அன்புள்ள வஜ்ரா,
வெகு நாட்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ம்யூனிச் சினிமாவை நேற்றுதான் பார்க்கக் கிடைத்தது. படத்தை ஏற்கனவே பார்த்திருப்பீர்கள், இது வரை பார்க்கவில்லையெனில் அவசியம் பாருங்கள். நான் இந்தப் படம் பற்றிய சில குறிப்புகளை எனது வலைப்பதிவில் பதிவதற்காக எழுதியிருந்தேன், நீங்கள் இஸ்ரேலில் இருப்பதால் இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். படத்தைப் பற்றிய உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும்.
அசாதாராணமான படங்களையே எடுக்கும் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் மற்றுமொரு பிரமாதமமன படம் 2005 ஆண்டு வெளி வந்த ம்யூனிச். ஹாலிவுட் பிரமாண்டங்களை அள்ளித் தந்த இதே இயக்குனர் ஒரு சர்ச்சைக்குரிய, தன் இனத்தாலேயே கடுமையாக விமர்சிக்கப் படக் கூடிய சாத்தியமுள்ள இந்த அரசியல் திரில்லரரக் கொடுத்துள்ளார்.
கதை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். 1972ம் ஒலிம்பிக்கின் பொழுது 11 இஸ்ரேலிய தடகள வீரர்கள் அரேபிய தீவீரவாதிகளால் முதலில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப் பட்டு, பின்னர் ஜெர்மன் போலீஸ் செய்த குழறுபடிகளால் அனைவரும் கொலல செய்யப் படுகிறார்கள். இஸ்ரேலுக்குப் படுகொலைகளும் கடத்தல்களும் துரோகங்களும் புதிதல்லதான். ஆனால் நாட்டுக்காக விளையாடச் சென்ற வீரர்களின் சிதறிய உடல்கள் யூதர்களிடம் கடுமையான கோபத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. பிரதமர் கோல்டா மேயர் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுகிறார். இஸ்ரேலிய ஒலிம்பிக் போட்டியாளர்களின் கோரக் கொலையைச் செய்தவர்களைத் தேடிக் கண்டு பிடித்து அனைவரையும் கொலை செய்ய முடிவு செய்யப் படுகிறது. பழிக்குப் பழிதான். இஸ்ரேலின் பிரதமர், இரும்புப் பெண்மணி கோல்டா மேயர்., உலக நாடுகளின் போலி நாகரீகங்களளப் புறக்கணித்து விட்டு தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ என்ன செய்தால் தன் மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு மனச் சமாதானம் கிட்டுமோ, எதைச் செய்தால் இஸ்ரேலை அழிக்க நினனக்கும் எதிரிகளுக்கு தன் நாட்டின் சுயமரியாதையை இருப்பை அறியச் செய்யுமோ அதைச் செய்யுமாறு உத்தரவிடுகிறார். தீவீரவாதிகளை இனங் கண்டு ஒழிக்கக் கட்டளையிடுகிறறர், பிரதமரும், மொசாட் மற்றும் ரரணுவத் தலைவர்களும் தங்கள் ரகசிய ஆலோசனைக்குப் பின், பிரதமரின் முன்னாள் பாதுகாவலரும் ஒரு மொசசட் ஏஜெண்டுமான அவ்னெரின் தலைமையில் பொறுப்பை ஒப்படைக்கின்றனர். அதிகாரபூர்வமற்ற ஒரு தீவீரவாத ஒழிப்புப் படட உருவாக்கப் படுகிறது. எவ்வளவு செலவானாலும் சரி, அத்தெலெட்களின் கொலைக்குக் காரணமான 11 இஸ்லாமியத் தீவீரவாதிகளையும் கண்டு பிடித்துக் கொல்லும் பணி 5 பேர் கொண்ட ரகசிய குழுவிடம் ஒப்படைக்கப் படுகிறது. அவர்களும் 11 பேர்களில் 9 பேர்களை பல நாடுகளுக்கும் சென்று வேட்டையாடுகின்றனர். மீதம் உள்ள ஆட்களை இஸ்ரேல் தொடர்ந்து கொல்ல உறுதி பூணுகிறது.
பாலஸ்தீனியத் தீவீரவாதிகளால் "ப்ளாக் செப்டம்பெர்" என்று பெயரிடப் பட்ட தீவீரவாதம். பணயக் கைதிகளாக எடுக்கப் பட்டுப் பின்னர் கொலை, செய்யும் காட்சிகளள பீட்டர் ஜென்னிங்ஸ் நிஜ ஏ பி சி வர்ணனை மூலமாக நம்மை உறைய வைப்பதில் தொடங்குகிறது படம்.
ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் எடுத்து யூதர்களின் பாராட்டைப் பெற்ற சினிமா உலகின் இணையற்ற இயக்குனர் ஒரு யூதர். இந்தப் படத்தில் இஸ்ரேலின் முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்கி அவர்களின் கடுமையான் அதிருப்தியை சம்பாதித்திருப்பதாகத் தெரிகிறது. ஸ்பீல்பெர்கின் துடிப்பான இயக்கத்தில் ஒரு தத்ரூபமான திகில் படம் உருவாகியுள்ளது. படத்தின் முன்னே இயக்குனர் இது ஒரு டாக்குமண்டரி அல்ல. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப் பட்ட தி வெஞ்சன்ஸ் என்ற 1984 வெளிவந்த புத்தகத்தை ஆதாரமாக வைத்து எடுக்கப் பட்ட உலகை உலுக்கிய ஒரு பரபரப்பான அரசியல் படுகொலைத் திரைப் படமே என்கிறார். இதில் தான் எந்தவொரு நீதியையையும் சொல்ல முயலவில்லை என்றும், யாரையும் ஆதரித்தோ எதிர்த்தோ எடுக்கவில்லலயென்றும், நடந்த சம்பவங்களை மக்களின் பார்வைக்கு வைக்கிறேன், எது சரி, எது தவறு என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும் என்கிறார். மேலும் தான் இந்தப் படத்தின் மூலம் எந்தவொரு தீர்வையும் கொடுக்க முயலவில்லை என்றும், அது தன் வேலையென்றும் திட்டவட்டமாக அறிவிக்கிறார். ஸ்பீல்பெர்கின் இயக்கத்தில் அழிப்புப் படைத் தலைவன் அவ்னெராக எரிக் பானா அற்புதமாக நடித்துள்ளார். மேலும் நமக்கு புதிய ஜேம்ஸ்பாண்டாக அறிமுகமாயிருக்கும் டேனியல் க்ரெய்க், குறி பார்த்துச் சுடும் மொசாட் வீரராகவும், லின் கோகன் என்ற பிரபல டி வி நடிகை இஸ்ரேலியப் பிரதமராகவும் பிரமாதமாக நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதை வசனத்தை ஷ்ண்லெர்ஸ் லிஸ்ட் படத்தின் வசனகர்த்தாக்களான டோனி கிரெக், எரிக் ரோத் அமைத்துள்ளனர். இந்தப் படம் மூன்று உண்மைகளின் அடிப்படையில் எடுக்கப் பட்டது என்கிறா இயக்குனர். 11 தடகள வீரர்கள் கொல்லப் பட்டது உண்மை, அதற்கு பதிலடியாக கோல்டா மெயர் நடவடிக்கை எடுத்தது உண்மை, 12 தீவீரவாதிகளில் 10 பேர் கொல்லப் பட்டது உண்மை. இந்த உண்மைகளின் அடிப்படையில் பல்வேறு சங்கடமான கேள்விகளை எழுப்புகிறார் இயக்குனர், பதிலை பார்வையாளர்களிடம் விட்டு விடுகிறார்.
தன் மனைவி நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் தேசத்தின் கட்டளையை ஏற்று நாட்டை விட்டு தாய்நாட்டின் இருப்பையும், மானத்தையும் காக்கும் பொருட்டும் எதிரிகளை ஒழிக்கும் பொருட்டுமான முக்கியமான கடமையாற்ற இஸ்ரேலை விட்டு நாடு நாடாக செல்கிறார் அவ்னெர். அவர் கிளம்பும் முன்பே இஸ்ரேலின் மொசாட்டுக்கு அவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அறிவிக்கப் பட்டு, பதவி விலக்கப் பட்டு, அனுப்பப் படுகிறார். இந்தக் குழு எந்த நாட்டிலாவது கொலைக் குற்றத்திற்காக பிடிபட்டாலும் இஸ்ரேலும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்றும், இஸ்ரேல் சட்டத்தை மீறித் தன் ஒற்றர் படையை பிற நாடுகளுக்கு அனுப்பாது என்ற்ய் காட்டவும் இந்தக் குழு ஆரம்பத்திலேயே கை கழுவி விடப் படுகிறது. விளையாட்டு வீரர்களின் படு கொலைக்குக் காரணமான தீவீரவாதிகள் எப்படியாவது கண்டு பிடிக்கப் பட்டு கொலை செய்யப் பட வேண்டும், உலகிற்கு இஸ்ரேலின் இரும்புக்கை, உறுதி புலப்பட வேண்டும் அதே நேரத்தில் இஸ்ரேல் மீது உலக நாடுகள் எவ்விதக் குற்றசாட்டும் வைத்து விடக் கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது. அவ்னெருக்கான பணம் ஒரு ஸ்விஸ் வங்கியில் ரகசியமாக டெப்பாசிட் பண்ணப் படுகிறது, ஆகும் ஒவ்வொரு நயாப் பைசாவுக்கும் துல்லியமாக கணக்கும் ரசீதும் இருக்க வேண்டும் என்றும் ஊதாரித்தனமான செலவுகளுக்கு இஸ்ரேல் அரசின் கஜானாவில் இடமில்லை என்றும் கறாராகச் சொல்லப் படுகிறது.
We deposit money from a fund that does not exist, into a box that we dont know about, in a bank that we never set our foot in
என்கிறார் எப்ராகிம் என்ற மொசாட் தலைவர்.
இந்தப் பணியை ஆவ்னெரே அவரது குழுவோ ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, மிகவும் ஆபத்தான பணி, அரசின், ராணுவத்தின் உதவியும் கிடைக்காது, எவ்வித பாராட்டோ, மெடலோ, பதக்கமோ கிடைக்காது, செத்துப் போனால் எடுட்துப் போட நாதி கிடையாது, பேரும் புகழும் கிடைக்காது, இவர்களின் பணி ரகசியமாகவே வைக்கப் படும், பெரும் பதவிகளோ, செல்வமோ, செல்வாக்கோ இருக்ககது, உயிரைப் பணயம் வைத்து அந்தச் சிறிய குழு மேற்கொள்ளப் போகும் பணி ஒரு ஈ காக்கைக்குத் தெரியப் போவதில்லை, பதவி உயர்வு இருக்காது, இலக்கில் வெற்றி பெற்றால் ஒரு நன்றி, ஒரு கை குலுக்கல் அதோடு சரி, மறு நாள் அவர்கள் சாதாரணர்கள். இருந்தாலும் இஸ்ரேலுக்குத், தங்கள் தாய் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையைக் கேள்வி கேட்காமல் உயிரைப் பணையம் வைத்து சிரமேற்கொண்டு செய்கிறார்கள், தங்கள் நாட்டுக்காக தங்கள் உடல் , பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்ட அந்த 5 தேசபக்தர்கள். பதவிக்காகவோ, பணத்திற்காகவோ, அல்லது யாரும் சொல்லிக் கொடுத்தோ வருவதில்லை அவர்களது தேசபக்தி.
பழிவாங்கும் கடமையினை ஏற்றுக் கொண்ட யூதர்கள் அது தமது ஒவ்வொருவரின் வீட்டினை, தாய் நாட்டினை நிலை நிறுத்திக் கோள்வதின் ஒரு அங்கம் என்பதை மறுக்கவில்லை, ஆனால் ஸ்பீல்பெர்கின் என்ற இயக்குனர், பழிவாங்குவதிலும், மரண தண்டனையிலும் எவ்விதப் பயனும் விளையப் போவதில்லல, அமைதியும் கிட்டப் போவதில்லை, பழி வாங்குதல் என்பது மேலும் மேலும் அழிவைத்தான் வளர்க்கும், கண்ணுக்குக் கண் என்றால் உலகமே குருடாய் விடும் என்னும் தன் காந்தியவாத சிந்தனைகளைப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மூலம் படம் பார்ப்பவர்களிடம் திணிக்கிறார். தீவிரவாதிகளை அழிக்கக் கிளம்பும் 4 பேர்களிடம் பெருத்த சஞ்சலம் நிலவுவதாக காட்சிகளையும் வசனங்களளயும் அமைத்துள்ளார். தங்கள் தாய் நாட்டின் கட்டளையை எப்படியாவது செயல் படுத்தவேண்டும் என்பதில் அவர்களுக்கு அசாத்திய உறுதி இருக்கிறது ஆனால் தாம் செய்வது சரியான காரியம்தானா ? இது சட்ட விரோதக் கொலையல்லவா ?, தர்மம்தானா?, மனசாட்சியின் படி நியாயமான செயல்தானா ? நாம் கொல்லப் போகும் அரபுத் தீவீரவாதிகள்தான் நிஜமாகவே அந்த விளையாட்டு வீரர்களின் கொலைக்குக் காரணமானவர்களா ? அல்லது இஸ்ரேல் தங்கள் அரசியலுக்கு தமது சேவையைப் பயன்படுத்திக் கொள்கிறதா ? தீவீரவவதிகளின் அருகில் வேறு யாரும் இருந்தால் அவர்களைக் கொல்லுவது தர்மம் தானா என்று அர்ஜுனனுக்கு ஏற்பட்டக் குழப்பம் போல், போர்க்களத்தில் தர்மனுக்கு ஏற்பட்ட குழப்பம் போல் படம் முழுவதும் அவ்னெரின் குழுவினருக்கு சுய விசாரணைகள் நடை பெறுவதாக இயக்குனர் ஸ்பீல் பெர்க் அமைத்துள்ளார். ஆனால் உண்மையில் இந்தக் கடமையினை மேற்கொண்ட வீரர்கள் அப்படி எந்தவொரு சஞ்சலத்துக்கும் உள்ளாகவில்லையென்றும், மிகத் துணிவாகவும், உறுதியுடனும், தாங்கள் செய்யும் கொலைகளின் நியாயத்தை உணர்ந்தும், தங்கள் தாய் நாட்டின் இருப்புக்கு இதைச் செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தெரிந்தும்தான் எதிரிகளள அழித்தனர் ஸ்பீல்பெர்க் தேவையில்லாமல் தனது கருத்துக்களை இஸ்ரேல் வீரர்கள் மேல் ஏற்றி தவறான ஒரு செய்தியைச் சொல்லியுள்ளார் என்று இஸ்ரேல் தரப்பு ஸ்பீல்பெர்க் மீது தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அங்குதான் வருகிறது அவர் மேல் வரும் சுய விமர்சன குற்றசாட்டுக்கள். இந்தப் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தேச பக்த யூதர்கள் நிஜமாகவே அவ்வாறு நினைத்திப்பார்களா ? இருக்கலாம் இல்லாதும் இருக்கலாம். நமக்குத் தெரியாது. ஆனால் அவ்வித குழப்பம் ஒவ்வொரு கொலையை, ஒவ்வொரு பழிவாங்கலை நிகழ்த்தும் முன் அந்தக் குழுவினர்களுக்கு ஏற்படுவதாகக் காட்டுகிறார் ஸ்பீல்பெர்க். அது போன்ற குழப்பங்கள் சாத்தியம் தான்,. நிச்சயம் சுயமாய் சிந்திக்கத் தெரிந்த எந்தவொரு யூத இனத்தவருக்கும் அவ்விதமானா குழப்பங்கள் ஏற்பட்டிருக்க அதிக பட்ச வாய்ப்புகள் உள்ளனதான். ஒவ்வொரு கொலையின் போதும் ஒரே ஒரு யூதரைத் தவிர, தலைவன் உட்பட பிறருக்கு தர்ம சங்கடங்களும், சுய பரிசோதனைகளும், நியாய அநியாய, தர்க்க விவாதங்களும் நிகழ்கின்றன. அது போல் கேள்வி எழுப்பும் ஒவ்வொருவரும் மர்மமான முறையில் கொலையும் செய்யப் படுகின்றனர். அது போன்ற கொலைகளை இஸ்ரேல் செய்கிறதா எதிரிகள் செய்கிறார்களா என்பதை ஸ்பீல் பெர்க் கூறுவது இல்லை. அதத பார்வையாளர்களின் தீர்வுக்கு விடுகிறார். பழிவாங்கும் கடமையை ஏற்று செய்யும் கடமையினை ஏற்கும் தலவவனுக்கும் அவ்வித ஆத்ம பரிசோதனைகள் நிகழ்கின்றன. இருந்தாலும் அவன் தாய் நாட்டின் கட்டளையை எந்தவொரு சமயத்திலும் மறக்காமல் தன் கடமையில் உண்மையானவர்களாக இருக்கிறார்கள்.
படம் மிகுந்த விறுவிறுப்புடன் எடுக்கப் பட்டுள்ளது. படம் முழுக்க ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் விளிம்பிலேயே நிர்ந்தரமாக அமர்த்தி விடுகிறது. ஒவ்வொரு கொலையும் எடுக்கப் பட்டுள்ள விதமும், கேமரா கோனங்களும், விறுவிறுப்பை ஊட்டும் இசையும் பிரமிக்க வைக்கின்றன. ஹிட்ச்காக்தன திகில் காட்சிகளுக்கும் படத்தில் பஞ்சமில்லை. படத்தின் பல காட்சிகள் குறிப்பிடத்தக்கவை. பாலஸ்தீனியத் தீவீரவாதியின் மூளையாகச் செயல் படும் ஒருவரை அவரது வீட்டுத் தொலை பேசியிலேயே குண்டு வைத்துக் கொல்லத் திட்டமிடும் பொழுது, தவறுதலாக தொலைபேசியை தீவீரவாதியின் மகள் எடுத்து விட, ரிமோட்டை அழுத்தி விட வேண்டாம், வெடித்து விட வேண்டாம் என்று பதறிக் கொண்டு காரில் இருக்கும் தன் கூட்டாளிகளை நோக்கி அந்த வயதான ஒற்றர் கார்ல் ஓடி வரும் பொழுது நாமும் நெஞ்சு பட படக்க கூடவே ஓடுகிறோம். இலக்கைத் தவிர வேறு ஒரு சிறு புழுவுக்குக் கூட ஆபத்து வந்து விடக் கூடாது, அநாவசியமாகக் கொலை செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் மாறாக அரபுத் தீவீரவாதிகளோ அப்பாவி விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி எதிர் படும் அப்பாவிகளைக் கொல்வதில் கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. இரண்டு இனத்தவருக்கும் உள்ள வேறு பாடுகளை இயக்குனர் இது போன்ற காட்சிகள் மூலம அழுத்தமாக அதே நேரம் மறைமுகமமகவும் சொல்லுகிறார். அந்தச் சிறுமியை காத்தவுடன், அவள் பத்திரமாக வீட்டை விட்டு வெளியேறியவுடன் மீண்டும் அழைத்து, இந்த முறை தீவீரவாதியை மட்டும் குண்டு வெடிக்க வைத்துக் கொல்லும் இடம் திகிலின், பரபரப்பின் உச்ச கட்டம். அது போலவே தீவீரவாதியின் தலைவர் சலாமியைக் கொல்லச்செல்லும் பொழுது அவனுடன் கூட வரும் பாதுகாப்புப் படையினரையும் சுட வேண்டுமா கூடாதா என்பது குறித்து குழுவினரிடம் பலத்த ஆலோசனை நிலவுகிறது. அவர்கள் நம்மைத் தாக்கினால் மட்டுமே சுடவேண்டும் என்கிறான் அவ்னெர். சலாமியை மழையின் ஊடே துரத்தும் இடம் அற்புதமானப் படப் பிடிப்பு. அவன் கொலை செய்யப் படாமல் தடுத்து விடுபவர்கள் இஸ்ரேலின் நண்பனான அமெரிக்காவின் சி ஐ ஏ ஆட்கள். தீவிரவாதிகளை அரசியல் காரணங்களுக்காக அமெரிக்க சி ஐ ஏவும், ரஷ்ய கே ஜி பியும் பாதுகாக்கின்றன. உலக அரசியல் சதுரங்கத்தில் தீவீரவாதிகளுக்குத் தீனி போட்டு வளர்ப்பது அமெரிக்காவும் ரஷ்யாவும் தான் என்பதை மிகத் தெளிவான காட்சிகள் மூலம் காட்டுகிறார். கே ஜி பியினால் பாதுகாக்கப் படும் தீவீரவாதியைத் தீர்த்துக் கட்டும் இடத்தில் அவ்னெர் குழுவினர் காட்டும் மனிதாபிமானம் அவர்கள் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகிறது. கொல்லப் பட வேண்டியது தீவீரவாதிகள் மட்டுமே என்பதில் மிக உறுதியாக உள்ளனர்.
படத்தில் பாலஸ்தீனீயர்களின் விளக்கங்களும் தீவீரவாதத்திற்கு அவர்களின் சப்பைக் கட்டுகளும் பல இடங்களில் வைக்கப் படுகின்றன. ஒரு தீவீரவாதியய பேட்டி காண்பது போல் நடிக்கச் செல்லும் காட்சியில் அவனும் அவனது மனனவியும் மிகவும் ஆக்ரோஷமாக இஸ்ரேலுக்கு எதிரான தங்களது வாதங்களை அவர்களளக் கொல்ல நிருபர் வேடத்தில் வரும் அவ்னெரிடமே வைக்கின்றனர். பொறுமையாக அவன் கேட்டுக் கொள்கிறறன். ஏதென்ஸில் தாங்கள் தங்க வைக்கப் பட்டுள்ள அதே இடத்தில் பாலஸ்தீன கொரில்லாக்களும் தங்க நேர்ந்து விட , இவர்களை மொசாட் படையினர் என்பதை அறியாத பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் அழிக்கப் பட வேண்டும் , யூதர்கள் ஒழிக்கப் பட வேண்டும் என்று மிகுந்த கொந்தளிப்புடன் அவ்னெரிடமே வாதிடுகின்றனர். இது போல் பல இடங்களில் பாலஸ்தீனியர்களின் தீவிரவாதத்திற்கான நியாயங்களும் வைக்கப் படுகின்றன. என்னதான் ஸ்பீல்பெர்க் அமைதி மார்க்கம் பேசினாலும்., பழி வாங்குதல் தவறு என்று தன் பாத்திரங்கள் மூலம் கூறினாலும், காட்சி அமைப்புகளின் தீவீரத்திலும், இஸ்ரேலிய தடகள வீரர்கள் கொடூரமாகக் கொலை செய்யப் படும் தத்ரூபமான காட்சிகளின் மூலமாகவும், கோல்டா மேயர், மொசாட் தலைவர், அவ்னெரின் அம்மா போன்றவர்களின் வசனங்கள் மூலமாக இஸ்ரேல் பக்கம் உள்ள நியாயத்தை தெள்ளத் தெளிவாக பார்வையாளர்களுக்கு எவ்விதச் சந்தேகமும் ஏற்படாத வண்ணம் மிகத் திறமையாகக் காட்டி விடுகிறார். அந்த விஷயத்தில் தனது இனத்தினருக்கு எவ்விதக் குறையையும் வைத்து விடவில்லை ஸ்பீல்பெர்க். சாய்வு நிலை எடுக்காத ஒரு பார்வையாளரிடம் இந்தப் படம் இஸ்ரேல் தரப்பு நியாயத்தத மிகுந்த உக்கிரத்துடன் வைத்திருப்பதாகவே தோன்றுகிறது.
படத்தின் முக்கியமான காட்சியாக நான் கருதியது, இஸ்ரேலே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது, அவசரமாக தனது வீட்டில் கூட்டப் படும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் கோல்டா மெயர் அமைதியாக அதே நேரத்தில் குமுறும் கொந்தளிப்புடனும் போபத்துடனும் மிகத் தெளிவாக, தீர்மானமாக அவர் பேசும் வசனங்கள்தான். அந்த இடத்தை பல முறை ரீ வைண் செய்து பார்த்திருப்பேன். சுய மரியாதையும், தேச நலனில் அக்கறையின்மையும், ஓட்டுப் பொறுக்கி அரசியலும், ஊழலும், கையாலாகத்தனமும், பேடித்தனமு, போலித்தனமும், போலி மதச்சார்பின்மையும், ஒழுங்கீனமும், பேராசையும், லஞ்ச லாவண்யமும், ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகளைத் தலைவர்களாக, பிரதமராக, ஜனாதிபதிகளாக, முதலமைச்சர்களாக, அதிகாரிகளாக, அமைச்சர்களாக, பெறப்பற்ற ஒரு சபிக்கப் பட்ட தேசத்தின் குடிமகன் என்ற முறையில் , எனக்கு கோல்டா மெயர் பேசுவதாக வரும் அந்தக் காட்சிகள் கடுமையான பொறாமை உணர்வையும்., கழிவிரக்கத்தையும், சுய வெறுப்பையும், ஆத்திரத்தையும், கோபத்தையும், ஆற்றாமையும், விரக்தியையும் ஒருங்கே ஏற்படுத்தின. நாம் என்ன பாவம் செய்தோம் கீழ்த்தரமான பிறவிகளை நம் தலைவர்களாகப் பெற ? இந்தியாவுக்கு ஏன் இந்த சாபம் ? சதிகாரர்களையும், தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களையும், வெளிநாட்டினரரயும் நம் தலைவர்களாகப் பெற்றிருப்பது யார் போட்ட சாபம் ? ஏன் நமக்கு கோல்டா மெயர் போன்ற ஒரு துணிவுள்ள தலைவர் கிட்டவில்லை ? நம் விதிப்பயன் ஏனிப்படி இழிவாக அமைந்தது ? கோல்டா மெயர் வேதனையின் உச்சத்தில் இருந்த போதிலும் தனக்கு பாதுகாவலானாக வேலை பார்த்த ஒரு சாதாரண அரசு ஊழியனை, ஆரத்தழுவி வரவேற்கிறார், காப்பி வேண்டுமா என்று கேட்டு உபசரித்து அவரே காபி போட்டுத் தருகிறார். குடும்பத்தைப் பற்றி பரிவாக விசாரிக்கிறார். அப்பொழுது அவர் பேசும் வசனங்கள் படத்தின் உயிர்நாடி. எந்தவித சட்டத்திற்கும் பிடிபடாத, இஸ்ரேலின் இருப்பையே ஒத்துக் கொள்ளாத கொலை வெறிக் கூட்டத்தை என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் நிதானித்து,
"These people vowed to destroy us, Every civilization finds it necessary to compromise with its own values, forget peace now, we need to show we are strong"என்று கூறி தங்கள் நாடு சட்ட திட்டங்களை நீதி நியாயங்களை மீற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை மிகுந்த வேதனையுடன் கூறுகிறார். கொல்டா மெயராக நடித்துள்ள பெண்மணி கொகன் ஒரே காட்சியில் மட்டுமே வந்தாலும் அப்படியே கோல்டா மெயர் என்னும் தலைவரர, அவர் உறுதியை, மன திடத்தை நம் மனதில் பதிய வைத்து விடுகிறார். நான் தியேட்டரில் இந்தப் படட்தைப் பார்த்திருந்தால் அந்தத் தலைவரின் உறுதிக்கு எனது அஞ்சலியாக கரவொலி எழுப்பியிருப்பேன். நமது நாட்டில் எந்தவொரு தலைவருக்கும் இப்படிச் சொலும் திராணி உண்டா ? நெர்வ் உண்டா ?
குழுத் தலைவனாக அவ்னெராக வரும் எரிக் பானா சில காட்சிகளில் நம்மை உலுக்கி விடுகிறார். தான் உயிர் பிழைப்போமா, குழந்தையைப் போய் பார்ப்போமா என்று தெரியாத நிச்சயமற்ற நிலையில், தான் ஒரு கொலைகாரனாக மாறி எதிரிகளைக் கொன்று வரும் நிலையில் தன் குழந்தையின் குரலைக் கேட்டவுடன், சொல்லவியலாதா சொகத்தைக் கொட்டி, குலுங்கி அழும் காட்சியில் நம்மை உலுக்கி விடுகிறார். என்னதான் உறுதியான கொலைப் படைத் தலைவனாக இருந்தாலும் தான் பிறவிக் கொலைகாரன் அல்ல, குருதியும், சதையும், மனிதாபிமானமும் நிரம்பிய ஒரு சாதாராண பாசமுள்ள தந்தைதான் என்று உருகுகிறார். மிகச் சிறப்பான நடிப்பு அது.
ஆனால் எந்தவிதமான தர்ம சங்கடங்களிலும் தன் கடமையில் எந்தவொரு யூதனும் தவறி தன் மனசாட்சியின் கேள்விகளை விட தன் தாய் நாட்டின் கட்டளையைப் பெரிதாக மதித்து இடப் பட்டக் கடமையைத் தம்மால் முடிந்தவரை தவறாமால் செய்கின்றனர். 11 பேரில் 9 பேர் கொல்லப் படுகிறார்கள். தீவீரவாதக் குழுத் தலைவன் இரண்டு முயற்சிகளுக்குப் பின்னும் தப்பித்து விடுகிறான். இஸ்ரேல் அரசாங்கம் அவனை விடுவதில்லை என்ற உறுதி பூணூகிறது.
தான் செய்த கொலைகளும், மனசாட்சியின் கேள்விகளும், துர்க்கனவுகளும், முக்கிய தீவிரவாதியைத் தவறவிட்ட குற்ற உணர்வும், தன்னையும் குடும்பத்ததயும் மொசாட் கொன்று விடுமோ என்ற அச்சமும், மாஃபியாக்கள் துரத்துகிறார்களோ, பி எல் ஓ துரத்துகிறதோ, சி ஐ ஏ துரத்துகிறதோ என்று அறியாமல் குழம்பித் தவிக்கும் அவ்னெர் சொல்லொனாத மனக் கலக்கத்துக்கு ஆளாகும் காட்சியை இதை விட அருமையாக யாரும் காட்டி விட முடியாது. இறுதியில் அவ்னெர் மூலமாக ஸ்பீல் பெர்க் என்னும் இயக்குனர் பேசுகிறார். பழிவாங்குவதால் நாம் என்ன சாதிக்கிறோம், மீண்டும் மீண்டும் தீவீரவாதிகள் முளளக்கின்றனர் ? நம்மால் அமைதியை வாங்க முடிந்ததா ? ஒவ்வொரு உயிருக்கும் பதில் நூறு உயிர் என்பது எதில் போய் முடியும் ? என்ற கேள்விகளை இஸ்ரேல் மொசாட் கேஸ் ஆபீசர் எப்ரகிமிடம் எழுப்புகிறார். எப்ராகிம் ஆம், நம் நகத்தை வெட்டினால் கூடத்தான் மீண்டும் முளைக்கிறது அதற்காக வெட்டாமல் இருக்க முடியுமா ? அந்த லக்சுரி நமக்கு உள்ளதா ? அது போன்ற பெருந்தன்மமயைக் கைக் கொள்ளும் நிலையிலா நம் தேசம் இருக்கிறது என்கிறார். அவ்னெரின் அம்மாவோ இஸ்ரேல் தரப்பு நியாய்த்தை இன்னும் அழுத்தமாகக் கூறுகிறார். நம் வீட்டை யாரும் தரப்போவதில்லை, அதை எடுத்துக் கொள்வதையும், பாதுகாப்பதையும் நாம் தான் செய்ய வேண்டும் என்கிறார். குழம்பித் தவிக்கும் தன் மகனன ஆசுவாசப் படுத்தி அவன் செய்தது சரியானதொரு செயல் தான் என்று அழுத்தமாகச் சொல்லுகிறார். அவ்னெரைப் போலவே ஸ்பீல் பெர்கும் குழம்பித் தவிக்கிறாரோ என்று தோன்றுகிறது.
என்ன தான் தன் இனத்தின் பழிவாங்கும் போக்கை ஸ்பீல்பெர்க் விமர்சித்தாலும், நம்ம ஊர் கமலஹாசன்களிடமும், தீபா மேத்தாக்களிடமும், அமீர் கானிடமும், , அருந்ததி ராயிடமும் அருகில் கூட வர முடியாது இவரால். யூதராக இருந்தாலும் சாய்வு நிலை எடுக்காமல் நியூட்டரல் ஜல்லி அடித்திருப்பது போல் தோன்றினாலும் பார்வையாளர்கள் மனதில் இந்தப் படம் நிச்சயமாக இஸ்ரேல் மீது அனுதாபம் ஏற்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. மிக சாமர்த்தியமாக வெளிப்படையாக இஸ்ரேலை விமர்சித்தாலும் உள்ளுக்குள் மக்கள் மனதில் அனுதாபத்தை ஏற்படுத்தி விடுகிறார் ஸ்பீல்பெர்க். உலகின் தலைச்சிறந்த இயக்குனரின் படம் என்பதை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்த்துகின்றன. படத்தில் அவ்னெருக்கு தகவல் தரும் இன்ஃபார்மரான லூயியும் அவரது தந்தையும் மீண்டும் மீண்டும் தாங்கள் எந்தவொரு அரசாங்கத்தைச் சார்ந்த ஒற்றர்களுக்கும் உதவ மாட்டோம் என்று மறுக்கிறார்கள். அவர்களுக்கு அவ்னெர் யார் என்று தெரியாதா என்ன ? இது போன்ற சிறு குறைகளும் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன.
கொலையானது என்னவோ நாட்டின் விளையாட்டு வீரர்கள்தான், 11 பேரேதான், ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் விலை உண்டு, எந்தவொரு யூதனின் உயிருக்கும் மதிப்புண்டு, அவர்களின் ரத்தத்திற்கும், உயிர் பலிக்கும் பதில் சொல்லப் பட்டே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அந்தப் பிரதமர். பாழாய்ப் போன இந்த பாரத தேசத்திலோ, உச்ச நீதி மன்றமே குற்றவாளி என்று சொன்னாலும் தண்டனையை நிறைவேற்றும் திரரணியற்று இருக்கிறோம். தொடை நடுங்கி வெளியுறவு அமைச்சர்கள் தீவீரவாதிக்கு பணம் கொண்டு செல்கிறார்கள் பயணக் கைதிகளை விடுவிக்க,
நம் மாநிலத்தின் ஒரு சின்ன பகுதியாக இருக்குமா இந்த இஸ்ரேல் ? இத்தினிக்கூண்டு இஸ்ரேலுக்கு எத்தனை நெஞ்சழுத்தம், மன உறுதி ? கொலையுண்டது 11 விளையாட்டு வீரர்களே ஆனாலும் அவர்கள்: உயிருக்கும் விலை உண்டு என்று நினைத்த அந்த கோல்டா மேயர் எங்கே, தாகக்ப் பட்டது பாராளுமன்றமே ஆனாலும் விடுதலை செய் என்று சொல்லும் அப்துல் கலாம் எங்கே, சோனியா எங்கே, கம்னியுஸ்டுகள் எங்கே ?
ஒரு யூத உயிரின் விலை மிக மிக அதிகமானது என்ற உண்மையை நிலை நாட்ட எத்தனை கோடி டாலர்களும் செலவானாலும் பரவாயில்லை என்று உறுதி பூணும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் எங்கே, மதுவுக்காகவும், மங்கைகளுக்காவும் நாட்டை விலை பேசும் நம் அதிகாரிகள் எங்கே ?
பழிக்குப் பழி வாங்குவதால் எவ்வித நன்மையும் விளையப் போவதில்லை என்பது கோல்டா மேயருக்கும், இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரிந்துள்ளது. இருந்தாலும் தன் நாட்டின் , தன் இனத்தின், இருப்பை நிலை நிறுத்த அதை விடச் சிறந்த வழி எதுவுமில்லை என்பதை உணர்ந்தே இருக்கின்றனர். நாம் என்ன செய்கிறோம் ? இந்திய விமானம் கடத்தப் பட்ட பொழுது நாம் வெளிபப்டுத்திய கோழைத்தனம் என்ன ? சிவாஜி பிறந்த தேசம், நேதாஜி பிறந்த தேசம், ராஜ புத்திரர்களின் தேசம் என்பதெல்லாம் ஏட்டளவில்தான், நம் வீரமெல்லாம் அடுப்பங்கரை வரையில்தான் என்பதை நாம் மீண்டும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறோம்.
எனக்கு இஸ்ரேல் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அந்த தேசம் எல்லாவிதமான இடர்பாடுகளையும் தாண்டி நிமிர்ந்து நிற்கத்தான் போகிறது. ஆனால் கேவலம் அப்சலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியாவின் எங்கே சென்று கொண்டிருக்கிறது ? இந்தியாவின் எதிர்காலம் எந்த மாதிரி தலைவர்களின் கையில் உள்ளது ?
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இந்த படத்தில் உள்ளன. அவசியம் பார்க்க வேண்டியதொரு படம். உலக அரசியலில் ஆர்வமில்லாவிட்டாலும் கூட ஒரு தரமான த்ரில்லர் என்ற அடிப்படையிலும் இந்தப் படம் நிச்சயம் பார்க்கத் தகுந்த ஒரு படமே.
அன்புடன்
ச.திருமலை
9 comments:
அற்புதமான பதிவுக்கு என் அருமை நண்பர்களான உங்களுக்கும் திருமலை அவர்களுக்கும் மிக்க நன்றி.
"டோண்டுவிடம் கேட்டால் மூன்ஷன் என்பார்". --> ம்யுன்ஷன் மற்றும்
ஷ்பீல்பெர்க் என்று உச்சரிக்கவும். அவர் எனக்கு மிகவும் பிடித்த திரை இயக்குனர். தீவிர இஸ்ரவேல ஆதரளவான டோண்டு ராகவனுக்கு இப்ப்திவும் அது கவர் செய்யும் படமும் பிடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அப்ப படத்த நீங்க இன்னும் பாக்கலியா டோண்டு சார் ?
இந்த படத்தை பார்த்ததில்லை. திருமலை நன்றாக விமர்சனம் எழுதியிருக்கிறார்.படம் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டி விட்ட விமர்சனம்
அது தன் வேலையென்றும்
அது என் வேலையன்று
என்றல்லா இருக்க வேண்டும்?
திருமலை
சும்மா திகு திகுன்னு எரியற மாதிரி இருக்கு கடைசி பத்திகள்.
செம ஹாட்.
பெரிய பதிவு தான் இருந்தாலும் படிக்கும்போது அது தெரியவில்லை.
திருமலை கேட்டிருக்கும் பல கேள்விகளுக்கு நம்மிடம் பதிலில்லை. சீர்படுத்துகிறேன் என்று சொல்லிக் கொண்டு ஒரு வாழ்வியலை, ஒரு பாரம்பரியத்தை அழித்தவற்களையும், மக்கள் தொண்டு என்ற பேரில் உலாவும் மூன்றாம் தர அரசியல்வாதிகளும்(நான்காம் தர பேச்சாளர்களும் கூட), பிரதமர் அலுவலகத்திலேயே ஒரு ஒற்றரையும் கொண்ட நாடு நமது.
களையெடுக்க முடிவெடுத்தால் எதனை முதலில் எடுப்பது. எல்லாவற்றிருக்கும் மேல், நமது சக குடிமகன், அவனுக்கு பிராயணியும் சாராயமும் கண்டுவிட்டால் நாடே பொற்காலத்தில் உள்ளதாக நினைப்பவன். அவனை வைத்துக் கொண்டு என்ன செய்வது.
பிரச்சனை ஆயிரம் உள்ளது. இந்திய தாயின் சேலை முள்மேல் விழுந்து நிறைய கிழிந்துவிட்டது. சொல்லுங்கள் நீங்கள் இப்போது நாட்டை காப்பீற்களா அல்லது அவள் சேலையையா?
திருமலை கேட்ட கேள்விகள் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
ஆனால், இஸ்ரேலை இந்தியாவுடன் அப்படியே ஒப்பிட்டுவிடவும் முடியாது என்றே இன்றும் நான் நம்புகின்றேன்.
இஸ்ரேலை அழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று அலையும் கூட்டத்தினிடையே இஸ்ரேல் செய்வது survival strategy ! இந்தியா அழிந்தால் சந்தோஷப்பட நிறைய பேர் இருக்கிறார்கள் (நம் வலைப்பதிவுலகில் கூட அதிகம்) ஆனால் அவர்களிடம் பாலஸ்தீனர்கள் கையில் (தலையில்) இருக்கும் அதி பயங்கர ஆயுதம் இல்லை.
அந்த ஆயுதம் இஸ்லாம்!
வஜ்ரா,
இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு படத்தை பார்த்தேன். முதலில் ஸ்பீல்பெர்க் அவர்களுக்கு பெரிய பாராட்டு. மிக அழகாக கதையை திரையில் சொல்கிறார்.
படம் பார்த்த பிறகு அதனின் தாக்கம் இருந்தது மிக உணமை. என் மனைவிக்கும் மகனுக்கும் அந்த சரித்திர பிண்ணணிகளை விளக்கி சொன்னேன். அவர்களையும் இந்த படம் பாதித்தது.
இந்தியா ஏன் இஸ்ரேல் போல் ஆக முடியாது? என்ற கேள்வி எங்கள் மூவரின் மனதிலும் எழுந்தது.
இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை எடுக்கும் திறமை நம்மிடையே இல்லையா என்ற ஏக்கமும் இருந்தது.
மணிரத்தினம் எடுக்கும் கழிசடை படங்களையும், கமலஹாசனின் காப்பி அடிக்கும் கலாசாரத்தையும், வடநாட்டு செக்குயூலர் ஜல்லிகளின் படங்களை கண்ட நம் சினிமாகாரர்கள் மூளை மழுங்கிதான் போயிருக்கிறது.
Just Added this movie in my Netflix queue
Post a Comment