February 21, 2007

Journalist and Jihad

டேனியல் பெர்ல் என்ற அமேரிக்க பத்திரிக்கையாளரின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியிருக்கும் டாகுமெண்டரி.

The journalist and Jihad என்று தலைப்பு வைக்கப் பட்டிருக்கும் இந்த டாகுமெண்டரி, எட்டு பகுதிகளாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

daniel perl யார் என்று மறந்துபோயிருந்தால், இதோ, நன் நினைவுகளைத் தட்டி எழுப்ப,

Wall street பத்திரிக்கையாளர் டேனியல் பெர்ல் 9/11 பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பொழுது 2002 ல் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு இஸ்லாமிய ஜிஹாதிக்களால் தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் பட்டவர். கூகிளில் daniel perl கொடுத்துப் பாருங்கள்.

அவர் தலை துண்டிக்ப்பபடுவதற்கான காரணம், அவருக்கு அல்-காயிதா வுக்கும் பாகிஸ்தானிய ISI க்கும் உள்ள நெருக்கமான தொடர்பு பற்றி பல அந்தரங்க விஷயங்கள் அவருக்குத் தெரிந்துவிட்டதால் தான் என்கிறது இந்த செய்திப் படம்.


















இதெல்லாம் ஏன் பதித்தேன் என்று கேட்டால்,

இவ்வளவு நடக்கிறது, நம் இந்தியாவின் விமானத்தைக் கடத்தி நம் ஜெயிலிருந்து தப்பும் ஜிஹாதிகள் இது போல் பாகிஸ்தானில் போய் ஜாலியாக இருக்கிறார்கள். பின்னர் அமேரிக்க பத்திரிக்கையாளரையே கடத்துகிறார்கள். அவனை வெட்டி அதை டீவியில் ஒளிபரப்பிவிடுகிறார்கள். பின்னர் அவர்கள் நாட்டு சர்வாதிகாரி அமேரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து உலகத்தில் நடக்கும் தீவிரவாதத்தினை எதிர்க்கும் நாடுகளுடன் பாகிஸ்தானையும் சேர்த்துக் கொள்கிறார்.

நம் வெத்துவேட்டு அரசியல்வாதிகளோ, உலக நாடுகளுக்கு நம் மண்ணில் நடக்கும் தீவிரவாதத்திற்கு அடிப்படைக் காரணம் பாகிஸ்தான் என்பது திண்ணமாக நிறுவிக்காட்டி பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் அரசியலை நடத்தாமல், முஸ்லீம்களுக்கு ஹஜ் யாத்திரை செலவு, சோப்பு விற்பது, நரேந்திர மோடியைத் திட்டுவது, இல்லை, ஓசியில் படியளப்பது போன்ற வெட்டிக்காரியங்கள் செய்துகொண்டு அவர்களையும் ஏமாற்றிக் கொண்டு நம்மளையும் ஏமாற்றுகின்றனர்.

2 comments:

கால்கரி சிவா said...

டேனியல் பேர்ல்க்கு மிக முக்கியமான உணமைகள் தெரிந்திருக்கும். அதனால் போட்டுத்தள்ளிவிட்டார்கள். இந்தப்படத்தை நான் சி என் என் னில் பார்த்தேன். அதில் இந்தியாவிலிருந்து பயணிக்களுக்காக பரிமாறப்பாட்ட கேடுகெட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சகல மரியாதைகளுடன் வாழ்கிறார்கள். இதைப் பார்த்த என் ரத்தம் கொதித்தது. நம் அரசியல்வாதிகள் புழுவிலும் கேவலமானவர்கள். இவர்களின் ரத்தத்தில் மானம் என்பதே கிடையாதா. இந்த நாட்டை தனிமை படுத்தி அழித்திருக்கவேண்டாமா?.

மானங்கெட்டவர்கள் இந்த நாட்டை ஆதரிக்கும் நம் அரசியவாதிகளும் சூடோ செக்யூலரிஸ்ட்டுகளும்

வஜ்ரா said...

//
மானங்கெட்டவர்கள் இந்த நாட்டை ஆதரிக்கும் நம் அரசியவாதிகளும் சூடோ செக்யூலரிஸ்ட்டுகளும்
//

சரியாகச் சொன்னீர்கள்.

மானங்கெட்டவர்கள் என்பதற்கு textbook example கள் இவர்கள்.

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளைத் துவங்கவே நிபந்தனைகள் வைக்கப்படவேண்டும். அதைவிடுத்து, அமேரிக்காவின் army base இருக்கிறது என்ற தைரியத்தில் பாகிஸ்தான் one upmanship போல் மேலே நின்று dictating terms and conditions.

அதை எப்படி அரசியல் செய்து கவிழ்த்தலாம், அமேரிக்க விஸுவாசியாகக் காட்டிக் கொள்ளும் பர்வேஸ் முஷ்ரஃபுக்கு எப்படி ஆப்படித்து பாகிஸ்தானை failed state என்று நிரூபிக்கலாம் என்று அரசியல் செய்யாமல், உள் நாட்டில் முலாயம் அரசைக் கவிழ்ப்பது, அரசு கஜானாப் பணத்தைவாரி, லஞ்சம், ஊழல் பெருக்க வழிவகுக்கும் employment guarentee, மற்றும் டீவி, ரேடியோக்கள் ஓசியில் கொடுத்து வோட்டு வங்கிகளில் ஆள் சேர்ப்பது போன்ற மூத்திரத்தில் மீன் பிடிக்கும் அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு அரசியல் சாமர்த்தியம் சுத்தமாகப் பத்தாது. தெளிவாகக் காயை நகர்த்தி பர்வேஸ் முஷரஃப் கஷ்மீரை நம்மிடமிருந்து லவட்டிக் கொண்டாலும் வியப்பில்லை.