April 29, 2006

மேதா பட்கர் உண்மையாகத் தான் போராடுகிறாரா?

சமீபத்தில் (नर्मदा बचाओ आनदोलन) நர்மதா பச்சாவ் ஆந்தோலன்என்ற அமைப்பு, சர்தார் சரோவர் அணைக்கட்டின் நீர்மட்டத்தை உயர்த்துவதை நிருத்தக்கூறி மேதா பட்கர் தலமையில் போரட்டம் நடத்தியது நினைவிருக்கலாம். அதில் மேதா பட்கர் சாகும் வரை உண்ணாவிரதம் எல்லாம் இருந்தார். அந்த போராட்டம் எதற்காக என்றால், நர்மதா நதியின் குருக்கே அமைந்த சர்தார் சரோவர் அணைக்கட்டின் நீர் மட்டம் உயர்த்தப் படுவதால் நீர் நிலை அருகிலுள்ள கிராமங்கள் மூள்கிவிடும் அபாயம் உள்ளது, ஆகயால் அந்த கிரமத்துவாசிகளுக்கு தகுந்த மாற்று ஏற்பாடு அரசு செய்யவேண்டும் என்ற கோரிக்கையினாலும், அதை அரசு செய்யத் தவரி வருகிறது, ஆகயால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு நடைபெரும் கட்டிட வேலைகளை நிறுத்தக் கோரியும், அணையின் நீர்மட்டம் உயருவதால் காடுகள் அழியும் அபாயம் உள்ளதாலும், என்ற கோரிக்கைகளை வலியுருத்தியே போராட்டம்.

மேதா பட்கர் கூறும் கருத்துக்களில் ஞாயம் இருப்பது உண்மையே, ஆனால், அவர் இந்த கோரிக்கைகளை வலியுருத்தித்தான் போராடுகிறார அல்லது, நாட்டின் முன்னேற்றதிற்கு முட்டுக்கட்டை போட நினைத்து ஒரு hidden agenda வுடன் போராடுகிறாரா?

சமீபத்தில் வெளியான செய்திகள் திகைப்பூட்டும் தகவல்களை அளித்துள்ளன,

தி பயனியர் (The Pioneer) ல் வெளியாகிருக்கும் செய்தி,

Patkar's people no saints, say 228 FIRs
Navin Upadhyay | New Delhi

Battered officials, labourers register their plight against NBA's bully boys and girls----- For an organisation that claims to spearhead a peaceful movement to help rehabilitate persons displaced by the Sardar Sarovar Project (SSP) on the Narmada river, the track record of the NBA is far from flattering.

In addition to a Gujarat High Court directive to the Centre seeking a ban on the NBA for running 'anti-national' activities to roadblock SSP, the Medha Patkar-led outfit is facing more than 200 criminal cases in Madhya Pradesh.

Police records reveal that in eight years, 228 FIRs were filed against the NBA activists for indulging in violent activities and terror tactics to stop the SSP construction.

The obstructive activities of the NBA are also part of the affidavit filed by the Madhya Pradesh Government in the Supreme Court, MP's vigilance department records and Devas police investigations. State Government officials lodged 52 FIRs alleging assault and obstruction at work by NBA activists.

The latest FIR lodged against NBA activists was on April 19, after the visit of the Central team led by Water Resources Minister Saifuddin Soz.

According to the FIR lodged at Dharampur under Dhar district, nearly two dozen activists invaded a rehabilitation centre, manhandled senior Government officials and pelted stones on the labourers.

Ten days before this incident, another FIR was filed against the activists on April 6 at Nisarpur in Dhar district in connection with the beating up of three senior Government officials who visited Bajrikheda village for survey work. NBA activists also shred their clothes.

Even as NBA leaders are beating their chests over the plight of the oustees, the FIRs shows that they made determined attempt to scuttle the rehabilitation exercise. In many cases, officials and workers of the rehabilitation centres were beaten, abused and terrorised. In other cases, Government officials were assaulted for supervising the SSP work and contractors met a similar fate.

Now, the National Council for Civil Liberties (NCCL), on the basis of whose petition the Gujarat HC had asked the Centre to ban the NBA, has approached Prime Minister Manmohan Singh to look into the grave charges of "criminal and seditious activities by the NBA."

In a letter to the Prime Minister on April 23, NCCL president VK Saxena has said that the NCCL fears that NBA is funded and supported by foreign institution to thwart the development in the Country.

Giving detail of the NBA activities, the NCCL has said that while Medha Patkar claims that her Andolan is non-violent, " the grassroot NBA is not only involved in violent activities but is also involved in gross human rights violation in Narmada Valley".

The NCCL letter further points out that though "Ms Patkar has claimed that the Govt. of Madhya Pradesh has failed to provide adequate rehabilitation package to the Project Affected People (PAPs), however we have proved that it is NBA, which is coming in the way of rehabilitation. Government officials engaged in the work of rehabilitation are mercilessly being beaten up by the activists and are prevented from conducting surveys of PAPs. NBA activists have banned entry of Govt. officials in several villages."

The letter also talks of the foreign funding of the NBA, a charge that also figured in Madhya Pradesh vigilance department and police reports.

The NCCL has also enclosed the Gujarat High Court order asking the Centre to consider ban on NBA under Unlawful Activities (Prevention) Act 1967.


Citing police and vigilance reports, the NCCL letter says that "documents established beyond doubt that NBA is merely a mask and the number of support groups working under its umbrella and foreign funds are channelised through these fictitious organisations to thwart the development in the country."





For any comments, queries or feedback, kindly mail us at feedback@dailypioneer.com or pioneerletters@yahoo.co.in


தமிழ்மணத்தில், மேதா பட்கர் ஐயும், அவரது போராட்டத்திற்கும் ஆதரவாக இருக்கும் பலர் உள்ளனர் என்பது தெர்திந்ததே. ஆனால், அவரின் NBA அமைப்பு வெளிநாட்டவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுகட்டை போடுகிறது என்பதை குஜராத் உயர் நீதிமன்றத்தில் சாட்சிகளுடன் நிரூபிக்கபட்டிருக்கிறது. இதற்கு அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? மேல் ஜாதிக்காரர்களின் சதியா?

இந்த நர்மதா பச்சாவ் ஆந்தோலனில், God of small things புகழ் அருந்ததி ராய் பங்கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர்.

April 27, 2006

சங் பரிவாரங்களும் இஸ்ரேலும்

இஸ்ரேலைப் பற்றி பல பேருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்றாலும், தெரிந்த சில பேரிடையே இரண்டே வகைக் கருத்துக்கள் தான் நிலவுகின்றது. ஒன்று, இஸ்ரேலைப் பரி பூரணமாக ஆதரிப்பதும், இரண்டு இஸ்ரேலை முழுமையாக எதிர்ப்பதும்.

  • இதில் இந்தியாவுக்கு எது நல்லது? ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
  • சங் பரிவாரங்கள் எதர்க்காக இஸ்ரேலை அதரிக்கவேண்டும் என்கின்றன?
  • இஸ்ரேலியர்கள் ஜாதீயக் கொள்கையய் கடைபிடிப்பவர்களா? ஆகயால் தான் சங் பரிவாரங்கள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனரா?
  • இந்திய முஸ்லீம்கள் இஸ்ரேலை எதிர்ப்பது ஏன்?


இப்படிப் பட்ட கேள்விகளுக்கு விடை தேடியே இந்தப் பதிவு.

இஸ்ரேலை எதிர்ப்பது ஏன்?


  1. இஸ்ரேலியர்கள், zionism கொள்கை கொண்டு, பாலஸ்தீன மக்களை அவர்கள் நாட்டிலிருந்து விரட்டிவிட்டு, அங்கு இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான நாட்டை அமத்துக்கொண்டனர்.
  2. இஸ்ரேலியர்கள், பாலஸ்தீன மக்களை, அவர்கள் சொந்த வீட்டிலிருந்து விரட்டி விட்டு, அவர்கள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர்.
  3. Zionism கொள்கை, யூத மதத்தில் பிறந்தவன் உயர்ந்தவன் என்ற ஜாதீயக் கொள்கை போல் இருபதினால். அதாவது யூதராக யாரும் மதம் மாற முடியாது, யூத மத்தில் பிரந்தாலொழிய.
  4. "சங் கூட்டத்தினருக்கு முஸ்லீம்களைக் கண்டால் ஆகாது; இஸ்ரேலுக்கும் ஆகாது; எனவே சங் கூட்டத்தினர் இஸ்ரேல் பக்கம்" என எண்ணத் தூண்டும். ஆனால் இந்த மதக் காரணத்திற்கும் அப்பாற்பட்ட காரணம் ஒன்று உண்டு. சங்கூட்டத்தினரில் பெரும்பாலான உறுப்பினர்கள் உயர்சாதியினைச் சேர்ந்தவர்கள். சங் எனும் அமைப்பு அவர்களது நலனுக்காக அவர்களாலேயே உருவாக்கப்பட்டது. அந்த உயர்சாதி கூட்டத்தினர் தங்களது சாதி முறை சித்தாந்தத்திற்கு ஆதரவாக, உலகில் உள்ள மற்றொரு சித்தாந்தமாகிய யூத சித்தாந்தத்தினைப் போற்றுகிறார்கள். யூத நம்பிக்கையிலும் பிறப்பால் வேறுபடுத்தும் சாதி முறை உள்ளது. அவர்கள் சாதியினை 'குடும்பங்கள்' எனும் பெயரில் அழைக்கிறார்கள். மேலும் ஒருவன் பிறப்பால் ஒருவன் யூதனாக யிருந்தால்தான் அவன் ஒரு யூதன். இது இங்குள்ள சாதிமுறையினை ஒத்த ஒரு அம்சம். எனவே யூதம் சாதி முறைக்கு ஆதரவு அளிப்பதால் அதனை போற்றும் உயர்சாதிக் காரர்களும் உண்டு. என்கிறார் இஸ்ரேலை எதிர்க்கும் மு. மாலிக் என்ற வலைபதிவாளர்.


இஸ்ரேலை ஏன் ஆதரிக்கவேண்டும்?

  1. அடாவடி இஸ்லாமியப் பக்கத்து நாடுகளான பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் தொழில் நுட்பம் கொண்டு அடக்காவிடில் இந்திய இறையாண்மைக்கு தீங்கு, அத்தகய தொழில் நுட்பம் இஸ்ரேலிடம் உள்ளது, அதன் காரணமாகத்தான் இஸ்ரேலை இந்திய நாட்டின் நலம் விரும்பிகள் ஆதரிக்கின்றனர். சங் பரிவாரங்கள் இஸ்ரேலை ஆதரிப்பதும் இதன் காரணமாகத்தான்.
  2. இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் என்றவுடன் பாலஸ்தீன மக்களை எதிர்க்கிறார்கள் இந்தியர்கள் என்பதெல்லாம் பொய், மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திர்க்கும் இடையில் அமைதி நிலவினால் இந்தியாவுக்கு என்ன தீங்கா?
  3. இஸ்ரேல் ஆதரவாளர்கள் அனைவரும் மேல் ஜாதிக்காரர்கள்! ஜாதீயக் கோட்பாட்டை யூத மதம் கொண்டுள்ள காரணத்தால் அவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் என்பதெல்லாம், அதீத கற்பனை (vivid imagination)!! யூத மதத்தைப் பற்றி இந்தியாவில் எத்தனை பேருக்கு உருப்படியாகத் தெரியும்!!?
  4. சங் பரிவாரங்கள் இஸ்லாமியருக்கு எதிரானவர் அல்லர். அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்தைத் தான் எதிர்கின்றனர். இஸ்லாத்தவர்களில் மிதவாதிகள் கூட இஸ்லாமியத் தீவிரவாதத்தை மரைமுகமாக ஆதரிப்பதால் தான் சங் பரிவாரங்கள் கொதிக்கின்றனர். அவர்கள் எதிர்க்கும் முறை வேறு.


இஸ்ரேலியர்கள் ஜாதீயக் கொள்கையய் கடைபிடிப்பவர்களா? ஆகயால் தான் சங் பரிவாரங்கள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனரா?


முற்றிலும் தவறு, சங் அமைப்புகளோ, யூதர்களோ, ஜாதீய கோட்பாட்டை கடைபிடிப்பவர்கள் அல்லர். மிசனரிக்களும், கம்மியூனிஸ்டுகளும், தேச விரேத இயக்கங்களும் செய்யும் பிரச்சாரம் அது. Zionism பற்றி அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் சொல்லும் பிரச்சாரம், Anti-semitic organizations களான Ku-Klux-Klan மற்றும், Neo-Nazi கள் செய்யும் பிரச்சாரம், யூதர்கள் பிரப்பால் உயர்ந்தவரகள் என்ற விஷயம்.

இதில் வேடிக்கை என்ன வென்றால், சங் பரிவாரங்களை எதிர்ப்பவர்களுக்கும், Zionism த்தையும் எதிர்ப்பவர்களுக்கும், அடிப்படையில் பல ஒற்றுமைகள் இருப்பது தான். அதை மரைக்க சங் பரிவாரங்களுக்கும், Zionism த்திற்கும் ஒற்றுமை இருப்பதாகக் கூறி எந்த விவாதத்தையும் திசை திருப்பிவிடுகின்றனர். சங் பரிவாரங்களுக்கும், Zionism த்திற்கும் ஒற்றுமை இருப்பது பற்றி சங் பரிவாரங்களுக்கே தெரியாத பல விஷயங்களை இவர்கள் "கண்டுபிடித்து"ச் சொல்வார்கள்.

இந்திய முஸ்லீம்கள் இஸ்ரேலை எதிர்ப்பது ஏன்?


பல இந்திய முஸ்லீம்கள், முஸ்லீம் என்ற காரணத்தைத் தவிர வேறு எந்த ஒரு காரணமும் இல்லாமல், இஸ்ரேலை எதிர்கின்றனர். இஸ்லாத்தில் யூதர்கள் பல தவறு செய்ததாகக் கூறப்படுவதும், அதை மசூதியில் இருந்து பிரச்சாரம் செய்யும் முல்லாக்கள் சாதரண முஸ்லீம்களிடம் சொல்லி யூத-வறுப்பை வளர்பதினால் தான் இந்திய முஸ்லீம்கள் யூத நாடான இஸ்ரேலை எதிர்க்கின்றனர். இதில் சற்றே மிதவாதிகள், பாலஸ்தீன நாட்டை யூதர்கள் ஆக்கிரமித்துவிட்டனர், அவர்களை விரட்டிவிட்டனர் என்று உலக நியாயம் கூறி இஸ்ரேலை எதிர்கின்றனர். இஸ்ரேலை எதிர்க்க வேண்டும் என்பதர்க்காக ஒரு காரணம் தேவை, அவ்வளவே, தவிர உண்மையாக இந்திய நாட்டின் நலன் பார்த்தால், அவ்வாறு அவர்கள் கூறுவதில் நியாயம் இல்லை.

அவ்வாறு உலக நியாயம் பேசுபவர்கள், கஷ்மீரிலிருந்து பண்டிதர்களை தீவிரவாதிகள் விரட்டிவிட்டபொழுது ஏன் வாயய் மூடிக் கிடந்தனர்? Kashmir mein rehna hai, tho Allah hu akbar kehna hai" (கஷ்மீரில் இருக்கவேண்டும் என்றால், அல்லாஹ் ஹு அக்பர் என்று சொல்லவேண்டும்!) என்று மசூதியில் ஆஸான் மூலமாக எண்பதுகளில் பிரச்சாரம் செய்து தீவிரவாதிகள் Ethnic clensing செய்யவில்லையா? இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம், அவர்கள் கூறும் "உலக நியாயம்" என்றால் என்ன என்ற Definition ல் வந்து இடிக்கும்!!

கடைசியாக நான் முதலில் கேட்ட கேள்விக்கு வருகிறேன்...

இதில் இந்தியாவுக்கு எது நல்லது? இஸ்ரேலை ஆதரிப்பதா? எதிர்ப்பதா?


என்னைப் பொருத்தவரை ஆதரிப்பதில் தான் இந்தியாவின் நலம் உள்ளது.

ஷங்கர்.

April 26, 2006

இஸ்ரேலுக்காக...! -2

இது முந்தய பதிவின் தொடர்ச்சியே...

Noam Chomsky, John Mearsheimer, மற்றும் Stephen Walt போன்றவர்கள், நடு நிலைக்கருத்து கூறுபவர்கள் என்ற பரவலான நம்பிக்கை இருந்து வருகிறது. அவரகள் உண்மையாகவே வெகுவாக சிந்தித்து ஒரு சில விஷயங்களில் நடு நிலைக் கருத்தை எட்டியிருக்கலாம், மறுப்பதற்கில்லை. ஆனால் பல இடங்களில், அவர்களின் கருத்து உண்மை நிலைக்கு ஒத்து வராத ஏட்டுச் சுரைக்காயாக இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

வெகுவாக, கூகிள் தேடல் எல்லாம் செய்து, பல லிங்குகள் எல்லாம் கொடுக்காமல், அவர் இதைச் சொன்னார், இவர் அதைச்சொன்னார் அதை நான் வளி மொழிகிறேன் என்றெல்லாம் என் வாதத்திற்கு வக்காலத்து தேடாமல் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

Chomsky ஒரு தலை சிறந்த சிந்தனையாளர் தான் மறுப்பதற்கில்லை. அவரது "liberal" சிந்தனைகள், neo-marxism போலத் தான் இருக்கிறது. Anti-globalization, Anti-americanism என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவரின் கூற்று, அமேரிக்கா தன் கொள்கைகளில் பாஸிச நாடாக மறிக் கொண்டிருப்பதாக எண்ணுகிறார். இதே கொள்கையய் கூறுபவர், Michael Moore.

இன்றய உலகில் அந்த கொள்கை சரியான சிந்தனையுள்ளவர்களுக்கு ஏற்புடயதாக இல்லை என்பதே உண்மை.

இஸ்ரேலுக்கு வரலாம்...

Chomsky ஒரு Anti-semite என்றெல்லாம் கூறி "பிரச்சார" விஷயத்திற்கு தீனி போடுவதற்க்கான பதிவு இது அல்ல.

மு. மாலிக் என்பவரின் வலைப் பதிவில், இஸ்ரேலின் லாபி என்று ஒரு பதிவு, அதில் நான் இட்ட பின்னூட்டத்திற்கு பதிலளிக்கும் பொருட்டு, மாலிக் அவர்கள், இந்த வாதத்தை வைத்திருந்தார்.

உலகில் உள்ள மற்றொரு சித்தாந்தமாகிய யூத சித்தாந்தத்தினைப் போற்றுகிறார்கள். யூத நம்பிக்கையிலும் பிறப்பால் வேறுபடுத்தும் சாதி முறை உள்ளது. அவர்கள் சாதியினை 'குடும்பங்கள்' எனும் பெயரில் அழைக்கிறார்கள். மேலும் ஒருவன் பிறப்பால் ஒருவன் யூதனாக யிருந்தால்தான் அவன் ஒரு யூதன். இது இங்குள்ள சாதிமுறையினை ஒத்த ஒரு அம்சம். எனவே யூதம் சாதி முறைக்கு ஆதரவு அளிப்பதால் அதனை போற்றும் உயர்சாதிக் காரர்களும் உண்டு.

இது முற்றிலும் உண்மையல்ல. நான் ஆறிந்த பலர், யூத மதத்திற்கு மதம் மாறி இருக்கின்றனர். அது, கிருத்துவம், இஸ்லாத்திற்கு மதம் மாறுவது போல் ஓவர் நைட் விஷயம் கிடையாது. யூத மத்திற்கு மாற வேண்டுமானால் பல யூத நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஹீப்ரு மொழி கற்றுக் கொள்ள வேண்டும் இன்னும் பல விஷயங்கள் (ஆண்/ பெண் வேறுபாடுகளுக்கு இணங்க) செய்ய வேண்டும். மற்றும் முக்கியமாக, வலுவான காரணம் இருக்க வேண்டும்.

ஆனால், சாதாரணமாக, மதம் மற்றுவது போல் எல்லோரிடமும் போய் யூத மத குருக்கள் மதம் மாறச் சொல்வது இல்லை, அத்தகய மத மற்றம் தவறு என்று எண்ணுபவர்கள் யூதர்கள். Proselytization is prohibited in Jewish religion.

மற்றும், ஏற்றத் தாழ்வுகள் எந்த மத்தில் தான் இல்லை. இஸ்லாத்தில் இல்லை என்று சொல்வீர்களேயானால், சற்று யோசியுங்கள். எனது முந்தய பதிவைப் பாருங்கள்.

ஷங்கர்.

இஸ்ரேலுக்காக...!

சமீபத்தில், மு. மாலிக் என்ற வலைபதிவாளர், இஸ்ரேலின் லாபி (கள்ளப் பரிந்துரைக் குழு) என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் அவர் கூரியுள்ள சில விஷயங்களும் அதற்கு என் பதிலும். ( நான் ஏற்கனவே அவரின் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளேன், அதையும் இந்தப் பதிவில் இணைக்கிறேன்)


ஏற்கனவே கள்ளத் தனமாக அணு ஆயுதம் செய்துவிட்ட இஸ்ரேலின் அணுத்திட்டத்தைப் பற்றிக் கண்டுக் கொள்ளாமலும், மற்ற நாடுகள் அதைப் பற்றி மூச்சுவிட்டால், தன் 'அழுத்தும்' தொழில்நுட்பத்தினைக் கொண்டு அவர்களை அடக்கியும் வருகிறது அமெரிக்கா.

ஈரானின் அனு அயுதம் பற்றிய அவரின் கருத்தும், இஸ்ரேலின் அனு ஆயுதம் பற்றிய அவரின் கருத்தும் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை. இஸ்ரேல் என்ன தான் சொன்னாலும் ஒரு Responsible democracy. ஈரான் அப்படியா? சும்மா ஒரு அனு ஆயுதமும் இல்லாமல், எந்த வித அச்சுருத்தலும் இஸ்ரேலிடமிருந்து இல்லை என்ற போதிலும், இஸ்ரேலை உலக மேப்பிலிருந்து அழிக்கவேண்டும் என்று கொக்கரித்தவர் ஈரான் முதல்வர் அஹமெதினிஜாத். அத்தகய irresponsible attitude கொண்டவர் அனு ஆயுதம் தாயாரிப்பது, உலகில் எந்த நாட்டிற்கும் நல்லதல்ல.

இஸ்ரேலைவிட இந்தியா ஈரானுக்கு வெகு அருகில் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். இன்று இஸ்ரேல் உலக மேப்பில் இருக்கக்கூடாது என்று கூறுபவர் நாளை இந்தியா இருக்கக்கூடாது என்று கூற மாட்டார் என்பது என்ன நிச்சயம்? இந்தியாவின் வெகு அருகில் இருக்கும் ஒரு volatile இஸ்லாமிய நாடு அனு ஆயுதம் தயாரித்து வைத்திருப்பது, இந்தியாவுக்கு நல்லதல்ல.


அதாவது உருவாக்கப்படும் இடத்திலுள்ள மற்றவர்களை விரட்டிவிட்டு, அயல்நாடுகளில் வாழ்பவற்களுக்காக நாடு உருவாக்குதல்தான் சியோனிசம்.


இதிலிருந்தே தெரிகிறது, உங்கள் zionism பற்றிய அடிப்படைகண்ணோட்டமே ஒரு பக்கச் சாய்வு உள்ளதாக இருக்கிறது.


ஆனால் தற்போதைய இஸ்ரேல் சார்பான வெளியுறவுக் கொள்கையால் அமெரிக்காவிற்கு இழப்புகளே அதிகம்; பொருளாதார-கொள்கை ரீதியான ஆதாயம் ஏதும் இல்லை; இருப்பினும், அது விடாப்பிடியாக, அதே வெளியுறவுக் கொள்கையினைக் கடைபிடிக்க காரணம், இஸ்ரேலின் கள்ளப் பரிந்துரைக் குழு (Lobby) -தான் என்பது அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியகளின் ஆய்வு முடிவு.

நீங்கள் கூறும், கள்ளாப் பரிந்துரைக்குழு எல்லாம், உங்களுக்கு பிடிக்காத zionism பற்றிய கருத்தாகவே இருக்கிறதே தவிர நடு நிலை என்பது, கிஞ்சித்தும் இல்லை. அமேரிக்கர்கள், நீங்கள் கூறுவது போல் ஒன்றும், ஒண்ணும் தெரியாத பாப்பாக்கள் அல்ல, அவர்களின், வெளியுறவுக் கொள்கை அவ்ர்களுக்கு நன்மை பயக்காவிடில், எதைபற்றியும் கவலைப் படாமல் மாற்றிவிடுவர். இது Republican அல்லது democratic எந்த கட்சி வந்தாலும் மாறாத கொள்கை.

If supporting Israel, protects american interests in Middle east, they do. And why not! Israel has the brain power to tackle all the surrounding hostile arab countries single handedly. Who will say no to such a strong ally? Only those who do not care for their own national interest will say so.

9/11க்கு பிறகு, இஸ்லாமியத்தீவிரவாதத்தால் பதிக்கப் பட்ட நாடுகள் அனைத்தும் ஒன்று திரள்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதில், இஸ்ரேல் இல்லாமல் போய் விடுமா....உலகிலேயே இஸ்லாமியத் தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப் பட்ட நாடு இஸ்ரேல் தான்.


இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டுமானால், ஐரோப்பிய நாடுகள், ஆரம்பக் காலங்களில், இஸ்ரேலின் நிலையை எதிர்த்தே வந்துள்ளன.



இது உண்மையாக இருக்க வாய்ப்புகள் மிகவும் கம்மி. ஏன் என்றால் இஸ்ரேல் உருவாக முக்கியக் காரணம், இங்கிலாந்து, மற்றும் ரஷ்யா போன்ற ஐரோப்பிய ஜாம்பவான்கள் தான். அவர்களின் state sponsered anti semitism த்திற்கு பரிகாரம் தேடினார்கள் போல...!


பிறகு இஸ்ரேல் அவர்களை அங்கிருந்து விரட்டி, பாலஸ்தீனர்களை காஸா நிலத் துண்டிற்குள்ளும், மேற்குக் கரைப் பகுதிக்குள்ளும் சென்று அடங்குமாறு செய்தனர்.

முற்றிலும் தவறு. பாலஸ்தீனர்களை யாரும் விரட்டவில்லை. இன்னும் பல நகரங்களில் அரபு மக்கள், அதாவது இஸ்ரேல் தோற்றத்திற்கு முன் குடி இருந்த மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால், மிகப் பெரும் பகுதி, un inhabited desert land தான். யூதர்கள் இங்கு வந்த பிறகு, செல்வம் கொழிக்க ஆரம்பித்தது, வியாபாரம் பெருகியது, இதை எல்லாம் பொருக்காத பக்கத்து அரபு நாடுகள் சும்மா இருந்த பாலஸ்தீனர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்தது. போதாத குறைக்கு அரபுகளின் Anti semitism மிகவும் மோசமானது. யூதனைப் பார்தால் கொண்ரு விடு என்று தான் சொல்வார்கள். ஒரே தந்தைக்குப் பிறந்த அண்ணன் தம்பிகள் தான் யூதர்களும், அரபிக்களும். அவர்களின் சண்டையில் இந்திய முஸ்லீம்கள், அரபு முஸ்லீம்களின் side எடுப்பது தான் வியப்பாக இருக்கிறது.

இந்திய முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்கும் எந்தவித முன் விரேதமோ, தர்ம யுத்தமோ கிடையாது. அரபு நாடுகள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திர்க்காக இந்திய முஸ்லீம்கள் அரபு நாடுகளின் பக்கம் சாய்ந்து விவாதிப்பதும், அதை நியாயப்படுத்துவதுமாக இருக்கின்றனர். இது எங்கு கொண்டு போய் விடும் என்று ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இந்த பின்னூட்டத்திர்க்குப் பிறகு அவர் பதில் பின்னூட்டம் ஒன்றும் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருக்கும் சில கருத்துக்களும், எனது பதில்களும்.


லாபி மட்டுமே காரணம்', என்று நான் வாதிட வில்லை. லாபி மட்டுமே காரணமாக இருக்கமுடியாது என்பதுவே பேராசிரியர் சாம்ஸ்கி அவர்களது வாதமும். அதனாலேயே நான் அவரது கட்டுரைக்கும் தொடுப்பு வழங்கியிருந்தேன்.


Fair enough!!



மேலும் ஒரு ஒத்த விஷயம். நம் நாட்டு வலதுசாரி/சங் கூட்டத்தினர் எப்போதும் இஸ்ரேல் ஆதரவாளர்களாக இருப்பார்கள். "சங் கூட்டத்தினருக்கு முஸ்லீம்களைக் கண்டால் ஆகாது; இஸ்ரேலுக்கும் ஆகாது; எனவே சங் கூட்டத்தினர் இஸ்ரேல் பக்கம்" என எண்ணத் தூண்டும். ஆனால் இந்த மதக் காரணத்திற்கும் அப்பாற்பட்ட காரணம் ஒன்று உண்டு. சங்கூட்டத்தினரில் பெரும்பாலான உறுப்பினர்கள் உயர்சாதியினைச் சேர்ந்தவர்கள். சங் எனும் அமைப்பு அவர்களது நலனுக்காக அவர்களாலேயே உருவாக்கப்பட்டது. அந்த உயர்சாதி கூட்டத்தினர் தங்களது சாதி முறை சித்தாந்தத்திற்கு ஆதரவாக, உலகில் உள்ள மற்றொரு சித்தாந்தமாகிய யூத சித்தாந்தத்தினைப் போற்றுகிறார்கள். யூத நம்பிக்கையிலும் பிறப்பால் வேறுபடுத்தும் சாதி முறை உள்ளது. அவர்கள் சாதியினை 'குடும்பங்கள்' எனும் பெயரில் அழைக்கிறார்கள். மேலும் ஒருவன் பிறப்பால் ஒருவன் யூதனாக யிருந்தால்தான் அவன் ஒரு யூதன். இது இங்குள்ள சாதிமுறையினை ஒத்த ஒரு அம்சம். எனவே யூதம் சாதி முறைக்கு ஆதரவு அளிப்பதால் அதனை போற்றும் உயர்சாதிக் காரர்களும் உண்டு.


இதுவுமே முற்றிலும் தவறு, சங் பரிவாரங்கள் பற்றி உங்களுக்குத் தெரியாது என்று சொல்லி முடித்துக் கொள்ளுங்கள், ஜாதியயை திணிக்காதீர்கள்.

இஸ்ரேல் ஆதரவாளர்கள் அனைவரும் மேல் ஜாதிக்காரர்கள்! ஜாதீயக் கோட்பாட்டை யூத மதம் கொண்டுள்ள காரணத்தால் அவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் என்பதெல்லாம், அதீத கற்பனை (vivid imagination)!! யூத மதத்தைப் பற்றி இந்தியாவில் எத்தனை பேருக்கு உருப்படியாகத் தெரியும்!!? நான் இஸ்ரேலுக்கு வரும் முன்னர் anti semitism பற்றி கேள்விப் பட்டது கூடக் கிடையாது.!!

அடாவடி இஸ்லாமியப் பக்கத்து நாடுகளான பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் தொழில் நுட்பம் கொண்டு அடக்காவிடில் இந்திய இறையாண்மைக்கு தீங்கு, என்ற கருத்தில் உங்களுக்கு மற்று கருத்து இருக்காது என்று நம்புகிறேன். அத்தகய தொழில் நுட்பம் இஸ்ரேலிடம் உள்ளது, அதன் காரணமாகத்தான் இஸ்ரேலை இந்திய நாட்டின் நலம் விரும்பிகள் ஆதரிக்கின்றனர். சங் பரிவாரங்கள் இஸ்ரேலை ஆதரிப்பதும் இதன் காரணமாகத்தான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.


முஸ்லீம் எனும் காரணத்தினால்தான் நான் இஸ்ரேலை எதிர்க்கிறேன் என்று இனிமேலாவது கொள்ளவேண்டாம். அந்த காரணத்திற்காக மட்டுமே இஸ்ரேலை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் மறுப்பதற்கில்லை. நான் எதிர்ப்பது நியாமான காரணத்திற்காகவே.


நீங்கள் கூறும் நியாயத்தில் நீங்கள் பிறந்த தாய் நாட்டின் நலம் இல்லை என்பது என் கருத்து. (மதத்தை இழுத்தது என் தவறு தான்!! ஒத்துக்கொள்கிறேன், ஆனால் அதன் காரணமாகவே இஸ்ரேலை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்று நீங்களும் ஆமோதித்திருக்கிறீர்கள்.)

இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் என்றவுடன் பாலஸ்தீன மக்களை எதிர்க்கிறார்கள் இந்தியர்கள் என்பதெல்லாம் பொய், மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திர்க்கும் இடையில் அமைதி நிலவினால் இந்தியாவுக்கு என்ன தீங்கா?


நான் மேற்கோள் காட்டிய அனைவரும் எனது நிலையினைக் கொண்டவர்கள்தான். முஸ்லீம்கள் மட்டும்தான் இஸ்ரேலினைக் கண்டிப்பார்கள் என்று இல்லை. நான் மேற்கோள் காட்டியவர்களில் எட்வர்டு செய்த் ஒரு பாலஸ்தீன கிறிஸ்தவர் ஆவார். நோம் சாம்ஸ்கியும், நார்மன் ஃபிங்கில்ஸ்டீனும் யூதர்கள் ஆவார்கள். நான் பரிந்துரைத்த கட்டுரையை எழுதியவரான ஜான் மியர்ஷைமர் ஒரு யூதராவார். இப்பிரச்சனையில் எனக்கு மதம் முக்கியமில்லை என்றாலும், அறிவுஜீவிகளின் மதத்தினைப் பற்றி இங்கு பேசுவது, நீங்கள் இது பற்றி பிரச்சனை எழுப்பியதாலேயே.


இவர்கள் எல்லாம் இடது சாரிச் சிந்தனையாளர்கள் என்று ஒரே brush யினால் பெயிண்ட் அடித்துத் தள்ளி விடமுடியும். ஆனால், நீங்கள் கொடுத்துள்ள லிங்குகளை படித்த பிறகு பதில் இடுகிறேன். தேவைப்பட்டால், தனிப் பதிவு போடுகிறேன். அதற்கு முன் ஒன்று கூறிக் கொள்கிறேன். இடது சாரிச் சிந்தனைகளில் anti-semitism இருப்பதாகவே கருதப்படுகிறது.

April 22, 2006

இஸ்ரேலில் கிரிக்கெட்


இஸ்ரேலில் கிரிக்கெட் ஆடுபவர்கள் யார் என்று பார்தால், இந்தியர்களைய்த் தவிர வேறு யாரும் தென்படமாட்டார்கள். டெல் அவீவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வேலைபார்பவர்களுடன், இங்கு வந்து படிக்கும் மாணவர்ப் படை அடிக்கடி நட்புறவு ஆட்டம் (friendly match) ஆடுவது வழக்கம். அத்தகய ஆட்டத்தில் எடுத்த படத்தைத்தான் இங்கு இணைத்துள்ளேன்.

இஸ்ரேலும் ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த நாடு என்றாலும், இங்கு கிரிக்கெட்டில் மக்களுக்கு ஆர்வம் கிடையாது. இஸ்ரேல் தேசிய கிரிக்கெட் டீம் ஒன்று இருக்கிறது, அதில் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த யூதர்கள், மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தவர்கள் தான் இருக்கிறார்கள். கால்பந்து கூடைப் பந்து ஆட்டம் தான் இங்கு மிகப் பிரசித்தி, Macabee TelAviv என்ற கூடைப்பந்து கழகம் தான் இப்போது ஐரோப்பாவிலேயே சிறந்த டீம்.

முஸ்லீம் ஜாதிகள்...!!

எவரேனும், இந்திய மற்றும் பாகிஸ்தானில் வாழும் முஸ்லீம்களில் ஜாதி வேற்றுமை இல்லை என்று கூறினால், அவர்கள் தயவு செய்து அவர்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

உ. பி யில் உள்ள மேல் ஜாதி மற்றூம் கீழ் ஜாதி முஸ்லீம்களின் சண்டையய்ப் பற்றிய கட்டுரையய்ப் படிக்க A different jihad, Dalit muslims' challenge to Ashraf Hegemony சுட்டவும்.



"மேல் ஜாதி முஸ்லீம்களான குரேஷி, அன்சாரி, சைபி, ரங்கரேஸ், பிஷ்டிக்கள், 1990 வரை, அஷ்ரப் ஜாதி முஸ்லீம்களை தேர்தலில் நிருத்துவர். அனைத்து முஸ்லீம்களும் அவருக்கே வொட்டளிப்பர். 90 க்குப் பிறகு மண்டல் கமிஷனின் பரிந்துரையினால் OBC க்கள் மேலே வர அரம்பிக்க, கீழ் ஜாதி முஸ்லீம்கள் தங்கள் ஜாதியிலிருந்து ஆட்களைத் தேர்தலில் நிருத்தி மேல் ஜாதியினரிடம் வோட்டுப் போடச் சொல்ல, அது வரை முஸ்லீம்கள் வெறறிபெற்றுக்கொண்டுதிருந்த தொகுதியில் BJP ஜெயிக்க ஆரம்பித்து விட்டது."

யூதர்களின் நம்பிக்கை -2


அனைத்து semitic மதம் போன்றதே யூத மதமும். சொல்லப் போனால், யூத மதம், கிருத்துவம், மற்றும் இஸ்லாமுக்கு தாய் மதம். யூத மத்த்தில் உள்ள மிக முக்கியமான நம்பிக்கை, நபித்துவக் கோட்பாடு அதாவது prophetism. அவர்களது நம்பிக்கையில், ஒரு prophet அல்லது நபி பிறந்துவந்து, இஸ்ரேலியர்களை, இஸ்ரேல் என்ற நாட்டை அமைத்து, இடிந்துபோன கோவிலை மறுபடியும் கட்டுவார் என்பது.

நபிகள் இல்லாமலேயே இஸ்ரேல் பிறந்து இன்று ஒரு மிகச் சிறந்த நாடாக விழங்கிக் கொண்டு இருக்கிறது என்பது வேறு கதை.

இந்த நபித்துவக் கோட்பாட்டை மிக வன்மையாக நம்பும் கூட்டம் "hassidic" எனப்படும், யூத உட் பிறிவினையய்ச் சேர்ந்தவர்கள். இவர்களைக் கண்டு பிடிப்பது மிகவும் எளிது. விரிவான உரோமங்களான தொப்பி, கருப்பு அங்கி, கிருதா இருக்கும் இடத்தில் சுருள் முடி என்று ஆட்களே வித்தியாசமாக தோற்றமளிப்பர். நாற்பது டிகிறி வெயில் அடித்தாலும், கருப்பு கோட்டு தான். இவர்கள், மற்ற இஸ்ரேலியர்களைப் போல் compulsary army service செய்யத்தேவை இல்லை, அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளில் இதுவும் ஒன்று.

இவர்கள், இஸ்ரேலிய தேசிய மொழியான ஹீப்ரூ (hebrew) பேச மாட்டார்கள். ஏன் என்றால், ஹீப்ரூ தேவ பாஷை, அதை சாதாரண சம்பாஷணைக்கு பயன் படுத்தக் கூடாது என்பது, இவர்களது நம்பிக்கை. ஆகயால், yiddish எனப்படும், ஜெர்மானிய மொழியுடன் கலந்த ஒரு வகையான ஹீப்ரூ தான் அவர்கள் பேசும் தாய் மொழி. இதற்காக, yiddish நாளிதள்கள் முதற்கொண்டு, நாவல்கள் வரை அனைத்தும் கிடைக்கும்.

வினோதமாக, இஸ்ரேல் தோன்ற பல வகையான எதிர்ப்புகளில் ஹஸ்ஸீடிக் உட்பிறிவு மக்கள் அதிகம் பங்கேற்றனர். காரணம் என்னவென்றால், ஒரு நபி வந்து அமைக்க வேண்டிய நாட்டை, zionists அமைப்பதனால் தான் இந்த எதிர்ப்பு என்றனர். (சர்குண விக்ருதி என்றால் இது தானோ!!). இன்றும், பல hassidic hardliner கள், பல அரபு நாடுகளைப் போல் இஸ்ரேலின் இருப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். (they do not recognize state of israel!!)

இஸ்ரேல் என்ற நாடு உருவாகாமல் இருந்திருந்தால், ஹஸ்ஸீடிக் மக்கள் எல்லாம், போலாந்திலோ, ரஷியாவிலோ anti-semitism காரணமாக் அழிந்தே போயிருப்பர்.

இவர்களாய்ப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த விக்கிபீடியா சுட்டி யய் க்ளிக் செய்யவும்.

எல்லா மதங்களைப் போலத்தான் யூத மதமும், பல உட்பிறிவுகளைக் கொண்டது. எல்லா ஹஸ்ஸீடிக் மக்களும் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் அல்ல. அவர்களுக்குள் வேற்றுமை. ஆனால் ஒன்று, இப்படி பற்பல வேறுபாடுகளும், முறன்பாடுகளும், இருந்தும், இவர்களை எல்லாம் அணைத்துக் கொண்டு முன்னேருகிறது, யூத மதம். இந்து மதம் போல் வேற்றூமைகளை அதிகம் பொருட்படுத்தாமல், ஒற்றுமைகளை மட்டும் பார்க்க இவர்கள் இப்பொழுது தான் கற்றுக் கொண்டு வருகின்றனர் என்பது நான் கண்ட உண்மை. கூடிய விரைவில் "ஏகம் சத், விப்ர பஹுத வதாந்தி" என்ற 5000 ஆண்டு, உபணிடத உண்மையய் சீக்கிரமே உணருவார்கள் என்று நம்புகிறேன்.

April 21, 2006

யூதர்களின் நம்பிக்கை!


கடந்த சில வருடங்களாக, நான் இஸ்ரேலில் வாழ்ந்து வருகிறேன், யூதர்களின் நம்பிக்கை பற்றி நான் கண்ட சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

யூதர்கள் யார், அவர்கள் எங்கு இருந்து வந்தவர்கள் போன்ற அனைவருக்கும் தெரிந்த உண்மைகளைப் பற்றி எழுதி பக்கத்தை நிரப்பாமல், நேராக யூத தெய்வ நம்பிக்கை பற்றி எழுதுகிறேன். படத்தில் பார்க்கும் பெட்டி தான் ark of the covenant. இதை தான் பல காலம் யூதர்கள் தங்கள் கோவிலில் வைத்து கும்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த பெட்டிக்குள் என்ன தான் இருந்தது என்று யோசிப்பவர்களுக்கு Indiana jones and the lost ark என்ற spielberg திரைப்படம் பார்த்து வியந்து கொள்ளுங்கள். பைபிள் மற்றும் டோரா (torah) எனப்படும் பழய ஏற்பாடு, அந்தப் பெட்டிக்குள் ஜெஹோவா (யூதக் கடவுளின் பெயர்), யூத மக்களுக்கு எகிப்திலிருந்து வெளியேரும் போது அளித்த ஓப்பந்தம் (covenant) கல் வெட்டாக செதுக்கப்பட்டு வைக்கப் பட்டுள்ளது என்கிறது.

கோவிலும் அழிந்தது, யூதர்கள், பரதேசிகளாக ஐரோப்பா, மற்றும் பல நாடுகளுக்கு அடிமைகளாகவும் சென்றனர். 2000 ஆண்டுகள் சென்றது. இன்று, படத்தில் பார்கும் இந்த கோவிலின் மேற்கு அடிச்சுவர்தான் மிஞ்சியிருக்கும் பகுதி. இதில் இன்னும் புனித்துவம் மிஞ்சி இருப்பதாக யூதர்கள் நம்புகின்றனர். (இந்தச் சுவற்றை கோட்டெல் kotel என்கின்றனர்)

இந்த 2000 ஆண்டுகளில், அவர்கள் கோவில் இல்லாததனால், வழிபாட்டு முறைகள் வெகுவாக மாறிவிட்டன, ஆனால் நம்பிக்கை கிஞ்சித்தும் மாறவில்லை. இப்பொழுதெல்லாம், 2000 ஆண்டுகளுக்கு முன்பு போல், பலி கொடுத்து, கோவிலில் வழிபடும் முறை மாறி, தெய்வத்தை மனதில் நிருத்திக் கொண்டு, பழயக் ஏற்பட்டில் குறிப்பிட்டுள்ள சில வரிகளைப் கோவிலின் மேற்குச்சுவர் நோக்கித் திரும்பி நின்றுகொண்டு படிப்பது தான்.

சில நாட்கள் முன்பு என் நண்பன் யாகோவ் (ஜேகப்) வுடன் ஜெரூசேலம் சென்றிருந்தேன். அங்கு அவர், ஒரு Rabbi (யூத மத குரு) யிடம் மாட்டிக் கொண்டார். அங்கு அந்த rabbi "this is a jewish obligation, every jew must perform" என்று சொல்லி, யாகோவின் கையிலும் தலையிலும், தோலினால் ஆன வார் ஒன்றை கட்டிவிட்டார்.
உன்னித்துப் பார்ததில் அந்த வாரின் ஒரு முனையில், பெட்டி போன்ற ஒன்று இருந்தது தெரிந்தது. பார்க்க படம். அந்த பெட்டிக்குள் என்ன இருக்கிறது, இதை ஏன் இவன் கையிலும், தலையிலும் கட்டிவிட்டீர்கள் என்று அந்த rabbiயிடம் கேட்டதில், அந்த சிறிய பெட்டிக்குள் இருப்பது, பழய கோட்பட்டின் சில வரிகள் பதித்த துண்டுச் சீட்டே என்றும், அதில் கூறப் பட்டுள்ள வரிகள்,

"நான், உங்களது கடவுளான ஜெஹோவா உங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இஸ்ரேல் என்ற நாட்டை அளிக்கிறேன், இதன் நன்றிக் கடனாக, நீங்களும், உங்கள் சந்ததியினரும் என்னைத் தொழுவீர்கள்"

போன்ற கடவுளின் நேரடி வார்தைகள் என்று அந்த rabbi விளக்கமளித்தார்.

இதைக் கடவுள்தான் சொன்னாரா என்பதைப் பற்றியெல்லாம் விவாதிக்காமல், ஜெரூசேலத்தில் மற்ற இடங்களைப் பார்க்கச் சென்றுவிட்டேன்.



இன்று ஜெரூசேலத்தில் யூதர்கள் கோவில் இருந்த பகுதி, dome of rock எனப்படும், மசூதி தான் இருக்கிறது. இதற்குள் செல்ல முஸ்லிம்களைத்தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. வெள்ளிக் கிழமைகளில் (ஜும்மா) பக்கத்தில் கூட செல்ல அனுமதி இல்லை (முஸ்லீம் அல்லாதவர்க்கு). இந்த மசூதியய்ப் பற்றி வரும் நாட்களில்...

அதுவரை, நன்றி

ஷங்கர்.

போலி டோண்டுவும் இஸ்ரேலும்...

சமீபத்தில், கால்கரி சிவா அவர்களின் ஜாதிகளை ஒழிக்க எளிய வழிமுறை என்ற பதிவில் போலி டோண்டு அவர்கள் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார்.

அதில், டோண்டு (உண்மையான டோண்டு) அவர்கள் தன் ஜாதியை பரப்புவது தான் தன் முதன்மையான நோக்கம் போல் வலைப்பூவில் எழுதி வருவதாக டூப்ளிகேட் டோண்டு கருதுவதாகவும், அதனால் அவரை தரக்குறைவாக பேசியது நியாயம் போல் எழுதி இருந்தார். இது டோண்டுவுக்கும், டூப்ளிகேட்டுக்கும் உள்ள பிரச்சனை. நான் உண்மையான டோண்டு அவர்களின் அனைத்து பதிவுகளையும் படித்தேன். ஒரு சில பதிவுகளில் அவர் தன் ஜாதியய் குறிப்பிட்டிருப்பது உண்மை. ஆனால் அதைக் கேட்டதினால் தான் குறிப்பிட்டுள்ளேன் என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.

அதில் இன்னோன்றும் டூப்ளிகேட் அவர்கள் எழுதி இருந்தார், அது, பார்பானர்கள் (பிராமணர்கள்) இஸ்ரேலை அதரிப்பது பற்றியது.

முதலில் டூப்ளிகேட்டுக்கு எத்தனை பிராமணர்களைத் தெரியும்? அதில் எத்தனை பேர் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள்?

இரண்டாவது, இஸ்ரேலை அதரிப்பதில்தான் இந்தியாவின் நலம் உள்ளது. அது இந்தியாவை ஆளும் அரசியல்வாதிகளுக்கும், IAS அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். டூப்ளிகேட்டிடம் யாரும் idea கேட்கவில்லை (அது தான் இஸ்ரேல் ஆதரவாளர்களிடம் அவருக்கு கோபம் போலும்!!).

இஸ்ரேலை ஆதரிப்பது என்றவுடன் பாலஸ்தீனத்தை எதிர்ப்பது ஆகாது. மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட்டால் இந்தியாவுக்கு என்ன தீங்கா?

உலகிலேயே தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப் பட்ட நாடு இஸ்ரேல், இஸ்லாமியத் தீவிரவாததிற்கு பதிலுக்கு பதில் "ஆப்பு" அடிக்கும் நாடு இஸ்ரேல், இஸ்ரேலை இந்தியா ஆதரிப்பது, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அடாவடி இஸ்லாமிய நாடுகளை அடக்கும் தொழில்னுட்பத்திற்கு தான். இதில் நிச்சயம் இந்தியாவின் நலம் உள்ளது என்பதற்கு டூப்ளிகேட்டுக்கு மற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.

அடுத்ததாக டூப்ளிகேட் அவர்கள், அறிவியலாளர்களாலேயே தூக்கி எரியப்பட்ட "race theory" யின் அடிப்படையிலான ஆரிய படை எடுப்புக் கோட்பாட்டினை தெய்வ வாக்கு போல் நம்புகிறார். எதற்கெடுத்தாலும் "பார்பானர்கள், வந்தேரி ஆரியர்கள்" என்று சாடுகிறார். அவரின் அனைத்துப் பதிவுகளிலும் இந்த வெறுப்பை உமிழ்ந்திருப்பார். கால்கரி சிவாவின் பதிவில் பதித்த பின்னூட்டமும் அதற்கு விதி விலக்கு அல்ல. ஆரியப் படை எடுப்புக் கோட்பாட்டினை சுத்தமாக உடைத்தெரியும் பொறுட்டு அறிவியல் பூர்வமாக தனி பதிவு கூடிய விரைவில் போடுகிறேன்.

அதுவரை நன்றி,

ஷங்கர்.