February 22, 2007

வேத காலத்து Pi

பண்டைகாலத்து எகிப்தியர்கள் pi ன் அறுமை தெரிந்து அதனை அவர்கள் கணிதத்தில் பயன் படுத்தியதற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. கிரேக்கர்களும் பாபிலோனியர்களும் பயன்படுத்தியதாக வரலாற்றியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Place value system எனப்படும் decimal system பத்து என்ற எண்ணை அடிப்படை எண்ணாக வைத்து எழுதப்படும் எண்களின் முறையை கண்டுபிடித்துப் பயன் படுத்திய இந்தியர்கள் pi ன் மகத்துவம் அறியாமல் இருந்திருப்பார்களா ?

गोपिभाग्यमधुव्रात - श्रुग्डिशोदधिसन्धिग ।।
खलजीवितखाताव गलहालारसँधर ।।

கோபி பாக்ய மதுவ்ரத ஸ்ரீங்கிசொ ததி சந்திக
கல ஜீவித காதாவ கால ஹாலா ரசந்தார.

இதன் அர்த்தம் ஆங்கிலத்தில்

O Lord anointed with the yogurt of the milkmaids' worship (Krishna), O savior of the fallen, O master of Shiva, please protect me

சமஸ்கிருத "அனுஸ்துப்" இது. இதில் pi யை பத்தால் வகுத்தால் கிடைக்கும் எண்ணைக் குறிப்பிடுகிறார்களாம். எப்படி ?

எண் கணிதம் போல் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்படும் உயிர் மற்றும் மெய்யெழுத்துக்களுக்கு உரிய எண்களைக் கொடுத்திருக்கிறார்கள் முன்னோர். அதன் படி இதில் வரும் எழுத்துக்களுக்கு எண்களை சரியாகப் போட்டால் கிடைப்பது,

pi/10 = 0.31415926535897932384626433832792

இது முற்றிலும் co incidental ஆக இருக்க probablity யை கணித்தால் 1/10^32 அதாவது 10 க்குப்பிறகு 32 பூஜ்யங்கள் அதில் ஒரு வாய்ப்பு உள்ளது! நிச்சயம் இது எதேச்சையான ஒன்று அல்ல.

இது போலுள்ள பல விஷயங்கள் சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று திட்டி ஒதுக்கிவைக்காமல் தேடினாலே கிடைக்கும்.
என்ன, அதுவும் நம் மொழிதான், நம் சரித்திரப் பெருமை சொல்லும் மொழி என்ற சுய கவுரவத்துடன் அதனைப் படிக்கவேண்டும். இதெல்லாம் பள்ளிகளில் சொல்லித் தந்தால் Saffronization என்று ஒரு வெத்து வேட்டு கோஷ்டி கத்திக் கொடி பிடிக்கும்.

21 ம் நூற்றாண்டு இந்தியாவின் சாபக்கேடு எது என்றால் சுய ஏளனத்தின் உச்சத்தை தொடும் "சிந்தனா வியாதிகளை" அறிவு சீவிகளாக ஆக்கி வைத்திருப்பது தான்.

http://www.vedicmaths.org/

16 comments:

Anonymous said...

சமஸ்க்ருதம் ஒரு குழுவின் மொழி என்ற அளவில் அதை வெறுப்பவர் குறைவு.

அந்த மொழியை சார்ந்த நீதிகளால் போதிக்கப்பட்டு மக்கள் பிரிவினைக்கும் அடக்குமுறைக்கும் ஆளானதால் அந்த மொழியும் தனது உயிர்ப்பை இழந்துட்டதுன்னு நான் சொல்வேன். ( உனக்கே இது டூ மச்சா தெரியலையா ரவி)

ஒரு மொழியில் இருக்கும் நல்ல கருத்துக்களை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளலாம்..ஹிந்தியா இருந்தா என்னா, ரஷ்ய மொழியா இருந்தா என்ன ? ( சத்தியமா இது என்னோட கருத்து)

எங்கே பயணக்கட்டுரை ?????????

செந்தழல் ரவி

Hari said...

அதிக பின்னூட்டங்கள் வரமாலிருப்பதற்க்கு என்ன காரணாமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், வஜ்ரா?

Vajra said...

செந்தழல் அவர்களே,

தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் சமஸ்கிருதத்தில் இருக்கிறது. அதெல்லாம் செய்யாமல் அதை ஒழித்துத்தான் தன் மொழியை முன்னேற்ற முடியும் என்று பலர் திரிகின்றனர். என்ன செய்ய !

ஹரி,

அதிக பின்னூட்டம் வரவில்லை என்றால், நான் என்ன செய்ய ? எனக்கு அதைப் பற்றி கவலையில்லை.

நான் தான் ஸ்டாராக இருப்பேன் என்று நான் அடம்பிடித்து வரவில்லை.

Hari said...

/*நான் தான் ஸ்டாராக இருப்பேன் என்று நான் அடம்பிடித்து வரவில்லை. */

I think u r mistaken abt my comment. Cool.

:)

வடுவூர் குமார் said...

மறுபடியும் படிக்கவேண்டியுள்ளது.
தூங்க நேரமாகிவிட்டது.
sorry.

குமரன் (Kumaran) said...

வஜ்ரா. முதலில் சரி செய்ய வேண்டிய சில எழுத்துப்பிழைகளைப் பற்றி சொல்லிவிடுகிறேன்.

அறுமை இல்லை. அருமை.

வடமொழி அனுஸ்டுப் சுலோகம் தமிழில் எழுதப்படும் போது கீழே தந்துள்ளபடி எழுதப்படவேண்டும்.

கோபி பாக்ய மதுவ்ரத ச்ருங்கிசொ ததி சந்திக
கலஜீவித காதாவ காலஹாலாரசந்தர

அப்போது தான் நீங்கள் சொன்ன பொருள் சரியாக வரும்.

நீங்கள் என்ன சொல்ல வந்திருக்கிறீர்கள் என்பதை சரியாக இன்னும் விளக்க வேன்டும் என்று நினைக்கிறேன்.

முதல் முறை படித்த போது எனக்கு உண்மையிலேயே ஒன்றும் விளங்கவில்லை. இன்னொரு முறை படித்த போது 'சுலோகத்தில் இருக்கும் ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய எண்ணை இட்டால் அது 031415... என்று pi/10 ஆக இருக்கும்' என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சரியா? இப்படி சுலோகத்தை அமைத்ததன் மூலம் pi இந்த சுலோகம் எழுதிய முன்னோர்களுக்குத் தெரிந்திருந்தது என்று சொல்ல வருகிறீர்கள். சரியா?

1. இந்த சுலோகம் எந்தக் காலத்தில் இயற்றப்பட்டது? அது தெரிந்தால் எவ்வளவு நாட்களுக்கு முன்னால் நம் முன்னோர்களுக்கு pi தெரிந்திருந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.

2. இந்த சுலோகம் மட்டும் தானா இல்லை எல்லா அனுஸ்டுப் சந்தத்தில் வரும் சுலோகங்களும் இந்த வகையில் அமையுமா? இல்லையேல் அனுஸ்டுப் என்று இதனைத் தனியாக ஏன் சொல்லியிருக்கிறீர்கள்?

3. இந்த சுலோகம் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு pi நம் முன்னோர்களுக்குத் தெரிந்திருந்தது என்று எப்படி எடுத்துக் கொள்வது? வேறு ஏதேனும் சுலோகம் இருக்கிறதா? நேரடியாக இந்த pi என்பதன் மதிப்பு பற்றி எங்காவது குறிக்கப்பட்டிருக்கிறதா?

தவறாக எண்ண வேண்டாம். வேற்று நாட்டவர் நம்மை இந்தக் கேள்விகள் கேட்கும் முன் நாமே இந்தக் கேள்விகளைக் கேட்டு விடை தெரிந்து கொள்வது நல்லது என்பதால் கேட்கிறேன்.

வடமொழி என்ற ஒரே காரணத்திற்காக அதனை வெறுப்பது தவறு என்பதில் எனக்கு முழு ஒப்புதல் உண்டு. எந்த மொழியில் தான் அடக்குமுறைக் கருத்துகள் இல்லை. அதனால் அந்த மொழியை வெறுப்பதென்றால் அவரவர் தாய்மொழியையும் வெறுக்க வேண்டியது தான். அல்லவை களைந்து நல்லவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Anonymous said...

dude what does being star has to do with the comments that you get?

காஞ்சி பிலிம்ஸ் said...

//சமஸ்கிருதத்தை நம் மொழிதான், நம் சரித்திரப் பெருமை சொல்லும் மொழி என்ற சுய கவுரவத்துடன் அதனைப் படிக்கவேண்டும்//
கண்டிப்பாக இதில் சந்தேகம் இல்லை. அந்த மொழியை சாமனியர்களும் படித்தால் தான் அதன் பெருமை மட்டுமில்லை அந்த மொழியில் இயற்றப்பட்டுள்ள மனுஸ்ருதியிலும் வேதங்களிலும் உள்ள பித்தலாட்டங்களை தெளிவாக்கிக் கொள்ள முடியும்.

Vajra said...

//
dude what does being star has to do with the comments that you get?
//

i do not know...it is generally believed that being star must get more comments than usual...!! right ?! as it gets more attention than usual in thamizmanam.

Anonymous said...

That's understood. However you seems implying that becoming the star of the week makes the comment count low. I think, it has nothing to do with being star or not. It's much on what your topic is.
Reference to Vedicmathematics from a doctoral candidate, I do not know, but believe certainly making an impact in comment count.

You can see islamicmathematic sites and christianscientist sites. Well, christianscientists are different anyway. Accept or not, rational people are sceptic about INTERPRETATIONS of texts in a sort of cryptic language. At the same time they do not want to hurt you either during your star week. That's why even the people generally jump on you do not bother to respond.

Just my observation

Vajra said...

this is not like christian or islamic mathematics !

if i say as indian mathematics it looks okay, if i say it as vedic (which indeed reflects the hindu nature) it becomes bad idea for you!

This is an anustubin which students in ancient india made learning easier and fun. For example, they say "All Silve Tea cups" running clockwise in a graph, the first quadrant has all positive, the second has Sine positive, Third has Tan and in 4th quadrant only cosine positive.

The real interpretation has no meaning in the sentence. Same way, the real interpretation to this anustub is of less importance than the value based number itself.

Kumaran has right questions, i will try to answer them in my next entry.

Wheather you like it or not, VEDIC MATHEMATICS is here to stay.

People take to Yoga seeing a white guy doing it. Same way you will accept this when the west does.! have a great day.

Anonymous said...

/This is an anustubin which students in ancient india made learning easier and fun. For example, they say "All Silve Tea cups" running clockwise in a graph, the first quadrant has all positive, the second has Sine positive, Third has Tan and in 4th quadrant only cosine positive.

The real interpretation has no meaning in the sentence. Same way, the real interpretation to this anustub is of less importance than the value based number itself./

ok ok :)
I do not want to start. I know when I start where it will end up.

கால்கரி சிவா said...

//21 ம் நூற்றாண்டு இந்தியாவின் சாபக்கேடு எது என்றால் சுய ஏளனத்தின் உச்சத்தை தொடும் "சிந்தனா வியாதிகளை" அறிவு சீவிகளாக ஆக்கி வைத்திருப்பது தான்//

மிக உண்மையான வார்த்தைகள்

கால்கரி சிவா said...

மக்கள் பிரிவினைக்கு அடக்குமுறைக்கும் ஆளானது ஆங்கில மொழி மூலம் கூடதான். ஆங்கிலம் என்ன இறந்தா விட்டது. மொழிக்கும் அடக்குமுறைக்கும் சம்பந்தமே இல்லை. தமிழை வைத்துக் கூட அடக்குமுறை செய்யலாம். கருப்புக்கொடி காரர்கள் என்ன அடக்குமுறையும் ரவுடிதனத்தையும் செய்யவே இல்லையா?

ஜடாயு said...

// இது முற்றிலும் co incidental ஆக இருக்க probablity யை கணித்தால் 1/10^32 அதாவது 10 க்குப்பிறகு 32 பூஜ்யங்கள் அதில் ஒரு வாய்ப்பு உள்ளது! நிச்சயம் இது எதேச்சையான ஒன்று அல்ல. //

ஆமாம் வஜ்ரா. அருமையான இந்த விஷயத்தப் பற்றி பதிவிட்டதற்கு மிக்க நன்றி.

// இது போலுள்ள பல விஷயங்கள் சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று திட்டி ஒதுக்கிவைக்காமல் தேடினாலே கிடைக்கும். //

இத்தகைய முயற்சிகளில் இறங்குபவர்களில் ஒன்றிரண்டு பேர் முன்கூட்டியே நினைத்துகொ கொண்டு மின்காந்த சக்தி முதல் தியரி ஆஃப் ரிலேடிவிடி வரை எல்லாம் வேதங்களில் இருக்கிறது என்னும் கோஷ்டி. இவர்களை ஒதுக்கி விடுவோம். இவர்களின் எண்ணிக்கையும் குறைவு.

ஆனால் பண்டைய இந்திய அறிவியல் என்பது வெறும் hot air அல்ல. சிறந்த அறிவியல் அறிஞர்களான ஜே.வி.நார்லிகர் (சி.எஸ்.ஐ.ஆர் தலைவர்) முதல் சுபாஷ் காக் (அமெரிக்க பல்கலை. இயற்பியல் பேராசிரியர்) வரை சம்ஸ்கிருதத்தில் புதைந்து கிடக்கும் அறிவியல் செல்வம் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். எழுதியிருக்கிறார்கள். இவை உண்மையான, நேர்மையான ஆராய்ச்சிகள் என்பதற்கு இதுவே சான்று.

pi பற்றி எழுதியிருக்கிறீர்கள். இன்னொரு உதாரணம் - ஒளியின் வேகத்தை (speed of light) ஐராப்பாவில் கண்டுபிடிப்பதற்கு 4 நூற்றாண்டுகளுக்கு முன்பே சாயணர் வேதபாஷ்யத்தில் இந்த அளவு ஏறக்குறைய மிக துல்லியமாகக் கொடுக்கப் பட்டுள்ளது - மறைமுகமாக அல்ல, நேரிடையாகவே. இது பற்றிய முழு விளக்கம்:
http://www.prideofindia.org/doc/astro1.doc (MS word doc)

இது போன்ற பல விஷயங்களைக் கூறும் Pride of India என்ற நூலைப் பற்றியது தான் இந்த இணைய தளம். மிக அருமையாக பல அரிய புகைப்படங்களுடன் உள்ள அருமையான நூல் இது. சம்ஸ்கிருத பாரதி அமைப்பு வெளியிட்டுள்ளது.

Vajra said...

ஜடாயு,

ஜகத் குரு பாரதி கிருஷ்ண தீர்த்தாஜி மஹராஜா எழுதிய புத்தகத்திலிருந்து தான் இதைப் பதித்தேன்.

புத்தகத்தின் பெயர், Vedic mathematics.

மோதிலால் பனாரஸிதாஸ் தான் பதிப்பாளர்கள்.

நிறையவே சொல்லியிருக்கிறார்கள். புத்தகம் கிடைத்தால் பாருங்கள்.