June 24, 2006

(போலி) எதிர்ப்புவாதி ஆவது எப்படி?


எதிர்ப்புவாதம்:

முதலில் டெஃபணிஷன்...
அதாவது, அரசின் அல்லது ஒரு நிறுவனத்தின் (establsihment) நெறி முறைகளை தக்க ஆதாரத்துடன் மக்கள் நலனுக்காக சுயநலமில்லாமல் தவறை சுட்டிக்காட்டி திருத்தும் வகையில் எதிர்ப்பவர்களே எதிர்ப்புவாதிகள். அவர்கள் செய்யும் செயல் எதிர்ப்புவாதம்.

இன்றய trend போலி எதிர்ப்புவாத அரசியல். உண்மையான எதிர்ப்புவாத அரசியலில் ஈடுபடுவதைவிட போலியான எதிர்ப்புவாதம் பேசுவது சுலபமானது, ஹாஸ்யமானது மற்றும் உண்மையாகவே பலரை April fool (ஏப்ரல் அல்லாத பிற மாதங்களில்கூட) ஆக்குவதற்கு சிறந்த வழிமுறை. இத்தகய எதிர்ப்புவாதத்தில் சொல்லுக்கும் செயலுக்கும் முறனாக செயல்படுவதே சிறப்பு.

போலி எதிர்ப்புவாதி ஆவது எப்படி என்பதை இந்த பதிவு விளக்கும்.

௧. உண்மையான எதிர்ப்புவாதி போல் வேஷம் மிக முக்கியமானது.

 • தாடி வைத்துக் கொள்ளவேண்டும். (கண்ணாடி இருந்தால் சிறப்பு, அதிலும் சோடாபுட்டி என்றால் ஆஹா! பிரமாதம்)
 • குர்தா போட்டுக் கொண்டு ஜோல்னா பை ஒன்றை மாட்டிக் கொள்ளவேண்டும்.
 • அடிக்கடி கவலையாக தென்படவேண்டும். சற்றே கோபமாகக் கூட இருக்கலாம்.
 • ஏழைகளைப்பற்றி அதீத கவலை கொள்வதுபோல் பேச வேண்டும். (உண்மையாக கவலை தேவையில்லை)


 • ௨. மதங்களைப் பற்றி "Opiate of the masses" என்கிற கண்ணோட்டம் வேண்டும் (இந்து மதம் மட்டுமே அதில் வரும்).
  என்ன தான் மதங்களை எதிர்த்தாலும், உள்நோக்கத்தில் கிறுத்துவம், இஸ்லாம் போன்ற மத்தியகிழக்கு மதங்கள் உசத்தி, சிலை வழிபாடு தாழ்ச்சி என்று எண்ணவேண்டும். இந்து என்றால் இழிவு, மற்ற மதங்கள் பற்றி பேசுவது கூடாது ஏன் என்றால் அவர்கள் நம்பிக்கையை நாம் கிண்டல் அடிப்பது தவறு என்கிற தனித் தன்மை நமக்கு வேண்டும்.

  ௩. புத்தகம் எழுதி ஃபேமஸ் ஆவது, படம் வரைந்து ஃபேமஸ் ஆவது போன்ற காரியங்கள் உண்மையான எதிர்ப்புவாதிகள் செய்வதால் அதையே நாமும் நம் எண்ணத்திற்கேற்ப செய்யவேண்டும். இந்து மத நம்பிகைகளை கிண்டல் செய்வது Highly recommended. "சதி" போன்ற தீய பழக்கங்கள் ஏன், எதற்கு, எப்படி சமூகத்தில் வந்து சேர்ந்தது என்பதை மறைத்துவிட்டு அதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளவேண்டும்.

  ௪. உண்மையான எதிர்ப்புவாதிகள் சாதீயத்தின் கேடு கெட்ட நிலையை சாடுகிறார்கள் என்பதற்காக, நாமும் சாதீயத்தை சாடவேண்டும். ஆனால் நாம் சாதீயத்தை சாடுகிறோம் என்கிற பெயரில் தூய அப்பழுக்கற்ற பிராமண வெறுப்பைக் காட்டவேண்டும். யார் நம் கொள்கைகளை தவறு என்று சொல்கிறாரோ அவரை உடனடியாக பார்பான், அல்லது ஹிந்துத்வாவாதி என்று பட்டம் கட்டவேண்டும்.

  "பட்டங்கள் கட்டுவதும், சட்டங்களை உடைப்பதும் பாரினில் நாங்கள் நடத்த வந்தோம்!!"


  என்பது போல் கோஷம் போடுவது கொடி பிடிப்பது சாலச் சிறந்தது, சீக்கிரமே promotion கிடைத்து அறிவாளிகள் லிஸ்டில் சேர்ந்துவிடலாம். பிறகு வெளிநாடுகளில் விசிட், அவ்வப்போது அமேரிக்க எதிர்ப்பு போன்ற காரியங்களில் ஈடுபட்டு வெள்ளைக்காரனிடம் பிச்சை எடுத்துவந்து, அந்த பணத்தில் பங்களா கட்டிக் கொள்ளவேண்டும்

  (சிறப்பு விபரம்: அரசு நிலத்தில் கட்டிக் கொள்வது சிறந்தது).

  ௫. தமிழ்நாட்டில் திராவிட வாதத்தை ஆதரிக்கவேண்டும். அது எத்தகய அடிப்படை கொண்டது, எப்பேர்ப்பட்ட பிரிவினைக்கு அது வித்திடக் கூடியது என்பதை பற்றியெல்லாம் யோசிக்கக்கூடாது.

  ௬. மாவோயிஸ அல்ட்ராக்கள், நக்ஸல்பாரி இயகங்கள், கஷ்மீர் பிரிவினைவாதிகள் போன்றவர்களை ஆதரிப்பது சரி என்கிற நிலைப்பாடு மிக மிக அவசியம். ஏன் என்றால் அது தான் இந்தியா என்கிற "அடக்குமுறை அரசை" எதிர்க்கும் வழிமுறை என்று அப்பாவி மக்களை நம்பவைக்கவேண்டும்.

  ௭. இந்த போலி எதிர்ப்புவாதம் பற்றி ஒரு உண்மையை இங்கே தெரிந்து கொள்ளவேண்டும். அதாவது, வெள்ளைக்காரன் (முக்கியமாக liberals, intellectutals) இந்தியாவைப் பற்றி, பிரச்சனைக்குறிய பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை பற்றி என்ன கருத்து சொல்கிறார்களோ அதை அப்படியே முழுங்கி வந்து வாந்தி எடுக்கவேண்டும். ஏன் என்றால் அவர்கள் அறிவாளிகள் அவர்கள் சொல்வது எப்படி தவறாக இருக்கும் என்ற ரேஞ்சில் கேளிவ் எழுப்புபவர்களிடம் வாதிடவேண்டும். தலையில் மூளை என்பதை எடுத்து வைத்துவிட்டு (மேல் மாடி "to let") பேசுவது சாலச் சிறந்தது. இந்தியா என்பது அடக்குமுறை அரசு என்பதால் அதன் நலம் நமக்கு தீங்கு என்று எண்ண வேண்டும்.

  ௮. அனுகுண்டுகள் தீங்கானவை என்பது எந்த அறிவாளியும் ஏற்றுக் கொள்வான். ஆனால் இந்தியா வைத்திருந்தால் மோசம் என்று சொல்லவேண்டும். காரணம் ஏன் என்றால் இந்தியாவில் ஏழைகள் அதிகம் இருக்கிறார்கள் அவர்களுக்கு சோத்துக்கு வழி இல்லை என்று வாதிடவேண்டும். இந்தியா என்கிற ஒரு நாடு இருந்து அதில் மக்கள் உயிருடன் இருந்தால் தான் (ஏழையோ, பணக்காரனோ!). என்கிற உண்மையை அடக்கி வாசிக்கவேண்டும். (அஸ்வத்தாமா ஹதஹ, குஞ்சரஹ)

  ௯. வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் இந்த போலி எதிப்புவாதத்தைப் பரப்புவது எப்படி என்பது தனிச்சிறப்பு வாய்ந்த Patented technique என்பதால் அதைபற்றி தனிபதிவு தான் போடவேண்டும். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று என்னவென்றால், "தெற்கு ஆசிய மக்கள்" (south asians) என்று சொல்லிக் கொண்டு புதிய identity உருவாக்குவது. இல்லாத ஒரு identity உருவாக்கி அதன் பெயரில் உடோப்பிய சொசைட்டி கற்பனையை விதைத்து NRI க்களிடமிருந்து காசைக் கரக்கவேண்டும். முக்கியமாக இந்த "தெற்காசியா" காய்ச்சலை பலகலைக்கழகங்களில் படிக்கவரும் அப்பாவி மாணவர்களுக்கு வரவைத்துவிடவேண்டும். (இந்த தெற்காசியா காய்ச்சல் பற்றி விரைவிலெயே தனிப்பதிவு போடப்படும்).

  ௰. மொத்தத்தில் போலி எதிர்ப்புவாதத்தின் "ரிஷி மூலம்" என்னவென்றால் செத்துப் போன கம்யூனிசக் கொள்கையை உயிர்ப்பிப்பதே. அதற்கான மிருத்யுஞ்சய மந்திரம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. போலி எதிர்ப்புவாதி ஆவதற்கு இந்த மந்திரத்தை நித்தம் காலையும், மாலையும் மேற்கு நோக்கி அமர்ந்துகொண்டு 1008 முறை சோல்லவேண்டும்.

  "ஓம் மார்க்ஸம் யஜாமஹே
  கம்யூனிசம் பூர்ஷ்வா வர்தனம்
  உர்வாருகமாவி பந்தனாத்
  ம்ரித்யோர் முக்ஷீய மா அமிர்தாத்"


  குறிப்பு:

  இந்த மந்திரம் மிக அறிய மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் என்பதால் இந்துத்வாவாதிகளால் அழிக்கப்பட்டுவிட்டது. நீச பாஷை சமஸ்கிருதத்தில் தான் கடைசியாக் மிஞ்சியிருந்தது என்பதால் அதை அப்படியே வழங்கியுள்ளேன்.

  போலி எதிப்புவாதிகளுக்கு சமஸ்கிருதம் தெரியாது என்பதால் மொழி பெயர்ப்பையும் வழங்கிவிடுகிறேன்...

  மார்க்ஸை வழிபடுவோம்
  கம்யூனிசத்தை பூர்ஷ்வா போல் கொழுத்து வழர்த்துவிட்டு
  எப்படி வெள்ளரிக்காய் பழுத்தவுடன் தானாக செடியிலிருந்து பிரிகிறதோ
  அதே போல் மரணத்திலிருந்து உயிர்பிப்பாயாக

  23 comments:

  நாகை சிவா said...

  :-))))))))

  Samudra said...

  //இந்த தெற்காசியா காய்ச்சல் பற்றி விரைவிலெயே தனிப்பதிவு போடப்படும்//

  பிரமாதம்! ரொம்ப நாளாகவே இந்த "தெற்காசியா" மீது கடுப்பாக இருந்தேன்....

  //சிறப்பு விபரம்: அரசு நிலத்தில் கட்டிக் கொள்வது சிறந்தது//

  ஹிஹி..

  //பட்டங்கள் கட்டுவதும், சட்டங்களை உடைப்பதும் பாரினில் நாங்கள் நடத்த வந்தோம்...//

  முத்திரை மன்னர்கள்ன்னு இவங்களுக்கு நாம் பட்டம் குடுத்தா என்ன?

  Vajra said...

  வாங்க நாகை சிவா,

  சமுத்ரா,
  இந்த தெற்காசியா காய்ச்சல் பற்றி விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்...விரைவிலேயே பதிகிறேன்.

  நாகை சிவா said...

  //இந்த தெற்காசியா காய்ச்சல் பற்றி விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்...//
  ஆஹா, அந்த மேட்டர சொல்ல மறந்துட்டோமேனு வந்தேன், அதுக்குள்ள சமுத்ரா சொல்லிவிட்டார்.
  ஆகட்டும்... ஆகட்டும்

  கால்கரி சிவா said...

  ஐயா,

  தாங்களை மனிதனாகவே கருதவில்லை என அறிவுசீவி ஐயா ரோசா வசந்த் சொல்லிட்டாங்க.

  நீங்க இந்தியா போகும் போது எதுக்கும் ஒரு மிருக லைசன்ஸ் வாங்கிட்ட போயிடுங்க . அங்கே இருக்கிற மனிதர்கள் மிருகங்களை குதறிவிடுவார்கள்.

  இந்துத்வா என்பது முட்டாள்களின் வாதமாம்.

  80 கோடி முட்டாள்கள் தான் இந்தியாவை இவ்வுலகம் பிரமிக்கும் வகையில் வைத்திருக்கிறார்கள்.

  இதெல்லாம் அறிவுசீவிகளுக்கு தேவையா? அவர்களின் தேவை ஏழைகள் ஆகையால் இந்தியாவை ரிவர்ஸ் கியரில் ஓட்டுவதுதான் சால சிறந்தது.

  நல்லாயிருக்கட்டும் அறிவுசீவிகள். நாம் முட்டாள்களாகவே இருப்போம்

  ராஜரிஷி சோ ரசிகன் said...

  :-)))))

  இம்மாதிரி (போலி) எதிர்ப்புவாதிகளுக்கு பதிலடி தர போற்றுதலுக்குரிய பல்கலை வித்தகர் சொக்கத்தங்கம் திரு சோ அவர்கள் இருக்கின்றார்கள்.அவர் வழி நடக்கும் லட்சக்கணக்கான வாசகர்களும் இருக்கிறோம்.நீங்கள் தைரியமாக எழுதுங்கள்.

  CT said...

  Hi Shankar
  Very well written.
  "அடிக்கடி கவலையாக தென்படவேண்டும். சற்றே கோபமாகக் கூட இருக்கலாம்.
  ஏழைகளைப்பற்றி அதீத கவலை கொள்வதுபோல் பேச வேண்டும். "
  well said.This is true and am not going to justify anything...

  "இந்து என்றால் இழிவு, மற்ற மதங்கள் பற்றி பேசுவது கூடாது ஏன் என்றால் அவர்கள் நம்பிக்கையை நாம் கிண்டல் அடிப்பது தவறு என்கிற தனித் தன்மை நமக்கு வேண்டும் ..."

  Some of the stars in this blog galaxy are already doing this... guess I should send you a gift for quoting this.....

  "செத்துப் போன கம்யூனிசக் கொள்கையை உயிர்ப்பிப்பதே..."

  I strongly believe this is very difficult.People have failed successfuly..In my 10 years of manufacturing life...I have seen this guys going no where but to hit rock bottom.
  I happened to speak to a friend(Keralite) of mine in japan, he mentioned that there is no union or communism in japan.Personally he feels it is very good(I am surprised to hear from a keralite).

  Mritunjeya mantra.....made me to laugh

  with best wishes
  CT

  Anonymous said...

  தாடி வைத்துக் கொள்ளவேண்டும். (கண்ணாடி இருந்தால் சிறப்பு, அதிலும் சோடாபுட்டி என்றால் ஆஹா! பிரமாதம்)

  குர்தா போட்டுக் கொண்டு ஜோல்னா பை ஒன்றை மாட்டிக் கொள்ளவேண்டும்.

  அடிக்கடி கவலையாக தென்படவேண்டும். சற்றே கோபமாகக் கூட இருக்கலாம்.

  ஏழைகளைப்பற்றி அதீத கவலை கொள்வதுபோல் பேச வேண்டும். (உண்மையாக கவலை தேவையில்லை)/

  இங்கிலீஷில் அடிக்கடி பேச வேண்டும்.state terrorism,bourgeois,imperialism ,right wing terrorist,hindu fundamentalist போன்ற சொற்றொடர்களை அடிக்கடி உச்சரிக்க வேண்டும்.யார் யார் தலித்,யார் யார் பார்ப்பனர்,யார் யார் OBC,MBC,BC,FC என்ற புள்ளிவிவரங்கள் விரல்நுனியில் இருக்கவேண்டும்.அப்போதுதான் முத்திரை குத்த வசதியாக இருக்கும்.அப்படி தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.பார்ப்பனர்,பார்ப்பன அடிவருடி என்று ஒரே முத்திரை குத்தி விட்டால் தீர்ந்தது.

  Vajra said...

  //
  இந்தியாவை ரிவர்ஸ் கியரில் ஓட்டுவதுதான் சால சிறந்தது.
  //
  calgary,

  அது மட்டுமா...வண்டியெ spare part ஆ கழட்டி தனித் தனியா விக்கணும்லெ நெனக்கிறானுங்க...

  Vajra said...

  வாருங்கள் ராஜரிஷி,

  சோ ரசிகர்களில் நானும் ஒருவன்.

  உங்கள் பாராட்டிற்கு நன்றி.

  Vajra said...

  //
  (I am surprised to hear from a keralite)
  //

  kerala has 99% literacy. Thats why you see so many keralites not working in Kerala but in Coimbatore, Bangalore, Madras, and Bombay.

  "Religion is the opiate of masses."

  "Communism is the opiate of the intellectuals."

  Vajra said...

  //
  யார் யார் தலித்,யார் யார் பார்ப்பனர்,யார் யார் OBC,MBC,BC,FC என்ற புள்ளிவிவரங்கள் விரல்நுனியில் இருக்கவேண்டும்.
  //

  புள்ளி விவரம் எல்லாம் கிடையாது...எல்லாமே ஒரு கணக்கு தயார் செய்து வந்து பொய்ப்புள்ளிவிவரங்கள் (half truths!)...

  Vajra said...

  //
  தாங்களை மனிதனாகவே கருதவில்லை என அறிவுசீவி ஐயா ரோசா வசந்த் சொல்லிட்டாங்க.
  //

  இவர்களைப் போன்றவர்கள் இந்தியாவை ஒரு நாடாகவே கருதவில்லை (ஒரு பூர்ஷ்வா ஜனநாயகம், வெள்ளைக்காரன், ஆதிக்க வர்கத்தினிடம் கொடுத்துச் சென்ற நாடு) ஆகயால் இந்தியா இல்லை என்றாகிவிடுமா?

  மனிதன் said...

  என்ன செய்தால் ஒருத்தரை இந்த அறிவுசீவிகள் மனிதனாக ஏற்றுக் கொள்வார்கள் என்பது பற்றி ஏதேனும் தகவல் உள்ளதா?இல்லை இந்துக்கள் எல்லாருமே மனிதர்கள் இல்லை என்று ஏதேனும் இடதுசாரி கொள்கை புதிதாக உள்ளதா?

  Vajra said...

  மனிதன்,

  இவர்கள் அங்கீகாரம் நமக்குத் தேவையில்லை..மேலும் ஏற்றுக் கொள்வது என்பது இவர்கள் கொள்கை அல்ல....

  இப்படி அறிவுசீவியாக்கி நாம் இவர்களை ஏற்றுக் கொள்வோம்...

  Hariharan said...

  //"ஓம் மார்க்ஸம் யஜாமஹே
  கம்யூனிசம் பூர்ஷ்வா வர்தனம்
  உர்வாருகமாவி பந்தனாத்
  ம்ரித்யோர் முக்ஷீய மா அமிர்தாத்//

  உலெகெங்கும் செத்துவிட்ட கம்மனாட்டியிஸமாம் மார்க்ஸீய-கம்யூனித்திற்கு எத்தனைமுறை "மஹாம்ருத்யுஞ்சய ம்ந்திரம்" ஓதினாலும் ஏதும் ஆகப்போவதில்லை!

  வெறும் அடிமைத்தனமன Mccalluay முறையிலன கல்வியை மட்டும் படித்த இளைஞர்கள் இம்மாதிரி சீர் கெட்டுப்போகிறார்கள். Our Value based, Heritage education - கீதைச்சாரம்,உபநிடதங்கள்,இராமாயணம்,தேவாரம்,திவ்யப்ரபந்தம்-இவைகளைப்படிப்பது மிக அவசியம். புதிய தலைமுறைக்கு நமது அறம், நெறி சார்ந்த பார்வை மிக அவசியம்!

  Mc-callauy education-ன் derivative-வான Pseudo-Secularism நமது காய்ச்சல் அறிவாளிகளுக்கு பகவான் கிருஷ்ணரைக்கூல் யாதவ ஜாதிக்காரராகவும், மகாத்மா காந்தியினை -வைஸ்ய ஜாதிக்காரராகவும் பார்க்கும் வல்லமையை மட்டும் தந்திருக்கிறது!

  இந்தத் தலைமுறை 50% விழிப்புடன் இருப்பதுலன் அடுத்த தலைமுறையை நமது நெறி பற்றிய நிஜமான பார்வையை சொல்லித் தரவும் வேண்டும்! பெரிய மாற்றம் அப்போது தானகவே வரும்! நிச்சயம் வரும்!

  அன்புடன்
  குவைத்திலிருந்து,
  ஹரிஹரன்

  மிதக்கும் வெளி said...

  ஷங்கர் போன்ற இந்துஅறிவுஜீவிகளாக உருவாவது எப்படி?
  1.பூணூல் போட்டிருக்க வேண்டும்.(அ)குறைந்தபட்சம் பார்ப்பானுக்கு உ@###கொடுக்கவாவது தெரிந்திருக்க வேண்டும்.
  2.அதீத கம்யூனிச வெறுப்பு கொண்டிருக்க வேண்டும்.
  3.சோ போன்ற ஜந்துக்களின் ரசிகர்களாக இருக்க வேண்டும்.
  4.இந்திய ராணுவம்,அமெரிக்கா,அரசு,இஸ்ரேல் வரை சொறிந்துகொடுக்க வேண்டும்.
  5.நாட்டில் எங்கு இழவு விழுந்தாலும் முஸ்லிம்களும் நக்சல்பாரிகளும்தான் காரணம் என்று பஜனை பாடவேண்டும்.(அவனவன் வீட்டில் குழந்தை பிறப்பதற்கும் அவர்கள்தான் காரணம் என்று சொல்வார்களோ என்னவோ...)

  Anonymous said...

  1.பூணூல் போட்டிருக்க வேண்டும்.(அ)குறைந்தபட்சம் பார்ப்பானுக்கு உ@###கொடுக்கவாவது தெரிந்திருக்க வேண்டும்./

  Shame on you.
  The words you use show your worth.

  Vajra said...

  anonymous,

  This is what they are...an intolerent creed of intellectuals who go bad mouthing on their critics.

  I have edited it..thats the reason you see the symbols there.

  மிதக்கும் வெளி said...

  வாழ்க (உங்கள்) நாகரிகம்!
  அறிவு வக்கிரத்தைவிட வார்த்தை வக்கிரமொன்று மோசமானதல்ல

  Anonymous said...

  வாழ்க (உங்கள்) நாகரிகம்!
  அறிவு வக்கிரத்தைவிட வார்த்தை வக்கிரமொன்று மோசமானதல்ல /

  நீங்கள் பயன்படுத்தும் வார்த்தையே உங்கள் அறிவு எந்த லட்சணத்தில் மேம்பட்டுள்ளது என்பதை காட்டுகிறதே.பொது இடத்தில் நாகரீகமாக பேசத் தெரியாத நீங்கள் எல்லாம் அறிவு வக்கிரத்தை பற்றி உபதேசம் செய்ய வந்துவிட்டீர்கள்.

  Shame on you.

  செந்தில் குமரன் said...

  "Sati" means a virtuous woman. A woman who dies burning herself on her husbands funeral fire was considered most virtuous, and was believed to directly go to heaven, redeeming all the forefathers rotting in hell, by this "meritorious" act.

  நீங்கள் கொடுத்துள்ள லிங்கில் இது போல விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது ஆகவே சதி போன்றவை பெண்களை புனிதப் படுத்துவதற்காக உண்டானது என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

  நீங்கள் சொல்லும் அனைத்துமே அனைவருக்கும் பொருந்துவதில்லை ஆகவே யாரோ ஒரு தனி மனிதரை மனதில் கொண்டு எழுதியுள்ளீர்கள் அவர் பெயரையும் எழுத வேண்டியதுதானே?

  என்ன சொல்ல வருகிறீர்கள் இந்து மதம் குறையே இல்லாதது அதனை எதிர்ப்பவர்கள் அனைவரும் நீங்கள் சொல்லும் எதிர்ப்புவாதிர்கள் என்றா?

  ஆரோக்கியமான முறையில் விமர்சனம் செய்யலாமே இது போன்ற பதிவுகள் தேவையா? மற்றவரை கீழ்மை படுத்துவது போல உள்ளதே?

  Vajra said...

  குமரன் எண்ணம்,

  நான் கொடுத்த லிங்க் ஐ முழுவதும் படித்துத்தான் பாருங்களேன்...

  சதி போன்ற விஷயங்களை நான் இங்கு ஞாயப்படுத்தவில்லை. அதை அன்று எதிர்த்தவர்களில் ராஜா ராம் மோஹன் ராய் போன்றவர்கள் உண்மையான எதிர்ப்புவாதிகள்...ஆனால் இன்றும் அதையெல்லாம் காரணம் காட்டிக் கொண்டு இந்துமதத்தை திட்டுவது, அல்லது மதமாற்றத்தை ஆதரிப்பது போன்ற காரியங்கள் செய்பவர்கள் போலிக்கள். அவர்களை மனதில் கொண்டு எள்ளி நகையாடியுள்ளேன். There is no personal attack here. I am criticizing a belief system that is masquerading in the name of "Reformist" tag.

  //
  ஆரோக்கியமான முறையில் விமர்சனம் செய்யலாமே இது போன்ற பதிவுகள் தேவையா? மற்றவரை கீழ்மை படுத்துவது போல உள்ளதே?
  //

  ஆரோக்கியமான விமர்சனத்தை இந்து மதம் ஏற்றுக் கொள்ளும். உள்நோக்குடன் இந்து மதத்தை அழிக்கவரும் விமர்சனத்தை அது இது வரை ஏதும் செய்யாமல் Decent ஆக விலகிச் சென்றது. இனி அப்படி நடக்காது...(கீழ்மையான எண்ணம் உள்ளவர்களை மேன்மைப் படுத்த முடியாது...)