June 26, 2006

பெண்ணுரிமைவாதம்

இன்று இந்தியத் தூதரகத்தில் வேலை செய்யும் ஒருவரின் மனைவியும், தில்லி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிபவருமான திருமதி. மைனா சாவ்லா சிங் சொற்பொழிவு கேட்கக் கிடைத்தது. அவர் சொற்பொழிவு நடத்த எடுத்துக் கொண்ட தலைப்பு "Women empowerment in contemporary India".

இந்த சொற்பொழிவில், இந்தியாவில் பெண்ணுரிமை எப்படி வளர்ந்து இன்றய சூளலில் எப்படி செயல்படுகிறது என்பதை பற்றிச் சொன்னார். விவாகரத்து, மற்றும் Abortion சட்டப்படி தடையில்லை என்பது இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்றும் சொன்னார். சொற்பொழிவின் முடிவில் எழுப்பப்பட்ட கேள்விகளில் சில,

இங்கே இஸ்ரேலில் மத அடிப்படையில் மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும். Court marriage, அதாவது மத வேறுபாடு இல்லாமல் பொது சிவில் சட்டப்படி கல்யாணம் செய்து கொள்ளுதல் என்பது இல்லை. அத்தகய திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லை. அப்படி செய்யவேண்டும் என்றால் cyperus அல்லது வேறு நாட்டிற்குச் சென்று தான் மணமுடிக்கவேண்டும், இந்தியாவில் எப்படி? என்று ஒருவர் கேட்க.

அவர் கூறிய பதில்,

இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்பது optional அதாவது உங்களுக்கு வேண்டும் என்றால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். எத்தகய கட்டாயமும் இல்லை.

இப்படி அவர் கூறிவிட்டு, இந்திய மாணவர்கள் அமர்ந்திருக்கும் பக்கம் திரும்பி உங்கள் விருப்பம் என்ன என்று கேட்க? ஆச்சர்யமாக அனைத்து மாணவர்களும், Court marriage ஐ விட குடும்பத்துடன் சந்தோஷமாக செய்யும் திருமணம் விருப்பம் என்று கூறினர். Court marriage என்பது பாஸ்போர்ட் வாங்க, அல்லது மனைவி/கணவன் என்ற அங்கீகாரம் பெற்றுக் கொள்ள ஒரு காகிதமாக மட்டுமே பயன் படுத்த விறுப்பம் என்று கூறினர்.

இதில் ஒரு சூட்சமம் உள்ளது, என்னதான் court marriage ல் கட்டாய திருமணம் செய்துகொள்ள முடியாது என்றாலும், பெரும்பானையானவர்கள் திருமணம் என்பது சந்தோஷமான விஷயம் அதில் குடும்பத்துடன் சேர்ந்துமகிழும் ஒரு தருணமாகவும் பார்க்கின்றனர். மேலும், எத்தனை பேர் கட்டாய திருமணம் செய்துவைக்கின்றனர். கிராமத்தில் கூட இத்தகய கட்டாய திருமணம் குறைந்துவருகிறது.

Arranged marriage (யூதர்களுக்குள்ளும் இது பரவலாகக் காணக்கூடிய ஒன்றுதான்) பற்றியும் மட்டையடியாக அது தப்பு என்றெல்லாம் உளரிக் கொட்டாமல், எத்தனையோ arranged marriage சிறப்பாகச் செயல்படுகிறது. அது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. பெண்களின் விருப்பத்திற்கு தடையில்லாத திருமணம் தான் அவர் எதிர்பார்ப்பது என்று தெளிவாகக் கூறினார்.

பொது சிவில் சட்டம் பற்றி அவர் கூறிய கருத்துக்கள்:

இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்பது optional என்றாலும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளுதல் இல்லை. சிறுபான்மையினர் அரசியல் அதில் புகுத்தி பெறும் பிரச்சனைக்குள் மாறிவிட்டதாக அவர் கருதுகிறார். மேலும் சிறுபான்மையினர் (முஸ்லீம்கள்) பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் இந்து சட்டதிட்டத்தை இஸ்லாமியர் மீது திணிப்பதாக கருதுவதால் அது நடைமுறைக்கு வரவில்லை என்றார். மேலும் அவர் அது இந்துக்கள் சட்டம் அல்ல, பொதுவில் இருக்கும் Liberal சட்டம் என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னது சிறப்பாம்சம் (பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று கூறும் பெண்ணீயவாதிகள் என்ன சொல்வார்கள்?).

பெண் சிசுவை கரு கலைப்பு செய்வது பற்றி வழக்கம் போல் புள்ளிவிவரங்கள் சொல்லிய பின், நிலமை மாருவதாகவும் சொன்னார். இந்த விஷயத்தைப் பற்றி பேசும் போது அவர் குறிப்பாகச் சொன்னது, சீனாவில் நடக்கும் பெண் சிசு கரு காலைப்பு பற்றி.

சீனாவில் "ஒரு குழந்தை" சட்டம் இருப்பதால், சராசரி குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள அரசு அனுமதி இல்லை. அப்படி மீறி பெற்றுக் கொண்டால் வேலை போகும் அபாயம் உள்ளது. ஆகயால் அதிகமான குடும்பங்கள் பெண் குழந்தையை விரும்பாமல் கரு கலைப்புச் செய்கின்றனர்.


ஒருவர், விபச்சாரம் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்க,

எல்லா பெண்ணுரிமைவாதிகள் போல் சட்டப்படி அதுவும் ஒரு வேலையாகக் கருதவேண்டும் என்று எல்லாம் empty rhetoric அடிக்காமல், விபச்சாரத்தை யாரும் விரும்பிச் செய்வதில்லை. அவர்கள் வரும் ஏழ்மைநிலையிலிருந்து அதை பார்க்கவேண்டும் என்றார். (இந்தியாவில் விபச்சாரம் சட்டப்படி குற்றமல்ல, சாலைகளில் நின்று கொண்டு வாடிக்கையாளர்களைப் பிடிப்பது தான் தவறு, அதை அதற்கென உள்ள ஏரியாக்களில் தான் செய்ய முடியும்).

இந்து மதத்தில் பெண்களின் உரிமை பற்றி ஒருவர் கேட்க...(அவர் யூத மற்றும் மற்ற செமைடிக் மதங்களின் அடிப்படையில் கொண்டு கேட்ட கேள்வி) இந்து மதத்தில் பெண்களை வழிபடுகிறார்கள். இந்து மதத்தில் எத்தகய புத்தகக் கோட்பாடு என்று ஒன்றும் இல்லாததால் எது சிறந்தது என்பதை முடிவு செய்து நாமே முன்னேற்றி கொள்ளலாம். மொத்தத்தில் ஒரே பதிலை வழங்க முடியாது, சில கோவில்களில் பெண்கள் அனுமதி மறுக்கப் படலாம், பல கோவில்களில் அப்படி அல்ல. என்று உன்மை நிலையை தெளிவாகவே விளக்கினார். ஒரு சில பெண்ணீயம் பேசுபவர்கள் மட்டையடியாக மதங்களை ideological காரணத்தினால் வெறுப்பது போல் இல்லாமல் அவர் பேசியது சிறப்பு.

மேற்கத்திய மத-கலாச்சாரச் சூளலில் பெண்ணுரிமை என்பது எப்படி இருக்கிறது, இந்தியச் சூளலில் பெண்ணுரிமை என்பது எப்படி வேறுபடிகிறது என்பதைப்பற்றி டெல் அவீவ் பல்கலைக் கழகத்தில் அவர் ஒரு course நடத்தப் போவதாகவும் சொன்னார். உண்மையில் மேற்கத்திய பெண்ணுரிமைவாதத்திற்கும் மற்ற ஆசிய ஆஃபிரிக்க அல்லது இந்திய பெண்ணுரிமை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் வேறுபாடுகள் அதிகம் உள்ளன என்பதை உணர்ந்த பெண்ணீயவாதியாக அவர் இருந்ததும் சிறப்பு.

7 comments:

நாகை சிவா said...

//வர் அது இந்துக்கள் சட்டம் அல்ல, பொதுவில் இருக்கும் Liberal சட்டம் என்று தெள்ளத் தெளிவாகச் சொன்னது சிறப்பாம்சம்//
உண்மைய சொல்லி இருக்கார்.

மொத்ததில் ஒரு நல்ல சொற்பொழிவு கேட்டு உள்ளீர்க்கள் :))

Vajra said...

ஆம் நாகை சிவா,

உண்மை தான், அம்மணி நல்ல பேச்சாளர் கூட...காலேஜ் லெக்சர் போல் தூக்கம் வரவைக்காமல் பேசியது நல்ல விஷயம் தான்.

மேற்கில் இருக்கும் பெண்ணீயவாதத்திற்கும் இந்தியாவில் தேவைப்படும் பெண்ணீயவாதத்திற்கும் இருக்கும் வேறுபாடுகளைப்பற்றி அவரிடம் பேசவேண்டுமென்றிருந்தேன்...நேரமின்மை காரணமாக பேச முடியவில்லை. நிச்சயம் மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது...

Samudra said...

//அப்படி மீறி பெற்றுக் கொண்டால் வேலை போகும் அபாயம் உள்ளது.//

வேலைபோனால் பரவாயில்லை...குழந்தையே போய்விடும்!

சீன கிராமங்களில் நிறைய இரண்டாம் குழந்தைகள் saline solution போட்டு கொன்றுவிடுவது நடக்கிறது.

ஆம், சீனா ஜனநாயக நாடு. ;)

//அவர்கள் வரும் ஏழ்மைநிலையிலிருந்து அதை பார்க்கவேண்டும் என்றார்.//

உன்மை.

Vajra said...

இப்படி குழந்தைகளைக் கொல்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது..

ஆனால், இந்த one child policy மூலம் சீனர்கள் சீக்கிரமே கிழட்டு தேசமாகும் அபாயம் உள்ளது அறிவார்களா அல்லது எல்லா இடது சாரிக்கள் போல் myopia வந்து, இல்லை மக்கள் தொகை குறைக்க இது தான் வழி என்று சொல்லிக் கொண்டு திரிவார்களா என்று தெரியவில்லை.

Samudra said...

Shanker, check this out.

சிவமுருகன் said...

ஆறு விளையாட்டுக்கு அழைத்துள்ளேன் ப்ரியா பதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Vajra said...

Thanks Samudra...as i said, the chinese are going to endup no where with one child policy.