June 21, 2006

அருந்ததி ராய்

சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதளில் இந்தியாவின் அறிவுஜீவிக்களில் ஒருவராக பாவிக்கப் படும் God of Small things புகழ் அருந்ததி ராய் அவர்கள், இந்தியா ஒரு ஜனநாயக நாடு அல்ல என்பதை "கண்டுபிடித்துள்ளதாக" செய்தி வெளியாகியிருந்தது.

அதிர்ந்து போய், படித்தால்,

"The biggest PR myth of all times is that India is a democracy. In reality, it is not,’’


சரி, ஜனநாயகத்தில் கருத்துச்சுதந்திரம் உள்ளது என்பதால், இதை ஏற்றுக் கொண்டு, "அம்மணி, I beg to differ" என்று சொல்லிவிட்டு, 1000 வார்தைகளில் கட்டுரை எழுத்தித் தள்ளலாம். அதை நான் செய்யப் போவதில்லை.
அதே செய்தியில்,

Challenging the much-acclaimed views of columnist Thomson Friedman praising India, a democracy of a billion population, for conducting peaceful elections year after year, she said, ‘‘He probably needs a new tour of India... Does Thomas know that in Kashmir Valley alone, some 80,000 people have been killed? In Iraq, there are 1,50,000 military personnel, whereas in Kashmir Valley there are some 7,00,000.’’


இதுவும் அவர் வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்கள் தான்...இதற்கும் "அம்மணி, ஐ பெக் தொ டிஃப்பர்" என்று 10,000 வார்த்தைகளில் பதில் எழுதிப் பொரிந்து தள்ளலாம். ஆனால் அதையும் நான் செய்யப் போவதில்லை. என் ஒரே பதில் கீழே இருக்கும் படம். A picture speaks a thousand words...


படம்: நன்றி

படத்தில் ராய் கை குலுக்குவது, கஷ்மீர் தீவிரவாத இயக்கம் (JKLF-Jammu kashmir libreation front) தலைவர் யாசீன் மாலிக்குடன்.

குறிப்பு:

இந்தியா ஜனநாயக நாடு இல்லை என்று சொல்லும் அருந்ததி ராய்க்கு அவருக்கு பிடித்த "ஜனநாயக" நாட்டிற்கு one way விமான டிக்கெட் எடுத்துக் கொடுப்பதற்காக நான் என் பங்கிற்கு 50 டாலர் அனுப்பத்தயாராக உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

47 comments:

நாகை சிவா said...

//இந்தியா ஜனநாயக நாடு இல்லை என்று சொல்லும் அருந்ததி ராய்க்கு அவருக்கு பிடித்த "ஜனநாயக" நாட்டிற்கு one way விமான டிக்கெட் எடுத்துக் கொடுப்பதற்காக நான் என் பங்கிற்கு 50 டாலர் அனுப்பத்தயாராக உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

என் பங்கும் ரெடிங்க....
இதை எல்லாம் பாக்கும் போது நம் நாடு ஏன் இன்னும் ஜனநாயக நாடாக உள்ளது என எண்ண தோண்றுகிறது.

Anonymous said...

ஆமாம், இந்த மாதிரி இல்லாள் இல்லாத ஒருவளின் கைப்பிடித்தால் இருவருக்கும் ஷாரியாவில் என்ன தண்டனை? உங்களுக்குத் தெரியுமா?

siva gnanamji(#18100882083107547329) said...

பலருடன் முரண்படுவதாலேயே சிலர்
பலரிடம் பிரபலமாகிவிடுகின்ற்னர்

Jayakumar said...

Read it in context. IE has quoted to suite it's opinion on Roy

This is another contemporary article

Anonymous said...

Andha kalam mathiri nadu kadathara option ellam illingala ippo? Ippadi pesitu en innum Indiavla irrukanumam avalukku ..
En pangum ready ..

கால்கரி சிவா said...

அவர் பூலோக சொர்க்கமான சவூதி அரேபியாவில் குடியேற்ற உரிமைப் பெற்று அங்கே போய் இதே வேலையை தொடர்வதாக இருந்தால் நான் முமு டிக்கடையும் வாங்கி அனுப்புகிறேன்

-/சுடலை மாடன்/- said...

உங்க தலைவர்கள் அத்வானி, நரேந்திர மோடியை விட யாசீன் மாலிக் அப்படி ஒன்றும் மோசமானவரல்ல.

நீங்கள் முத்திரை குத்த விரும்புகிறபடி அவர் பாகிஸ்தான் ஆதரவாளருமல்ல.

இந்திய தேசிய தீவிரவாதத்தை/ஆக்கிரமிப்பை எதிர்ப்பதால் இந்தியாவுக்கும், இசுலாமிய தேச வெறியை எதிர்ப்பதால் பாகிஸ்தானுக்கும் எதிரியாக JKLF காண்பிக்கப் படுவதில் வியப்பில்லை.

நன்றி - சொ. சங்கரபாண்டி

வஜ்ரா said...

வாங்க நாகை சிவா,

நாம் ஜனநாயக நாடாகவே இருப்போம்...இவர்களைப் போலுள்ளவர்களை துரத்த வேண்டும்

வஜ்ரா said...

//
ஆமாம், இந்த மாதிரி இல்லாள் இல்லாத ஒருவளின் கைப்பிடித்தால் இருவருக்கும் ஷாரியாவில் என்ன தண்டனை? உங்களுக்குத் தெரியுமா?
//

அனானி,

கையை, ஸ்வராஜ் மாஜ்தா வேன் ஏற்றி நசுக்குவார்களா?

வஜ்ரா said...

//
பலருடன் முரண்படுவதாலேயே சிலர்
பலரிடம் பிரபலமாகிவிடுகின்ற்னர்
//

சிவஞானம் ஜி,

சரியாகச் சொன்னீர்கள். ராய் போன்றவர்கள் பிரபலமாவது எப்படி என்று புத்தகம் எழுதுவதற்கு ஆராய்ச்சி செய்கிறார் என்று நினைக்கிறேன். (இன்னும் அவரை அறிவுள்ளவராக ஏற்றுக் கொண்டால் தான் இந்த ஆப்ஷன்!!)

வஜ்ரா said...

சங்கர பாண்டி,

பிரிவினைவாதிகளை ஆதரிப்பதில் பெறுமை கொள்ளுதல் கேவலமான விஷயம்.

//
இந்திய தேசிய தீவிரவாதத்தை/ஆக்கிரமிப்பை எதிர்ப்பதால் இந்தியாவுக்கும், இசுலாமிய தேச வெறியை எதிர்ப்பதால் பாகிஸ்தானுக்கும் எதிரியாக JKLF காண்பிக்கப் படுவதில் வியப்பில்லை.
//

அது தான் சினிமா எடுத்து ஞாயப்படுத்தப்படுகிறது...Fanaa படத்தின் கதை இது தானே...நியூட்ரல் தீவிரவாதி ஹீரோ..!!

இந்தியத் தேசிய தீவிரவாதம் என்றால் என்ன?

இந்தியா செய்வது ஆக்கிரமிப்பி, JKLF செய்வது சுதந்திரப் போராட்டமா? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூட இப்படி உளரல்களை நிறுத்திவிட்டது...நீங்க எப்பங்க நிறுத்தப் போறீங்க.?

வஜ்ரா said...

ஜே. கே...

நீங்கள் கொடுத்த லிங்க்கிலிருந்து...

//
Editor's Note: This is an edited transcript of an interview with Arundhati Roy, from Amy Goodman's syndicated radio show, Democracy Now!
//


அன்த அம்மணி ஒரு நட்டு கழன்ற கேசு போல் உளரிக் கொண்டு இருக்கிறது..அதை அறிவாளி என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் அந்த opinion ஐ நான் மாற்ற விரும்பவில்லை.

//
IE has quoted to suite it's opinion on Roy
//

Roy has a opinion on everything...IE has quoted her opinion.

Anonymous said...

நான் முழு டிக்கட் தொகையும்,விசா செலவும் தர தயாராக உள்ளேன்.உடனடியாக அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடவும்.வடகொரியா அனுப்பினால் மிக்க நல்லது.

அருந்ததிராயின் ஆதரவை வழக்கமாக பெறும் கும்பல்கள் நக்சலைட்டுகள்,காஷ்மீர் தீவிரவாதிகள்,தலிபான் கும்பல் ஆகியோர்.இந்தியா அணுகுண்டு வெடித்ததை கண்டித்து அருந்ததி ஆர்ப்பாட்டம் செய்வார்.ஈரான்,வடகொரியா அணுகுண்டு தயாரிக்க முயல்வதை யாராவது கண்டித்தால் அவருக்கு கடும்கோபம் வந்துவிடும்.போதாகுறைக்குசீனா ஒரு ஜனநாயக நாடு என்று வேறு திருவாய் மலர்ந்தருளியுள்ளராம்.

ஒரே புத்தகம் எழுதி பெயர் வாங்கிவிட்டார்.அடுத்த புத்தகம் எழுத திறமை இல்லை.எடுத்த பெயரை காப்பாற்றிக்கொள்ள இப்படி அவ்வப்போது ஸ்டண்ட் அடிக்க வேண்டி இருக்கிறது.யாரும் இவரை பெரிதாக கண்டுகொள்வதில்லை என்ற கோபம் வேறு அவ்வப்போது வரும்.அப்போது பெரிய குண்டு ஒன்றை எடுத்து விடுவார்.

மிதக்கும்வெளி said...

காஷ்மீரை ஆக்கிரத்துள்ள இந்தியாவை வெளியேற்றப் போராடும் jklf தீவிரவாத இயக்கம் என்றால் அங்கே காஷ்மீர்ப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யும் இந்திய ராணுவத்தை ஆதரிப்பவர்களை என்னவென்பது?

வஜ்ரா said...

செல்வன்,
உங்கள் மறுமொழி ப்ளாக்கர் சொதப்பலால், காணாமல் போய் விட்டது...ஆகயால் அதர் ஆப்ஷனில் மறு பிரசுரம் செய்துவிட்டேன்..

ஓகேயா?

வஜ்ரா said...

மிதக்கும் வெளி போல் பிரிவினைவாதத்தினை சுதந்திரப் போராட்டம் என்பது, நக்ஸல் இயக்கங்கள் மக்கள் இயக்கங்கள் என்று சொல்லி ஆதரிப்பது போன்ற காரியங்கள் செய்தால் வேறு வழியே இல்லை, ஃபாசிசம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாய் ஆகிவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்...

Amar said...

//Does Thomas know that in Kashmir Valley alone, some 80,000 people have been killed? In Iraq, there are 1,50,000 military personnel, whereas in Kashmir Valley there are some 7,00,000.//

இந்த ஏழு லட்சம் வீரர்கள் கதையை தீவிரவாதிகளும் இந்த ராய் மாதிரி தேச துரோகம் செய்து சம்பாரிக்க நினைக்கும் ஆட்கள் தான் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

இந்திய இரானுவத்தில் மொத்தம் இருப்பதே ஒன்பது லட்சம் active troops தான்.

இதை கொண்டு அருனாச்சல பிரதேசம் முதல் காஷ்மீர் வரை மற்றும் குஜ்ராட் முதல் பஞ்சாம் வரை பாதுகாக்க வேண்டும்.

ஆக, காஷ்மீரில் எழு லட்சம் வீரர்களை நிறுத்திவிட்டு வெறும் இரண்டு லட்சம் வீரர்களை கொண்டு மத்த எல்லைபகுதிகளை இந்திய இரானுவம் காப்பாற்ற முடியுமா?

மேலும் காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில், அதாவது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மலைபிரதேசம்.டாங்கிகள் முதலான கனரக சமாச்சாரங்களை deploy செய்வது முடியாது.காலாட்ப்படையை மற்றுமே நிறுத்த முடியும்.

நம்மிடம் இருக்கும் infantry regimentகளை மொத்தமாக சேர்த்தாலும் ஏழு லட்சம் வீரர்கள் தேற மாட்டார்கள்!

இவை முப்பது வருடங்களுக்கு மேலாக காஷ்மீரில் பனியாற்றிய இரானுவ அதிகாரிகளிடம் நான் பேசி தெரிந்துகொண்ட உன்மைகள்.

ஆக, அருந்ததி ராயும் அவருக்கு ஆதரவாக இருக்கும் ஒநாய்களும் ஏமாற்ற சிறுவயதிலேயே சோவியத் புத்தகங்களும், குரானையும் படித்த முளைச்சலைவை செய்யபட்டவர்களை தான் தேடி செல்ல வேண்டும்.

Amar said...

//அங்கே காஷ்மீர்ப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யும் இந்திய ராணுவத்தை ஆதரிப்பவர்களை என்னவென்பது?//

கஷ்மீர் பென்களை பலாத்காரம் செய்ததால் தான் கஷ்மீர் மக்கள் நிலநடுக்கம் வந்தபோது இந்திய இரானுவம் வந்த எங்களுக்கு நிவாரன உதவிகளை செய்ய வேண்டும் என்று கூறினார்களா என்ன் ? :)

அப்புறம் அங்க என்ன தான் நடக்குதுன்னு போய் ஒரு தடவ பார்த்துட்டு தான் வாங்களேன்.யாருக்கு எந்த தடையும் இல்லையே.

அட, வெளிநாட்டுகாரங்க கூட போய் பார்த்துட்டு இருக்காங்க.

நிறைய பலாத்காரம் செய்றதுன்னா யாரையும் உள்ளவிடாம இல்ல
இருப்பாங்க.

தலையில் மூளைன்னு ஒன்னு இருக்கு.கொஞ்சம் யூஸ் பன்னுங்க.

Anonymous said...

//நாம் ஜனநாயக நாடாகவே இருப்போம்...இவர்களைப் போலுள்ளவர்களை துரத்த வேண்டும்//

ஜனநாயகம் என்றால் என்ன என்று நீங்கள் புரிந்து கொண்டதன் லட்சணம் நகைப்பிற்குரியது. உங்கள் பார்வைக்கோணத்துக்கு, விருப்பத்துக்கு உரியவர்களைத்தான் நாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றால், இப்படித்தானே அனைத்து பிரிவினைவாதிகளும் நினைக்கிறார்கள். நிஜமாகவே நேர்மையாகத்தான் சிந்திக்கிறீர்களா? அல்லது நீங்களும் அ.ராய் போல் ஸ்டண்ட் பார்ட்டிதானா?

கருணைக்கடவுளாக மாறி ஒவ்வொருவரும் டிக்கட் எடுத்துக்கொடுத்ததெல்லாம் போதும், சக சகோதரனுக்கு, சக இந்தியனுக்கு, ஒரு வாய் சோறு வாங்கிக் கொடுப்பதைப் பற்றிச் சிந்திக்கவும். சுகமாக வாழ்ந்து கொண்டு "புரட்சியாக, புதுமையாக, ஜனநாயகமாக சிந்தித்து சிந்தித்து நாட்டை குட்டிச் சுவராக்கியது போதும்"

மிதக்கும்வெளி said...

நேரு காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஏன் இன்னும் இந்தியா காஷ்மீர் இந்தியாவோடு இருப்பதா,வேண்டாமா என்ற கருத்துக்கணிப்பை நடத்த முன்வரவில்லை?அதற்குப் பெயர் ஆக்கிரமிப்பு இல்லையா?

Muse (# 01429798200730556938) said...

என்னதிது, கால்கரி சிவாவும், $ல்வனும் சுயநலமிகளாக மாறிவிட்டீர்கள்? ஒரு நல்ல காரியத்தை செய்ய முடிவு செய்யும்போது மற்றவர்களுக்கும் சற்று வழி விட வேண்டாமா? சரி. விடுங்கள்.

அருந்ததி ராயுடன், மேதா பட்கரையும், ஸி என் என் - ஐ பி என் நடத்திவரும் ராஜ்தீப் ஸர்தேஸாய், டீஸ்டா ஸெடால்வட் போன்றோரை அனுப்பத்தேவையான பணத்தை நான் தருகிறேனே. ப்ளீஸ். ப்ளீஸ். நான் பாவமில்லையா. ஒரே ஒரு சான்ஸ்.

இந்த அருந்ததி ராய் மற்றொரு குழுவிலும் மிக ஆக்டிவாக செயல்பட்டவர். அது எந்தக் குழு தெரியுமா?

பார்லிமண்ட் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட பேராசிரியரை விடுவிக்கப் போராடிய அமைப்பிலும் அவர் ஒரு முக்கிய உறுப்பினர்.

Unknown said...

//நேரு காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஏன் இன்னும் இந்தியா காஷ்மீர் இந்தியாவோடு இருப்பதா,வேண்டாமா என்ற கருத்துக்கணிப்பை நடத்த முன்வரவில்லை?அதற்குப் பெயர் ஆக்கிரமிப்பு இல்லையா? //

அதற்கு காரணம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் தன் படைகளை வாபஸ் பெறாததே.படைகள் வாபஸ் பெற்ற பின்னரே கருத்துகணிப்பு நடத்த ஐநா ஆலோசனை சொல்லியிருந்தது.ஆனால் பாகிஸ்தான் இன்று வரை ஆக்கிரமிப்பு காஷ்மிரில் இருந்து தன் படைகளை வாபஸ் பெறவில்லை.ஆகவே கருத்துகணிப்பும் நடைபெறவில்லை

Unknown said...

ஒன்றும் பிரச்சனை இல்லை ஷங்கர்.பிளாக்கர் பகவான் அடிக்கடி தன் திருவிளையாடலை நடத்துவார்:-)

Anonymous said...

We should ask her to go to the country, where she can talk this kind of crap.
What is her defnition of democracy ...?

with best
CT

வஜ்ரா said...

அருந்ததி ராய் பற்றி

ரவி ஸ்ரீனிவாஸ்

ரோசாவசந்த்

Sivabalan said...

Muse அவர்களே,

போகிற போக்கில்..

// ராஜ்தீப் ஸர்தேஸாய் //

ஏன் NDTVல் இருந்து வெளியேறியதற்காகவா..??


ஷங்கர்,
இப்பின்னூடம் பதிவை திசை திருப்பும் என்றால் வெளியிடவேண்டாம்..

ரவி said...

இங்கிலீசு புக்கு அப்படின்னாலே எனக்கு உவ்வே ஆயிடும்..அதனால் நல்லவேளையா இந்த அம்மணி பொஸ்தகதை எல்லாம் படிச்சி இன்பம் பெறமுடியல..

Anonymous said...

வஜ்ரா

அர்ந்ததிராய்ப் பத்தி பேஸ உன்னெமாரி பாப்பாரப் பஸங்க ஸமூத்ரா, மூஸு அல்லாரும் வந்துகிறீங்கொ.

அத்து ஜனங்கள்கு இன்னா நெல்லது பண்ணுதுன்னு உனுக்கு தெரீமா?

போட்டா போட்டுகிறீயே, யாஸிம். அவனெ இன்னாத்துக்கு நம்ம கெவருமெண்டு பேஸ ஸொல்லி வலிக்குது.

பிச்சுவா பக்கிரி.

வஜ்ரா said...

சமுத்ரா,

நீங்கள் கணக்கு காட்டியிருக்கவில்லை என்றால் அதைவைத்தே ஒரு புதிய பதிவு போட்டு பொய்யை உரக்கச்சொல்லி உண்மையாக்கியிருப்பார்கள்..

out of context ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் அதை கோட் செய்திருக்கிறதாம்...அப்படி என்றால் கோர்ட்டில் மானநஷ்டவழக்கு போடவேண்டியது தானே...( அதுவும் ஒரு வித ஸ்டண்ட் தான்...கொஞ்ச நாளில் அம்மணி அதைக்கூட தலைப்புச் செய்தியில் வருவதற்காகச் செய்யும் )

வஜ்ரா said...

ஏய் பிச்சுவா பக்கிரி,

நீ செலம்பரதுக்கு வேறாளப்பாரு.. என்ன ..

பார்பாரப் பசங்க, பார்பாரப் பசங்கன்றியே, அவனுங்க ஒன்னெமாதிரி பிளேடு வெச்சிகினு செலம்பனா...ப்ளேடு கீராதா?

வஜ்ரா said...

//
இங்கிலீசு புக்கு அப்படின்னாலே எனக்கு உவ்வே ஆயிடும்..அதனால் நல்லவேளையா இந்த அம்மணி பொஸ்தகதை எல்லாம் படிச்சி இன்பம் பெறமுடியல..
//

வாங்க செந்தழல் ரவி,
உப்பு சப்பில்லாத அந்த புஸ்தகத்தெ...தூக்கம் வரலென்னு படிச்சா 10 பக்கத்துக்கப்புறம்...அடிச்சு போட்ட மாதிரி தூக்கம் வரும்...

(highly recommended by for Insomnia!! :))

VSK said...

இந்த அருந்ததி ராய் போன்றவர்களையும் சகித்துக்கொண்டு பீடு நடை போடுவதே இந்தியாவின் பெருமை!!

ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் அவர்....
நீங்கள் அனுப்பவிரும்பும் நாடுகளில் பிறக்காமல் போனதற்கு!
:)))

மாமன்னன் said...


இந்த வரைபடத்தை பாருங்கள்.
ஐக்கிய முஸ்லீம் நாடுகளின் கீழ் அடிமையாக இந்தியா இருக்க வேண்டுமாம். இதுதான் காஷ்மீர் பாகிஸ்தான் முஸ்லீம் தீவிரவாதிகளின் ஆசை. அந்த ஆசையோடுதான் அருந்ததிராய் கைகோர்க்கிறார்

வஜ்ரா said...

//
நீங்கள் அனுப்பவிரும்பும் நாடுகளில் பிறக்காமல் போனதற்கு!
//

வாங்க SK.
அவர் விரும்பும் "ஜனநாயக" நாட்டிற்குத் தான் அவரை அனுப்பவேண்டும் என்று சொன்னேன்...

வஜ்ரா said...

//
அந்த ஆசையோடுதான் அருந்ததிராய் கைகோர்க்கிறார்
//

அதைத் தான் சொன்னேன்...நீங்க மேப் போட்டு காட்டிட்டீங்க...ராயை pedestalல் ஏற்றுபவர்கள் யோசிக்கவேண்டியது...

Anonymous said...

ஜனநாயக இந்தியா ஏன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீரில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்த மறுக்கிறது?

வஜ்ரா said...

அனானி,

செல்வன் எழுதிய பின்னூட்டம் பார்க்கவில்லையா...?

//
அதற்கு காரணம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் தன் படைகளை வாபஸ் பெறாததே.படைகள் வாபஸ் பெற்ற பின்னரே கருத்துகணிப்பு நடத்த ஐநா ஆலோசனை சொல்லியிருந்தது.ஆனால் பாகிஸ்தான் இன்று வரை ஆக்கிரமிப்பு காஷ்மிரில் இருந்து தன் படைகளை வாபஸ் பெறவில்லை.ஆகவே கருத்துகணிப்பும் நடைபெறவில்லை
By $elvan, at June 22, 2006 7:01 PM
//

வஜ்ரா said...

தற்பொழுத் நிலவும் அப்சல் மரண தண்டனை பதிவுகளில் செல்வி ராய் ஏக போக ஆதரவு அள்ளி தெளித்திருக்கிறார் என்பதனால் அவரைப் பற்றி அறிய இந்த பதிவு உதவும் என்பதனால் இந்த பின்னூட்ட கயமைத்தனம் செய்கிறேன்.

enRenRum-anbudan.BALA said...

கூட்டுக் களவாணியோ, அம்மணி !

According to me, she is being much more importance by the media, than she actually deserves !

enRenRum-anbudan.BALA said...

Correction to my earlier comment:

It should read as below:

"கூட்டுக் களவாணியோ, அம்மணி !

According to me, she is being GIVEN much more importance by the media, than she actually deserves ! "

Unknown said...

தற்பொழுத் நிலவும் அப்சல் மரண தண்டனை பதிவுகளில் செல்வி ராய் ஏக போக ஆதரவு அள்ளி தெளித்திருக்கிறார் என்பதனால் அவரைப் பற்றி அறிய இந்த பதிவு உதவும் என்பதனால் இந்த பின்னூட்ட கயமைத்தனம் செய்கிறேன்.//

ஏகபோக ஆதரவா?அவர்போக மற்ற இடதுசாரிகள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டையல்லவா எடுத்திருக்கிரார்கள்?என்னத்தை சொல்ல?

சுவாமி said...

கயமைத்தனம் பன்னியிருக்காவிட்டால் இதை miss பன்னியிருப்பேன். அருந்ததி ராய் இந்தியாவை பற்றி பேசும்போது எனக்கு எரிச்சலையே ஏற்ப்படுத்தினாலும், she has one of the sharpest minds around . அவர் supreme courtற்க்கு எழுதிய submission படித்திருப்பீர்கள். மேலோட்டமாய் கருத்துக்களை அள்ளித் தெறிக்கும் பலர், அவருடன் நேர்மையுடன் விவாதம் புரிய முடியாதென்றே நினைக்கிறேன். அருந்ததி ராயுடன் ஒத்துப் போகிறோமோ இல்லையோ, we need her kind of thinking. அமெரிக்காவில் தேசியவாதிகள் Noam Chomsky பற்றி இதே போல் கடுப்படுவைதுண்டு. எனக்கு Noam Chomsky சொல்வது மிக நேர்மையாக இருக்கும். Since it conforms to my thinking .
காஷ்மீரில் இந்தியா கருத்துக்கணிப்பு நடத்தாதற்கு காரணம் பாகிஸ்தான் ல் படைகளை வாபஸ் பெறாதது அல்ல. நாளை பாகிஸ்தான் அசாத் காஷ்மீரை நம்மிடம் கொடுதுவிட்டால், நாம் கருத்துக்கணிப்பு நடத்திவிடுவோமா? வேறு எதாவது காரணம் சொல்லி தள்ளிப்போடுவோம். முடிவு நமக்கு சாதகமாக இருக்கோதோ என்ற பயம்தான் காரணம். If we were sure that plebiscite would be in our favour, it would have happened long back.

Muse (# 01429798200730556938) said...

காஷ்மீரில் இந்தியா கருத்துக்கணிப்பு நடத்தாதற்கு காரணம்

காஷ்மீரில் மட்டுமல்ல இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும்கூட இந்தியா கருத்துக்கணிப்பு நடத்தமுடியாது. அப்படி நடத்தினால் இந்தியா ஆயிரம் தனி நாடுகளாகப் பிளவுறும். ஏன் நானே, என் வீட்டைத் தனி நாடாக அறிவிக்கக்கோருவேன்.

வஜ்ரா said...

சுவாமி,

உங்கள் பதிலில் என்னை திகைப்படையச் செய்த விஷயம், அருந்ததி ராய் ஐ நவோம் சாம்ஸ்கி ரேஞ்சுக்கு ஏற்றியது தான்.

Chomsky is a thinker and i have no doubt. But, i cannot imagine a scenario where chomsky is equalent to the likes of Roy.

//
we need her kind of thinking.
//

Does she think in the first place?

//
she has one of the sharpest minds around .
//

Dont get decieved by word plays.


//
If we were sure that plebiscite would be in our favour, it would have happened long back.
//

I am not an expert in kashmir issue. I accept that it is widely percieved like that. But, there is no explanation for demographic change happening from day one.

Ethnic clensing of native kashmiris and filling up of Paki goons in the name of kashmiris have happened all the time. And Pakistan is occupying illegally part of Kashmir, God knows what happend there to native kashmiris and Hindus and buddhists.

Plebescite is not possible like this.

சுவாமி said...

ம்யூஸ்,

உண்மைதான். சும்மா இருக்கிற இடத்தில், சில பிரச்சினைகள் இருக்கிற இடத்தில், கருத்துகணிப்பு எடுத்தால் வம்பில்தான் முடியும். காஷ்மீர் இந்த மாதிரி வகைப்படித்த முடியாத ஒன்று. Sad state of affairs. வேறு என்ன சொல்வது?

திகைப்படைய என்ன இருக்கிறது, வஜ்ரா? இருவரும் எழுத்தாளர்கள். இருவரும் political activists. எழுத்தில் மட்டுமல்லாமல் செயலிலும் . இருவரும் anti- establishment. இருவருக்கும் intellectuals மத்தியிலும், media மத்தியிலும் பயங்கர ஆதரவு இல்லையேல் பயங்கர எதிர்ப்பு. இருவர் எழுத்திலும் தீய்க்க வைக்கும் சூடு, நியாயமோ இல்லையோ, எப்ப்பொதும் support to the underdogs. Chomsky அளவிற்க்கு ஏற்றவில்லை, ஆணால், ஒப்பிடுவதை தவிர்க்க முடியவில்லை. என்ன Chomsky சொல்வது எனக்கு intuitiveஆக ஒத்துப்போகிறது. அருந்ததி சொல்வது நிரடுகிறது. ஆனால், என்னால் உங்கள் அளவு அவரை கீழிறக்க முடியவில்லை.
காஷ்மீர் பற்றி கொஞ்சம் படித்திருக்கிறேன். சில discussion group பங்கெடுத்திருக்கிறேன். ஒரு காலத்தில் சபீர் சவுத்திரி போன்ற moderates உடன் பேசியிருக்கிறேன் (டோண்டு சாருக்கு நான் opposite. நேற்று நடந்தாலும் 'ஒரு காலத்தில்' தான்!). இருந்தும் அவ்வளவு புரியவில்லை. 1948ல் இருந்த அதே demographics இப்போது கொண்டு வந்தால் நாம் கருத்துகணிப்பு நடத்துவோமா? இது ஒரு game theory மாதிரி. இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர், மூன்றும், எப்போது கருத்துகணிப்பின் முடிவு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறதுவோ, அப்போது நடக்கும் plebiscite. அந்த 'அப்போது' நடைமுறையில் சாத்தியமாக தோண்றவில்லை. காஷ்மீர் சிதறி விட்ட தேங்காய் என்றே தோண்றுகிறது.

Muse (# 01429798200730556938) said...

Vajra Sir,

I feel that we have missed an important and more relevant aspect of the whole issue.

When objects like Ms. Rai does some funny stunts, why it is displayed on popular media?

If media just ignore these ignoramus, will other clowns get que from such inspirations?

When an environment is created, poisonous plants will breed.

கசி said...
This comment has been removed by a blog administrator.