February 21, 2007

கெலிச்சான் மோடி

Special economic zones என்கிற சிறப்பு வணிகவளாகங்கள் நாடெங்கும் அமைக்கப் பட்டு வருகின்றது. ஒரு SEZ (special economic zone) நிருவுவதற்கே பட்டாச்சார்யா, அதாங்க மே. வ கம்யூனிஸ்ட் முதல்வருக்கு தாவு தீர்ந்துவிடுகிறது.

விவசாயிகள் ஆர்பாட்டம் ஒரு பக்கம் என்றால் எதிர்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் இன்னொரு பக்கம் என்று மாநிலத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் பந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவிருகின்றனர்.

இதே வேளையில் இந்தியாவின் மேற்குக் கரையில் (west coast !!) அதாங்க, குஜராத்தில், ஊடகங்களின் வில்லன், செகுலரிசத்தை நசுக்கிய அரக்கன் மோடி ஆளும் மாநிலத்தில் 33 SEZ களை சத்தமின்றி சேங்க்ஷன் செய்திருக்கிறார். அவரால் மட்டும் எப்படி முடிந்தது என்று outlook ல் R.K Mishra கேள்வி எழுப்பியுள்ளார் .

அந்தக் கேள்வியை ஆராய்ந்து பார்க்கையில்,

மோடி செய்த நல்லவிஷயம், அரசு விதிமுறைகள் என்று சொல்லி மக்களை கஷ்டப்படுத்தாமல் லிபரல் எகனாமிக்ஸ் படி நிறையவே தனியார் நிறுவனங்கள் கூட்டுவைத்து மாநிலத்தில் முன்னேற்றத்தை அதிகரித்தது. குஜராத்தின் entrepreneurial skill கொண்ட மக்கள் அதை மிகவும் வரவேற்று முன்னேறினர். இன்று FDA அதிகம் கொண்டுவரும் மாநிலம் மே.வங்கமோ, கேரளமோ அல்ல, குஜராத்.

இன்னொன்றும் எனக்கு strike ஆனது, குஜராத்தில் நிறையவே விவசாயத்திற்கு உதவாத சதுப்பு நிலங்கள், கட்ச், சௌராஷ்டிரா பகுதிகளில் அதிகம், அதை நன்றாகப் பயன் படுத்தி SEZ களை கடலோரப் பகுதி, விவசாயத்திற்குப் பயன் படுத்த முடியாத நிலங்களில் அமைத்தது மோடியின் புத்திசாலித்தனம்.

பட்டாச்சார்யா ஆளும் மே. வங்கத்தில் கம்யூனிஸம் என்று தழைக்க ஆரம்பித்ததோ அன்றே பிடித்தது சனி. 30 ஆண்டுகால ஆட்சியில் கல்கத்தாவைத் தவிர எந்த நகரமும் சொல்லிக் கொள்ளும் படி முன்னேற்றாம் அடையவில்லை. பெரும் நிறுவனங்கள் trade union பிரச்சனை என்று சொல்லி முதலீட்டினைக் குறைத்துவிட்டன. வங்கதேசம் போன்ற வளமையான தேசம் நாட்டில் இல்லை, தஞ்சை போன்ற டெல்டா பகுதி அது. கங்கை, பிரம்மபுத்திரா வந்து வங்கக்கடலில் கலக்கும் பகுதி அது. வெள்ளைக்காரன் வந்து இறங்கிய உடன் கைவைத்த இடங்கள் தமிழக தஞ்சையும், வங்க தேசமும் தான். ஏனென்றால் அங்கே தான் டெல்டா பகுதி விளை நிலங்கள் அதிகம். 18ம் நூற்றாண்டின் SEZ சிறப்பு வணிக வளாகங்கள் தஞ்சையும், வங்காளமும். அதை வெள்ளையன் நன்றாகவே பயன் படுத்திக் கொண்டான். இன்று வெள்ளையனே A joke of an ideology என்று சொல்லித் தூக்கி எரிந்துவிட்ட கம்யூனிசத்தை வைத்துக்கொண்டு படாத பாடு படுகிறார் பட்டாச்சார்யார். இவர்கள் எதிர்கட்சியாக இருந்து என்னென்ன செய்தார்களோ அதையே செய்து மம்தா பானர்ஜீ அரசியல் ஆதாயம் தேடுகிறார். அது தெரியாமல் விவசாயிகளும் அவர் பின்னால் செல்கின்றனர்.

பந்த், Strike, உண்ணாவிரதம் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தான் மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருந்து சொல்லிக் கொடுத்தார்கள். இன்று அந்த கசப்பு மருந்தை ஆட்சியில் இருந்துகொண்டு அனுபவிக்கவேண்டிய நெருக்கடி அவர்களுக்கே வந்துவிட்டது வேடிக்கையான உண்மை.

அதே அவுட்லுக் கட்டுரையில், மிஸ்ரா சொல்வது,

Another reason why setting up SEZs have been trouble-free is because the government has left it to the promoters to purchase the land directly from farmers. So, the farmer can demand market price for his property and not settle for the lower prices offered by the state when it acquires land.

மோடியிடமிருந்து ஒரு சில மேனேஜ்மெண்ட் பாடங்களை பட்டாச்சாரி கற்கலாம். சும்மா அவரை தூற்றுவதை கொஞ்சம் தில்லி, மும்பை, மற்றும் தமிழகத்தில் உள்ள Tabloidகள் நிறுத்தலாம்.

14 comments:

kasaikannan said...

அப்படி விவசாயியே நேரில் விற்க விட்டுவிட்டால் ஆள்வோருக்கு என்ன கிடைக்கும்?
மக்களுக்காகவா அரசு?

kasaikannan said...

அப்படி விவசாயியே நேரில் விற்க விட்டுவிட்டால் ஆள்வோருக்கு என்ன கிடைக்கும்?
மக்களுக்காகவா அரசு?

Anonymous said...

சிறந்த காமெடி. ஆனாலும் மோடி இந்த விஷயத்தில் நல்லவர்.

kasaikannan said...

அப்படி விவசாயியே நேரில் விற்க விட்டுவிட்டால் ஆள்வோருக்கு என்ன கிடைக்கும்?
மக்களுக்காகவா அரசு?

Amar said...

// A joke of an ideology //

ஹும்..எவனாச்சும் பிரிட்டிஷ்காரன் தான் சொல்லியிருப்பான்.

BTW, வஜ்ரா, மேற்குக் கரையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பாதுகாப்புதுறையினருக்கு மிக பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஈசியா இந்தியாவின் மிக பெரிய பொருளாதார சின்னங்களை பக்கத்து நாட்டுக்காரன் அழித்துவிடக்கூடிய நிலையில் ஏகப்பட்ட சிரமம் எடுத்து security gridஐயே தலைகீழாக மாற்றியுள்ளார்கள்.

மாசிலா said...

உண்மைதான்.
அதிர் வளர்ச்சி அடைந்து வரும் பக்கத்துவீட்டு சீன அண்ணனை கருத்தில் கொண்டு இதுபோல் பந்த்-அது-இது என்று அடம்பிடிக்காமல் எதிர்காலத்தை நினைத்து செயல் பட வேண்டும். மாறிவரும் இவ்வுலகில் அனைவருமே மாற வேண்டும்.

Mani - மணிமொழியன் said...

It is good that unfertile lands of Gujarat are converted to SEZs. Ideologies apart, does it make economic-sense to convert fertile lands of Bengal to SEZ? Probably they can choose unproductive land in Bengal for that purpose.

There are lot of areas which are not cultivated in Tamil Nadu also due to lack of water. So SEZs should be created in TN also.

வஜ்ரா said...

//
// A joke of an ideology //

ஹும்..எவனாச்சும் பிரிட்டிஷ்காரன் தான் சொல்லியிருப்பான்.
//

அந்த ஐடியாலஜியே பிரிடிஷ்காரன் தான் சொன்னான் ? அதை லூசு ஐடியாலஜின்னும் பிரிடிஷ்காரந்தான் சொல்லுவானா ? French க்காரனாக் கூட இருக்கலாம்.!

பாதுகாப்புத் துறையின் தலைவலி என்ன ? முன்னேற்றத்திற்கேற்ற பாதுகாப்பு முறைகளைக் கையாளவேண்டிய கட்டாயம் இருக்கிறது இப்போது.

பாகிஸ்தானை ஒட்டிய பகுதி அது. அங்கெல்லாம் பாதுகாப்புத் துரை மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். (இல்லையென்றால் கஜினி முகம்மதுகள் தான் வருவார்கள்!)

Anonymous said...

கோவை மணி,
SEZ எல்லாம் தமிழகத்திலும் வரத்தான் போகிறது. ஆனால் நம் மஞ்சள் துண்டுக்காரரோ, பச்சைப் புடைவைக்காரியோ என்ன நினைக்கிறார்களோ தெரியாது. எல்லாத்தையும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே வைத்து, சென்னையில் தண்ணியில்லை, S*** யில்லை என்று அவல நிலைக்கு மக்களைத் தள்ளுவார்கள் என்பது உறுதி.

Nakkiran said...

good for gujarat, good for India...

கால்கரி சிவா said...

மோடி என்றாலே கொலைக்காரன் என்ற இமேஜை நம் இணைய இஸ்லாமிஸ்டுகள் விடாமல் ஏற்படுத்துவார்கள்.

ஆனால் அவர் ஒரு ஊழல் அற்ற ஆட்சியை தருகிறார். மக்கள் நலனுக்கு உழைக்கிறார்

ராஜநாகம் said...

கம்யூனிசத்தை மட்டும் சொல்லிடமுடியாது. UDF, LDF மாற்றி ஆளும் கேரளத்தில் ஒரே ஒரு துபய் இந்தர்நெட் சிடி கொண்டுவர பல ஆண்டுகளாக தலையால் தண்ணி குடித்துப்பார்த்தும் இன்னும் முடியவில்லை.

Anonymous said...

வஜ்ரா அய்யா,
மோடி கெலிச்சது ஒரு கெலிப்பா அய்யா!
எங்க தலைவர் மாநகராட்சி தேர்தலில் திரும்பவும் கெலிச்சாரே அது கெலிப்பு.எங்க தலைவர் கெலிப்பால் ஒரு குடும்பமே வளம் பெறும் அய்யா.அதுக்கு அவரு பாபா கிட்டே மோதிரம் கூட வாங்கியாச்சு அய்யா!மோடியின் கெலிப்பால் நாட்டிற்கு வளம் வரலாம்.யாருக்கு வேண்டும், நாட்டு வளமாம்,கெலிப்பாம்!
இது ஆர்.எஸ்.எஸ்-பார்ப்பனீய-தேசீய ஜல்லிகளின் சதி அய்யா.
அன்புடன்
பசும்பொன் பாண்டியன்
மும்பாய்

ஜடாயு said...

வஜ்ரா,

மோடியின் நிர்வாகத்திறமையும், முன்னேற்ற அரசியல் முனைப்பும் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டிருக்கின்றன.

இந்த SEZ வெற்றிகளுக்குப் பின்னால், மோடி மட்டுமல்ல, காலங்காலமாக வந்து கொண்டிருக்கும் குஜராத்தி மக்களின் வணிக மூளையும், வெறித்தனங்களுக்கு ஆட்படாமல் பொருளாதாரம் பற்றி சிந்திக்கும் மனப்போக்கும் அங்கு இருப்பதும் காரணம். மோடியின் பின்னால் அந்த மாநிலம் நிற்பதற்கும் காரணம் இதுவே.

மே.வங்கம் இது பற்றி புத்திசாலித்தனமாக சிந்திக்காமல், காலங்காலமாக அங்கு இறக்கிவைக்கப் பட்டிருக்கும் எண்ண மூட்டைகளின் வாயிலாகவே சிந்திக்கிறது. அங்கு ஒரு SEZ நொண்டியட்ப்பதற்குக் காரணமும் இது தான்.

இதைச் சரியாகச் சொல்லும் லிபரல் குருநாதர் குருசரண் தாஸ் பட்டாச்சாரியை Heroic Buddhadev என்றும் குறிப்பிடுகிறார் -
http://timesofindia.indiatimes.com/OPINION/Columnists/Gurcharan_Das/Heroic_Buddhadeb/articleshow/1675955.cms

என்னத்தைச் சொல்ல??