February 20, 2007

ஏக "இரை" கொள்கை

மு. கு., இந்தப் பதிவு மத நம்பிக்கையின் காரணமாகவோ, உடல் நலத்தின் காரணமாகவோ வெஜிடேரியன்களாக இருப்பவர்களைப் பற்றி அல்ல.

புலால் உண்ணாமை என்பது தொன்று தொட்டு இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வாழ்க்கை முறை. இதில் எந்த வித கட்டாயமும் இல்லை. சிலருக்கு இந்த புலால் உண்ணாமை என்ற உணவுப் பழக்கம் கட்டாயமாக இருக்கலாம் ஆனால் vast majority மக்கள் வெறும் மரக்கறி சாப்பிட்டுக் கொண்டு காலம் தள்ளத் தயாராக இல்லை என்பதே உண்மை நிலை.

இப்போது சொல்லவந்த விஷயம் புதிய வெஜிடேரியன்களைப் பற்றியது. இவர்கள், நேற்றுவரை கறி இல்லாமல் சோறு சாப்பிடாத மிருக ஜாதிகள். இன்று Fashion என்பதற்காக வெஜிடேரியன்களாக மாறித் திரிபவர்கள்.

அமேரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வெள்ளையர்கள் என்றால் நம்மூரில் சில ஜந்துக்கள் இப்படி இருக்கிறார்கள்.

அவர்கள் இது போல் வெஜிடேரியன்களாக மாற எடுத்து வைக்கும் காரணங்கள் என்னவென்று பார்க்கலாம். விக்கியில் கிடைத்த இந்த புள்ளிவிபரத்தைப் பார்க்க

மிருக வதையைத் தடுக்கிறார்களாம். (10%)

ஒரு பவுண்ட் பீஃப் steak செய்யத் தேவைப்படும் தண்ணீரின் அளவு 20,000 லிட்டர், இதைவைத்து ஒரு ஊரே தண்ணீர் பஞ்சமில்லாமல் வாழலாம். வெஜிடேரியன்களில் 4% ஆட்கள் இந்த சிந்தனைக்காக வெஜிடேரியன்களாக மாறியவர்களாம்

1% வெஜிடேரியன்கள் உலகில் நிலவும் பசிக்கொடுமைக்கும், வரட்சியைக் குறைக்கவும் வெஜிடேரியன்களாக மாறினார்களாம்.


இந்த 10 + 4 + 1 சதவிகித ஆட்கள் தாங்கள் வெஜிடேரியன்களாக இருப்பதில் என்தப் பிரச்சனையும் எனக்கில்லை. ஆனால், நான் என்ன சாப்பிடவேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்று சொல்லி தெருக்களில் ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்துவது, பஞ்சத்தைத் தடுக்க ஆடு, மாடுகளை சாப்பிடாமல் இருக்கச் சொல்லி campaign கள் செயவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகின்றனர். PETA India இதில் அதிக வெற்றி பெற்றுள்ளது.

இவர்களின் முதல் மற்றும் முற்றிலும் hypocritical வாதம், சுற்றுப் புரச் சூளல் மாசு (pollution).


between 15 and 20 per cent of the methane gas emissions worldwide are produced by animals raised for food. These gases contribute to global warming and can sicken the people who live in communities around farms.


இந்த மடையர்களில் எத்தனைபேர், கார், ஸ்கூட்டர் ஓட்டிச் செல்பவர்கள் ? அதில் வராத pollution ஆ மாட்டின் மெதேன் வாயுவினால் வந்துவிடப் போகிறது ? சுற்றுப் புரச் சூளல் மேல் அக்கரை என்றால் முதலில் சைகிளில் போகட்டும் வேலைக்கு! அதற்கு பிறகு வெஜிடேரியனாகட்டும்!


மிருகவதை தடுப்பு!
அடுத்து, ஏதோ, கறி சாப்பிடாதனால் மிருகவதை நடப்பதில்லை போன்ற மாயையை உருவாக்குகின்றனர். மேலும் கறி சாப்பிடுபவர்கள் பாவச் செயல் செய்வதனால் நரகத்திற்குசத் தான் போகப் போகிறார்கள் என்று கூடச் சொல்வார்கள், இவர்களிடம் ஒன்று கேட்கவேண்டும்,

என்னைப் போன்றவர்கள் சாப்பிடத்தான் மிருகங்களைக் கொல்கிறோம், உங்களைப் போலுள்ள வெஜிடேரியன்கள் சாப்பிடும் கோதுமை, அரிசி, பருப்பு விவசாயம் செய்யப் பயன் படுத்தும் பூச்சிக் கொல்லிகளால் பல இன பூச்சிகளே முற்றிலுமாக இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அது தவிற, அமேரிக்கா போன்ற நாடுகளில் பயிர்களை காட்டு விலங்குகள் வந்து நாசம் செய்யாமல் இருக்க hunting pass கள் வழங்கப் படுகின்றன பல மான், முயல் போன்ற உயிரினங்கள் கொல்லப் படுகின்றன. இந்தியாவில் சொல்லவே வேண்டாம், பயிர்களை நாசம் செய்தால் அன்னிக்கு மான், மயில், முயல் கறி தான் வீட்டில் !

எது இப்போது அதிக பாவச் செயல்? கூண்டில் உணவுக்காகவே பிரதேயேகமாக வளர்க்கப் படும் மிருகத்தைக் கொல்வதா ? அல்லது சுதந்திரமாக காட்டில் சுற்றித் திரியும் மிருகங்களைக் கொல்வதா ?


என்னைக்கேட்டால் ஒரு கொலை செய்தாலும் 10 செய்தாலும் தூக்கு ஒண்ணுதான்.!!

ஆகவே, மிருகவதை என்றெல்லாம் புருடா விட்டுக் கொண்டு வெஜிடேரியன் கொள்கைக்கு ஆள் சேர்ப்பது, குற்ற உணர்ச்சியைத் தூண்டுவது போன்ற காரியங்களைச் செய்யாதீர்கள்.

அது போல் இவர்களுக்கு மிருக வதையைத் தடுக்க வேண்டும் என்று தான் நோக்கம் என்றால் தாங்கள் உண்ணும் பயிரை தாங்களே விவசாயம் செய்து தான் உண்ணவேண்டும்! முடியுமா ?

பஞ்சம்

அடுத்தது கறி சாப்பிடுபவர்களால் தண்ணீர் பஞ்சம் வருகிறது. வரட்சி வருகிறது என்பது. இந்த குற்றச்சாட்டைக் கொஞ்சம் ஆராயலாம்.


It takes 20,940 litres of water to produce 1 kilogram of meat, but only 503 litres of water to produce 1 kilogram of wheat.


ஒரு ஆடோ, மாடோ தன் வாழ் நாளில் பல லிட்டர் தண்ணீர் உட்கொள்கிறது. அந்த மாட்டை வளர்க்கவில்லை என்றால் தண்ணீர் பஞ்சம் வராதாக்கும் ?

இப்ப ஒரு மாடு இவ்வளவு லிட்டர் தண்ணீரைக் குடிக்கிறது என்றால் என்ன ஆகிவிடப் போகிறது. உலகத்தில் என்ன தண்ணீர் இல்லாமலா போய்விடும் ?

5 பில்லியன் வருஷத்திற்கு முன் எவ்வளவு தண்ணீர் இந்த உலகில் இருந்ததோ அதே அளவு தான் இன்றும் உள்ளது. அஞ்சாப்பில் வாடர் சைகிள் சொல்லிக் கொடுத்திருக்கவில்லையா ?


பஞ்சம் பற்றிய இன்னொரு விஷயம்,


Raising animals for food is grossly inefficient because, while animals eat large quantities of grain, they produce only small amounts of meat, dairy products or eggs in return. Scientists estimate that animals must be fed up to 10 kilograms of grain to produce just 1 kilogram of meat. The world’s cattle alone consume a quantity of food equal to the caloric needs of 8.7 billion people – more than the entire human population on Earth.


இது மஹா சொத்தை வாதம்.

உலகில் 80% திற்கு மேல் தயாராகும் பயிர்கள் not fit for human consumption!! மனிதர் உட்கொள்ள ஏற்றவையல்ல. ரப்பர் போலுள்ள அரிசி, கல் போலுள்ள கோதுமையை இது போல் Fashion வெஜிடேரியன் மடையர்களுக்குத் தான் உணவாகக் கொடுக்கவேண்டும். அவை மிருகங்கள் உட்கொள்ளவே ஏற்ற உணவாகும். மேலும், இந்தியாவிலோ, வேறு எந்த நாட்டிலோ எவ்வளவு நிலம் விழை நிலம் என்ற கணக்கில் வரும் ? விவசாயிகளுக்கோ, ஆடு, மாடு வளர்க்கும் பண்ணை வைத்திருப்பவர்களுக்கோ ஏதேனும் Choice உள்ளதா ? மனிதன் உண்ணத்தகு பயிர்வகைகளையும் தானியங்களையும் மட்டுமே வளர்க்க முடிவு எடுக்க முடியுமா ?

இது போல் இவர்களது சொத்தை வாதங்களை உடைத்துக் கொண்டே போகலாம்.

சுற்றுப் புரச்சூளல் பாதுகாப்பு கருதி, மிருக வதையைத் தடுக்க வேண்டுமென்று வெஜிடேரியன்களாக "மதம்" மாறும் கூட்டம், தங்கள் நிலையை ஞாயம் என்று கற்பிக்க அபத்த வாதங்களைச் செய்து சாதாரண புலால் உண்ணும் சாமான்ய மனிதனைக் கேவலப் படுத்துகின்றனர் என்பதற்காகவே என் கோபம்.

இது போன்ற Fashion வெஜிடேரியன்களுக்கும் ஏக இறை கொள்கை மதக்காரகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அவர்களுக்கு அவர்கள் மதம் தான் சிறந்தது மற்ற மதமெல்லாம் "பொய்" மதங்கள் என்றால் இவர்களுக்கு இவர்கள் உண்ணும் வெஜிடேரியன் உணவே சிறந்தது மற்றதெல்லாம் "தீங்கான" உணவுகள். முட்டாள் தனத்தின் உச்சகட்ட வெளிப்பாடு.

17 comments:

கால்கரி சிவா said...

நானும் ஏதோ வேறு மேட்டர்ன்னு பார்த்தா இந்த ஜோக்கர்களைப் பற்றியா?

இங்கே டார்ச்சர் தாங்க முடியலே சாமி. சிக்கன் மாதிரி ஆன சிக்கன் இல்லே, பீப் மாதிரி ஆன பீப் இல்லே, நண்டு மாதிரி ஆன நண்டு இல்லே இந்த "மாதிரி" அய்டங்கள் மார்கெட்டில் நிறைய வந்துவிட்டது.

யோவ் கறி சாப்பிடனுன்னா டைரக்ட்டா சாப்பிடு. காய்கறி சாப்பிடுனும்ன்னா எங்ககிட்டே (இந்தியர்கள்) கத்துக்க்கோ. சும்மா சும்மா காய்கறிய சிக்கன் மாதிரி மாத்தி சாப்பிடாதே என்பதெ நம்ம வேண்டுகோள்

Anonymous said...

One Stone, Two Mangos..

Nice article.

- Sekar, SG

குழலி / Kuzhali said...

வஜ்ரா நட்சத்திர வாழ்த்துகள்...

//இங்கே டார்ச்சர் தாங்க முடியலே சாமி. சிக்கன் மாதிரி ஆன சிக்கன் இல்லே, பீப் மாதிரி ஆன பீப் இல்லே, நண்டு மாதிரி ஆன நண்டு இல்லே இந்த "மாதிரி" அய்டங்கள் மார்கெட்டில் நிறைய வந்துவிட்டது.
//
அது சரி.... நல்லா இருக்கும் சாப்ட்டு பாருங்க ஆனா இந்த மாதிரி சிக்கன், மட்டன், மீன் எல்லாம் ஒரே சுவைதான் மசாலா மட்டும் தான் வேற வேற...

சுவனப்பிரியன் said...

ஆஹா!

வஜ்ராவிடம் இருந்து இப்படி ஒரு பதிவா!

இத்தனை காலம் ஏக இறைவனை வணங்குபவர்கள் புலால் உண்பதால் உலகுக்கு எந்த கேடும் இல்லை என்று இது வரை சொல்லி வந்ததை மெய்ப்பித்திருக்கும் வஜ்ராவுக்கு நன்றிகள் பல.

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

இலவசக்கொத்தனார் said...

அடுத்தவர்களை கட்டாயப் படுத்த வேண்டாம் என்பது சரியான வாதமே. ஆனால் நீங்கள் அதற்காக அவர்கள் வாதங்கள் எல்லாமே தவறு என்பதில் உடன்படிக்கை இல்லை.

அதிகம் ஆணி புடிங்கச் சொல்லிவிட்டதால் விரிவாக பேச எனக்கு இது நேரமில்லை. முடிந்தால் மீண்டும் வருகிறேன்.

Vajra said...

குழலி, அனானி, சுவனப்பிரியன், இலவசக் கொத்தனார்,
நன்றி.

Vajra said...

கால்கரி,

இந்த மாதிரி உணவுகளும் முட்டை மற்றும் விலங்குக் கொழுப்புகள் பயன்படுத்தித்தான் செய்கின்றனர் பெரும்பாலும். அதன் முக்கிய உட்பொருள் "சோயா" புரதம் தான்.அதன் மேல் விதவித மான ஃப்ளேவர்கள் போட்டு உங்களுக்கு விற்கிறார்கள்.

அவிங்களுக்கும் வெஜிடேரியன் டயட் எல்லாம் தெரியும் கால்கரியாரே, நம்ம அளவுக்கு விதங்கள் இல்லை என்றாலும் எல்லாம் salad தான் அதிகமாக இருக்கும்.

வித்யாசாகரன் (vidyasakaran) said...

அம்மாடீ, எவ்வளவு கோபம்!!!
//மிருக ஜாதிகள், ஜந்துக்கள், மடையர்கள், முட்டாள் தனத்தின் உச்சகட்ட வெளிப்பாடு
முட்டாள்தனத்தைக் கேவலப்படுத்தாதீர்கள். இதெல்லாம் சாதாரணம். அது இன்னும் உச்சத்திற்கும் போக முடியும்.

//மேலும் கறி சாப்பிடுபவர்கள் பாவச் செயல் செய்வதனால் நரகத்திற்குசத் தான் போகப் போகிறார்கள் என்று கூடச் சொல்வார்கள்
இதை மதக் காரணங்களுக்காக இறைச்சி சாப்பிடாதவர்கள்தான் (முட்டாள்கள்?) சொல்வார்கள்.

//என்னைப் போன்றவர்கள் சாப்பிடத்தான் மிருகங்களைக் கொல்கிறோம், உங்களைப் போலுள்ள வெஜிடேரியன்கள் சாப்பிடும் கோதுமை, அரிசி, பருப்பு
ஆமாமாம். உங்களைப் போன்றவர்கள் கோதுமை, அரிசி, பருப்பு சாப்பிடுவதேயில்லை.
நீங்கள் உண்ணும் மிருகங்களும் அரிசி, கோதுமை, தானியங்கள் சாப்பிடுவதேயில்லை.

//எது இப்போது அதிக பாவச் செயல்? கூண்டில் உணவுக்காகவே பிரதேயேகமாக வளர்க்கப் படும் மிருகத்தைக் கொல்வதா ? அல்லது சுதந்திரமாக காட்டில் சுற்றித் திரியும் மிருகங்களைக் கொல்வதா ?
சாலமன் பாப்பையாவைத்தான் கேட்கணும்.
ஆகா! என்னே கருணை, சுதந்திர மிருகங்கள் மீது (மட்டும்).

இந்த ஃபாஷன் வெஜிடேரியன்களாவது, தானாக ஏதோ ஒரு காரணத்தை நினைத்துக்கொண்டு மாறினார்கள். மதக் காரணங்களுக்காக சாப்பிடாதவர்கள், இதை விட சொத்தையான வாதங்களை அல்லவா முன் வைப்பார்கள்? அப்போது உங்களுக்கு ஏன் குற்ற உணர்ச்சி வருவதில்லை?

//5 பில்லியன் வருஷத்திற்கு முன் எவ்வளவு தண்ணீர் இந்த உலகில் இருந்ததோ அதே அளவு தான் இன்றும் உள்ளது.
இது போலத்தானே தங்கமும்? அது எங்கே இருக்கிறது என்பதில்தான் விஷயம் உள்ளது என்று நினைக்கிறேன். உங்கள் பதில்?

நீங்கள் நொய்டாவில் குழந்தைக்கறி உண்டவர்களை ஆதரிக்கிறீர்களா? இல்லை என்று நம்புவதால் சொல்கிறேன், நீங்கள் உங்கள் கோட்டை மனிதனைத் தவிர்த்து விட்டுப் போடுகிறீர்கள். அவர்கள் இன்னும் சில மிருகங்களையும் தவிர்க்கிறார்கள். அவ்வளவுதான். அதை முட்டாள்தனம் என்று சொல்வது ஏன்?

மற்றபடி தவறான கருத்துக்களை உடைக்க வேண்டும் என்பதில் உங்களுடன் ஒத்துப்போகிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கங்கள் தேவை.

நான் said...

வஜ்ரன்,

நல்ல பதிவு. நான் சுத்த அசைவமுங்க. பொன்னுசாமிக்கு சாப்பிட போறப்போ இலையில காய்கறி வக்கிறத கூட தாங்க முடியாத pure non-vegetarian.

இதுல பெரிய இம்சையே சைவம் சாப்பிடுறவங்க கூட சேர்ந்து சாப்பிட போறதுதான். ஏதோ நம்மலயெல்லாம் நரமாமிச பட்சினிகள் மாதிரி பாப்பாய்ங்க.

ஒரு கல்யாணத்திற்கு போயிருந்த போது (பிராமன நண்பர்) யாரு குக், சாப்பாடு பத்தி பேசும் போது சொல்றாய்ங்க "விஜிடபிள் ஆம்லெட் நல்லா பண்வாரு, அந்த கூட்டு, கறி அப்பிடியே சிக்கன் மசாலாவோட டேஸ்ட கொண்டு வந்திருவாரு"....இவிய்ங்களயெல்லாம் என்ன பண்ண சொல்றீங்க

கூத்தாடி said...

இந்த வெஜிடேரியன் தொந்தரவு அப்ப அப்பம் தொடங்கும் ..என்னோட வழக்கமான பதில் ..

"மக்கா உங்களை மாதிரி கொஞ்சம் வெஜி ஆளுங்க இருக்கிறது நல்லது தான் .இல்லைன்னா பஞ்ச காலத்தில
யாரைத் திங்கிறது ,வெஜி மீட் தான் நல்லா இருக்கும்"

சில சமயம் இது தான் அவங்க வாயை அடைக்க சரி..

கூத்தாடி said...

இந்த வெஜிடேரியன் தொந்தரவு அப்ப அப்பம் தொடங்கும் ..என்னோட வழக்கமான பதில் ..

"மக்கா உங்களை மாதிரி கொஞ்சம் வெஜி ஆளுங்க இருக்கிறது நல்லது தான் .இல்லைன்னா பஞ்ச காலத்தில
யாரைத் திங்கிறது ,வெஜி மீட் தான் நல்லா இருக்கும்"

சில சமயம் இது தான் அவங்க வாயை அடைக்க சரி..

Vajra said...

வித்யாசாகரரே, கோபமா ?

இது காமடீங்க..! அவிங்கள வெச்சு காமடி பண்ணேன்...

அவிங்க வெஜிடேரியன்னா அப்புடியே இருக்கட்டும்...அதப்பத்தின எனக்கு கவலையில்ல...ஆனா நான் வெஜிடேரியன் ஆளுங்களப் பாத்து லாஜிக் அடிக்ககூடாது!

Vajra said...

"அப்புடியே சிக்கன் மசாலா டேஸ்ட் கொண்டுவந்துருவாரா ?"

அதுக்கு சிக்கன் மசாலாவே சாப்பிடவேண்டியது தானேன்னு கேக்கணும்.

இவிங்கள ஒண்ணியும் பண்ணவேணா, அவிங்க நம்மள ஒண்ணியும் பண்ணாம, நம்பகிட்ட வந்து லாஜிக் (மதம் மாத்துற லாஜிக்!!) பேசாம இருந்தா சரி.

Anonymous said...

In the olden days people who were
non-vegetarians ate meat once in a while. In a country like U.S.A
meat processing and marketing is a
big industry. Their interest is in
selling their products. This causes a lot of adverse health issues. Anything in moderation is alright, but you cannot make public consume in moderation. For example if you go to a restaurant, the portions are usually large. People generally do not waste food
and consume everything.

This is where Peta helps indirectly. By making people vegetarians atleast it saves them from future health problems. Cold processed and preserved meat is not a healthy food at all and this is all is mostly available for the consumption of the general public.

ஜடாயு said...

வஜ்ரா,

உங்கள் வாதம் முழுவதிலும் அசைவம் சாப்பிடுதல் பற்றிய குற்ற உணர்ச்சி பற்றியே பேசுகிறீர்கள். இந்தியா போன்ற ஒரு ஏழை, விவசாய நாட்டில் இதன் எல்லா விளைவுகளையும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

குறிப்பாக, "கால்நடைச் செல்வம்" என்று கருதப் படும் மாடுகளை உணவுக்காகக் கொல்லுதல் சமுதாயக் குற்றம் என்று நான் கருதுகிறேன். "மேழிச் செல்வம்" (ஔவை) என்றும் "வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்" (ஆண்டாள்)என்றும் "ஆவிற்கு நீரென்று இரப்பினும்.." (குறள்) என்றும் பழந்தமிழ் இலக்கியம் பேசுவது வெறும் மரபு சார்ந்த நம்பிக்கை மட்டும் அல்ல, ஆழ்ந்த சமுதாய சிந்தனையும் கூட.

இது பற்றி மகா லிபரலாகவும், செக்யூலரிஸ்டாகவும் அறியப் படும் டைம்ஸ் ஆஃப் இந்தியா Jug Suraiya ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தப் பதிவுக்கு வருபவர்கள் கண்டிப்பாக அதைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்படி ஆரம்பிக்கிறது -
I like beefsteak, and frequently eat it when I happen to be abroad. At the same time, I agree with the Supreme Court's upholding of the Gujarat law banning cow slaughter. My reason has got nothing to do with Hindutva. Nor am I guilty of hypocrisy and double standards when I permit myself to eat beef abroad, but argue against cow slaughter in India.

It's merely that I recognise the special role the cow has long played in the social dynamics and the unorganised poli-tical economy of the country. In his book Cows, Pigs, Wars and Witches: The Riddles of Culture, American sociologist Marvin Harris has ...

முழுக் கட்டுரை :
http://timesofindia.indiatimes.com/OPINION/Editorial/No_Beef_with_Ban/articleshow/msid-1277705,curpg-1.cms

இதில் கடைசியில் சொல்லும் 2 முக்கிய விஷயங்கள்:

1) If, in addition to its employment guarantee scheme, the UPA government enables every Indian below the poverty line to own a cow, we could witness an economic sea change in the country.

2) On the other hand, Bangladesh is a cautionary example of what can happen to a country which has depleted its cattle wealth. On a visit there some years ago, I was intrigued to discover that there were hardly any cattle in the country, almost all having been ... butchered for meat.

The result? Bangladesh has to import vast quantities of powdered milk from Australia and Europe, a luxury it can ill afford. Even the humblest village tea stall has tins of Nestle. Operation Flood? Forget it. So tuck into your filet mignon, if you fancy it. Just make sure it's from a foreign cow. Spare the Indian cow, the great white hope of the dispossessed.

இதைப் படித்து, சிந்திக்கவும். சமூக அக்கறை உள்ள எந்த இந்தியனாலும் மறுக்க முடியாத வாதம்.

ஜடாயு said...

Juga Suraiya குறிப்பிடும் மார்வின் ஹாரிசின் அருமையான கட்டுரை "ஏன் இந்துக்கள் பசுக்களைக் கொல்வதில்லை" தமிழில் மிக அழகாக மொழிபெயர்க்கப் பட்டு திண்ணையில் வந்தது. புத்தக வடிவில் வேறு பல கட்டுரைகளும் சேர்த்து வந்தது -

அதை இங்கே படிக்கலாம்:
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20107154&format=html

1976-ல் எழுதப் பட்ட இந்தக் கட்டுரை இன்றும் முக்கியமானது, நீங்கள் இங்கே கேட்ட தண்ணீர், பஞ்சம் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் இதில் விடை உள்ளது.

இதில் கடைசியில் சொல்கிறார் :

பசுவின் மீதான அன்பு என்பது மிகவும் சிக்கலான, நுண்ணிய பொருளாதார, கலாச்சார அமைப்பின் ஒரு முக்கியமான தேவையான அங்கம். பசுவின் மீதான அன்பு மனிதர்களை சிறிய அளவு சக்தி செலவிடும், பொருள்களை வீணாக்காத, ஆடம்பரமற்ற சுற்றுச்சூழலை தக்கவைக்க மனிதர்களை உந்துகிறது. பசுவின் மீதான அன்பு, காய்ந்து போன உதவாததாகக் கருதப்படும் விலங்குகளை உயிரோடு தக்கவைக்க உதவுகிறது. மிகவும் சக்தி தேவைப்படும் மாட்டிறைச்சி தொழிற்சாலைகள் வராமல் தடுத்து நிறுத்துகிறது. பொதுவில் உண்டு கொழுக்கும் பசுக்களையும், பணக்கார பண்ணைகளில் புகுந்து தின்னும் பசுக்களையும் பாதுகாக்கவும் உதவுகிறது. பஞ்ச காலத்தில் பசுக்களை கொல்லாமல் காப்பாற்றி பருவமழை வரும்போது வெகுவிரைவில் தேவைப்படும் பசுக்களையும் காளைகளையும் உற்பத்திசெய்துகொள்ளவும் பயன்படுகிறது. எந்த ஒரு இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்பைப் போலவே, இந்த அமைப்பிலும், சில தவறுகளும், சில உரசல்களும், சில வீண்களும், சிக்கலான கொடுக்கல் வாங்கல்களில் நடக்கலாம். 50 கோடி மக்கள் (மொ.கு: அப்போது), விலங்குகள், நிலம், உழைப்பு, அரசியல் பொருளாதாரம், மண், தட்பவெப்பம் ஆகிய அனைத்தும் இதில் பங்கு பெறுகின்றன. பசுக்கொலை செய்யும் ஆர்வமுள்ளவர்கள், பசுக்களை அளவுக்கடங்காமல் கன்றுகளை பிறக்கவைத்து, அந்தக் கன்றுகளை கவனிக்காமல் கொன்று, பஞ்சத்தில் அடித்து கொலை செய்வது வீணானது என்றும், திறனற்றது என்றும் வாதிடலாம். குறுகிய மற்றும் முக்கியமற்ற நோக்கில் இது சரியானதாக இருக்கலாம். பசுவின் மீதான அன்பு இல்லாமல் போயிற்றென்றால், பெரும் பட்டினி பஞ்சம் வரும்போது, விளிம்பு நிலை விவசாயிகள் தாங்கக்கூடிய அழிவை கணக்கெடுக்கும் போது, விவசாய பொறியியலாளர் தேவையில்லாத பசுக்களைக் கொன்று பெறும் திறனான விவசாயத்தின் மூலம் கிடைக்கும் பயன் குறைவானதாகவே இருக்கும்.
....
...

எதிர்பார்ப்புக்கு மாறாக, சக்திக்கான செலவையும், அது கொடுக்கும் சக்தியையும் ஒப்பிட்டால், இந்தியா தனது கால்நடைகளை அமெரிக்காவை விட அதிக திறனான முறையில் உபயோகப்படுத்துகிறது என்று பார்க்கலாம். ஒரு மாடு சாப்பிடும் உணவில் இருக்கும் கலோரிகளையும், அதனிடமிருந்து கிடைக்கும் உபயோகப்பொருள்களின் கலோரிகளையும் கணக்கிட்டுப் பார்த்தால், அது 17 சதவீதமாக இருக்கிறது என்று டாக்டர் ஓனென்ஹால் கூறுகிறார். இது அமெரிக்க மாட்டிறைச்சி மாடுகளை ஒப்பிட்டால் அது 4 சதவீதம் எனத் தெரியும். இந்த சிறப்பான திறனான மாடுகள் மிகவும் அதிகமான பால்தருவதால் அல்ல, மனிதர்கள் மிகவும் அதிகமாக சிக்கனமாகவும் வீண் செய்யாமலும் இருப்பதால் வருகிறது என்று கூறுகிறார். 'கிராமங்கள் மிகவும் பயனீட்டுகின்றன. இங்கு எதுவும் வீணடிக்கப்படுவதில்லை '


வீணடிப்பது என்பது நவீன விவசாய வியாபார கூட்டமைப்பின் குணாம்சம். அது கிராம விவசாயப் பொருளாதாரத்தில் கிடையாது.

Vajra said...

//
This is where Peta helps indirectly. By making people vegetarians atleast it saves them from future health problems. Cold processed and preserved meat is not a healthy food at all and this is all is mostly available for the consumption of the general public.
//

Anonymous,

To tell you the truth, this posting is just fun posting. But, i have no respect for organizations like PETA whic are basically evangalical and preach vegetarianism rather than teach it.