June 16, 2006

சமூக அக்கரை இல்லாதவன் சிந்தனை!

நான் ஏதோ நாட்டு நடப்பு பற்றிப் பேசாமல் உலகளாவிய விஷயம் தான் பேசிக்கொண்டிருக்கிறேன், தின்ன சோறு செரிமானமாவதற்குத் தான் இந்த வெட்டி அரட்டை என்றெல்லாம் சில அரைவேக்காடுகள் குற்றச்சாட்டு வைத்ததினால் இந்த பதிவு.

இந்தப் பதிவில் மதவாதம், இந்துத்வாவாதம், மார்க்ஸ்வாதம் என்கிறவார்த்தைகள் உபயோகிக்கப் படமாட்டாது. (பின்னூட்டமிடுபவர்கள் உபயோகிப்பதற்கு எந்தத் தடையுமில்லை.)


சில நாட்களாக நானும் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள என்ன காரணாம் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன். வலையில் தேடியபோது கிடைத்த சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஷரத் ஜோஷி என்கிற விவசாயிகளுக்காக ஷேத்காரி சங்காடனா என்கிற அமைப்பின் தலைவர் எழுதிய கட்டுரை ஹிண்டு பிஸினஸ் லைனில் கிடைத்தது.

அதில் அவர் வைக்கும் வாதம் வியப்பாக இருந்தது, ஞாயமாகவும் பட்டது.

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள முக்கிய காரணம் கடன் தொல்லை என்பது உலகறிந்த உண்மை. பெரும்பாலானோர் அரசு வங்கிகள் அல்லாத தனினபர் நிலச் சுவாந்தார்களிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்குவது முக்கிய காரணம். அதிக வட்டி என்றால் கொஞ்ச நஞ்ச அதிகமா...பகல் கொள்ளைக்கு முப்பாட்டன் மாதிரி 30 முதல் 60 சதவிகிதம்

இவர்கள் ஏன் இந்த நில்ச்சுவாந்தார்களிடம் இப்படி மோசடி அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டும்.?

அரசு வங்கிகளின் "சிகப்பு நாடா" விலிருந்து தப்பிப்பதர்காக!

ஒரு முறை இப்படி கடன் வாங்கியவர், கடன் திருப்பிச் செலுத்த முடியாத பட்சத்தில் நிலச் சுவாந்தார்கள் கூலிப்படை வைத்து கடன் வசூலிப்பு செய்வது போன்ற அட்டூளியங்கள் செய்தனர் /செய்கின்றனர். ஆகயால் பொதுவாக இவர்கள் மேல் கோபத்தைத் திருப்பி வோட்டு வங்கி அரசியல் நிகழ்த்தப்பட்டதே தவிர விவசாயிகளின் உண்மையான பிரச்சனை முடிவுக்குக் கொண்டுவரப் படவில்லை.

1950 களில் சோஷியலிசம் "தழைத்தோங்கிய" காலத்தில் நிலச்சுவாந்தார்கள் மேல் அரசு கடுமையான சட்டம் கொண்டுவந்து தனி நபர் வட்டிக்குப் பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் விவசாயிகள் தர்கொலை தொடர்ந்துகொண்டுதான் இருந்தது இன்றும் இருக்கிறது. சரி, குறைந்த பட்சம் விவசாயமாவது சிறப்பாக நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. பண முதலீடே இல்லாத ஒரு இலாக்காவாகிவிட்டது இந்தியத்திருநாட்டின் 70% பேர் செய்யும் தொழில்.

இப்படி ஆவதற்கு என்ன காரணம்?

இதற்கு ஷரத் ஜோஷி சொல்லும் விடைகள்,

It was quite clear that even after the abolition of private moneylenders, agriculture continued to be a losing proposition. Farmers continued to be heavily indebted and often driven, in desperation, to suicide. The abolition had one notable result. The agricultural surplus, instead of remaining in the countryside, started moving to the urban areas. That, to all evidence, was the real motive.


கிராமப்புர மக்கள் நகரத்திற்கு குறைந்த கூலிக்கு வேலைக்கு வருவது, சேரியில் வாழ்வது தான் அதிகமானது என்பது தான் இங்கே நாம் பார்க்கிறோம்.

In 1950s, the private moneylender was driven out, and it has left the farmers in a lurch. The informal credit organisations continued to work and are still the source of the major part of credit available to the agriculture.


Agriculture is being starved of genuine homegrown credit institutions. Those who had a certain financial capacity have been scuttled out in the 1950s and are being further targeted now. Further, the exit policy for agriculture does not permit any new enterprise or finances to come in the field of agriculture, even for operational purposes.


கடைசியாக அவர் கேட்கும் கேள்வி,

அந்த ஹைதர் காலத்து சோஷியலிச நிலச்சுவாந்தார் வெறுப்பை தூபம் போடுவது தான் இப்போதய தேவையா? அல்லது விவசாயத்திற்கு எது நல்லது என்பதை கருத்தில் கொண்டு, எப்படி விவசாயதிற்கு முதலீடுகளை அதிகரிப்பது என்பதை யோசிப்பது இன்றய தேவையா?

ஞாயமான கேள்வி..
பதில் என்னிடம் இல்லை. விவாதத்திற்கு வைக்கிறேன்.

நன்றி:http://www.gg2.net/upload/farmer22042006.jpg (படத்திற்காக)

23 comments:

Muthu said...

சங்கர்,

பேசலாம்.பொறுமையாக வருகிறேன்.

Muthu said...

முதலில்

இன்னும் வங்கிகள் மக்களை நெருங்கவேண்டும் என்பது உங்கள் கருத்தாக இருந்தால் எனக்கும் சம்மதம்தான்.

ஆனால் மீண்டும் தனியார் கந்துகாரர்களை அனுமதிக்கவேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் அது தவறு.

வஜ்ரா said...

முத்து அவர்களே,

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் விவசாயிகளை இப்பொழுது அளிப்பதைவிட குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்தால் வங்கி திவாலாகிவிடும்...உங்களுக்கே தெரியும் நான் சொல்லவேண்டியதில்லை.

அரசின் கையை எதிர்பார்க்காமல் விவசாயிகள் இருப்பதர்கு என்ன வழி என்று யோசிக்கவேண்டும்.

//
ஆனால் மீண்டும் தனியார் கந்துகாரர்களை அனுமதிக்கவேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் அது தவறு.
//

தனியார் முதலீடு இந்தத்துரையில் பெருக அரசு வழி செய்யவேண்டும் இல்லை என்றால் வழி விடவேண்டும்.

வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை Regulate செய்யவேண்டியதுடன் அரசு நிறுத்திக் கொள்வது நலம். அவர்களை மொத்தமாக விரட்டியடித்தால் எல்லா நிலங்களையும் அரசுடமை யாக்கி அதில் விவசாயம் அரசே செய்யவேண்டும்..இது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல...

தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் அரசு தலியீடு இருப்பதாக நான் கருதுகிறேன்...

எந்தத் துரையில் தனியார் முதலீடு அதிகம் இருக்கிறதோ (அரசு தலியீடு கம்மியாக இருக்கிறதோ) அந்தத் துரை அதிக லாபமீட்டும் துரையாக இருக்கிறது இன்றய தேதியில்..

ரவி said...

பேசாமல் அரசே எல்லா நிலங்களையும் வாங்கிக்கொண்டு விவசாயம் செய்யட்டும்...நாம் ஓரத்தில் நின்று வேடிக்கை பார்ப்போம்...அப்போது தெரியும் உண்மை விவசாயியின் நிலை....உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பதே உண்மை நிலை..

Muthu said...

//முத்து அவர்களே//

என்னங்க ஆச்சு? :))

தனியார் அரசின் கடன் உதவியை விட குறைந்த வட்டிக்கு கடன் தருவார்களா?

வஜ்ரா said...

எந்த தனியார் நிறுவனமும் அரசில் அடிமாட்டுவிலை வட்டிக்கு கடன் தரமாட்டார்கள் குறைந்தபட்சம் அவர்கள் பகல் கொள்ளை அடிக்காமல் இருப்பதை அரசு கண்காணித்தாலே போதும்..!! ...அதைச் செய்தால் இந்தத்துரையில் முதலீடு பெருகும்...அது தானே இன்றய தேவை..?

இந்த பகல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை தண்டிப்பது ஒருபக்கம் இருக்க...மூல காரணமான அரசு Red Tape தகர்க்கப் படவேண்டும்...சுலபமாக விவசாயிகள் வங்கியிலெயே கடன் வாங்கினால்? அதிக வட்டிக்குக் கடன் தருபவர்கள் இல்லாமல் போய் விடுவார்கள்..

Unknown said...

அருமையான பதிவு ஷங்கர்

வங்கிகளில் லோன்மேலாக்கள் நடத்தி,கடன் தள்ளுபடி செய்து கடனை திருப்பி கட்டுபவன் இளிச்ச்வாயன் எனும் இமேஜை உருவாக்கிவிட்டனர்.வங்கிகளும் விவசாய கடன் தந்தால் திரும்பவராது என்பதால் கடன் தருவதை புத்திசாலித்தனமாக தவிர்த்தன.வங்கிகள் சட்டபூர்வமாக தந்தே தீரவேண்டிய கடன் கட்சிகாரர்களுக்கு போய் சேர்ந்தது.ஏழைக்கு வழக்கம் போல் அல்வாதான்.

ஒரே வழி..மெது மெதுவாக மக்களை வேரூ தொழிலுக்கு மாற்றுவதுதான்.50 கோடி பேருக்கு மேல் விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.என்ன லாபம் வரும் இதில்?

விவசாயிகள் லாபம் தரும் வேறுதொழிலுக்கு மாறுவது காலத்தின் கட்டாயம்.நிலத்தை விற்று தொழில் துவக்குவது அல்லது வேலைக்கு போவது அல்லது ரியல் எஸ்டேட்டில் ஈடுபடுவது ஆகியவற்றை செய்யலாம்.இனி விவசாயத்தில் லாபம் வராது.

Anonymous said...

Hi Shankar,
I was always wondering some one should start writing about this industry. Thank you for shedding light on this. Though government is acting as if they are doing great on this sector, it’s not true. I know still in cauvery belt people are depending on private bankers (personally I don't think anything wrong in this as long as it helps agriculturist to grow), I guess still fertilizer is supplied in subsidized rate.....
There is lot to be done technologically to cultivate, enrich the soils fertility, educate this guys to do business (instead of cheating them by acquiring their products at low cost)...etc

"மூல காரணமான அரசு Red Tape தகர்க்கப் படவேண்டும்...சுலபமாக விவசாயிகள் வங்கியிலெயே கடன் வாங்கினால்? அதிக வட்டிக்குக் கடன் தருபவர்கள் இல்லாமல் போய் விடுவார்கள்.. "

Well said pal!!

This is an industry, which is a sacrum of the countries economy.

Privatization has proved that people can have better life; the gap between rich and poor has been reduced. Government has alights to compete with the private, if they are good enough why they should be scared of a chota private party...

we need some one to talk about the world affairs...so please continue to write your perspective.

with best
CT

Muthu said...

நீங்கள் சொல்வதைத்தான் அரசாங்கம் செய்து வருகிறது.

1. தனியார் அதிக வட்டிக்கு கடன் தருவதை தடுக்கிறது.

2. அதிக பிரச்சினைகள் இல்லாமல் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க முயன்று வருகிறது.

(இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் நிறைய.அதற்கு எதாவது தீர்வு தாருங்கள்.மற்றபடி தனியார் கந்துவட்டிகாரர்களை ஒழித்ததால்தான் விவசாயம் கெட்டுவிட்டது என்பதுபோன்ற தொனியை உங்கள் பதிவு தருகிறது)

வஜ்ரா said...

//
மற்றபடி தனியார் கந்துவட்டிகாரர்களை ஒழித்ததால்தான் விவசாயம் கெட்டுவிட்டது என்பதுபோன்ற தொனியை உங்கள் பதிவு தருகிறது
//

கந்துவட்டிக்காரர்களை ஒழித்தாலும் ஓழிக்காவிட்டாலும் விவசாயம் கெட்டுக்கொண்டு தான் இருக்கிறது...என்பதைத்தான் ஜோஷி தெளிவாகக் கூறிவிட்டார்.
நீங்கள் சொல்லும் கந்துவட்டிக்காரர்களை ஒழிப்பதில் காட்டும் அக்கரை எந்த அரசியல்வாதியும் விவசாயத்தை அறிவியல் பூர்வமாகச் செய்வது, மகசூலை அதிகரிப்பது போன்ற உண்மையான Empowerment ல் காட்டுவதில்லை. வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களை ஓழிப்பதே விவசாயியின் Empowerment!! போல் மாயயை உருவாக்கிவிட்டனர் என்பதே என் கருத்து.

//
இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் நிறைய
//

விவசாயம் பார்ப்பவர்கள், பார்த்தவர்கள் சொல்வது நலம்...நாம் என்ன தான் அளவளாவிக் கொண்டிருந்தாலும் அவனுக்கு என்ன பிரச்சனை என்பது நமக்குத் தெரியாது..

வங்கி மேலாளர் நீங்கள்...நீங்கள் பார்த்த பிரச்சனை பற்றிக் கூறுங்கள்...தீர்வைப் பற்றி யோசிக்கலாம்..

வஜ்ரா said...

//
ஒரே வழி..மெது மெதுவாக மக்களை வேரூ தொழிலுக்கு மாற்றுவதுதான்.50 கோடி பேருக்கு மேல் விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.என்ன லாபம் வரும் இதில்?
//

நடக்குற காரியமா...செல்வன்...

எவனுமே விவசாயம் பார்க்கவில்லை என்றால் சோத்துக்கு என்ன செய்வது?

பழத்தெச் சாப்பிட்டு கொட்டைய எங்கெயாவது தூக்கிப் போட்டா முளைவிட்டுவிடும் நம்ம இந்தியாவில்...அதை வைத்தே நாம் விவசாயம் செய்ய முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்.?..

இங்கே இஸ்ரேலில் பாருங்கள்...நிச்சயமாக ஒன்றும் வளராது என்பது வரலாறு கண்ட உண்மை...அதையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்...

வஜ்ரா said...

CT,

Thanks for the encouragement...

Unknown said...

சங்கர்

ஏகப்பட்ட ஆட்கள் விவசாயத்தில் இருக்கிறார்கள்.ரெண்டு ஏக்ரா,அரை ஏக்ராவை நம்பி நிறைய ஏமாறுகிறார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களை குறைத்து விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கினால் விளைச்சல் அதிகரிக்கும்,விவசாயிகளின் தற்கொலையும் நிற்கும்,உணவு பொருள் ஏற்றுமதியும் செய்யலாம்.

விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி அறிவு இலவசமாக புகட்டி நல்ல தொழில் அல்லது வேலை கிடைக்க உதவ வேண்டும்.அரசும் தனியாரும் உடனடியாக இதை செய்ய வேண்டும்.

Anonymous said...

இவ்வளவு பேசும் இந்த ஆள் இஸ்ரேலுக்கு காவடி தூக்குவதை விட்டுவிட்டு இங்கே வயலில் வந்து காய வேண்டியது தானே. அது செய்யமாட்டார். ஏனென்றால் வயலில் காய்வதற்க் தான் ஒரு தனி ஜாதி என்று ஆக்கிவிட்ட பின் இவர் பேன்றவர்களின் வேலையே நமக்காக சேர்த்து யோசிப்பது தான். அவர்களுக்கு மட்டும் தானே மூளை உள்ளது

Anonymous said...

இவ்வளவு பேசும் இந்த ஆள் இஸ்ரேலுக்கு காவடி தூக்குவதை விட்டுவிட்டு இங்கே வயலில் வந்து காய வேண்டியது தானே. அது செய்யமாட்டார். ஏனென்றால் வயலில் காய்வதற்க் தான் ஒரு தனி ஜாதி என்று ஆக்கிவிட்ட பின் இவர் பேன்றவர்களின் வேலையே நமக்காக சேர்த்து யோசிப்பது தான். அவர்களுக்கு மட்டும் தானே மூளை உள்ளது /

வயலில் இருப்பவனையே முன்னுக்கு வரவைக்க யோசனை சொல்பவரை வயலுக்கு இழுக்கும் நீர்தான் உண்மையான கம்யூனிஸ்ட்.எல்லோரையும் பிச்சைக்காரர் ஆக்கி சமத்துவத்தை ஏற்படுத்துபவர்கள் தான் கம்யூனிஸ்டுகள் என்பதை அடிக்கடி நிருபிக்கிறீர்கள்.

Muse (# 01429798200730556938) said...

ஷங்கர்,

>>>> இங்கே இஸ்ரேலில் பாருங்கள்...நிச்சயமாக ஒன்றும் வளராது என்பது வரலாறு கண்ட உண்மை...அதையே மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்...<<<

இதற்குக் காரணங்கள் பல.

1. ஆட்சி செய்பவர்கள் விவசாயிகளிடமிருந்து விலகி இல்லை.

2. சுற்றி நிற்கும் பிரச்சினைகளால் இஸ்ரேலிய அரசியல்வாதிகளுக்கும், விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான துன்பம்தான். பொது மக்களிடமிருந்து அரசியல்வாதிகள் அதிகம் விலகி இல்லை. இந்தியாவின் அரசியல்வாதிகள் பொது மக்களின் பிரச்சினைகளால் பதிக்கப்படும் இனம் இல்லை.

3. சரியான தலைமை இல்லாததால், நெடுந்தொலைவு காணும் அறிவினை அவர்கள் பெற்றுவிட முடியவில்லை. கடன் தள்ளுபடி அளிப்பவர்களே சரியான தலைவர்களாக எண்ணுகிறோம். அந்த கடனே வாங்க வேண்டிய அவசியம் இல்லாதவகையில் செய்பவர்களை விவசாயிகள் மதிப்பதில்லை.

4. தீர்வுகள் தெரியும் (நதி நீர் இணைப்பு). செயல்படுத்தினால் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்ந்து தங்களை அண்டி வாழ மாட்டார்கள் என்று யோசிக்கும் அரசியல்வாதிகளின் அழிவுச் சுயநலம். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் ஒரு கிராமத்திலோ, ஒரு வார்டிலோ தண்ணீர் கிடைக்காவிட்டால் மக்களை அழைத்துக் கொண்டு போராட்டம் நடத்துவார்கள். ஆனால் நர்மதா நதி நீர் திட்டம் போன்ற திட்டங்களை எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் கருத்துக்களை சப்போர்ட் செய்வார்கள். எங்கிருந்து வரும் பாசனத்திற்குத் தண்ணீர்?

இது போன்று எவ்வளவோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் இந்த தீர்வுகள் நடைமுறையாக இங்கே பின்னூட்டமிட்டுள்ள அனானி போன்றவர்கள், அவர்கள் ஆதரிக்கும் திம்மித்துவவாதிகள் ஆட்ஷிக்கு வராதிருக்க வேண்டும். சமுதாயத்தில் பலம் பெறாதிருக்க வேண்டும். ஆமென்.

Muse (# 01429798200730556938) said...

செல்வன்,

>>>> விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கினால் விளைச்சல் அதிகரிக்கும் <<<<

இதை நான் மனப்பூர்வமாக வழிமொழிகிறேன். இதனால் விளையும் நன்மைகள் பல.

Unknown said...

Thank you Muse.While doing that we have to help farmers to find an alternative livelihood which pays them well.

Muse (# 01429798200730556938) said...

$elvan,

Why should we find alternative, if we can provide the facilities for the agriculture to earn high income?

But, I agree that a contingent alternate income should be arranged until they start earning better from agriculture.

Agriculture should be made another lucrative business for our livelihood and economy is based on it.

வஜ்ரா said...

//இவ்வளவு பேசும் இந்த ஆள் இஸ்ரேலுக்கு காவடி தூக்குவதை விட்டுவிட்டு இங்கே வயலில் வந்து காய வேண்டியது தானே.
//

அனானி, சவூதி, இஸ்லாம், ஜிஹாத், ஒசாமா போன்றவர்களுக்கு காவடி தூக்குவதைவிடுத்து அதே வயலில் நீங்களும் காய வேண்டியது தானே...கம்ப்யூட்டரில் உட்கார்ந்துகொண்டு அனானியாக பின்னூட்டம் ஏன் இடவேண்டும்..!!?

வஜ்ரா said...

//
கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களை குறைத்து விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்கினால் விளைச்சல் அதிகரிக்கும்
//

I perfectly agree...

("சிந்திக்கக் கூடிய") மனித உழைப்பை வேறு நல்ல காரியங்களுக்குத் திசை திருப்பினால்தான் அது முடியும்...100 கோடி மக்கள் கொண்ட நாட்டில் அது நடப்பது சுலபமான காரியமல்ல என்பது என் எண்ணம்.

வஜ்ரா said...

பத்ரியின் வலைப்பதிவில் கடன் தள்ளுபடி பற்றி நடக்கும் விவாதம்.

வஜ்ரா said...

விவசாயிகள் தற்கொலை அதிகம் நடக்கும் பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுப்பவர் காங்கிரஸ் MLA.

செய்தி