February 19, 2007

கல்யாணப் பரிசு

சில நாட்கள் முன்பு ndtv ல் bone of contention என்ற பட்டி மன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு, "இந்தியர்கள் திருமணத்திற்காக மிக அதிகமான செலவு செய்கிறார்களா ?". கொல்கத்தாவிலிருந்து வந்த பள்ளி மாணவர்கள் "ஆம்" என்றும், லக்னோ விலிருந்து வந்த பள்ளி மாணவர்கள் "இல்லை" என்றும் வாதிட்டனர்.

கொல்கத்தா வெற்றி பெற்றது.

கொல்கத்தாவிலிருந்து வந்த பள்ளி மாணவர்கள், இந்தியர்கள் தன் சக்திக்கு மீறி செலவு செய்கிறார்கள் என்று சொல்லிவிட்டனர் அதற்கு புள்ளிவிபரம் என்று ஒன்றைக் காட்டினர். ஒரு சராசரி இந்தியன் கல்யாணத்திற்கு, தன் வருமானத்தைவிட 3 மடங்கு அதிகம் செலவு செய்கிறான் அதாவது வருமானம் 12,000$ கல்யாணச்செலவு 34,000 $, ஆனால் ஒரு சராசரி அமேரிக்கனின் வருமானம் 20,000 $ என்றால் கல்யாணச்செலவு 24,000 $ எனபதே அந்தப் புள்ளிவிபரம்.

ஆனால் உண்மையில் என்னைக் கேட்டால் புள்ளிவிபரங்கள் ஒன்றும் சொல்லிவிடவில்லை என்றே கருதுகிறேன். இந்தியர்களுக்கு திருமணம் என்று வரும் போது அதிகமான செலவு தான் செய்கின்றனர். ஆனால் ஒவ்வொன்றும் accountable செலவு. பாத்திரங்கள், சீர், தங்கம், நில புலன் என்றெல்லாம் பார்த்தால் அது செலவு என்று கருத முடியாது.

ஏனென்றால், அதெல்லாம் அன்றாடம் பயன் படக்கூடிய பொருட்கள், தங்கம் என்பது liquifiable asset, நிலம் என்பது investment. இன்றைய ரியல் எஸ்டேட் நிலவரத்தின் படி 5-10 ஆண்டுகளில் ஒரு கிரவுண்டின் விலை 10 மடங்கு கூட ஏறும். பண வீக்க விகிதத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தாலும் நிச்சயம் இலாபம் தான். சீராக வரும் பாத்திரம் எல்லாம் வீட்டில் பயன்படுத்தத்தான் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

ஆனால், அமேரிக்கர்கள் திருமணச்செலவு என்று செய்வது குறைவு என்றாலும், ஒவ்வொரு டாலரும், இசை, பாட்டு, தண்ணி என்று செலவு செய்யப்படுகின்றது. Fixed asset செலவே அதில் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அது car அல்லது வேறுவிதமான பொருளாக இருக்கும். அதை பின்னாளில் விற்றால் குறைந்த் விலையில் தான் விற்க முடியும். Flat, villa பொன்ற பரிசுகள் பெற பணக்காரப் பெண்ணைத் (ஆணைத்) திருமணம் செய்து கொண்டால் தான் கிடைக்கும்.

இதையெல்லாம் அந்த லக்னோவிலிருந்து வந்தவர்கள் அதிக அழுத்தம் கொடுத்துச் சொல்லவில்லை. அவர்கள் over defensive ஆகவும், புள்ளி விபரமே தவறு என்று வாதிட்டு தோற்றுப் போயினர்.

தமிழ் வலைப்பதிவுலகில் என்ன நினைக்கிறார்கள் ? இந்தியர்கள் திருமணத்திற்கு மிக அதிகச் செலவு செய்கிறார்கள் என்றா ?

16 comments:

சிறில் அலெக்ஸ் said...

Nice thought Vajra. I think the fact remains that our marriages involve way too much money, investment or otherwise.

Are American weddings all dance and drinks. I would not totally agree. The very concept of 'giving' a party is not so popular.

They all share the expenses during parties. Also if you include the food expences in our marriages and equate to party expences to US (here food also includes drinks on occations like this) then we do not have much difference, I would say.

on the same note a funeral might turn out to be at least as costly as a wedding. (a Las Vegas wedding would cost even less).

Please note I have not attended any weddings here. I could only guess.

:))

குமரன் (Kumaran) said...

நிச்சயமாக. உறுதியாக. கட்டாயமாக. நம்மவர்கள் அதிகமாகத் தான் திருமணத்திற்குச் செலவழிக்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வதும் சரி தான். அவை பின்னர் பயன்படும் என்பது. அதே நேரத்தில் சில தேவையில்லாத செலவுகளும் செய்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

வடுவூர் குமார் said...
This comment has been removed by a blog administrator.
வடுவூர் குமார் said...

இப்ப தான் புரியுது,என் கல்யாணத்துக்கு அவ்வளவு செலவு பண்ணவில்லை என்று.
எதுக்கும் இதை என் மாமனாருக்கு அனுப்பிவைக்கிறேன்.:-))

Amar said...

There are lies,damn lies and then there are statistics.

கலியான பந்திக்கு செலவு சேய்வது மட்டும் சமுத்ராவுக்கு பிடிப்பதில்லை.

ஏனோ அது மட்டும் உறுத்துகிறது..

இலவசக்கொத்தனார் said...

நம்ம செலவு ஜாஸ்திதாங்க. அதுவும் நாம அழைக்கிற ஆளுங்க எண்ணிக்கையே எங்கயோ போயி நிக்கிது. அது மட்டும் இல்லாம சமுத்திரா சொன்னதையும் சேர்த்து நாம வீணாக்குற விஷயங்கள் எவ்வளவோ. விரைவில் மாறினா நல்லாத்தான் இருக்கும்.

சேதுக்கரசி said...

நட்சத்திர வாழ்த்துக்கள்..

//இந்தியர்கள் திருமணத்திற்கு மிக அதிகச் செலவு செய்கிறார்கள் என்றா?//

ஆமாம். மிக இல்ல. மிக மிக :-)

சீர் செனத்தியெல்லாம் போக கல்யாணத்துக்கு வர்ற கூட்டமும் ரொம்பக் கம்மி தான்.

வஜ்ரா said...

சிறில்,

i attended 3 weddings and a funeral when i was there in israel. (its not a movie title!!)

The number one reason why weddings look less expensive affair outside india is that the weddings are one day event. (or its just one evening)

Here, the sheer number of people is itself mind boggling. Then usually its atleast a 2 day affair. with 3 times a day food.

After all these, How many indian wedding's lasts for a life time and how many American weddings do.

The Divorce rate, and remarriage costs, and alimony if you take into account Americans will be spending a lot more than Indians do.

வடுவூர் குமார்,

அனேகமாக பொண்ணப் பெத்தவங்க எல்லாம் இந்தியர்கள் செலவு செய்கிறார்கள் என்றும், ஆணைப் பெற்றவர்கள் எல்லாம் கலியாணத்துக்கு அதிகம் செலவு இல்லை, எல்லாம் பயன்படுத்தக் கூடிய செலவு தான் என்றும் நிற்கப் போகிறார்கள் என்று நினைக்கிறேன்!! :D


samudra,

//
There are lies,damn lies and then there are statistics.
//

Statistics and Sadistics looks almost the same. !! :D

Anonymous said...

இப்போதெல்லாம் நிறையத்தான் செலவு செய்கிறார்கள் வஜ்ரா...கல்யாண மண்டபம் புக்கிங்,உணவு என்று...50% வீண், 50% உருப்படியான செலவு என்றூ கொள்ளலாம்..

இதை விட கொடுமை சாப்பாடு ( திண்ணுட்டு மண்ணள்ளி போட்டுட்டு போயிருவான், இது அஸ்ஸெட்லே வராது, 100 ரூவா மொய்ய வெச்சுட்டு குடும்பத்தோட உக்காந்து திம்பான்)

என்னைபொறுத்த வரை நான் ஒரு பொண்ணை 'இழுத்துண்டு' ஓடவிருப்பதால் இந்த கணக்கில் நான் இல்லை :))))))

கால்கரி சிவா said...

கல்யாண வயசு பசங்க கல்யாணத்தைப் பற்றி பேசுறீங்க. நடத்துங்கப்பா...

நம் திருமணங்கள் நிலைத்து நிற்கும் மேற்கத்தியர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்கிறார்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெண்ணைப் பெற்றவங்களோ ஆணைப் பெற்றவங்களோ சமமாக செலவு செய்ய வேண்டி இருக்கிறது இப்போதெல்லாம். ஆணின் வீட்டார் பெண்ணுக்கு தாலியும் நெக்லஸும்,புடவையும் வாங்கினோம்.எங்க பக்கத்துல வரவேற்பு வைக்கவும் கல்யாணத்தளவு மண்டபம் சாப்பாடு என்று ஒன்றும் குறையில்லை. குறைத்துக் கொள்ளலாம் தான். ஆளாளுக்கு வாழ்வது ஓரிடம் ....நாலு பேரைக் கூப்பிட்டு சேர்ந்து கொண்டாடுவதும் நல்லாத்தான் இருக்கு.

Sridhar V said...

திருமணம் மட்டும் அல்ல, அதற்கு முன் பெண் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, அதற்கு பின்னர் ஆடி, தீபாவளி போன்ற நிறைய 'திருமண ஒப்பந்த்திற்கு' தேவையில்லாத சடங்குகள், செலவுகள் etc. இதில் கேளிக்கை கொண்ட்டாட்டங்கள் கம்மிதான். சில இடங்களில் வரதட்சினையாக லட்சங்கள் கைமாறும். என்ன... இத்தனைக்கும் நடுவே சம்பந்தப்பட்ட இருவருடைய மன பொருத்தத்திற்கும் கொஞ்சம் மதிப்பளிக்கலாம்.

//i attended 3 weddings and a funeral when i was there in israel. (its not a movie title!!)
//

நல்ல காமெடி :-)))

வஜ்ரா said...

சரியாகத்தான் சொல்கிறீர்கள் முத்துலெட்சுமி அவர்களே,

பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறோம், செலவு தானே..

மேலும், marriage industry என்று ஒன்று தழைக்கிறது இல்லையா....! இதனால் பலர் வேலை வாய்ப்பு பெற்று அவர்கள் குடும்பங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர்.

இதே marriage industry வெளி நாடுகளிலும் இருக்கிறது என்பது உண்மை.

வஜ்ரா said...

calgary,

உண்மைதான்...அதெல்லாம் கணக்கில் எடுத்தால் அவர்களும் நாமும் சரி சமமாகத்தான் செலவுகளைச் செய்திருப்போம்.

thiru said...

//நம்ம செலவு ஜாஸ்திதாங்க. அதுவும் நாம அழைக்கிற ஆளுங்க எண்ணிக்கையே எங்கயோ போயி நிக்கிது.//

கொத்தனார் சொன்னது உண்மை.

வாழ்நாள் முழுதும் உழைத்து ஒரு நாளில் செலவு செய்கிறோமோ?

ஷோபன் said...

நட்சத்திரமாக தேர்வானதற்கு வாழ்த்துக்கள்.

கண்டிப்பாக பெரும்பான்மையான மக்கள் திருமணத்திற்கு மிக அதிகமாகவே செலவிடுகிறார்கள், தங்கள் வருமானத்திற்கும், சக்திக்கும் அப்பாற்பட்டே. சும்மாவா சொல்றாங்க பெரியவங்க "வீட்ட கட்டிப்பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு"னு.