டு இருக்கிறது. அது என் கருத்து அல்ல.

..
Ravindran Antonysamy:

Why don't I say - you are the one who used the other option....

See how problematic other option...

I think its 'muse' who used his other option. Trying to get the IP

..
Sankar
see, some body is using my name to push his or her ideas...

before we debate how good is mother teresa please understand and
inform Mr. Kumaran Ennam also that it was not me.

Because these may cause trouble in understanding each other. I respect
opinion. But, i do not abuse.

And please tell me what do you mean by,

> Why don't I say - you are the one who used the other option....

Why the hell should i? I am bold enough to tell what i feel.

...

Ravindran Antonysamy:

There is other side also right..thats why I told like that...but both of
your comments not have much differences. Yes I know how good she is.
Lets leave this matter.

Bye.
...
Sankar
But its important that you publish my comment telling that its not my
opinion that she was running brothel...!!

and i suggest you remove the following convesation in which i am
accused repeatedly as running mallicious propaganda...

Even kumaran ennam has taken it immediately and responded.



இதில் என் தவறு ஏதுமில்லாமல் நான் மன்னிப்பு கேட்கவேண்டிய கட்டாய சூளலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

June 26, 2006

பெண்ணுரிமைவாதம்

இன்று இந்தியத் தூதரகத்தில் வேலை செய்யும் ஒருவரின் மனைவியும், தில்லி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிபவருமான திருமதி. மைனா சாவ்லா சிங் சொற்பொழிவு கேட்கக் கிடைத்தது. அவர் சொற்பொழிவு நடத்த எடுத்துக் கொண்ட தலைப்பு "Women empowerment in contemporary India".

இந்த சொற்பொழிவில், இந்தியாவில் பெண்ணுரிமை எப்படி வளர்ந்து இன்றய சூளலில் எப்படி செயல்படுகிறது என்பதை பற்றிச் சொன்னார். விவாகரத்து, மற்றும் Abortion சட்டப்படி தடையில்லை என்பது இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்றும் சொன்னார். சொற்பொழிவின் முடிவில் எழுப்பப்பட்ட கேள்விகளில் சில,

இங்கே இஸ்ரேலில் மத அடிப்படையில் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். Court marriage, அதாவது மத வேறுபாடு இல்லாமல் பொது சிவில் சட்டப்படி கல்யாணம் செய்து கொள்ளுதல் என்பது இல்லை. அத்தகய திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லை. அப்படி செய்யவேண்டும் என்றால் cyperus அல்லது வேறு நாட்டிற்குச் சென்று தான் மணமுடிக்கவேண்டும், இந்தியாவில் எப்படி? என்று ஒருவர் கேட்க.

அவர் கூறிய பதில்,

இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்பது optional அதாவது உங்களுக்கு வேண்டும் என்றால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். எத்தகய கட்டாயமும் இல்லை.

இப்படி அவர் கூறிவிட்டு, இந்திய மாணவர்கள் அமர்ந்திருக்கும் பக்கம் திரும்பி உங்கள் விருப்பம் என்ன என்று கேட்க? ஆச்சர்யமாக அனைத்து மாணவர்களும், Court marriage ஐ விட குடும்பத்துடன் சந்தோஷமாக செய்யும் திருமணம் விருப்பம் என்று கூறினர். Court marriage என்பது பாஸ்போர்ட் வாங்க, அல்லது மனைவி/கணவன் என்ற அங்கீகாரம் பெற்றுக் கொள்ள ஒரு காகிதமாக மட்டுமே பயன் படுத்த விறுப்பம் என்று கூறினர்.

இதில் ஒரு சூட்சமம் உள்ளது, என்னதான் court marriage ல் கட்டாய திருமணம் செய்துகொள்ள முடியாது என்றாலும், பெரும்பானையானவர்கள் திருமணம் என்பது சந்தோஷமான விஷயம் அதில் குடும்பத்துடன் சேர்ந்துமகிழும் ஒரு தருணமாகவும் பார்க்கின்றனர். மேலும், எத்தனை பேர் கட்டாய திருமணம் செய்துவைக்கின்றனர். கிராமத்தில் கூட இத்தகய கட்டாய திருமணம் குறைந்துவருகிறது.

Arranged marriage (யூதர்களுக்குள்ளும் இது பரவலாகக் காணக்கூடிய ஒன்றுதான்) பற்றியும் மட்டையடியாக அது தப்பு என்றெல்லாம் உளரிக் கொட்டாமல், எத்தனையோ arranged marriage சிறப்பாகச் செயல்படுகிறது. அது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. பெண்களின் விருப்பத்திற்கு தடையில்லாத திருமணம் தான் அவர் எதிர்பார்ப்பது என்று தெளிவாகக் கூறினார்.

பொது சிவில் சட்டம் பற்றி அவர் கூறிய கருத்துக்கள்:

இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்பது optional என்றாலும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளுதல் இல்லை. சிறுபான்மையினர் அரசியல் அதில் புகுத்தி பெறும் பிரச்சனைக்குள் மாறிவிட்டதாக அவர் கருதுகிறார். மேலும் சிறுபான்மையினர் (முஸ்லீம்கள்) பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இந்து சட்டதிட்டத்தை இஸ்லாமியர் மீது திணிப்பதாக கருதுவதால் அது நடைமுறைக்கு வரவில்லை என்றார். மேலும் அவர் அது இந்துக்கள் சட்டம் அல்ல, பொதுவில் இருக்கும் Liberal சட்டம் என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னது சிறப்பாம்சம் (பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று கூறும் பெண்ணீயவாதிகள் என்ன சொல்வார்கள்?).

பெண் சிசுவை கரு கலைப்பு செய்வது பற்றி வழக்கம் போல் புள்ளிவிவரங்கள் சொல்லிய பின், நிலமை மாருவதாகவும் சொன்னார். இந்த விஷயத்தைப் பற்றி பேசும் போது அவர் குறிப்பாகச் சொன்னது, சீனாவில் நடக்கும் பெண் சிசு கரு காலைப்பு பற்றி.

சீனாவில் "ஒரு குழந்தை" சட்டம் இருப்பதால், சராசரி குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள அரசு அனுமதி இல்லை. அப்படி மீறி பெற்றுக் கொண்டால் வேலை போகும் அபாயம் உள்ளது. ஆகயால் அதிகமான குடும்பங்கள் பெண் குழந்தையை விரும்பாமல் கரு கலைப்புச் செய்கின்றனர்.


ஒருவர், விபச்சாரம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்க,

எல்லா பெண்ணுரிமைவாதிகள் போல் சட்டப்படி அதுவும் ஒரு வேலையாகக் கருதவேண்டும் என்று எல்லாம் empty rhetoric அடிக்காமல், விபச்சாரத்தை யாரும் விரும்பிச் செய்வதில்லை. அவர்கள் வரும் ஏழ்மைநிலையிலிருந்து அதை பார்க்கவேண்டும் என்றார். (இந்தியாவில் விபச்சாரம் சட்டப்படி குற்றமல்ல, சாலைகளில் நின்று கொண்டு வாடிக்கையாளர்களைப் பிடிப்பது தான் தவறு, அதை அதற்கென உள்ள ஏரியாக்களில் தான் செய்ய முடியும்).

இந்து மதத்தில் பெண்களின் உரிமை பற்றி ஒருவர் கேட்க...(அவர் யூத மற்றும் மற்ற செமைடிக் மதங்களின் அடிப்படையில் கொண்டு கேட்ட கேள்வி) இந்து மதத்தில் பெண்களை வழிபடுகிறார்கள். இந்து மதத்தில் எத்தகய புத்தகக் கோட்பாடு என்று ஒன்றும் இல்லாததால் எது சிறந்தது என்பதை முடிவு செய்து நாமே முன்னேற்றி கொள்ளலாம். மொத்தத்தில் ஒரே பதிலை வழங்க முடியாது, சில கோவில்களில் பெண்கள் அனுமதி மறுக்கப் படலாம், பல கோவில்களில் அப்படி அல்ல. என்று உன்மை நிலையை தெளிவாகவே விளக்கினார். ஒரு சில பெண்ணீயம் பேசுபவர்கள் மட்டையடியாக மதங்களை ideological காரணத்தினால் வெறுப்பது போல் இல்லாமல் அவர் பேசியது சிறப்பு.

மேற்கத்திய மத-கலாச்சாரச் சூளலில் பெண்ணுரிமை என்பது எப்படி இருக்கிறது, இந்தியச் சூளலில் பெண்ணுரிமை என்பது எப்படி வேறுபடிகிறது என்பதைப்பற்றி டெல் அவீவ் பல்கலைக் கழகத்தில் அவர் ஒரு course நடத்தப் போவதாகவும் சொன்னார். உண்மையில் மேற்கத்திய பெண்ணுரிமைவாதத்திற்கும் மற்ற ஆசிய ஆஃபிரிக்க அல்லது இந்திய பெண்ணுரிமை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன என்பதை உணர்ந்த பெண்ணீயவாதியாக அவர் இருந்ததும் சிறப்பு.

June 24, 2006

(போலி) எதிர்ப்புவாதி ஆவது எப்படி?


எதிர்ப்புவாதம்:

முதலில் டெஃபணிஷன்...
அதாவது, அரசின் அல்லது ஒரு நிறுவனத்தின் (establsihment) நெறி முறைகளை தக்க ஆதாரத்துடன் மக்கள் நலனுக்காக சுயநலமில்லாமல் தவறை சுட்டிக்காட்டி திருத்தும் வகையில் எதிர்ப்பவர்களே எதிர்ப்புவாதிகள். அவர்கள் செய்யும் செயல் எதிர்ப்புவாதம்.

இன்றய trend போலி எதிர்ப்புவாத அரசியல். உண்மையான எதிர்ப்புவாத அரசியலில் ஈடுபடுவதைவிட போலியான எதிர்ப்புவாதம் பேசுவது சுலபமானது, ஹாஸ்யமானது மற்றும் உண்மையாகவே பலரை April fool (ஏப்ரல் அல்லாத பிற மாதங்களில்கூட) ஆக்குவதற்கு சிறந்த வழிமுறை. இத்தகய எதிர்ப்புவாதத்தில் சொல்லுக்கும் செயலுக்கும் முறனாக செயல்படுவதே சிறப்பு.

போலி எதிர்ப்புவாதி ஆவது எப்படி என்பதை இந்த பதிவு விளக்கும்.

௧. உண்மையான எதிர்ப்புவாதி போல் வேஷம் மிக முக்கியமானது.

  • தாடி வைத்துக் கொள்ளவேண்டும். (கண்ணாடி இருந்தால் சிறப்பு, அதிலும் சோடாபுட்டி என்றால் ஆஹா! பிரமாதம்)
  • குர்தா போட்டுக் கொண்டு ஜோல்னா பை ஒன்றை மாட்டிக் கொள்ளவேண்டும்.
  • அடிக்கடி கவலையாக தென்படவேண்டும். சற்றே கோபமாகக் கூட இருக்கலாம்.
  • ஏழைகளைப்பற்றி அதீத கவலை கொள்வதுபோல் பேச வேண்டும். (உண்மையாக கவலை தேவையில்லை)


  • ௨. மதங்களைப் பற்றி "Opiate of the masses" என்கிற கண்ணோட்டம் வேண்டும் (இந்து மதம் மட்டுமே அதில் வரும்).
    என்ன தான் மதங்களை எதிர்த்தாலும், உள்நோக்கத்தில் கிறுத்துவம், இஸ்லாம் போன்ற மத்தியகிழக்கு மதங்கள் உசத்தி, சிலை வழிபாடு தாழ்ச்சி என்று எண்ணவேண்டும். இந்து என்றால் இழிவு, மற்ற மதங்கள் பற்றி பேசுவது கூடாது ஏன் என்றால் அவர்கள் நம்பிக்கையை நாம் கிண்டல் அடிப்பது தவறு என்கிற தனித் தன்மை நமக்கு வேண்டும்.

    ௩. புத்தகம் எழுதி ஃபேமஸ் ஆவது, படம் வரைந்து ஃபேமஸ் ஆவது போன்ற காரியங்கள் உண்மையான எதிர்ப்புவாதிகள் செய்வதால் அதையே நாமும் நம் எண்ணத்திற்கேற்ப செய்யவேண்டும். இந்து மத நம்பிகைகளை கிண்டல் செய்வது Highly recommended. "சதி" போன்ற தீய பழக்கங்கள் ஏன், எதற்கு, எப்படி சமூகத்தில் வந்து சேர்ந்தது என்பதை மறைத்துவிட்டு அதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளவேண்டும்.

    ௪. உண்மையான எதிர்ப்புவாதிகள் சாதீயத்தின் கேடு கெட்ட நிலையை சாடுகிறார்கள் என்பதற்காக, நாமும் சாதீயத்தை சாடவேண்டும். ஆனால் நாம் சாதீயத்தை சாடுகிறோம் என்கிற பெயரில் தூய அப்பழுக்கற்ற பிராமண வெறுப்பைக் காட்டவேண்டும். யார் நம் கொள்கைகளை தவறு என்று சொல்கிறாரோ அவரை உடனடியாக பார்பான், அல்லது ஹிந்துத்வாவாதி என்று பட்டம் கட்டவேண்டும்.

    "பட்டங்கள் கட்டுவதும், சட்டங்களை உடைப்பதும் பாரினில் நாங்கள் நடத்த வந்தோம்!!"


    என்பது போல் கோஷம் போடுவது கொடி பிடிப்பது சாலச் சிறந்தது, சீக்கிரமே promotion கிடைத்து அறிவாளிகள் லிஸ்டில் சேர்ந்துவிடலாம். பிறகு வெளிநாடுகளில் விசிட், அவ்வப்போது அமேரிக்க எதிர்ப்பு போன்ற காரியங்களில் ஈடுபட்டு வெள்ளைக்காரனிடம் பிச்சை எடுத்துவந்து, அந்த பணத்தில் பங்களா கட்டிக் கொள்ளவேண்டும்

    (சிறப்பு விபரம்: அரசு நிலத்தில் கட்டிக் கொள்வது சிறந்தது).

    ௫. தமிழ்நாட்டில் திராவிட வாதத்தை ஆதரிக்கவேண்டும். அது எத்தகய அடிப்படை கொண்டது, எப்பேர்ப்பட்ட பிரிவினைக்கு அது வித்திடக் கூடியது என்பதை பற்றியெல்லாம் யோசிக்கக்கூடாது.

    ௬. மாவோயிஸ அல்ட்ராக்கள், நக்ஸல்பாரி இயகங்கள், கஷ்மீர் பிரிவினைவாதிகள் போன்றவர்களை ஆதரிப்பது சரி என்கிற நிலைப்பாடு மிக மிக அவசியம். ஏன் என்றால் அது தான் இந்தியா என்கிற "அடக்குமுறை அரசை" எதிர்க்கும் வழிமுறை என்று அப்பாவி மக்களை நம்பவைக்கவேண்டும்.

    ௭. இந்த போலி எதிர்ப்புவாதம் பற்றி ஒரு உண்மையை இங்கே தெரிந்து கொள்ளவேண்டும். அதாவது, வெள்ளைக்காரன் (முக்கியமாக liberals, intellectutals) இந்தியாவைப் பற்றி, பிரச்சனைக்குறிய பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை பற்றி என்ன கருத்து சொல்கிறார்களோ அதை அப்படியே முழுங்கி வந்து வாந்தி எடுக்கவேண்டும். ஏன் என்றால் அவர்கள் அறிவாளிகள் அவர்கள் சொல்வது எப்படி தவறாக இருக்கும் என்ற ரேஞ்சில் கேளிவ் எழுப்புபவர்களிடம் வாதிடவேண்டும். தலையில் மூளை என்பதை எடுத்து வைத்துவிட்டு (மேல் மாடி "to let") பேசுவது சாலச் சிறந்தது. இந்தியா என்பது அடக்குமுறை அரசு என்பதால் அதன் நலம் நமக்கு தீங்கு என்று எண்ண வேண்டும்.

    ௮. அனுகுண்டுகள் தீங்கானவை என்பது எந்த அறிவாளியும் ஏற்றுக் கொள்வான். ஆனால் இந்தியா வைத்திருந்தால் மோசம் என்று சொல்லவேண்டும். காரணம் ஏன் என்றால் இந்தியாவில் ஏழைகள் அதிகம் இருக்கிறார்கள் அவர்களுக்கு சோத்துக்கு வழி இல்லை என்று வாதிடவேண்டும். இந்தியா என்கிற ஒரு நாடு இருந்து அதில் மக்கள் உயிருடன் இருந்தால் தான் (ஏழையோ, பணக்காரனோ!). என்கிற உண்மையை அடக்கி வாசிக்கவேண்டும். (அஸ்வத்தாமா ஹதஹ, குஞ்சரஹ)

    ௯. வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் இந்த போலி எதிப்புவாதத்தைப் பரப்புவது எப்படி என்பது தனிச்சிறப்பு வாய்ந்த Patented technique என்பதால் அதைபற்றி தனிபதிவு தான் போடவேண்டும். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று என்னவென்றால், "தெற்கு ஆசிய மக்கள்" (south asians) என்று சொல்லிக் கொண்டு புதிய identity உருவாக்குவது. இல்லாத ஒரு identity உருவாக்கி அதன் பெயரில் உடோப்பிய சொசைட்டி கற்பனையை விதைத்து NRI க்களிடமிருந்து காசைக் கரக்கவேண்டும். முக்கியமாக இந்த "தெற்காசியா" காய்ச்சலை பலகலைக்கழகங்களில் படிக்கவரும் அப்பாவி மாணவர்களுக்கு வரவைத்துவிடவேண்டும். (இந்த தெற்காசியா காய்ச்சல் பற்றி விரைவிலெயே தனிப்பதிவு போடப்படும்).

    ௰. மொத்தத்தில் போலி எதிர்ப்புவாதத்தின் "ரிஷி மூலம்" என்னவென்றால் செத்துப் போன கம்யூனிசக் கொள்கையை உயிர்ப்பிப்பதே. அதற்கான மிருத்யுஞ்சய மந்திரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. போலி எதிர்ப்புவாதி ஆவதற்கு இந்த மந்திரத்தை நித்தம் காலையும், மாலையும் மேற்கு நோக்கி அமர்ந்துகொண்டு 1008 முறை சோல்லவேண்டும்.

    "ஓம் மார்க்ஸம் யஜாமஹே
    கம்யூனிசம் பூர்ஷ்வா வர்தனம்
    உர்வாருகமாவி பந்தனாத்
    ம்ரித்யோர் முக்ஷீய மா அமிர்தாத்"


    குறிப்பு:

    இந்த மந்திரம் மிக அறிய மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் என்பதால் இந்துத்வாவாதிகளால் அழிக்கப்பட்டுவிட்டது. நீச பாஷை சமஸ்கிருதத்தில் தான் கடைசியாக் மிஞ்சியிருந்தது என்பதால் அதை அப்படியே வழங்கியுள்ளேன்.

    போலி எதிப்புவாதிகளுக்கு சமஸ்கிருதம் தெரியாது என்பதால் மொழி பெயர்ப்பையும் வழங்கிவிடுகிறேன்...

    மார்க்ஸை வழிபடுவோம்
    கம்யூனிசத்தை பூர்ஷ்வா போல் கொழுத்து வழர்த்துவிட்டு
    எப்படி வெள்ளரிக்காய் பழுத்தவுடன் தானாக செடியிலிருந்து பிரிகிறதோ
    அதே போல் மரணத்திலிருந்து உயிர்பிப்பாயாக

    June 22, 2006

    "ஹிந்துத்"பிஃபா2006 - "Hindu" t FIFA2006




    படம் நன்றி: சர்வே சமாச்சார்

    அலஹாபாதில் கங்கை நதிக்கரையில் நடந்த FIFA2006 போட்டியில் விளையாடும் இந்து சாமியார்கள்.

    June 21, 2006

    அருந்ததி ராய்

    சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதளில் இந்தியாவின் அறிவுஜீவிக்களில் ஒருவராக பாவிக்கப் படும் God of Small things புகழ் அருந்ததி ராய் அவர்கள், இந்தியா ஒரு ஜனநாயக நாடு அல்ல என்பதை "கண்டுபிடித்துள்ளதாக" செய்தி வெளியாகியிருந்தது.

    அதிர்ந்து போய், படித்தால்,

    "The biggest PR myth of all times is that India is a democracy. In reality, it is not,’’


    சரி, ஜனநாயகத்தில் கருத்துச்சுதந்திரம் உள்ளது என்பதால், இதை ஏற்றுக் கொண்டு, "அம்மணி, I beg to differ" என்று சொல்லிவிட்டு, 1000 வார்தைகளில் கட்டுரை எழுத்தித் தள்ளலாம். அதை நான் செய்யப் போவதில்லை.
    அதே செய்தியில்,

    Challenging the much-acclaimed views of columnist Thomson Friedman praising India, a democracy of a billion population, for conducting peaceful elections year after year, she said, ‘‘He probably needs a new tour of India... Does Thomas know that in Kashmir Valley alone, some 80,000 people have been killed? In Iraq, there are 1,50,000 military personnel, whereas in Kashmir Valley there are some 7,00,000.’’


    இதுவும் அவர் வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்கள் தான்...இதற்கும் "அம்மணி, ஐ பெக் தொ டிஃப்பர்" என்று 10,000 வார்த்தைகளில் பதில் எழுதிப் பொரிந்து தள்ளலாம். ஆனால் அதையும் நான் செய்யப் போவதில்லை. என் ஒரே பதில் கீழே இருக்கும் படம். A picture speaks a thousand words...


    படம்: நன்றி

    படத்தில் ராய் கை குலுக்குவது, கஷ்மீர் தீவிரவாத இயக்கம் (JKLF-Jammu kashmir libreation front) தலைவர் யாசீன் மாலிக்குடன்.

    குறிப்பு:

    இந்தியா ஜனநாயக நாடு இல்லை என்று சொல்லும் அருந்ததி ராய்க்கு அவருக்கு பிடித்த "ஜனநாயக" நாட்டிற்கு one way விமான டிக்கெட் எடுத்துக் கொடுப்பதற்காக நான் என் பங்கிற்கு 50 டாலர் அனுப்பத்தயாராக உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    June 16, 2006

    சமூக அக்கரை இல்லாதவன் சிந்தனை!

    நான் ஏதோ நாட்டு நடப்பு பற்றிப் பேசாமல் உலகளாவிய விஷயம் தான் பேசிக்கொண்டிருக்கிறேன், தின்ன சோறு செரிமானமாவதற்குத் தான் இந்த வெட்டி அரட்டை என்றெல்லாம் சில அரைவேக்காடுகள் குற்றச்சாட்டு வைத்ததினால் இந்த பதிவு.

    இந்தப் பதிவில் மதவாதம், இந்துத்வாவாதம், மார்க்ஸ்வாதம் என்கிறவார்த்தைகள் உபயோகிக்கப் படமாட்டாது. (பின்னூட்டமிடுபவர்கள் உபயோகிப்பதற்கு எந்தத் தடையுமில்லை.)


    சில நாட்களாக நானும் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். வலையில் தேடியபோது கிடைத்த சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

    ஷரத் ஜோஷி என்கிற விவசாயிகளுக்காக ஷேத்காரி சங்காடனா என்கிற அமைப்பின் தலைவர் எழுதிய கட்டுரை ஹிண்டு பிஸினஸ் லைனில் கிடைத்தது.

    அதில் அவர் வைக்கும் வாதம் வியப்பாக இருந்தது, ஞாயமாகவும் பட்டது.

    விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள முக்கிய காரணம் கடன் தொல்லை என்பது உலகறிந்த உண்மை. பெரும்பாலானோர் அரசு வங்கிகள் அல்லாத தனினபர் நிலச் சுவாந்தார்களிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்குவது முக்கிய காரணம். அதிக வட்டி என்றால் கொஞ்ச நஞ்ச அதிகமா...பகல் கொள்ளைக்கு முப்பாட்டன் மாதிரி 30 முதல் 60 சதவிகிதம்

    இவர்கள் ஏன் இந்த நில்ச்சுவாந்தார்களிடம் இப்படி மோசடி அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டும்.?

    அரசு வங்கிகளின் "சிகப்பு நாடா" விலிருந்து தப்பிப்பதர்காக!

    ஒரு முறை இப்படி கடன் வாங்கியவர், கடன் திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில் நிலச் சுவாந்தார்கள் கூலிப்படை வைத்து கடன் வசூலிப்பு செய்வது போன்ற அட்டூளியங்கள் செய்தனர் /செய்கின்றனர். ஆகயால் பொதுவாக இவர்கள் மேல் கோபத்தைத் திருப்பி வோட்டு வங்கி அரசியல் நிகழ்த்தப்பட்டதே தவிர விவசாயிகளின் உண்மையான பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவரப் படவில்லை.

    1950 களில் சோஷியலிசம் "தழைத்தோங்கிய" காலத்தில் நிலச்சுவாந்தார்கள் மேல் அரசு கடுமையான சட்டம் கொண்டுவந்து தனி நபர் வட்டிக்குப் பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் விவசாயிகள் தர்கொலை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது இன்றும் இருக்கிறது. சரி, குறைந்த பட்சம் விவசாயமாவது சிறப்பாக நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பண முதலீடே இல்லாத ஒரு இலாக்காவாகிவிட்டது இந்தியத்திருநாட்டின் 70% பேர் செய்யும் தொழில்.

    இப்படி ஆவதற்கு என்ன காரணம்?

    இதற்கு ஷரத் ஜோஷி சொல்லும் விடைகள்,

    It was quite clear that even after the abolition of private moneylenders, agriculture continued to be a losing proposition. Farmers continued to be heavily indebted and often driven, in desperation, to suicide. The abolition had one notable result. The agricultural surplus, instead of remaining in the countryside, started moving to the urban areas. That, to all evidence, was the real motive.


    கிராமப்புர மக்கள் நகரத்திற்கு குறைந்த கூலிக்கு வேலைக்கு வருவது, சேரியில் வாழ்வது தான் அதிகமானது என்பது தான் இங்கே நாம் பார்க்கிறோம்.

    In 1950s, the private moneylender was driven out, and it has left the farmers in a lurch. The informal credit organisations continued to work and are still the source of the major part of credit available to the agriculture.


    Agriculture is being starved of genuine homegrown credit institutions. Those who had a certain financial capacity have been scuttled out in the 1950s and are being further targeted now. Further, the exit policy for agriculture does not permit any new enterprise or finances to come in the field of agriculture, even for operational purposes.


    கடைசியாக அவர் கேட்கும் கேள்வி,

    அந்த ஹைதர் காலத்து சோஷியலிச நிலச்சுவாந்தார் வெறுப்பை தூபம் போடுவது தான் இப்போதய தேவையா? அல்லது விவசாயத்திற்கு எது நல்லது என்பதை கருத்தில் கொண்டு, எப்படி விவசாயதிற்கு முதலீடுகளை அதிகரிப்பது என்பதை யோசிப்பது இன்றய தேவையா?

    ஞாயமான கேள்வி..
    பதில் என்னிடம் இல்லை. விவாதத்திற்கு வைக்கிறேன்.

    நன்றி:http://www.gg2.net/upload/farmer22042006.jpg (படத்திற்காக)

    June 11, 2006

    கூட்டுக்களவானித்துவம்

    இஸ்லாமியத்தீவிரவாதத்தின் அறிவுசார் முகம் என்ன என்று யாராவது கேட்டீர்கள் என்றால், அது வேறு யாருமல்ல, போர் விரும்பாத, இடது சாரி அறிவு ஜீவிக்களே.

    இஸ்லாமியத் தீவிரவாதத்தை இவர்கள் ஆதரிப்பது முகம் சுளிக்கவைக்கும் அளவிற்கு இன்று போய்விட்டது.

    டேனியல் பைப்ஸின் வலைப்பக்கங்களைப் பார்க்க. இவர் இந்த இடது சாரிகளின் இஸ்லாமிய Fetish பற்றி நிரையவே எழுதியிருக்கிறார்.

    இடது சாரிகள் புஷ், மற்றும் "சாம் மாமா" வைத் திட்டித் தீர்க்காத நாளே இல்லை என்றாகிவிட்ட சூளலில் எத்தனை இடது சாரிகள் ஒசாமாவின் அல் காயிதா செய்யும் அட்டூளியத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்றால்...ம்ம்ம்ம்ம்ம்.ஹும்!..எனக்குத் தெரிந்து இல்லை. (அப்படியே இருந்தாலும் பூசி மெழுகிஇருக்கிறார்கள்)

    லீ ஹாரிஸ் என்கிற அட்லாண்டா எழுத்தாளர் ஒரு படி மேலே போய், தத்துவ அடிப்படையில் மார்க்ஸ்வாதிகள் செய்யும் இந்த இஸ்லாமிய திவிரவாத apologist வலைக்கு காரணம் சொல்கிறார்.

    கார்ல் மார்க்ஸின் சித்தாந்தத்தில் கூறப்படும் முதலாளித்துவத்தின் அழிவும், சோஷியலிச மக்கள் உருவாகும் Prophecy யும் கவனிக்கப் படவேண்டும்.

    • தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளில் வியாபாரம் படுக்கும்
    • முதலாளிகள் அதிக லாபம் பெற பாட்டாளிகளை நசுக்குவார்கள்
    • பாட்டாளிகள் நசுங்கி ஏழ்மைக்குத் தள்ளப்படுவர்
    • பாட்டாளிகள் புரட்சி வெடிக்கும்
    • சோஷியலிச ஆட்சி அமையும்


    இது எல்லாமே, பாட்டாளிகள் அதாவது கீழ்மட்டத் தொழிலாளர்கள் ஏழ்மை நிலைக்குச் செல்லுதலில் தான் நிறுத்தப்படுகிறது. மேலை நாடுகளில் நிச்சயம் அது நடக்கவில்லை. மாறாக தொழிலாளர்கள் ஏழ்மையிலிருந்து மீண்டு பணம் சேர்க்க ஆரம்பித்து பணக்காரர் ஆனார்கள் என்பது உலகறிந்த சரித்திர உண்மை. அதை மார்க்ஸ்வாதிகள் 50 களிலேயே உனர்ந்துவந்தனர். இதை உணர்ந்தும் மார்க்ஸின் தத்துவம் நடக்கவில்லை என்பதை அறிந்தும் அதை மாற்றிக் கொள்ள முடியாமல் தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களைவிட்டு ஏழை நாடுகளில் இருக்கும் மொத்த மக்களையும் புரட்சிக்குத் தூண்டும் விதமாக செயல்படத் துவங்கிவிட்டனர். ஆகயால் மூன்றாம் உலக நாட்டிலிருந்து முதலாளித்துவத்தின் முழுப்பரிணாமமான அமேரிக்காவைத் தாக்கும் சக்தி எதுவானாலும் இவர்கள் ஆதரிக்கின்றனர்.


    அவர் சொல்லும் காரணம் உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    9/11 நடந்தது, அதை இந்த மார்க்ஸ்வாதிகள், மூன்றாம் உலக நாடுகளின், அமேரிக்க முதலாளித்துவ எதிர்ப்பு, புதிய புரட்சியின் துவக்கம், என்றெல்லாம் வர்ணித்தார்கள்.

    இப்போதும் எந்த ஒரு இஸ்லாமிய அமேரிக்க எதிர்ப்பையும் வெட்கமில்லாமல் தூக்கிப் பிடிப்பது மார்க்ஸ்வாதிகளின் அறிவை கேள்வி கேட்க வைக்கிறது.

    இஸ்லாமிய அமேரிக்க எதிர்ப்பு, இஸ்லாமிய இந்திய எதிர்ப்பு, எல்லாம் ஏழைகளின் புரட்சி என்பவர்கள் 9/11 போன்ற தீவிரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் பண வசதி படைத்த சவூதியிலிருந்து வந்தவர்கள், கஷ்மீர் தீவிரவாதிகள், மதானி போன்ற பயங்கரவாதிகள் ஒன்றும் ஏழைகள் அல்ல. (இன்று ஹிண்டுவில் வந்த செய்தியில் 104 கி. இருந்த மதானி 54 கி வாகிவிட்டதாக கவலைதெரிவித்து கேரள மார்க்ஸ்வாத முதல்வர் கருணானிதியைச் சந்தித்து பெயில் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 104 கி. எடை கொண்டவன் ஏழை என்றால் என்ன அபத்தம் ?) என்பதை யோசிக்கவேண்டும்.

    இவர்களின் ஒரே நம்பிக்கை, இஸ்லாம், மிகவும் சோஷியலிசமான மதம். காரணம், இஸ்லாத்தில் சமத்துவம், சகோரதத்துவம் போதிக்கப் படுகின்றது என்பது. இந்த நம்பிக்கையே, இவர்கள், இஸ்லாத்தில் உள்ள குறைகளை பார்க்க மறுக்கின்ற காரணம். உதாரணமாக, பெண்கள் வெலைக்குச் செல்லக் கூடாது போன்ற அபத்தங்கள் மார்க்ஸ்வாத பெண்ணீயத்தில் பேசப் படமாட்டாது.

    இதே நம்பிக்கைதான், இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஞாயப்படுத்துவது போன்ற அபத்தங்கள் இவர்கள் செய்யக் காரணமாக இருக்கின்றது என்பது என் எண்ணம். உதாரணமாக பாகிஸ்தான் அனுகுண்டு தயாரிக்க இந்தியா காரணம் என்று நம்பவைப்பது, கஷ்மீர் தீவிரவாதத்தை ஆதரிப்பது, பங்களாதேஷில் இந்துக்கள் படுகொலை பற்றி பேசாமலிருப்பது.
    இவர்கள் கூட்டுச் சேர்ந்து இப்படி செய்யும் அட்டூளியம் கூட்டுக்களவானித்தனம். இவர்களின் கொள்கை கூட்டுக்களவானித்துவம்.

    பி. கு., மார்க்ஸ்வாதிகளுக்கு ஓப்பன் கேள்வி...
    பாகிஸ்தானிலோ, அல்லது ஈரானிலோ ஏன், மார்க்ஸ்வாதிகள் பேச்சு எடுபடுவதில்லை என்பதை யாராவது யோசித்ததுண்டா?

    June 8, 2006

    இந்துத்வா என்கிற எயிட்ஸ் கிருமி?

    Disclaimer:

    எனக்கு இந்துத்வா மீது எந்த காழ்புணர்ச்சியும் இல்லை. அதே வேளையில், போலி மதச்சார்பின்மை, கண்மூடித்தனமான கம்யூனிச நம்பிக்கை, இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஞாயப்படுத்தும் அறிவாத்மாக்கள் (apologists of islamic terrorism) மேல் வெறுப்பைத் தவிர வேறேதுமில்லை.




    நேற்று ரோசாவசந்த் அவர்களின் பதிவைப் பார்த்துவிட்டு (பகுத்தறிவின் காட்டுமிராண்டித்தனம்) ஒரு பதில் போட்டேன். அதில் உங்களுக்கு ஏன் இந்துத்வா மேல் இப்படி ஒரு வெறுப்பு? அதை ஞாயப்படுத்த ஏன் இந்த பகுத்தறிவுவாதிகள் செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை ஒரு காரணமாகப் பயன்படுத்தி நீட்டி முழக்கி அதில் இந்துத்வாவை இழுத்து "வஞ்சப் புகழ்ச்சியில்" திட்டியிருக்கிறீர்கள்.? என்று கேட்டேன்.

    அவர், என் முந்தய பதில்கள், சில பல பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு,

    அதில்,
    ஆ, ஊ, என்றால் சும்மா கேள்வி கேட்டதற்கு, முத்திரை குத்தும் "தொழிலாளர்" சங்க உறுப்பினர்கள் சிலர், நீ இந்துத்வாவாதி என்றார்கள். ஏன் இப்படி "லேபிள்" ஒட்டுகிறீர்கள் என்று கேட்டிருந்தேன்.

    அதை வைத்து சற்றே வலது சாரிப் பார்வையுடன் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தயும் கேட்பவர்கள் இந்துத்வாவாதிகள் என்கிற அரிய கண்டுபிடிப்பைக் கண்டறிந்து, அதனால் ஏற்படும் மன மாறுதல்களினால், மொத்த வலது சாரிப் பார்வையுள்ளவர்களின் மேல் காட்டமான வெறுப்பை உமிழ ஆரம்பித்துவிட்டார், சிறந்த வலைப்பதிவாளர் ரோசாவசந்த்.

    அவர் எழுதிய பதில்..
    நல்ல கேள்வி. ஆனால் இப்படி கேள்வி கேட்பவரை 'ஹிந்துத்வா' என்று சொன்னால் கூட அது லேபிள். அது தானே லாஜிக்!

முதலில் தான் என்ன தின்கிறோம் எதை சுவாசிக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லவும் ஒப்புகொள்ளவும் கூடிய குறைந்த பட்ச நேர்மையை கொண்டவர்களுக்குத்தான், என்னோடும் பேசும் தகுதியை தரமுடியும்.


    இதை நான் எப்படி எடுத்துக் கொள்ள?


    "நீ சோத்தெத் தான் திங்கிறியா இல்லெ வேறேதும் திங்கிறியா?, என்கிட்ட பேசுறதுக்கு உனக்கு என்னடா தகுதியிறுக்கு?"


    எனக்கு இதை தான் அவர் கேட்கிறார் என்று படுகிறது. இப்படிப் பட்ட வெறுப்பு உள்ளவர்களின் பதிவில் போய் பின்னூட்டம் போட்ட என்னை எதனால் அடித்துக் கொள்வது?!


    எய்ட்ஸிற்கு மருந்து கண்டு பிடித்துத்தான் ஆகவேண்டுமா?,
எய்ட்ஸ் கிருமி மேல் ஏன் இந்த வெறுப்பு?, அதை ஏன் எதிர்கொள்ள வேண்டும்?, என்று எய்ட்ஸ் கிருமியை ஒரு உயிரியல் ஆயுதமாய் உலவவிட்டவன் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?


    இந்துத்வாவையும் எயிட்ஸையும் ஒப்பிடுபவர், இந்த "எயிட்ஸ்" கிருமி பரவ முக்கிய பங்கு வகிக்கும் இடது சாரி அறிவு ஜீவிக்கள் பற்றியும் சிந்தித்தால் நலம்.

    எதையெல்லாம் வைத்து ஒரு "இந்து" பெறுமைப்பட்டுக்கோள்ள முடியுமோ, தன் சுய மரியாதையை வெளி உலகிற்கு காட்டிக் கொள்ள முடியுமோ, அதையெல்லாம் திட்டிவிட்டு, கண்டபடி கிண்டலடித்துவிட்டு, அதை சற்றே தூக்கிப் பிடிக்கும் இந்துத்வாவாதிகளை ஃபாஸிஸ்ட், என்பது, இல்லை எயிட்ஸ் கிறுமி என்பது.! இது என்ன ஞாயம்?.

    ஒன்று மட்டும் உறுதி, இந்த இந்துத்வா வளர்ச்சியை தடுக்கவேண்டு என்றால் இந்த "Liberal", "secular", "progressive" சிந்தனையாளர்கள் தாம் எங்கே இருக்கிறேம், "எதைத் திங்கிறோம்", "எதை சுவாசிக்கிறோம்", இந்த உரிமை ஒரு கிறுத்துவ அல்லது, இஸ்லாமிய நாட்டில் கிடைக்குமா? என்பதை யோசித்துவிட்டு, இந்து மதத்தை (மதங்களை) திட்ட ஆரம்பிக்கவேண்டும்.

    ஆரிய சமாஜம் கண்ட ஸ்வாமி தயானந்த் சரஸ்வதி ஜாதீயக் கொள்கைகளை எதிர்த்தவர்.
    மஹாகவி பாரதி ஷூத்ரர்களை வீட்டில் அழைத்துவந்து உபனயனம் செய்தவர்.

    அவர்கள் காலத்தில் அவர்கள் "liberal", "progressive" சிந்தனையாளர்கள். இவர்களைப் போல் சிந்தித்தால் இந்துமதம் ஏற்றுக் கொள்ளும், முன்னேரும். அதை விடுத்து, ஆரிய இனவாதம் பேசி, பிராமணர்கள், மேல் ஜாதியினர் மேல் துவேஷத்தை வளர்ப்பது. மிஷனரிக்கள் செய்யும் கேவலமான மத மாற்றத்தை ஆதரிப்பது. இந்து மதத்தை எப்படி அழிக்கலாம் என்று கும்பல் சேர்ந்து திட்டம் தீட்டுவது. இதை எல்லாம் செய்தால், வேறு வழியே இல்லை, இந்துத்வா வளர்ச்சி தடுக்கவே முடியாது. அப்போது, இந்த liberal சிந்தனை எயிட்ஸ் கிறுமியாகிவிடும்.

    இந்துத்வாவை ஃபாசிசம், என்று திட்டி, சும்மா, ஒரு வலது சாரிக் கண்ணோட்டத்தில் கேள்வி கேட்பவர்கள் மீது "லேபிள்" ஒட்டுவதைத் தவிர ஒரு புல் கூட புடுங்க முடியாது.

    June 2, 2006

    தீவிரவாதியின் ஞாயம்.


    நேற்று, நாக்பூரில், RSS தலமையகத்தைத் தாக்க வந்த இஸ்லாமியத்தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    அதைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளிவந்த செய்தி இது.

    தீவிரவாதிகள் செய்யும் கூத்தை ஞாயப்படுத்துவது போல் இருக்கிறது.

    That hate, said intelligence experts, was fuelled by actions like Modi’s announcement on Thursday of a Rs 10-lakh reward — quickly matched by the Congress-run Maharashtra — to the police unit that shot dead the alleged terrorists in Nagpur. “This is an attack on our nation’s culture and challenges our patriotism,” Modi, known for his roots in the RSS, said in Ahmedabad.


    மோடி இதைச் செய்தார், அதனால் தான் தீவிரவாதத் தாக்குதல் நடக்கிறது என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது இந்த வார்த்தைகள்.
    "The terrorists, particularly the ones from Hyderabad, Maharashtra and Gujarat, have during interrogations pointed out how the Gujarat riots led them to believe that there was an anti-Muslim atmosphere in India," said Delhi's DCP (special cell) Ajay Kumar.
    ...
    An intelligence official in Delhi said Gujarat under Modi is now closely watched by agencies in Pakistan and Bangladesh. "Every development impacting minorities is watched there and used to incite disgruntled members in the community… everything, even the decision not to screen the Amir Khan-starrer, Fanaa,"
    ...
    In Uttar Pradesh, the demolition of the Babri Masjid is a fading motivation but Gujarat remains "a tonic", as an IB officer put it.


    எங்கே திரும்பினாலும் எந்த இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கும் காரணம் குஜராத், மோடி. (செய்தியில் பேசும் intelligence experts காரணத்தை அறிகிறார்கள் அவ்வளாவே, அவர்களுக்கும் இந்த பதிவிற்கு சம்பந்தமில்லை.)

    இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு இந்துக்களை அழிக்க காரணம் வேண்டும். அதற்கு மோடி, குஜராத் என்று ஞாயம் கற்பிக்கப் படுகிறது. அது தான் சரி, அவர்கள் மனம் கோனாமல் நடந்துகொள்வது தான் இந்துக்களுக்கு நலம் என்று நம் மதச்சார்பற்ற "ஜல்லி" கெசுகள் சொல்வதுதான் அபத்தம். (மோடி என்றாலே, குதிக்கும் செகுலர்வாதிகள் பதிவுகள், பின்னூட்டங்கள்)

    மோடி இல்லை என்றால் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்கியிருக்க மாட்டார்களா?
    (படத்தில் அக்ஷர்தாம் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்து குழந்தைகள்).

    இன்று மோடி தான் தீவிரவாதத்திற்குக் காரனம் என்று கூப்பாடு போடு இவர்கள் நாளை சிறுபான்மையினர், இந்துக்கள் உயிருடன் இருப்பதே நாட்டிற்குக் கேடு என்று நினைத்தால், நாம் எல்லாம் தற்கொலை செய்து கொள்வதில் தான் சிறுபாமையினர் நலம் உள்ளது என்று சொல்லித் தற்கொலை செய்துகொள்ளச் சொல்வார்களோ?

    இது போல் தீவிரவாதிகளின் அநியாயத்தை ஞாயப்படுத்துவது தான் திம்மித்துவம் என்று சொன்னேன். அதையே இப்பொழுதும் சொல்வேன்.