February 22, 2007

"மு"ம்மதமும் சம்மதம்

ஜெரூசலம்.

அக்கேடியன் மொழியில் உருஷலம் என்றும், பழைய ஏற்பாட்டில் முதன் முதலில் "ஷலெம்" என்றழைக்கப்படும் இடம், 1700 BCE (before common era) ல் ஆபிரஹாம் முதன் முதலில் உர் என்ற இடத்திலிருந்து அவர் மனைவி மக்களுடன் வந்த இடம் இந்த ஷலெம். பின்னர் வரும் பழைய/புதிய ஏற்பாட்டின் கதைகளை எழுதி போரடிக்க நான் விரும்பவில்லை.

ஜெரூசலம் ஃபிலிஸ்தீனியர்கள் எனப்படுபவர்கள் எகிப்திய ஃபாரோவின் ஆஸ்தான மக்களாக வாழ்ந்துகொண்டிருந்த இடமாக மாறியிருந்தது மோசஸ் தன்னின மக்களை அழைத்து "பாலும் தேனும்" வடியும் நிலத்திற்கு செங்கடலைப்பிழந்து வந்த போது. பின்னர் போர்கள், சண்டைகள், அமைதிக் காலங்கள் என்று அன்றிலிருந்தே ஒரு பிரச்சனைக்குறிய பூமியாகவே இருந்துவந்துள்ளது இந்த "இறைவனின் அருள் பெற்ற" இடம். இந்த இடத்தைத் தான் யூத மன்னர்கள் தங்கள் நாட்டின் தலமை நகராகக் கொண்டுச் செயல் படுத்தியுள்ளனர். இன்றும் இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலம் தான் (டெல் அவீவ் அல்ல!).

ஓமாரின் மஸூதி என்றழைக்கப்படும் இந்த Dome of Rock, ஜெரூசலத்தின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்காகச் சிந்தப் பட்ட ரத்தம் உலகில் நடந்த எல்லாப் படுகொலைகளைக் கணக்கில் கொண்டாலும் குறைவாகத் தான் இருக்கும் என்பது என் எண்ணம். பழைய ஏற்பாடு காலம் முதலே இந்த இடம் சர்ச்சைக்குறிய இடமாகவே இருந்துவந்துள்ளது. சமீபத்தில் கூட இந்த dome of rock பகுதியைச் சுற்றி அகழ்வாராய்ச்சி நடத்த திட்டமிட்டு சில கட்டிடங்கள் உடைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இதன் உள்ளே செல்ல முஸ்லீம்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. வெள்ளிக்கிழமைகளில் பக்கத்தில் கூட செல்ல அனுமதி இல்லை. ஜுமா நாள் என்பதால்.



இங்கிருந்து தான் முகம்மது புராக் வாகனம் ஏறி வானுலகம் சென்றதாக இஸ்லாமியர் நம்புகின்றனர்.

கிறுத்தவமும், இஸ்லாமும் போட்டி போட்டு ஜெரூசலத்தைப் பிடித்து இந்த இடத்தின் மீது தங்கள் கோவிலைக் கட்ட நினைத்தனர். இஸ்லாமிய கலீபா ஓமர் கட்டிய இந்த சின்னம், கிறுத்தவர் ஆட்சியின் போது தேவாலயமாக மாற்றப்பட்டு இருந்தது. பின்னர் சலாதீன் என்ற மன்னன் அதை முஸ்லீம்களுக்கே திருப்பிக் கொடுத்தான்.

இந்த இடத்தில் தான் ஆப்ரஹாம் தன் மகன் ஐசக்கை பலி கொடுக்கச் சொல்லிக் கட்டளை வந்ததாம் கடவுளிடமிருந்து, பின்னர் இந்த இடத்தில் தான் யூதக் கோவில்கள் கட்டப் பட்டு பின்னர் போர்கள் நடந்து இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டும் உள்ளது.

இந்த மசூதியின் மேற்குச் சுவர் பகுதி பழைய யூதர் கோவிலின் எஞ்சியிருக்கும் பகுதி என்று சொல்லி அதைத் தான் யூதர்களின் மிக முக்கிய மற்றும் ஒரே புனித இடமாகக் கருதப்பட்டுவருகிறது.



இந்தச் சுவரின் அந்தப் பக்கத்தில் தான் மேலே சுட்டியுள்ள மசூதி உள்ளது.

ஜெரூசலம், நகரமே யூதர்கள் பகுதி, இஸ்லாமியர் வாழும் பகுதி, மற்றும் கிறுத்தவர் வாழும் பகுதி என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு இருக்கிறது.

ஏசு தன் சிலுவையை சுமந்து சென்ற Via dolarosa என்ற பகுதியில் எங்கெல்லாம் அவர் கால் தடுக்கி விழுந்தாரோ, எங்கெல்லாம் அவர் சுமை தாங்காமல் விழுந்தாரோ அங்கெல்லாம் தேவாலயம் கட்டிவைத்துள்ளனர். (தடுக்கிவிழுந்தால் தேவாலயம் தான்!!) அந்தப் பாதை வந்து முடியும் இடம், church of holy sepulchre. இங்கு தான் ஏசு சிலுவையில் அரையப்பட்டு இறந்தார். அவர் கல்லரை இந்த தேவாலயத்தில் உள்ளதாக கிறுத்தவர்கள் நம்புகிறார்கள். (அடுத்த பகுதியில் இந்தத் தேவாலயத்தின் உள்பகுதிப் படங்கள் வரும்)


சும்மா தலைப்பு மட்டும் தான் secularized தலைப்பு. உண்மையில் மதக்கலவரம் அடிக்கடி வரும். ஏதாவது இஸ்ரேல் பிரச்சனை செய்தால் உடனே, இந்த ஊரில் தான் மதக்கலவரம் வெடிக்கும்.

26 comments:

சிறில் அலெக்ஸ் said...

நல்ல தகவல்கள்.
//அந்தப் பாதை வந்து முடியும் இடம், church of holy sepulchre. இங்கு தான் ஏசு சிலுவையில் அரையப்பட்டு இறந்தார். அவர் கல்லரை இந்த தேவாலயத்தில் உள்ளதாக கிறுத்தவர்கள் நம்புகிறார்கள். //

இறந்த இடமும் கல்லறையும் ஒரே இடத்திலா? இது புதுத் தகவல்.

புனித இடம்னாலே கலவரமும் கூட வர ஆரம்பிக்குது. ஹ்ம்ம். கடவுளே!!கடவுளே!!
நம்ம ஊர்ல சொல்றதுபோல கடவுளுக்குத்தான் வெளிச்சம். நமேக்கெல்லம் இருட்டுதான்.. :)

ஜோ/Joe said...

வஜ்ரா,
பதிவுக்கு நன்றி!

//இன்றும் இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலம் தான் (டெல் அவீவ் அல்ல!).//
அப்படியா! செய்திகளில் அரசு முறை சந்திப்புகள் டெல் அவீவில் நடப்பதாகத் தானே கூறுகிறார்கள்?


//இங்கிருந்து தான் முகம்மது புராக் வாகனம் ஏறி வானுலகம் சென்றதாக இஸ்லாமியர் நம்புகின்றனர்.//

என்னது? இது நான் கேள்விப்படவில்லையே ?முகமது இயற்கையாக மரணமடைந்து அடக்கப்பட்டவரில்லையா?

ஜோ/Joe said...

வஜ்ரா,
அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள் எந்த இனத்தவர் ?யூதர்களா?

வஜ்ரா said...

டெல் அவீவில் நடக்கக்கூடாது என்று ஒன்றும் இல்லை. ஜெரூசலம் தலை நகர். :D

இந்தியத் தூதரகம் கூட டெல் அவீவில் தான் உள்ளது. ஜெரூசலத்தில் தூதரகங்கள் France, USA என்று சில நாடுகள் தான் வைத்துள்ளன. ஆனால் அவை, இஸ்ரேல் நாட்டில் 5 நகரங்களில் தூதரகங்கள் வைத்துள்ளன.

The main reason might be security. Its difficult to provide security to foreign personnel in a city which needs tight controlled scurity to maintain itself.

வஜ்ரா said...

அங்கே இரண்டு "இன"ங்கள் தான் உண்டு, ஒன்று இனமே இல்லாத யூதர்கள் (கோகேஷியன், ரஷியன், ஈரான், ஈராக், இந்தியா, அரபியர் என்று எல்லா இனங்களிலிருந்தும் இருப்பர்) இன்னொன்று அரபு இன மக்கள்.

எல்லா அரபியரும் வஹாபி இஸ்லாமியர் அல்லர்.

Syrian orthodox, Ethiopian christians, Protestants, Pentacoastal etc., அனைத்து டினாமினேஷனிலும் மிக முக்கியமாக அரபு இன மக்கள் தான் இருப்பர்.

Anonymous said...

கி.பி 1700 என்று எழுதியிருக்கிறீர்களே அது கி.மு வா அல்லது கி.பி தானேவா?

Anonymous said...

புராக்கில் சென்றதும், பின்னர் திரும்பவும் இந்த பூவுலகம் வந்து இந்த விபரீதமான மதக் கோட்பாட்டினை முழுமை செய்ததும் பின்னர் நடந்த வேதனை, மன்னிக்கவும்,சம்பவம்!

கால்கரி சிவா said...

மும்மதம் என்றதும் நம் நாட்டின் மும்மதம் என நினைத்து விட்டேன். இந்த மூன்று அதாவது ட்ரினிடி என்பது எல்லா இடத்திலும் இருக்கு பார்த்தீங்களா. நம்முடைய ப்ரம்மா-விஷ்ணு-சிவா, கிறித்தவரின் பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகியவை

வஜ்ரா said...

மன்னிக்கவேண்டும் அனானி, அது கி.மு தான். திருத்திவிடுகிறேன்.

வஜ்ரா said...

கால்கரி,

நீங்கள் சொல்வது போல் "பிரம்மம் ஒக்கடே" என்று பார்க்க நாம் என்றோ தயார் நிலையில் தான் இருக்கிறோம்.

அவர்கள் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை.

Hari said...

நல்ல பதிவு. தகவலுக்கு நன்றி.

/*
அன்றிலிருந்தே ஒரு பிரச்சனைக்குறிய பூமியாகவே இருந்துவந்துள்ளது இந்த "இறைவனின் அருள் பெற்ற" இடம்
*/

நல்ல நக்கல். :)

ராஜநாகம் said...

//மோசஸ் தன்னின மக்களை அழைத்து "பாலும் தேனும்" வடியும் நிலத்திற்கு செங்கடலைப்பிழந்து வந்த போது\\
இன்னும் பாலும் தேனும்தான் ஓடுகிறது. ஆனால் என்ன, சிவப்பு நிறத்தில்.......

Anonymous said...

வஜ்ரா அய்யா,
இதெல்லாம் கவைக்குதவாது அய்யா.ஜெருசலத்தில் பிரச்சனைக்கு காரணமே பார்ப்பனீய சதி என்று பதிவு போடுங்கய்யா.அதில் தேசீயத்தையும் ஜல்லி அடிக்க வேண்டும்.பகுத்தறிவையும் விடாதீங்கய்யா.அப்பதான் நம்ப பீலா பார்வை,கழிவு வெளி எல்லாம் தழலோடு குழல் ஊதி வருவாங்கய்யா.அப்ப பாருங்க ஹிட் ரேட்டை!
அன்புடன்
பசும்பொன் பாண்டியன்
தாராவி
மும்பாய்

Anonymous said...

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்...படங்கள் மற்றும் பதிவுக்கு நன்றி..!!!

செந்தழல் ரவி

வஜ்ரா said...

சிறில்,

அப்படித்தான் நம்பப் படுகிறது.

ஏசுவை சிலுவையில் அறைந்த இடம் என்று ஒன்று உள்ளது. பின்னர், அவர் பூத உடலை படுக்கவைத்து துணியால் சுற்றிய கல் ஒன்று இருக்கிறது.

இதில் protestant, syrian orthodox, catholic, என்று வகைவகையாக நம்பிக்கைகள் உள்ளன.

கூத்தாடி said...

நல்லப் பதிவு வஜ்ரா .

இந்த மாதிரி புனித இடங்கள் தேவையா என்பதே கேள்வி ? நிஜமாய் கடவுள் இந்த மாதிரி
இடங்கள்ள இருப்பாரா என்ன ? கண்டிப்பாய் சாத்தான் இருப்பார்.

இதுவே பாப்ரி மசூதி விசயத்திலேயும் ..

இதே விசயத்தை விகடனில் கமலஹாசன் எழுதியிருக்கிறார் பார்த்தீங்களா ?

Anonymous said...

//ஓமாரின் மஸூதி என்றழைக்கப்படும் இந்த Dome of Rock, ஜெரூசலத்தின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்காகச் சிந்தப் பட்ட ரத்தம் உலகில் நடந்த எல்லாப் படுகொலைகளைக் கணக்கில் கொண்டாலும் குறைவாகத் தான் இருக்கும் என்பது என் எண்ணம். பழைய ஏற்பாடு காலம் முதலே இந்த இடம் சர்ச்சைக்குறிய இடமாகவே இருந்துவந்துள்ளது. சமீபத்தில் கூட இந்த dome of rock பகுதியைச் சுற்றி அகழ்வாராய்ச்சி நடத்த திட்டமிட்டு சில கட்டிடங்கள் உடைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இதன் உள்ளே செல்ல முஸ்லீம்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. வெள்ளிக்கிழமைகளில் பக்கத்தில் கூட செல்ல அனுமதி இல்லை. ஜுமா நாள் என்பதால்.

***

//இங்கிருந்து தான் முகம்மது புராக் வாகனம் ஏறி வானுலகம் சென்றதாக இஸ்லாமியர் நம்புகின்றனர்.//

என்னது? இது நான் கேள்விப்படவில்லையே ?முகமது இயற்கையாக மரணமடைந்து அடக்கப்பட்டவரில்லையா?


//


ஒரு சிறு விளக்கம்.


1. முகமது புராக் வாகனத்தில் ஏறி வானுலகம் சென்று அங்கு பல விபரீதமான நிகழ்வுகளைக் கண்டு(உதாரணமாக பெரிய இலந்தை மரம், அதில் பானை அளவு இலந்தைப்பழங்கள், இன்னபிற) பின் காபாவுக்கு திரும்பினார். இது நிகழ்ந்த போது அவர் அவ்வளவாக பிரபலமாகவில்லை(அதாவது நபியாக..).


இந்த நிகழ்வு குறித்து எழுதவேண்டும் என்று நான் நெடுநாட்களாக (வழக்கம் போலவே) நினைத்துக்கொண்டுள்ளேன்.

அது நிகழ்ந்ததா இல்லையா, உண்மையிலேயே என்ன நிகழ்ந்திருக்கும் என்ற (முஸ்லிமல்லாத என்னைப்போன்றவர்களின்) யூகங்களை விடுத்துப் பார்த்தால், அந்த பயணம் இன்றைய இஸ்லாத்தின் வடிவத்தை நிர்மாணிப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்று இஸ்லாமியர்கள் செய்யும் ஐவேளைத் தொழுகை இந்த பயணத்தில்தான் கிட்டியது.


2. இந்த 'மசூதி' புறப்பட்ட விஷயம் வேடிக்கையானது. முகமது மறைந்து நெடுநாட்கள் கழித்துதான் இந்த இடம் 'கணடுபிடிக்க'ப்பட்டது. அங்கிருந்த முஸ்லிம்கள் இதுதான் அதுதான் என்று ஒவ்வொரு கிறித்துவ தேவாலயமாக காண்பிக்க, எதற்கு சர்ச்சை இன்னமும் இடிப்பானேன் என்றோ என்னவோ, உமர் யாரும் கவனிப்பாரின்றி பாழடைந்து இருந்த ஒரு இடத்தில் இருந்த கல்லைத்தான் புராக் வாகனம் (மேலே) சென்ற இடமாக அடையாளம் காட்டினார்/கண்டார்.

இப்படி ஒப்புக்காக சொன்னதாலோ என்னவோ உமர் அங்கே மசூதியை எழுப்பவில்லை. பின்பு அரைநூற்றாண்டுகள் கழித்து வேறொருவர் அங்கே ஒரு கட்டிடத்தை எழுப்பினார். அதிலும் கூட அது ஒரு கிப்லாவாகிவிடக்கூடாது என்று உமர் காட்டிய ஒரிஜினல் இடத்தை விட்டு சற்றுத்தள்ளியே இந்த மசூதி கட்டப்பட்டது என்கிறார்கள்(இது உண்மையோ பொய்யோ தெரியாது ).


பாலஸ்தீனப்பிரச்சினை எழும் வரை இந்த இடத்திற்கு இஸ்லாத்தில் இவ்வளவு முக்கியத்துவம் கிடையாது. ஆனால், இன்றோ மெக்கா, மதீனா படங்களுடன் மூன்றாவதாக இந்த மசூதியும் இடம்பெறுவதை பல முஸ்லிம்களின் வீடுகளில் காண்கிறேன்.

Anonymous said...

//இதுவே பாப்ரி மசூதி விசயத்திலேயும் ..//


ஆம். இரண்டிற்கும் இஸ்லாமிய உளவியலுக்கும் சம்பந்தமுண்டு.


பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஒரு கல்வெட்டை இந்துக்கள் கண்டெடுத்ததாக பத்திரிகைகளில் பார்த்தேன்.அதில் இது ஒரு (இஸ்லாமிய) நபி உதித்த இடம் என்று குறிப்பிட்டிருந்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.


முகமதுவுக்கு முன்பு உலகில் தோன்றிய ஆன்மீகவாதிகள்/அவதாரங்கள் எல்லாமே இஸ்லாத்தை பரப்பிய நபிமார்கள் என்று இஸ்லாம் போதிப்பதால், அதை இஸ்லாமியர்கள் நம்புவதால், எல்லா ஆன்மீகத்தலங்களும் இஸ்லாமியர்கள் மீட்டெடுக்க வேண்டிய 'ஒரிஜினல்' இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்களாக ஆகிவிடுகின்றன.


ஆகவே சர்ச்சையோ, கோவிலையோ இடிப்பதாக நீங்கள் நினைத்துக்கொள்கின்றீர்கள், அவ்வளவுதான்! ஒரு ஈமானுள்ள முஸ்லிமோ, அசுத்தமாக இருக்கும் இடத்தை(இணை வைப்பு - குஃப்ர் நிகழுமிடத்தை) 'சுத்தம்' செய்து ஒழுங்கான முறையில் இறைவனை அனைவரும் வணங்குவதற்கு துணை புரிகிறார்.


இது தான் இஸ்லாமிய இடிப்புகளின் பின்னே இருக்கும் இறை நம்பிக்கை.


எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், இந்தியாவில் அயோத்தியா விஷயத்தில் இவ்வளவு கடுமையாக சண்டையிட்ட இந்துத்துவ வாதிகள் யாருமே இந்த அடிப்படையை இதுவரை கவனிக்கவில்லை/கேள்வி கேட்கவில்லை என்பதுதான்.

வஜ்ரா said...

//
இந்த மாதிரி புனித இடங்கள் தேவையா என்பதே கேள்வி ?
//

சென்னை கடற்கரைச் சாலையில், அண்ணா சதுக்கம், எம் ஜி ஆர் நினைவிடம், பின்னர் அம்பேத்கார் நினைவு மண்டபம், சென்னை பல்கலைக்கழகத்தின் எதிரில் உள்ள காந்தி மண்டபம், போன்ற புனித இடங்களின் தேவை என்று இல்லாமல் போகிறதோ அன்றே இது போன்ற புனித இடங்களின் தேவையும் இல்லாமல் போகும்.

வஜ்ரா said...

நேசகுமார்,

//
எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், இந்தியாவில் அயோத்தியா விஷயத்தில் இவ்வளவு கடுமையாக சண்டையிட்ட இந்துத்துவ வாதிகள் யாருமே இந்த அடிப்படையை இதுவரை கவனிக்கவில்லை/கேள்வி கேட்கவில்லை என்பதுதான்.
//

நீங்கள் சொல்லும் அடிப்படை எல்லாம் உணர நாளாகும். நம் இந்தியர்களின் முதுகெலும்பை உடைத்து ஒரு வித societal stolkholm syndrome ல் ஆழ்த்தி இருக்கிறார்கள் இஸ்லாமிஸ்டுகளும் இஸ்லாமிய apologist களும். இந்த வியாதி தெளிய நாளாகும்.

வஜ்ரா said...

//
2. இந்த 'மசூதி' புறப்பட்ட விஷயம் வேடிக்கையானது. முகமது மறைந்து நெடுநாட்கள் கழித்துதான் இந்த இடம் 'கணடுபிடிக்க'ப்பட்டது. அங்கிருந்த முஸ்லிம்கள் இதுதான் அதுதான் என்று ஒவ்வொரு கிறித்துவ தேவாலயமாக காண்பிக்க, எதற்கு சர்ச்சை இன்னமும் இடிப்பானேன் என்றோ என்னவோ, உமர் யாரும் கவனிப்பாரின்றி பாழடைந்து இருந்த ஒரு இடத்தில் இருந்த கல்லைத்தான் புராக் வாகனம் (மேலே) சென்ற இடமாக அடையாளம் காட்டினார்/கண்டார்.
//

Daniel pipes வலைப்பதிவு என்று நினைக்கிறேன். அதில் ஒருவரு பின்னூட்டம் மூலமாக, ஜெரூசலம் அல்லது அல் கூத்ஸ் என்ற வார்த்தையே குர் ஆனில் இல்லை, அதைக் கண்டுபிடித்துக் கொட்டினால் பரிசு என்றெல்லாம் சவால் விட்டிருந்தார்.

எனக்கென்னமோ ஜெரூசலம் குர் ஆனில் முக்கியத்துவம் பெறாமலே இருந்திருக்கிறது, அரபிய ஆக்கிரமிப்பு அரசியலினாலும் பாலஸ்தீனர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலும் ஜெரூசலத்தில் இவ்வளவு பிரச்சனை, அதுவும் யூதர்கள் புனிதக் கோவில் இருந்த இடத்தில்.

There are obvious parallels in both the cases. Only the level of reverence attached to place is of higher dimensions in both sides in Jerusalem.

The case with babri masjid is, even muslims now do not want a mosque to be built there, but they do not want hindus either to have that place. (what a sadistic stand!!).

Anonymous said...

நேசகுமார் அவர்களின் எழுத்துக்கள் கண்ணிமிக்கதாகவும், உண்மை சார்ந்ததாகவும் இருக்கிறது.
நீங்களும் நன்கு எழுதுகிறீர்கள்.
பாராட்டுக்கள்!

ஜடாயு said...

நேசக்குமார்,

உங்களை நடமாடும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் என்று சொன்னால் அது மிகையாகாது. இது போன்ற பல தகவல்களை அறிந்து வைத்துக்கொண்டு அமைதியாயிருக்கிறீர்களே? தயவு செய்து இன்னும் எழுதுங்கள், நிறைய எழுதுங்கள்.

(வஜ்ரா, இது வேறு சில ஆட்கள் பற்றி, நீங்கள் உண்மையிலேயே உண்மை ஒளி உள்ள நட்சத்திரம்) யார் யாரையோ நட்சத்திரமாக அறிவிக்கிறது தமிழ்மணம்.

பிறையின் மீது உள்ள நட்சத்திரம் பற்றி பல ஆழமான விஷயங்களை அறிந்த நட்சத்திரம் நீங்கள். உங்களைப் போன்ற சிறந்த அறிஞர்களை மட்டும் தமிழ்மணம் ஒதுக்கித்தள்ளுவது ஏனோ?

கால்கரி சிவா said...

//முகமது புராக் வாகனத்தில் ஏறி வானுலகம் சென்று அங்கு பல விபரீதமான நிகழ்வுகளைக் கண்டு(உதாரணமாக பெரிய இலந்தை மரம், அதில் பானை அளவு இலந்தைப்பழங்கள், இன்னபிற) பின் காபாவுக்கு திரும்பினார். இது நிகழ்ந்த போது அவர் அவ்வளவாக பிரபலமாகவில்லை(அதாவது நபியாக..).//

நேசகுமார், ஒரு விளக்கம் தேவை. அவர் வானுலம் போய்வந்த பிறகு இறந்தாரா? அல்லது இறந்து வானுலகம் போனாரா?

வானுலம போனவர் எப்படி மீள முடியும்?

இல்லை இறந்தவர் பிறகு திரும்பிவந்து பெருமுலை கன்னிகளைப் பற்றி எப்படி சொல்ல முடியும்?

புரியவில்லை ஐயா புரியவில்லை. நடமாடும் பல்கலைகழகமே சற்றே விளக்குங்கள் :)))))

Anonymous said...

நேசகுமார்,
நீங்கள் தரும் தகவல்களும், அதிலுள்ள நிஜமும் உண்மையிலேயே எனக்கு வியப்பாக உள்ளது. இஸ்லாமிய மதத்தில் பிறந்ததால் அது சம்மந்தமாய் எனக்கு போதிய அறிதல் உண்டு என்பதாலும், இன்னும் மற்ற மதக் கோட்ப்பாடுகளையும் அறியும் ஆவலில் அதிகம் படிப்பவன் என்பதாலும் உங்கள் எழுத்துக்கள் என்னைக் கவர்கின்றன.
மதம் என்னும் மாயையை விலக்கும் வண்ணமாகவும், அதன் மாச்சரியங்களிலிருந்து விடுபடும் விதமாகவும் உயர்ந்த சிந்தனையை விதைக்கும் வகையில் நீங்கள் எழுதினால் மிகவும் நன்மை மிக்கதாக அமையும் என்பது அடியேனின் கருத்து. ரிச்சர்ட் டாக்கின்சின் 'The God Delusion' போன்ற நல்ல தமிழ் நூல் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
வஜ்ரா ! நீங்களும் அவ்வாறு முயற்சி செய்யுங்கள்.
வாழ்த்துக்கள்!

யாழினி அத்தன் said...

நல்ல தகவல் வஜ்ரா.

உங்கள் வலைதளம் ஒரு நல்ல encyclopedia வாக இருக்கிறது. உங்கள் பணியை தொடருங்கள்.

இந்த இடத்திற்கு 10 வருடங்களுக்கு முன் செல்லும் பாக்கியம் கிடைத்தது. நேரில் கண்ட போதுதான், இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சினைளின் ஆழம் கண்கூடாகத் தெரிந்தது. Religious Intolerance அவர்களின் பிர்ச்சினைகளுக்கு அடிகோல் என்று புரிந்த்தது. இந்தியாவையும், இந்தியர்களையும் இரு சாராருக்கும் மிகவும் பிடிக்கும் (especially for their religious tolerance). அதன் இன்னொரு புரம் 2000 வருடங்களுக்கு முன் யேசு வாழ்ந்த போது உயிர் வாழ்ந்த் மரங்கள் இன்னும் இருக்கிறது. கண்கூடாகப் பார்த்தேன். இது உண்மையா இல்லை ஐதீகமா என்று கேட்காதீர்கள்.

நிறைய toursits பயணம் செய்துவிட்டு அங்கேயே தங்கிவிடும் நிலைக்கும் உள்ளாகிறார்கள். இதற்கு "Jerusalem Syndrome" என்று பெயர்.