February 21, 2007

GN ராமச்சந்திரன்

மனித, மிருகத்தோலில் இருக்கும் ஒரு விதமான connective tissue வில் இருக்கும் முக்கிய புரதம் collagen. அது எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து முதலில் சொல்லியவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்த GN ராமச்சந்திரன் என்பவர். ஆண்டு 1954.


எர்ணாக்குளத்தில் 1922 ஆம் அண்டு நாராயண ஐயர் என்பவரின் மகனாகப் பிறந்து அங்கேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தவர், திருச்சி St. Joseph's ல் பௌதீகத்தில் B.Sc hons முடித்து 1942ல் பங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திற்குச் சென்றார். அங்கேயே தன் முதுகலைப்படிப்பை முடித்து கேம்ப்ரிட்ஜ்ஜில் W.A.Wooster என்பவருடன் இரண்டாண்டுகள் ஆராய்ச்சிப் படிப்பு முடித்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் பங்களூருக்கே வந்து பௌதீகத்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியைத் துவக்கினார்.





அதே வேளையில் சென்னைப் பல்கலைக்கழகம் அவரை வரவேற்றுக் காத்திருந்ததால் சென்னைக்கு வந்துவிட்டார். ஒரு நாள் ஜே. டி பெர்னல் என்பவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது கொலாஜெனின் மூலக்கூறுகள் அடுக்கப் பட்டுள்ளவிதம் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று எண்ணத்தோன்றியது. உடனே, மத்தியத் தோல் ஆராய்ச்சிக்கழகத்தின் உதவியுடன் collagen ன் மூலக்கூறுகள் எவ்வாறு அடுக்கப் பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து, 1954-55 ல் இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகப் புகழ்பெற்ற nature இதழில் வெளியிட்டார். அதன் காரணமாக புரதங்களின் மூலக்கூறான அமினோ அமிலங்கள் எவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் அமைந்து புரதத்தை உருவாக்குகிறது போன்ற மிக அடிப்படை அறிவு நமக்குக் கிட்ட வழிவகுத்தார்.

அதன் காரணமாக இன்று பயன் படுத்தும் ஒருவித Graph plot க்கு ராமச்சந்திரன் plot என்றே பெயர்.

புரதங்களின் database ஆன PDB ல் புரதங்களின் மூலக்கூறுகள் அடுக்கப் பட்டுள்ள முறை இயற்கையில் சரியானதாக உள்ளதா என்று சரிபார்க்கக் கூட இந்த ராமச்சந்திரன் plot பயன் படுகிறது.





புரதங்களில் அமைந்த அமினோ அமிலங்கள் ஒன்றோடொன்று கொண்ட கோணங்கள் எவ்வாறு அமையக்கூடும் எவ்வாறு அமையக்கூடாது என்பதை உணர முடிந்தது ராமச்சந்திரன் அவர்களின் ஆராய்ச்சியின் விளைவே.

17 comments:

யாழினி அத்தன் said...

சுருக்கமான ஆனால் விஷயம் நிறைந்த அற்புத்மான கட்டுரை.

G. N. Ramachandran, வெகு காலம் இந்திய அறிவியற் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். அங்குள்ள Molecular Biophysics Unit அவரின் நினைவால் துவங்கப் பட்டது. இந்தியாவில் மூலக்கூறு இயற்பியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.
நோபல் பரிசை மயிரிழையில் தப்பவிட்டவர். இந்தியாவில் இருக்கும் ஒரு சில FRS களில் அவரும் ஒருவர்.

-யாழினி அத்தன்

அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி வஜ்ரா அருமையான பதிவு. பாரத அறிவியலாளரின் சாதனைகளை பொதுவாக நமது ஊடகங்கள் கூட வெளிப்படுத்துவதில்லை. நட்சத்திர வாரத்தில் அத்தகையதோர் பதிவினை கொணர்ந்தமைக்கு நன்றி.

மாசிலா said...

நல்ல பதிவு வஜ்ரா.

நான் இவரைப்பற்றி கேள்விபட்டதே இல்லை. சிறிய வயதில் பள்ளிகளில் இவரைப்போன்ற மேதைகளின் பெருமைகளை இருட்டடிப்பு செய்து மேலை நாட்டு விஞ்ஞானிகளின் பெருமையை மட்டும் படிக்க செய்தார்களே! அது ஏன்???

"என்று தனியும் இந்த அடிமையின் மோகம்?"

வஜ்ரா said...

யாழினி அத்தன்,

நன்றி, நோபல் பரிசை மயிரிழையில் தவறவிட்டவர் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

அவர் தவறவிடவில்லை. நோபல் பரிசைத் தரும் பரிசீலணையாளர்கள் இத்தகயதொரு முயற்சியை மிகவும் skeptical ஆகப் பார்த்துவிட்டு இது தவறாக இருக்கும் என்றெண்ணி விட்டனர் என்றே கருதுகிறேன்.

வஜ்ரா said...

அரவிந்தரே,

நன்றி. இவரைப் பற்றி மட்டுமல்ல இவர் கண்டுபிடிப்பைப் பற்றியும் எழுத ஆசை தான். என்ன செய்ய, என் தமிழ் அறிவு மிகப்பெரும் தடையாக இருக்கிறது.

வஜ்ரா said...

மாசிலா,

பள்ளிப்படிப்பில் மூலக்கூறு இயற்பியல் போன்ற துறைகளை அறிமுகம் செய்யும் காலம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இல்லையென்றாலும் இதெல்லாம் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் வரிசையில் வந்தாகவேண்டும்.

இலவசக்கொத்தனார் said...

இவரைப் பற்றி இது வரைக் கேள்விப்பட்டதே இல்லையே. பதிவுக்கு நன்றி வஜ்ரா.

//நோபல் பரிசை மயிரிழையில் தப்பவிட்டவர்.//

இது பற்றிக் கொஞ்சம் விபரமாகவே சொல்லுங்களேன் யாழினி.

Hari said...

Thanks for ur post vajra. It may be kick-off for me in learning some more thing abt BioPhysics.

/*பாரத அறிவியலாளரின் சாதனைகளை பொதுவாக நமது ஊடகங்கள் கூட வெளிப்படுத்துவதில்லை.*/

Repeatu

/*நட்சத்திர வாரத்தில் அத்தகையதோர் பதிவினை கொணர்ந்தமைக்கு நன்றி. */

Repeatu

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையான தகவல்கள் வஜ்ரா, நன்றி.

//என் தமிழ் அறிவு மிகப்பெரும் தடையாக இருக்கிறது. //

பரவாயில்லை வஜ்ரா, தகவல்கள் எங்களை சேரும் வகையில் எழுதுங்கள், ஆங்கிலம் கலந்தாலும் பரவாயில்லை. ஏனெனில் மாசிலா சொன்னதுபோல் இவரை பற்றி படித்ததில்லை. ஏதேனும் சுட்டிகள் இருந்தால் அதனையாவது தந்தருளுங்கள்.

மு. சுந்தரமூர்த்தி said...

Vajra,
Please bear with me for typing in English.

I was pleasantly surprised to see this post. I like to add few more points to your post and comments:

1. GNR first joined the masters program in Electrical Engineering at IISc but then moved to Physics to work with C.V. Raman. He got D.Sc. (equivalent of Ph.D) at IISc in optical crystallography. So he had a doctoral degree before going to Canvendish Laboratory at Cambridge, headed by Sir Lawrence Bragg, where he worked with Wooster in x-ray crystallography.

2. Molecular Biophysics Unit at IISc was not established in his memory. It was rather founded by GNR himself in 1971 and he served as its Chair until 1977/78.

3. It is not entirely true that he was not recognized by the mainstream media. I have seen articles on him in The Hindu and Frontline (last time, during the 50th anniversary of the discovery of collagen triple helix). The reason why such fundamental works don't get recognition is that they are too abstract for mass consumption. People easily grasp inventions or heroic adeventures rather than discoveries in basic science. It is easier for a rocket engineer (like Kalpana Chawla) or 'herbal petrol' inventor to gain instant fame than someone writing equations or drawing molecular structures.

4. In CLRI with which he had close association, an auditorium is named 'triple helix' and there is a statue of triple helix in front of it.

5. As for Nobel, it is controversial. Francis Crick and Alexander Rich also came up with a similar model around the same time. Of course, one school believes that the paper of GNR and Kartha was deliberately delayed to facilitate the publication of Crick & Rich paper.

யாழினி அத்தன் said...

http://www.biospectrumindia.com/content/columns/10603155.asp

Dear All,

Please read this article by CSIR director

Nakkiran said...

என் அறிவுக்கு மீறின சப்ஜெக்ட்.. புரிந்தவரை நன்றாக இருந்த்தது

யாழினி அத்தன் said...

Many Indians feel that GN Ramachandran's work on triple helix should have won him the Nobel prize, but he did not.

http://www.biospectrumindia.com/content/columns/10603155.asp

Clearly his contributions in the field of biophycist are of the Nobel Prize calibre.
http://www.vigyanprasar.gov.in/scientists/GNRamachandran%20.htm

மேற்கண்ட வலைதள்ங்களும் இன்னும் எண்ணற்ற வலைதளங்களும், GNR பெருமையை பறைசாற்றும்.

கால்கரி சிவா said...

புதிய தகவல்கள்.

சுந்தரமூர்த்தி அவர்களும் பல அரிய தகவல்களை அளித்துள்ளார்கள்.

நன்றி

arulselvan said...

வஜ்ரா, நல்ல பதிவு. நீங்களே மூலக்கூறு உயிர் இயல்பியல் துறையில் இருப்பதால் இன்னும் நிறைய எழுதி இருக்கலாம். பிறகு எழுதுங்கள்.
சுந்தரமூர்த்தி சொன்னதற்கு பிற்சேற்கை:
ஜிஎன்ஆர் ஏறக்குறைய இறுதிவரை இந்திய அறிவியல் கழகத்தில்தான் இருந்தார். தனியாக அவருக்கென ஒரு குட்டி துறையே ஏற்படுத்தி இருந்தனர். 80 களில் ஆரம்பித்து அவர் கணிதம் (சிறப்பாக சமண ஏரணம் - Jain Logic) பற்றி பல ஆய்வுகளைச் செய்தார். இயல்பியலிருந்தும் உயிரியலில் இருந்தும் தூர விலகிவிட்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். சென்றவாரம் தான் அவருடைய பழைய புழுதி படிந்த, யாரும் தொடாத ஆய்வுக் கோப்புகளை நூலகத்தில் பிரித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் - மேற்கண்ட அவரது ஏரண முயற்சிகளுக்காக. நீங்கள் இட்ட இப்பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

Anonymous said...

திரு. சுந்தர மூர்த்தி அவர்களே!

உங்கள் மறுமொழி வஜ்ராவின் கட்டுரைக்கு மேலும் ஒர் மைல் கல்.

உங்களை ஒரிரு முறை IISc-ல் நேரில்
பார்த்திருக்கிறேன். உங்கள் தமிழ்ச் சேவையை இளவரசன், தங்கம், குமார் மூலம் அறிந்திருக்கிறேன்.

வாழ்த்துக்கள்

-/சுடலை மாடன்/- said...

இராமச்சந்திரன் வரைபடம் என்பது புரதக் கட்டமைப்பைப் பற்றிய புரிதலுக்கான மிக அடிப்படையான ஒன்று. கொலாஜனுடைய கட்டமைப்பைப் பற்றிய அவர் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதென்றாலும், இராமச்சந்திரன் வரைபடம் மூலக்கூறு உயிர் இயற்பியல் ஆராய்ச்சியிலேயே ஒரு மைல் கல் எனலாம். புரதங்களின் வேதித்தன்மை மற்றும் நீரில் அவற்றின் கட்டமைப்பு ஆராய்ச்சியில் ஆரம்பித்த நான் இந்திய அறிவியல் கழகத்தில் முதன் முறையாக ஒரிரு வாரங்கள் தங்கியிருந்த பொழுதுதான் புரதங்களின் படிகநிலைக் கட்டமைப்புப் பற்றி முதன்முதலாக படித்தேன். அப்பொழுது இராமச்சந்திரன் வரைபடம் என்னை வியப்பிலாழ்த்தியது.

மிக முக்கியமான ஒன்று, அன்று இந்தியாவில் இருந்த மிக அரிதான கணினி வசதியில் இந்தக் கண்டுபிடிப்பைச் செய்ய எத்தனையோ சிரமங்கள் எடுத்திருக்க வேண்டும். நான் ஓஹையோ மாநில பல்கலைக்கழகத்தில் இருந்த பொழுது படிகக் கட்டமைப்பு ஆராய்ச்சியில் புகழ் பெற்ற மறைந்த பேராசிரியர் முத்தையா சுந்தரலிங்கம் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகளின் போது அடிக்கடி கர்வத்துடன் சொல்வார், "எங்க ஊர் இராமசந்திரன் அந்தக் காலத்தில் பனை மரத்தின் அடியில் இருந்து கையில் கணக்குப் போட்டுக் கொடுத்த வரைபடம்தான் இங்கு அதிகணினியில் மூலம் வெளிவரும் தரவுகளைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படை."

இராமச்சந்திரனைப் பற்றிய உயர்வாகப் பேசும் இன்னொரு அமெரிக்கப் பேராசிரியர் சொன்னது, எவ்வளவு தூரம் உண்மையானது என்று தெரியாது. இராமச்சந்திரனுக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். கிடைக்காததற்கு ஒரு காரணம் அவர் உலக அளவில் அறிவியலில் நண்பர்களை உருவாக்கிக் கொண்டதில்லை, கொஞ்சம் அகந்தையாக நடந்து கொள்வார் என்று. அது உண்மையோ இல்லையோ அறிவியல் ஆராய்ச்சி மானியங்களிலும், வெற்றியிலும், நோபல் பரிசிலும் அரசியல் ஒரு காரணி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

உங்கள் நட்சத்திர வாரத்தில் இராமச்சந்திரனைப் பற்றி அதிகம் பேர் அறியத் தந்தமைக்குப் பாராட்டுகள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி