எனக்கு இந்துத்வா மீது எந்த காழ்புணர்ச்சியும் இல்லை. அதே வேளையில், போலி மதச்சார்பின்மை, கண்மூடித்தனமான கம்யூனிச நம்பிக்கை, இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஞாயப்படுத்தும் அறிவாத்மாக்கள் (apologists of islamic terrorism) மேல் வெறுப்பைத் தவிர வேறேதுமில்லை.
நேற்று ரோசாவசந்த் அவர்களின் பதிவைப் பார்த்துவிட்டு (பகுத்தறிவின் காட்டுமிராண்டித்தனம்) ஒரு பதில் போட்டேன். அதில் உங்களுக்கு ஏன் இந்துத்வா மேல் இப்படி ஒரு வெறுப்பு? அதை ஞாயப்படுத்த ஏன் இந்த பகுத்தறிவுவாதிகள் செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை ஒரு காரணமாகப் பயன்படுத்தி நீட்டி முழக்கி அதில் இந்துத்வாவை இழுத்து "வஞ்சப் புகழ்ச்சியில்" திட்டியிருக்கிறீர்கள்.? என்று கேட்டேன்.
அவர், என் முந்தய பதில்கள், சில பல பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு,
அதில்,
ஆ, ஊ, என்றால் சும்மா கேள்வி கேட்டதற்கு, முத்திரை குத்தும் "தொழிலாளர்" சங்க உறுப்பினர்கள் சிலர், நீ இந்துத்வாவாதி என்றார்கள். ஏன் இப்படி "லேபிள்" ஒட்டுகிறீர்கள் என்று கேட்டிருந்தேன்.
அதை வைத்து சற்றே வலது சாரிப் பார்வையுடன் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தயும் கேட்பவர்கள் இந்துத்வாவாதிகள் என்கிற அரிய கண்டுபிடிப்பைக் கண்டறிந்து, அதனால் ஏற்படும் மன மாறுதல்களினால், மொத்த வலது சாரிப் பார்வையுள்ளவர்களின் மேல் காட்டமான வெறுப்பை உமிழ ஆரம்பித்துவிட்டார், சிறந்த வலைப்பதிவாளர் ரோசாவசந்த்.
அவர் எழுதிய பதில்..
நல்ல கேள்வி. ஆனால் இப்படி கேள்வி கேட்பவரை 'ஹிந்துத்வா' என்று சொன்னால் கூட அது லேபிள். அது தானே லாஜிக்! முதலில் தான் என்ன தின்கிறோம் எதை சுவாசிக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லவும் ஒப்புகொள்ளவும் கூடிய குறைந்த பட்ச நேர்மையை கொண்டவர்களுக்குத்தான், என்னோடும் பேசும் தகுதியை தரமுடியும்.
இதை நான் எப்படி எடுத்துக் கொள்ள?
"நீ சோத்தெத் தான் திங்கிறியா இல்லெ வேறேதும் திங்கிறியா?, என்கிட்ட பேசுறதுக்கு உனக்கு என்னடா தகுதியிறுக்கு?"
எனக்கு இதை தான் அவர் கேட்கிறார் என்று படுகிறது. இப்படிப் பட்ட வெறுப்பு உள்ளவர்களின் பதிவில் போய் பின்னூட்டம் போட்ட என்னை எதனால் அடித்துக் கொள்வது?!
எய்ட்ஸிற்கு மருந்து கண்டு பிடித்துத்தான் ஆகவேண்டுமா?, எய்ட்ஸ் கிருமி மேல் ஏன் இந்த வெறுப்பு?, அதை ஏன் எதிர்கொள்ள வேண்டும்?, என்று எய்ட்ஸ் கிருமியை ஒரு உயிரியல் ஆயுதமாய் உலவவிட்டவன் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?
இந்துத்வாவையும் எயிட்ஸையும் ஒப்பிடுபவர், இந்த "எயிட்ஸ்" கிருமி பரவ முக்கிய பங்கு வகிக்கும் இடது சாரி அறிவு ஜீவிக்கள் பற்றியும் சிந்தித்தால் நலம்.
எதையெல்லாம் வைத்து ஒரு "இந்து" பெறுமைப்பட்டுக்கோள்ள முடியுமோ, தன் சுய மரியாதையை வெளி உலகிற்கு காட்டிக் கொள்ள முடியுமோ, அதையெல்லாம் திட்டிவிட்டு, கண்டபடி கிண்டலடித்துவிட்டு, அதை சற்றே தூக்கிப் பிடிக்கும் இந்துத்வாவாதிகளை ஃபாஸிஸ்ட், என்பது, இல்லை எயிட்ஸ் கிறுமி என்பது.! இது என்ன ஞாயம்?.
ஒன்று மட்டும் உறுதி, இந்த இந்துத்வா வளர்ச்சியை தடுக்கவேண்டு என்றால் இந்த "Liberal", "secular", "progressive" சிந்தனையாளர்கள் தாம் எங்கே இருக்கிறேம், "எதைத் திங்கிறோம்", "எதை சுவாசிக்கிறோம்", இந்த உரிமை ஒரு கிறுத்துவ அல்லது, இஸ்லாமிய நாட்டில் கிடைக்குமா? என்பதை யோசித்துவிட்டு, இந்து மதத்தை (மதங்களை) திட்ட ஆரம்பிக்கவேண்டும்.
ஆரிய சமாஜம் கண்ட ஸ்வாமி தயானந்த் சரஸ்வதி ஜாதீயக் கொள்கைகளை எதிர்த்தவர்.
மஹாகவி பாரதி ஷூத்ரர்களை வீட்டில் அழைத்துவந்து உபனயனம் செய்தவர்.
அவர்கள் காலத்தில் அவர்கள் "liberal", "progressive" சிந்தனையாளர்கள். இவர்களைப் போல் சிந்தித்தால் இந்துமதம் ஏற்றுக் கொள்ளும், முன்னேரும். அதை விடுத்து, ஆரிய இனவாதம் பேசி, பிராமணர்கள், மேல் ஜாதியினர் மேல் துவேஷத்தை வளர்ப்பது. மிஷனரிக்கள் செய்யும் கேவலமான மத மாற்றத்தை ஆதரிப்பது. இந்து மதத்தை எப்படி அழிக்கலாம் என்று கும்பல் சேர்ந்து திட்டம் தீட்டுவது. இதை எல்லாம் செய்தால், வேறு வழியே இல்லை, இந்துத்வா வளர்ச்சி தடுக்கவே முடியாது. அப்போது, இந்த liberal சிந்தனை எயிட்ஸ் கிறுமியாகிவிடும்.
இந்துத்வாவை ஃபாசிசம், என்று திட்டி, சும்மா, ஒரு வலது சாரிக் கண்ணோட்டத்தில் கேள்வி கேட்பவர்கள் மீது "லேபிள்" ஒட்டுவதைத் தவிர ஒரு புல் கூட புடுங்க முடியாது.
23 comments:
அவர் எப்போதும் இப்படித்தான்.நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்.He is a 100% pseudo secularist.
அனானி அவர்களே,
இந்த pseudo secularவாதிகளினால் தான் நான் வேலிக்கு அந்தப் பக்கம் குதித்துவிடுவேனோ என்று எண்ணத் தோன்றுகிறது.
என்னைப் போல் பலர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்துத்துவம் என்பது எயிட்ஸ் கிருமி என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் ரோசாவசந்த்.
சிவமுருகன்,
உங்கள் பின்னூட்டம் வெளியிடவில்லை. ஏனென்றால் பதிவில் உண்மையான எயிட்ஸ் பற்றி பேசவில்லை.
பதிவுக்கு disclaimer போட்டுவிடுவது நல்லது என்பதால். அதைச் சேர்த்துள்ளேன்.
//"நீ சோத்தெத் தான் திங்கிறியா இல்லெ வேறேதும் திங்கிறியா?, என்கிட்ட பேசுறதுக்கு உனக்கு என்னடா தகுதியிறுக்கு?" //
இதை ஏன் அப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? அப்படியே மாற்றி தலைகீழாக யோசித்து பாருங்கள். :D
மாயவரத்தான்,
நல்லா எழுதக் கூடியவராக இருக்கிறாரே, சிறிது யோசிக்கலாமே என்பதால் தான் அப்படி பின்னூட்டம் போட்டேன். தேவையில்லாமல் கேவலப் பட்டுப் போனேன். இனி நீங்கள் கூறுவது போல் மாற்றித் தான் யோசிக்கவேண்டும்.
//உங்கள் பின்னூட்டம் வெளியிடவில்லை. ஏனென்றால் பதிவில் உண்மையான எயிட்ஸ் பற்றி பேசவில்லை.//
அப்பின்னூட்டத்தில் நான் உண்மையான எய்ட்ஸ்க்கு மருந்து சொல்லவில்லை ஷங்கர், இது போன்ற நிலமையை அன்புடன் அரவனைத்தால், வித்யாசமான கண்ணோட்டத்தில் கண்டால் அதுவே மருந்து என்ற நோக்கில் முத்தமிழ் குழுமத்தில் எழுதப்பட்ட ஒரு ஜனரஞ்ஜக கதையை சுட்டியிருந்தேன்.
ஒரு முறை படித்து தான் பாருங்களேன்.
innum...kongam...aazamaka chinthiyungal.....
ஷங்கர்,
நீங்களும்தான் pseudo secularist, லிபெரல், என்றெல்லாம் பெயர் வைக்கிறீர்கள். இல்லையா?
சிறில்,
லிபரல், ப்ராக்ரஸிவ் எல்லாம் அவர்களே, அவர்கள் தோழில் தட்டிக் கொண்டு கொடுத்துக் கொண்ட பட்டங்கள். அதை யாரும் அவர்களுக்கு வைக்கவில்லை.
Pseudo-secularism அத்வானி அவர்கள் ஆரம்பித்து வைத்த வார்த்தை. அதில் உண்மை இருக்கா இல்லையா என்பதை ஆராயும் மூளை சொந்த மூளை.
ஷங்கர்,
உங்களுக்கும் நடந்துவிட்டதா? ப்ளாக்கர்களின் உலகத்திற்கு வரவேற்கிறேன் ;-) !!
ஒருமுறை அவருடைய பதிவு ஒன்றில் ஏதோ ஒரு கேள்வி கேட்டு அவர் பதிலிலிருந்து அவரும் ஒரு திம்மித்துவவாதி என்று புரிந்து கொண்டேன். எனது புரிதல் தவறாகவுமிருக்கலாம். மிக அழகாக எழுதுகிற கலை அவர் வசமுண்டு. ஏதேனும் ஒரு எதிர்காலத்தில் நாமோ அவரோ புரிதல்களை விஸ்தரித்துக்கொண்டுதானிருக்கிறோம். நம்புவோம்.
எந்த குழுவும் ஆபத்தானது என்பதே என் புரிதல். அது ஹிந்துத்துவவாதமாகவோ, அல்லது ஸ்யூடோ செக்யூலரிஸவாதமாகவோவிருக்கலாம். எதுவும் சரியானதில்லை. எல்லாமே தனிமனிதர்களையே நம்பி உள்ளது. ஒரு குழுவில் எவர் தலைவராகிறாரோ, எப்படிப்பட்டவர்கள் பலம் பொருந்தியவர்களாகிறார்களோ அதை பொறுத்தே அக்குழுவின் குணமும், செயலும், தேவைகளும் மாறுகின்றன.
அதைவிட்டுவிட்டு பொத்தாம்பொதுவாக கருத்துக்களை பற்றி புரிந்துகொள்வதற்காகக் கேள்வி கூடக் கேட்கக்கூடாது என்பது திம்மித்துவவாதிகளுக்கே உரித்தான ஒரு குணமாகிவிட்டது. அல்லது ஏதேனும் ஒரு பதிலை அதன் பொருத்தம் பற்றியோ, லாஜிக் பற்றியோ கவலையில்லாமல் கொடுத்துவிடுவதே மிகப் பெரிய வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது.
இதனால் நாம் நமது சந்தேகங்களை மாறுபடும் கருத்துள்ளவர்களிடம் கேட்காமலிருந்துவிட வேண்டியதில்லை என்பது என் கருத்து. நமக்கு மாறான கருத்துள்ளவர்கள் பக்கமும் நியாயம் பல சமயங்களில் இருப்பதை நான் பார்த்து என்னுடைய கருத்துக்களை திருத்திக் கொண்டிருக்கிறேன். தாங்களும் அங்கனம் செய்யக்கூடிய ஒருவர்தான். எனவே உண்மையை அறியும் ஆவலுள்ள மனிதர்களிடம் நாம் தொடர்ந்து கேள்வி கேட்போம், பதில் சொல்லுவோம், விஷயங்களை புரிந்துகொள்வோம். நமக்குத் தேவை புரிந்து கொள்வதுதானேயொழிய எந்த ஒரு நிலைப்பாட்டினையும் நிறுவது அல்ல.
நல்ல புத்திசாலித்தனம் உள்ள ரோஸா வஸந்த் அவர்களுடைய பதிலை நாம்கூட தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அல்லது அவர் சொல்ல நினைத்ததை புரிந்து கொள்ளாமுடியாதவிதத்தில் அவர் பதில் துரதிர்ஷ்டவசமாக அமைந்திருக்கலாம்.
தனி மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே. அவர்கள் ஒரு சமூகம் சார்ந்தோ, அல்லது கருத்தியல் சார்ந்தவராகவோ மாறும்போதுதான் உயர்தன்மையிலிருந்து நழுவுகிறார்கள்.
ஷங்கர், நம்மூரில் இதுதானே ஃபாஷன்.
ரோசா வசந்த் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்க காரணமே இந்தியாதான் என்ற வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர். சாதிமுறைகளை எதிர்ப்பவர். ஆனால் அவரிடம் பேசுவதத்க்கு மட்டும் தகுதிகளை எதிர்பார்ப்பவர்.
இவர்களை எல்லாம் கண்டால் எனக்கு பயம் நான் ஒதுங்கிவிடுவேன்
/இந்துத்துவம் என்பது எயிட்ஸ் கிருமி என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் ரோசாவசந்த். /
அவரு பெரிய டாக்டரு.சரியா கண்டுபிடிச்சு சொல்லிட்டாரு.இவரு கம்பவுண்டரு.அதுக்கு ஒத்து ஊதறாரு.எல்லாம் நேரம்.
Hi Shankar
The post shows your level of maturity in dealing a situation like this( well handled), am sure your attitude is far ahead.
"இந்த உரிமை ஒரு கிறுத்துவ அல்லது, இஸ்லாமிய நாட்டில் கிடைக்குமா? என்பதை யோசித்துவிட்டு, இந்து மதத்தை (மதங்களை) திட்ட ஆரம்பிக்கவேண்டும். "
I am glad you said this.
"இந்து மதத்தை எப்படி அழிக்கலாம் என்று கும்பல் சேர்ந்து திட்டம் தீட்டுவது.."
Don't worry pal , some where there must be a MGR singing the song Naan Anai Ittal...( Indha kootathin attathai ozhipane......)
Also I am really surprised to see people talking about hinduism , what do they know (or deserve) to talk so much bad about a religion. Personally I am practicing hinduism for last 17 years and still I am not confident about talikg about integral part of the religion. with a little knowledge what I have , I can say this much hinduism is not prescribed by an individual and defnitely it is not a fiction ..there is lot more.
with best
CT
//ரோசா வசந்த் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்க காரணமே இந்தியாதான் என்ற வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர்.//
LOL! ROFLMAO!
சுத்த அக்மார்க் இடதுசாரி முட்டாள்தனம்.
பாகிஸ்தான் எப்போ அணுகுண்டு தயாரித்தது?
முதல்ல ஏ.கியூ.கான் யுரேனியம் செரிவூட்டலை ஒழுங்கா செய்ய சொல்லுங்க.. :-)
பாவம் மனுசன் ஆறு மாசத்துல சாக போறான்.
ஷங்கர்,
கண்டுக்காதீங்க.பாவம், இன்னும் நாகரீக உலகத்துக்கு அவிங்க வரவேயில்லை.
//
முதல்ல ஏ.கியூ.கான் யுரேனியம் செரிவூட்டலை ஒழுங்கா செய்ய சொல்லுங்க.. :-)
//
அதே சீனாவுலெ இருந்து இரவல் வாங்கின டெக்னாலஜி...:-))
சமுத்ரா,
//
இன்னும் நாகரீக உலகத்துக்கு அவிங்க வரவேயில்லை.
//
தெரிந்து தெளிந்தேன்..
என்ன கால்கரி சிவா அவர்களே, நீங்களே..பயப்பட்டால் எப்படி :))
அப்புறம், சும்மா சலம்புரவங்கள்ளாம் பெரிய ஆளாயிருவானுங்க...
(கற்பனையிலே) மிதக்கும் வெளி,
மிதப்பைவிட்டு தரையில் கால் பதிக்கவும்.
ஆனந்த் கணேஷ்,
ஆக, நான் மட்டும் வாங்கிக் கட்டிகல்ல... ஓ..கே...! நம்மள மாதிரி நிரைய பேர் வாங்கிக் கட்டிகிட்டுருக்காங்கன்னு தெரிஞ்சிக்கிறதுல ஒரு சின்ன சந்தோஷம்...!!
//
நல்ல புத்திசாலித்தனம் உள்ள ரோஸா வஸந்த் அவர்களுடைய பதிலை நாம்கூட தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம்.
//
அவர் அவருடய அறிவை தவறாகப் பயன்படுத்துகிறார் என்பது என் எண்ணம்..அதனால் தான் போய் சொன்னேன்..வாங்கிக் கட்டிகிட்டேன்...
CT,
பாராட்டிற்கு நன்றி,
நான் உங்களைப் போல் practicing hindu எல்லாம் இல்லை. Self respecting hindu.
//
some where there must be a MGR singing the song Naan Anai Ittal...( Indha kootathin attathai ozhipane......)
//
இப்புடியே யோசிச்சு டீசண்டா விலகிக்கிற காலம் மலயேரிவிட்டது....
"We cannot afford to be that decent any more" ("Munich" 2006).
நம் வேலையை நாம் தான் நடத்தவேண்டும்...நடத்திக் கொள்ளவேண்டும்.
"கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிக்க" எம். ஜி. ஆர் போல் யாராவது வருவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
Shankar
Thank you for publishing( Thought you may edit the MGR part).
"நம் வேலையை நாம் தான் நடத்தவேண்டும்...நடத்திக் கொள்ளவேண்டும்"
True and sure we (are doing ,not in blog )will .....
With best
CT
CT,
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
//
True and sure we (are doing ,not in blog )will .....
//
அனைத்து ஊடகங்களிலும் ஆப்பு வைப்பது நல்லது.
எனது ஈ. மெயில் முகவரி profileல் கிடைக்கும்...
Post a Comment