February 13, 2007

அறிமுகம் - ஹோலோகாஸ்ட் மறுப்பு

ஹோலோகாஸ்ட் மறுப்பு என்பது தமிழ் பதிவு உலகிற்கு இப்போது புதிய பரிணாமத்தில் அறிமுகமாகிவருகிறது. அதன் தோன்றலிலிருந்து பல பரிணாம வளர்ச்சிகள் பெற்று இப்போது அது mainstream ஊடகங்களில் அந்தஸ்துள்ள ஒரு மாற்றுக் கருத்தாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் உலவிக் கொண்டிருக்கிறது. தமிழில் நண்பன் என்பவர் பதிவைப் பார்த்துவிட்டு இதை எழுதுகிறேன்.

ஹோலோகாஸ்ட் மறுப்பாளர்களுக்கு பதில் சொல்லி புரியவைப்பது என்பது நாய் வாலை நிமிர்த்துவதற்குச் சமம். எந்த விதமான சான்றுகள் கொடுத்தாலும், ஆணித்தரமான வாதங்கள் வைத்தாலும், சித்தாந்தப் பித்துத் தலைக்கேறி தெளியாத கேசுகள் போல் வாதத்தையும் சான்றுகளையும் ஏற்க மறுப்பார்கள்.

ஹோலகாஸ்ட் என்பது இவ்வளவு கொடூரமான முறையில் நடந்ததா ? என்றால் ஆம், அது அப்படித்தான் நடந்தது, அவர்கள் எவ்வாறு சொல்கிறார்களோ அப்படியே நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆறு மில்லியன் உயிர்கள் பலி வாங்கிய ஒரு முட்டாள், சோசியலிச பித்துப் பிடித்த சர்வாதிகாரி, கொண்ட கொளகையாம் நாஜிக் கொள்கை, அவன் இறந்த பிறகு புதிய பரிணாமத்தில் neo-nazism என்று சொல்லப்பட்டு சில ஐரோப்பா நாடுகளிலும் பெரும்பான்மை இஸ்லாமிய நாடுகளிலும் படு தீவிரப் பிரச்சாரம் செய்யப் பட்டு கடைபிடிக்கப் படுகின்றது. ஐரோப்பிய கூட்டு நாடுகளில் சட்டப்படி தடை செய்யப் பட்டது இந்த புதிய நாஜிக் கொள்கையும் (neo-nazism) மற்றும் அதன் வளர்ப்பு மகனான ஹோலோகாஸ்ட் மறுப்பும்.

இப்போதுள்ள ஹோலோகாஸ்ட் மறுப்பாளர்கள், யாரெல்லாம் ஹோலோகாஸ்ட் மறுப்புக் கொள்கையை கேள்வி கேட்கிறார்களோ அவர்களையெல்லாம் அமேரிக்க, இஸ்ரேலிய கூலிப் படை, அறிவிலிகள், அறிவியல் கண்ணோட்டத்தில் நோக்கத் தெரியாத, சான்றுகளை சரியான முறையில் பகுத்தறியத் தெரியாத/விரும்பாதவர்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டும் ஞாயமற்ற வெத்து வேட்டு வாதம்.

ஹோலோகாஸ்ட் நடந்ததற்கான சான்றுகள் கண்ணால் கண்ட சாட்சிகள், நாஜிக்களின் பல அரசு ஆணைகள், ஹிட்லரின் கட்டளைகள், வீடியோக்கள், புகைப்படங்கள் என்று நிரூபிக்கப் பட்டுவிட்ட உண்மை. அதில் எவ்வளவு உண்மை என்பதைத்தான் கேட்கிறோம் என்றால் அது அத்தனையும் உண்மை. அதில் பொய் இல்லை.

இதில் எவ்வளவு உண்மை என்பதைப் பகுத்தறிந்து பார்த்து உண்மையை பதிவு செய்து, யாத் வெ ஷெம் என்ற மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள். உலகெங்கும் ஆங்காங்கே ஹோலோகாஸ்ட் மெமோரியல் என்று நினைவுச் சின்னத்தையும் வைத்திருக்கிறார்கள். ஹோலோகாஸ்ட் மாயை என்றால் அந்த "உண்மைகளை" தொகுத்து வழங்கவேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. சும்மா, தர்கவாதம் மூலம் ஞாயப் படுத்திவிடலாம் என்று எண்ணுவது குள்ள நரித்தனம்.

ஹோலோகாஸ்ட் மறுப்பு/மறுபரிசீலணையைத் தமிழ் வலைப்பதிவில் பார்க்கையில், டெபோரா லிப்ஸ்டாட் (deborah lipstadt) என்பவர் சொன்னது தான் நினைவுக்கு வந்தது,


We need not waste time or effort answering the deniers' contentions. It would be never-ending to respond to arguments posed by those who freely falsify findings, quote out of context and simply dismiss reams of testimony. Unlike true scholars, they have little, if any, respect for data or evidence. Their commitment is to an ideology and their 'findings' are shaped to support it



இந்த ஹோலோகாஸ்ட் மறுப்பாளர்கள் பற்றிய விக்கி சுட்டி

ஹோலோகாஸ்ட் மறுப்பு என்பது என் பார்வையில் குப்பைத் தொட்டியில் இருக்கவேண்டிய கண்ணோட்டம், வலைப்பதிவில் எழுதி அழகு பார்க்க வேண்டியது அல்ல.

19 comments:

மாசிலா said...

கொஞ்சமும் தேவையே இல்லாத பதிவு!

வஜ்ரா said...

நண்பனின் ஹோலோகாஸ்ட் மறுப்புப் பதிவையும் தானே சொல்கிறீர் மாசிலா ?

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Today the holocaust deniers come in many forms - president of Iran,
muslim fundamentalists.The left in India will not protest their attempts to deny holocaust but will
cry that RSS is doctroring history.
See my comments in Thiru's blog.

வஜ்ரா said...

What a plesant surprise mr. ravi srinivas. I am amazed to see that you agree with me.

I am just telling that Holocaust denial does not deserve any right to be on mainstream media. Not in tamil blogsphere which is evolving quite well into a good and truly liberal media. (its only my personal feeling).

dondu(#11168674346665545885) said...

எழுபதுகளில் இர்விங் என்ற பிரிட்டிஷ் சரித்திர ஆய்வாளர் ஹிட்லருக்கு தெரியாமல் எல்லாம் நடந்து விட்டன என்று ஒரு அழுகினி வாதத்தை வைத்தார். சீறி எழுந்தது ஷ்பீகல் என்னும் ஜெர்மானிய பத்திரிகை. ஹிட்லருக்கு எல்லாம் தெரிந்துதான் நடந்தன என்பதை ஜெர்மானிய பொறுமையுடன் சுட்டிகள் காட்டி அசத்தினர்.

ஈரான் ஜனாதிபதி போன்ற அசத்து கோமாளிகளையெல்லாம் மனிதரிலேயே சேர்க்கக் கூடாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

ஈரான் கோமாளி மட்டுமா ?

இன்னும் எத்தனை பேர் இன்னும் அப்படி நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இஸ்லாமிய வலைத்தளங்களுக்குச் சென்று பார்த்தாலே தெரியும்.

தமிழ் வலையுலகில் இது போன்ற தொரு கருத்துக்கு முக்கியத்துவம் தருவது மனித குலத்திற்கே தமிழ் கூறும் நல்லுலகு செய்யும் அவமானம்.

வஜ்ரா said...

நண்பன் இந்த ஹோலோகாஸ்டையே குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்று பதிவு போட்டு இந்த ஹோலோகாஸ்டை மறுபரிசீலணைக்கு உட்படுத்த வேண்டுகிறார்.

என்னைப் பொருத்தவரை, அவர் பதில் சொல்லவேண்டிய கேள்வி ஒன்றை ஒரு அனானி கேட்டு அது அப்படியே இருக்கிறது, அது ஹோலோகாஸ்ட் நடந்து அதில் ஆறு மில்லியன் (யூத) மனித உயிர்கள் பலியானதாகக் கூறப்படுவதை அவர் ஏற்கிறாரா ? என்பது தான்.

ஆம் என்றால் மறு பேச்சு, இல்லை என்றால் மறு பேச்சில்லை.

நடுவில் சென்று இல்லை, அதைத் தான் ஆராய்ச்சி செய்யனும் என்பது என்று ஜல்லியடிப்புகள் இருக்கக் கூடாது.

அதனை வைத்து யூத நாடு பாலஸ்தீனியர்களை துன்புருத்துகிறது என்பதெல்லாம் அடுத்த கட்ட பேச்சு.

இதற்கெல்லாம் பதிவு போட்டு ஹோலோகாஸ்ட் மறுப்பை இன்னும் வலைப்பதிவில் எழுதி அழகு பார்க்க நான் விரும்பாததால் என் பதிவிலேயே கேள்வியாக இந்தப் பின்னூட்டம் போட்டுவிடுகிறேன்.

ஜடாயு said...

வஜ்ரா,

// ஹோலோகாஸ்ட் மறுப்பு என்பது என் பார்வையில் குப்பைத் தொட்டியில் இருக்கவேண்டிய கண்ணோட்டம், வலைப்பதிவில் எழுதி அழகு பார்க்க வேண்டியது அல்ல. //

நன்று சொன்னீர்கள்!

கடந்த சில வருடங்களாக நம் கண் முன்னால் நம் நாட்டில் நடந்து வரும் கொலைவெறி பிடித்த ஜிகாதிய தீவிரவாதச் செயல்களையே இதெல்லாம் ஏதோ எதேச்சையாக நடக்கிறது என்பது மாதிரி கதைகட்டும் ஆட்கள் இவர்கள். யூதப் படுகொலை பற்றிப் பொய்கள் புனைந்துரைக்கக் கேட்க வேண்டுமா என்ன?

இதை விடுங்கள். நம் நாட்டில் நூற்றாண்டுகளாக கொலைவெறி பிடித்த இஸ்லாமிய அரசுகள் நடத்திய ஹோலோகோஸ்ட் கொஞ்சமா நஞ்சமா? அதை அப்படியே திட்டமிட்டு மறைக்கும் ஒரு போலி வரலாற்றுக் கூட்டம் இங்கே இருக்கிறதே!

உலகின் "மிகப் பெரிய ஹோலோகாஸ்ட்" என்றூ இஸ்லாமின் இந்திய ஆக்கிரமிப்பை வரலாற்று அறிஞர் வில் டுரான்ட் அழைத்தார். கூகிளில் "Biggest Holocaust" என்று தேடல் இட்டு என்ன வருகிறது என்று பார்க்கவும்!

நம் மூதாதையர்களைக் கொன்று குவித்த இந்த ஹோலோகாஸ்ட் பற்றி முதலில் நம் மக்களுக்கு நாம் அறிவுறுத்தியாக வேண்டும்:

http://hinduholocaust.blogspot.com/

வில் டுரான்ட் தனது “நாகரீகங்களின் வரலாறு” என்ற நூலில் கூறுகிறார் - “இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது”.

“...the Islamic conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precious good, whose delicate complex order and freedom can at any moment be overthrown by barbarians invading from without and multiplying from within “
- Will Durant in “History of Civilization”

----

Anonymous said...

சென்ற வாரம் ஒரு கோமாளியின் பதிவுகள் எல்லாவம் வந்தது
இந்த வாரம் வஜ்ரா என்றவுடன் மனம் அகம் அனைத்தும் பரவசம்
தொடருங்கள் வஜ்ர

மாசிலா said...

சென்ற முறை நான் பின்னூட்டபோது மிகச்சுறுக்கமாக 'தேவையில்லாத பதிவு' என கூறி முடித்துவிட்டேன்.

ஆனால் நான் உண்மையில் விளிம்ப நினைத்தது இந்த விடயத்தை பற்றி தமிழ் களத்தில் பேச வேண்டிய அவசியம் கொஞ்சமும் இல்லை என்பதை பற்றியதுதான். இதைத்தான் நீங்களும் உங்கள் பதிவின் கடைசியில் விளிம்பி இருக்கிறீர்கள்.
அவரசத்தில் உணர்ச்சி வசப்பட்டு இப்படி மொட்டையாக எழுதி உங்கள் மனதை புண்படுத்தி இருப்பின் மன்னிக்கவும்.

Unknown said...

நட்சத்திர வாழ்த்துக்கள் வஜ்ரா

முதல் பதிவே சூடாக ஆரம்பித்திருக்கிறீர்கள்.

சரி...உங்களை அனானி அதர் ஆப்ஷனை எடுக்க வைத்துவிட்டு டோண்டுசார் அவர் பதிவில் அதை திறந்து வைத்துக்கொண்டு சதமும்,இரட்டை சதமுமாக அடித்து கலக்குகிறாரே?நட்சத்திர வாரத்தில் நீங்களும் அதே போல் செய்தால் என்ன்?(பத்த வெச்சுட்டியே பரட்டை:))))

சிவபாலன் said...

வஜ்ரா

நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!

சிறில் அலெக்ஸ் said...

வஜ்ரா, நட்சத்திர் வாரத்துக்கு வாழ்த்துக்கள். கலக்குங்க.

வெடிகுண்டுகள் போடுவதை விட கண்ணிவெடிகள் வைத்தால் பலநாள் பலன் வரும்.

:))) சும்ம ஒரு ஸ்டைலுக்குச் சொன்னேன்.

நண்பனின் பதிவில் ஹோலொகாஸ்டை மறுக்கவில்லையே?

நானும் அரவிந்தனும் கூட இதைப்பர்றி பேசிக்கொண்டோம். அவர் மறுப்பதாகத் தெரியவில்லை மாறாக இந்து அமைப்புக்கள் மறுப்பதைத்தான் சொல்லியிருந்தார் என நினைக்கிறேன்.

இந்த விஷயங்களை தவிர்த்து.. சமுக்கப் பார்வையில் சூப்பர் பதிவு ஒன்றையாவது தரவேண்டும். முன்பு செய்திருக்கிறீர்கள் இப்போதும் செய்யவேண்டும்.

கலக்கப் போவது யாரு..?

வஜ்ரா said...

செல்வன், சிறில்,

நன்றிகள். கொஞ்சம் லேட்டானதால், இந்தப் பதிவு முன்னிலைக்கு வந்துவிட்டது.

லேட்டஸ்டா ஒண்ணு போட்டுருக்கேன்...அதுல வாழ்த்து எல்லாம் வெச்சுக்கலாம்.

சிறில்,
நீங்கள் சொல்வது போல் நண்பன் ஹோலோகாஸ்டை ஈரான் முதல்வர் சொல்வது போல் மறு ஆய்வு செய்யணும் என்கிறார். ஈரான் முதல்வர் எத்தகைய anti-semite என்று சொல்லத் தேவையில்லை.

மேலும், எனக்கு வெடி, பொடி வைத்தெல்லாம் பேச வராது. சாதாரணமாகவே பேசுகிறேன். அதுவே போதும்! :D


மாசிலா,

நன்றி. அதைத்தான் நானும் சொல்கிறேன். ஹோலோகாஸ்ட் மறுப்பு என்பது தமிழ்களத்தில் பேசத்தேவையில்லாத தலைப்பு. ஆனால் அதைச் சொல்லி இஸ்ரேல் மீதான தீவிரவாதத்தை ஞாயப் படுத்தப் பார்க்கின்றனர் சிலர்.

கூடவே ஹிந்து அமைப்புகளையும் அதே கல்லால் அடித்துப் பார்க்கின்றனர்.

நண்பன் said...

வஜ்ரா,

வாழ்த்துகள், நட்சத்திர பதிவர் ஆனதற்கு.

நண்பன்

முத்துகுமரன் said...

நட்சட்திர வாழ்த்துகள் வஜ்ரா. மதுரை மண(ன)த்தனி வெளிப்படுத்தும் பதிவு இந்த வாரத்தில் இருக்கும் என்று நம்புகிறேன்.

வஜ்ரா said...

முத்துக்குமரன்,

மதுரை மணம் என்றால் என்ன சார் ?

நன்றி.

நண்பன் said...

வஜ்ரா,

// நண்பன் இந்த ஹோலோகாஸ்டையே குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்று பதிவு போட்டு இந்த ஹோலோகாஸ்டை மறுபரிசீலணைக்கு உட்படுத்த வேண்டுகிறார்.

என்னைப் பொருத்தவரை, அவர் பதில் சொல்லவேண்டிய கேள்வி ஒன்றை ஒரு அனானி கேட்டு அது அப்படியே இருக்கிறது, அது ஹோலோகாஸ்ட் நடந்து அதில் ஆறு மில்லியன் (யூத) மனித உயிர்கள் பலியானதாகக் கூறப்படுவதை அவர் ஏற்கிறாரா ? என்பது தான்.

ஆம் என்றால் மறு பேச்சு, இல்லை என்றால் மறு பேச்சில்லை.

நடுவில் சென்று இல்லை, அதைத் தான் ஆராய்ச்சி செய்யனும் என்பது என்று ஜல்லியடிப்புகள் இருக்கக் கூடாது.
//

நீங்கள் குறிப்பிட்ட அநாநி, மூசா என்று நினைக்கிறேன். முன்பு அநாநிகளை உள்ளேயே விட அனுமதிப்பதில்லை என்று ஒரு நியதி வைத்திருந்தேன். ஆனால், ஒரு சில நண்பர்கள், 'உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டால், எங்களுக்கும் முத்திரை குத்திவிடுவார்கள். அதனால், எங்களையும் கொஞ்சம் அநாநியாக அனுமதியுங்கள்' என்ற வேண்டுகோளின் பேரில் தான் இந்த அனுமதியே.

நிற்க, நான் மூசா என்பவருக்குப் பதிலிறுக்கவில்லை என்ற வார்த்தைகளை மறுக்கிறேன். அவருக்குப் பதில் சொல்லி இருக்கிறேன். அவர் ஹோலோகாஸ்ட் எங்குமே மறுக்கப்படவில்லை என்று தடாலடியான ஒரு வாக்கியத்தை சொல்லி விட்டு, பிறகு தான் யூதர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கேள்வியை வைக்கிறார்.

அதனால் தான் அவரிடத்தில் சொன்னேன் - முதலில் அடிப்படை சங்கதிகளைத் தெரிந்து கொண்டு வாருங்கள். பிறகு பேசுவோம் என்றேன். ஹோலோகாஸ்ட் மறு ஆய்விற்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். ஏன், அவர் உங்கள் பதிவையோ அல்லது அதற்கு முந்தைய எனது பதிவையோ வாசித்து விட்டு வந்திருந்தாலே இந்த உண்மை புரிந்திருக்கும். கொஞ்சம் கூட home work செய்யாமல், ஏனோ தானோ என்று எகத்தாளம் செய்யும் நபர்களிடத்தில் என்னால் உரையாட முடியாது.

மேலும், நீங்கள் அவரை அநாநி என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் நான் அவரை அவ்வாறு கருதவில்லை. நான் அவரை ஒரு போலி என்று தான் கருதுகிறேன். அதனால் தான் அவரிடத்தில் பதில் அளிக்கும் முதல் வாக்கியத்திலே தெளிவு படுத்தி விட்டேன் - ஒரு பெயரை தாங்கியதால், ஏதோ ஒரு அந்தஸ்து வந்து விடும் என்பதல்ல என்று சொன்னேன்.

சில சமயங்களில் நண்பர்களுக்கு குறிப்பால் தான் உணர்த்த வேண்டும். அதே ரீதியில் அவருக்கு ஒரு எச்சரிக்கையும் வைத்தேன் - இது நீங்கள் வாந்தி எடுக்கும் இடமும் அல்ல என்று. அதை அந்த நபர் புரிந்து கொண்டதினால் தான் மேற்கொண்டு எதுவும் பதில் சொல்லவில்லை.

ஒரு போலியுடன் உரையாடி என் மதிப்பை நான் தாழ்த்திக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு சிலருக்குத் தான் போலியால் தொந்தரவு இருக்கிறது என்று எவரும் எண்ணிவிடக்கூடாது. எனக்கும் அநாமதேயங்களால் தொல்லைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நான் பொருட்படுத்துவதில்லை. பிரஸ்தாபிப்பதில்லை. வெளியில் சொல்வதில்லை. என்னைத் தாக்குகிறார்கள் என்று சொல்லி ஒப்பாரி வைப்பதில்லை. அதை கொண்டு, மற்றவர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்து, என் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிப்பதில்லை.

போலிகளுக்கு எடுக்கும் அரிப்பை சொறிந்து விட நான் தயாராக இல்லை. இதை குறித்து யாரும் என்னிடம் கேள்வி கேட்க முடியாது. இயல்பாக உரையாடும் சக வலைப்பதிவர்களுடன் - அவர்கள் என் கருத்து நிலைக்கு எத்தனை கோணத்திற்கு அப்பால் நின்றாலும் என்னால் உரையாட முடியும். என்னிடத்தில் எந்த மனத்தடைகளும் இல்லை. ஆனால் ஒரு போலியுடன் மன்றாடிக் கொண்டு உரையாடி, அவர்களது இருப்பை நியாயப்படுத்த முடியாது.

நீங்கள் எவ்வாறு, ஒரு போலிக்கு நான் பதில் சொல்லவில்லை என்பதை ஒரு வாதமாக வைக்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்த கேள்வியில் பெரிதான பிரச்சினைகள் இல்லை. இத்தகைய ஒரு சாதாராண கேள்வியை நேரிட்டு முன் வைக்கவே தயக்கம் காட்டுபவர்களிடத்தில், போலிகளிடத்தில் எனக்கு எந்த பரிதாபமும் கிடையாது.

என்னுடைய இந்த நிலைபாட்டை நீங்கள் ஆதரிக்காவிட்டாலும் மதிப்பீர்கள் என்று எண்ணுகிறேன். மற்றபடிக்கு என்னைப் பொறுத்தவரைக்கும் போலிகள் என்பவர்கள் 'part of the occupational hazard' அவர்களை அப்படி புறந்தள்ளிவிட்டுத் தான் நான் இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

அந்தக் கேள்விக்கு உங்களுக்குப் பதில் வேண்டுமா, கண்டிப்பாகத் தருகிறேன் - அதை நீங்களே ஒரு பின்னூட்டமாக வையுங்கள். கேட்கப்படாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதனால், கேளுங்கள் - எந்த நிபந்தனையுமின்றி. I will not accept any precondition for any dialogues.

இத்துடன், ஒரு சிறு வேண்டுகோள் - இதற்கு முன்னர் நட்சத்திரப் பதிவர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோர் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளாவது தங்களைப் பற்றிய உள்ளார்ந்த விமர்சனத்திற்கும், ஒரு சுய தேடுதலுக்கும், உட்படுத்தி பதிவுகள் இட்டிருக்கிறார்கள். அதுபோல, நீங்களும் ஒரு பதிவாவது உங்களை ஒரு சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக் கொண்டு கேட்டுப் பாருங்கள் - ஒரு போலிக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்று நண்பனைக் கேட்டது சரிதானா என்று.

நண்பன் said...

சென்ற எனது பின்னூட்டத்தில்

//அவர் ஹோலோகாஸ்ட் எங்குமே மறுக்கப்படவில்லை என்று தடாலடியான ஒரு வாக்கியத்தை சொல்லி விட்டு, பிறகு தான்//

என்பது,

அவர் ஹோலோகாஸ்ட் விவாதத்திற்கு எங்குமே தடை விதிக்கப்படவில்லை என்று தடாலடியான ஒரு வாக்கியத்தை சொல்லி விட்டு, பிறகு தான்

என்றிருந்திருக்க வேண்டும். பதிந்த பின் தான் இந்த தவறை உணர்ந்தேன். திருத்தம் செய்ய வழியில்லை என்பதால், அதை ஒரு தனி பதிவாக என் வலைப்பதிவில் வைத்திருக்கிறேன்.

இந்தத் திருத்தத்தை வெளியிடவும்.

நன்றி.