வணக்கம்,
என்னையும் ஸ்டார் பதிவராக ஒரு வாராம் இருக்கச் சொல்லி வேண்டியிருக்கும் தமிழ்மணத்திற்கு என் நன்றிகள்.
இந்த வாரத்தில் என் அறுவைப் பதிவுகளையும், அரசியல் சார்புகளையும் பகிர்ந்து கொள்ளவுள்ளேன், அதைப் பொறுமையாகக் கேட்டு பதில் சொல்லப் போகும் அனைவருக்கும் என் நன்றிகள்.
பழைய தமிழ் படங்களில் பாத்திரம் கழுவும் அம்மாவைக் காட்டியபிறகு, அங்கே தூரத்தில் ஹீரோ ஓடி வந்து "ஆத்தா, நான் பாஸ் ஆயிட்டேன்!" ன்னு சொல்லிகிட்டே வருவார்...அது போல நானும் வர்றேன்...!!
உயிர்தொழில்நுட்பவியல் (biotechnology) துறை ஆராய்ச்சியில் ஆரம்பித்து biophysics பக்கம் தாவி கொஞ்சம் bioinformatics என்று என்னென்னமோ படித்துவிட்டேன். கால் நூற்றாண்டு முடிந்துவிட்டது, என் வாழ்க்கையில், வலைப்பதிவு எழுத ஆரம்பித்து ஒரு வருடம் கூட இன்னும் ஆகவில்லை.
எனக்கு நிச்சயமாக "புது உலகம்" படைக்கும் ஆசை, another world is possible போன்ற"நம்பிக்கை" சித்தாந்த அடிப்படை புத்தி இல்லை.
Take life as it comes, attitude தான்.
இந்தப் பதிவில் சொல்ல வேறேதும் இல்லை என்பதாலும், இப்போது எழுத வேறேதும் இல்லை என்பதாலும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
38 comments:
வஜ்ரா
நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!
வாங்க சார், அளப்பற பண்ணுங்க. மதுரகாரங்க்ன்னா சும்மாவா
வாழ்த்துகள் சங்கர்.
எப்ப நீங்க துரைமார்களை எல்லாம் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினீங்க? :-) ஓ துறை ஆராய்ச்சியா? சின்ன எழுத்துப்பிழை. சரிசெஞ்சுடுங்க.
உயிர் தொழில் நுட்பவியல்ன்னு தமிழ்ல எழுதுன மாதிரி பயோபிஸிக்ஸுக்கும் பயோஇன்பொர்மாடிக்ஸுக்கும் தமிழில் எழுதியிருக்கலாமே.
இந்த வாரமாவது சுவாரசியமா (நானும் புரிஞ்சிக்கிற மாதிரின்னு பொருள்) எழுதுவீங்கன்னு நினைக்கிறேன். :-)
அதென்ன மதுரைக்காரரா இருந்துக்கிட்டு சங்கரநாராயணர் படத்தைப் போட்டிருக்கீங்க? ஓ. உங்க முழுப்பேரு சங்கரநாராயணனா?
கலக்குங்க. வாழ்த்துக்கள் (இரண்டாம் முறையாக)
வாங்க வாங்க!!!
இந்த வாரம் இனிய வாரமாக அமையும் என்பதில் சந்தேகமேதும் இல்லை :-)
அதெல்லாம் சரி!
காலையில இருந்து எங்க போனீங்க?
தேவுடு காத்துகிட்டு இருந்தோம்.
அப்படியே போன வார ஸ்டாரையும் கலாய்ச்சிகிட்டு.
வாழ்த்துக்கள் வஜ்ரா சங்கர்!
காலையிலிருந்து பாலபாரதி தான் இருந்தார்....அதனால ஒருவேளை நைட்ல வருமோன்னு நெனச்சிக்கிட்டு சும்மா இருந்தேன்...
அப்புறம் பார்த்தா யாரோ ஒருவர் பெயர் போட்டு ஒரு கவிதைப் பதிவு இருந்தது...
இப்ப 10 மணிக்கு மேல வந்து பாத்தா என் பேரு இருக்கு...இப்ப ஓகே...அப்புடீன்னு தெரிஞ்ச உடனே தான் intro போட்டேன்.
நன்றி நாமக்கல் சிபி.
கரெக்டா சொன்னீங்க குமரன், அது சங்கர நாராயணன் தான். அதன் காரணம் "குல" தெய்வம் என்பதால்!
சிவபாலன்,
நன்றி.
கால்கரி,
ரொம்ப ரொம்ப நன்றிங்க...மதுரக்காரய்ங்கன்னு காட்டிருவோங்க... அங்கிட்டு, இங்கிட்டுப் போகாம அடிக்கடி இங்க வாங்க...
குமரன்,
ரொம்ப நன்றி, தமிழ் எழுதியே 12 வருஷத்துக்கு மேல ஆனதால இப்படியெல்லாம் பிழைகள் வந்துவிடுகிறது (ஏய், அடங்குடா, நீ அப்பவே இப்புடித்தாண்டா! - சொல்வது உள்மனம்). :D
ஆத்தா' என்றால் (அகம் + ஆள் = அகத்தில் குடியிருப்பவள் = ஆத்தாள்)
ஆத்தா நான் ஸ்டார் ஆயிட்டேன்' என்று பிள்ளை சொன்னால் தாய் என்ன சொல்வாள் தெரியமா?
மகராசனா இரு அப்பச்சி!
(எங்கள் பகுதியில் அப்படித்தான் சொல்வர்கள்)
ஆத்தா' என்றால் (அகம் + ஆள் = அகத்தில் குடியிருப்பவள் = ஆத்தாள்)
ஆத்தா நான் ஸ்டார் ஆயிட்டேன்' என்று பிள்ளை சொன்னால் தாய் என்ன சொல்வாள் தெரியமா?
மகராசனா இரு அப்பச்சி!
(எங்கள் பகுதியில் அப்படித்தான் சொல்வர்கள்)
நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.
நேத்து வந்து பார்த்தப்ப என்னமோ குழப்பமா இருந்துச்சு. சுடர்விழி பேரைப்போட்டு, பாலாவின்
படத்தோட இருந்ததைப் பார்த்தேன்.
தமிழ்ப் படத்தைச் சொல்றிங்களே, ஹிந்தியிலும் இப்படித்தான். அங்கே 'அம்மா நான் பி.ஏ. பர்ஸ்ட் கிளாஸ்லே
பாஸாயிட்டேன்'ன்னு சொல்வாங்க( ஹிந்தியிலேதான்!)
வாங்க தலை,
பின்னி பெடல் எடுங்க. நானும் காலையில் பார்த்தேன் வேற யார் பெயரோ இருந்தது இப்ப வந்து பார்த்தால் உங்க பெயர். உங்க புகைப்படத்தை வேற மாத்திடிங்க அடையாளமே தெரியலை போங்க.
வாங்க வஜ்ரா
வாழ்த்துக்கள்.
கலக்குங்க.
வாழ்த்துக்கள் வஜ்ரா...
சுப்பைய்யா சார், மற்றும் சந்தோஷ்,
நன்றி.
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள். அரசியலன்று மற்ற தலைப்புகளிலும் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நல்ல வேலை இப்பவாச்சும் வந்தீங்களே.. என்னடா இது இப்படி ஆகிடுச்சேன்னு நெனைச்சேன். நல்ல படியா வந்து காப்பாத்தீனீங்க!
இணையத்துள இருந்து போறதுக்குள்ள யாருப்பா அடுத்த ஸ்டார்ன்னு காத்திருந்தேன். வாழ்த்துக்கள்.
தங்களின் புதிய பரிணாமத்தையும் காட்டுங்கள்.
நன்றி
தோழன்
பாலா
நட்சத்திர வாழ்த்துக்கள் வஜ்ரா...அட்லீஸ்ட் இஸ்ரேல் பற்றி ஒரு பயணக்கட்டுரை வித் போட்டோஸ் எதிர்ப்பார்க்கிறேன்...
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.
கலக்கல் பதிவுகள் தந்து கலக்குங்க
வஜ்ரா,
நட்சத்திர வாழ்த்துக்கள் .நிறைய எதிர்பார்க்கிறேன்.
வஜ்ரா, என்னோட பின்னூட்டம் வரக்கானோம்...நான் அதர் ஆப்ஷன் தான் உபயோகப்படுத்தறேன், ப்லாகர் பிரச்சினை.
செந்தழல்
நட்சத்திர பதிவர் ஆக தேர்ந்தெடுக்கப் பட்டதற்க்கு வாழ்த்துக்கள்.
Biophysics, bioinformatics பத்தி பதிவு போட முயற்சி பண்ணுங்க.
வாழ்த்துக்கள் வஜ்ரா.. :)
ஜோ, ஹரிஹரன், செந்தழல், ஹரி மற்றும் பொன்ஸ்,
ரொம்ப ரொம்ப நன்றி.
உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் நான் முயற்சிக்கிறேன்.
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.
வாழ்த்துகள் வஜ்ரா!
நீங்களும் மதுரையா... இது புதிய செய்தி. அப்ப கண்டிப்பா ஒரு காமெடி பதிவு நட்சத்திர வாரத்தில் உண்டுனு சொல்லுங்க.
இந்த 'இடது சாரி'னா என்னன்னு ஓரளவுக்கு தெரியும். வலது சாரி அரசியல் சார்புனு படிச்சேன் 'intro'-ல. அப்படின்னா என்ன? எனக்கு தெரிந்த நிறைய பேரு இடது சாரிக்கு எதிரான கருத்துகள் எல்லாம் வலது சாரினு சுலபமா சொல்லிடுவாங்க. ஆனால் இரண்டு சாரிகளுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகளும் பார்க்கிறேன். வெளிப்படையாக நீங்கள் தெரிவிப்பதால் உங்களிடம் இந்த கேள்வி :-)
வாழ்த்துக்கள் வஜ்ரா, நானும் ஒரு வகையில் மதுரைக்காரந்தேய். இந்த வாரத்தில் உங்கள் துறை சார்ந்த பதிவுகள் எழுதினால் நல்லாயிருக்கும்
வஜ்ரா,
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.
நட்சத்திர வாழ்த்துக்கள்
வாங்க வஜ்ரா, நட்சத்திரமா வலம் வர வாழ்த்துக்கள்!
அசத்துங்க!
வஜ்ரா,
நீங்கள் ஸ்டாராகியிருப்பதறிந்து மிக மனமகிழ்கிறேன். வாழ்த்துக்கள்.
மிக நல்ல வாரமாக இது அமையும் என்று எனக்கு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
தங்கள் படைப்பில் தேர்ந்தெடுத்த முத்தான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
we the people jaisankar, ரொம்ப நன்றி,
ஏமாறாதவன்
நன்றி.
சின்னக் குட்டி, திரு, ஸ்ரீதர் வெங்கட், தங்கவேல்,
அனைவருக்கும் நன்றி.
வாழ்த்துறேன்
வாழ்த்துறேன்
நீ ஸ்டார் ஆனதுக்கு.....
பரபரப்பு வாரமாக அமைய வாழ்த்துக்கள்
பின்னி பெடல் மட்டும் எடுக்காம, டயர், டியூப், பெல் எல்லாம் சேர்த்து எடுக்கவும்.
என்னங்க நட்சத்திர வாரம் முடிய போகுது... இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில கானோம்?
உங்கள் பார்வையில் வலது சாரி அரசியல் நிலைப்பாடு என்றால் என்ன? நீங்க பதில் சொல்லலனா அடுத்து விக்கி பசங்களுக்கு இந்த கேள்வியை forward பண்றதா உத்தேசம்.
ஸ்ரீதர் வெங்கட்,
வலது சாரி அரசியல் நிலைப்பாடு என்பது தொன்றுதொட்டு பெரும்பான்மை இன மக்களின் விருப்பம் கொண்ட அரசியல். The political right wing என்பது எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.
இடது சாரி அரசியலுக்கு எதிர் என்ற அர்த்த்தில் தான் மேலை நாடுகளில் பார்க்கப் படுகிறது.
ஆனால் என் நிலைப்பாடு, cultural nationalism கொண்ட அரசியல் பார்வை. இந்துக்கள் இன்று பல பிரிவினைகளாகப்பிறிந்து கிடக்கலாம். ஆனால் there is a invisible thread. அது தான் கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள இந்துக்களை ஒன்றிணைக்கிறது. அந்த கலாச்சார ஒற்றுமையை பாதுக்காக்கவேண்டும் அரசியல் பார்வையைத்தான் நான் வலது சாரி அரசியல் பார்வை என்று சொல்லிக் கொள்கிறேன். மேலும் இந்திய இடது சாரித்தனம், தனக்கென தனித்தன்மையாக சூடோ செகுலர் தனத்தைத் தவிர வேறேதும் ஒரிஜினலாக வைத்துக் கொள்ளாததால் அவர்களுக்கும் எதிராக இருக்கும் அரசியல் பார்வையையும் சேர்த்துக் கொள்கிறேன்.
Post a Comment