April 29, 2006

மேதா பட்கர் உண்மையாகத் தான் போராடுகிறாரா?

சமீபத்தில் (नर्मदा बचाओ आनदोलन) நர்மதா பச்சாவ் ஆந்தோலன்என்ற அமைப்பு, சர்தார் சரோவர் அணைக்கட்டின் நீர்மட்டத்தை உயர்த்துவதை நிருத்தக்கூறி மேதா பட்கர் தலமையில் போரட்டம் நடத்தியது நினைவிருக்கலாம். அதில் மேதா பட்கர் சாகும் வரை உண்ணாவிரதம் எல்லாம் இருந்தார். அந்த போராட்டம் எதற்காக என்றால், நர்மதா நதியின் குருக்கே அமைந்த சர்தார் சரோவர் அணைக்கட்டின் நீர் மட்டம் உயர்த்தப் படுவதால் நீர் நிலை அருகிலுள்ள கிராமங்கள் மூள்கிவிடும் அபாயம் உள்ளது, ஆகயால் அந்த கிரமத்துவாசிகளுக்கு தகுந்த மாற்று ஏற்பாடு அரசு செய்யவேண்டும் என்ற கோரிக்கையினாலும், அதை அரசு செய்யத் தவரி வருகிறது, ஆகயால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு நடைபெரும் கட்டிட வேலைகளை நிறுத்தக் கோரியும், அணையின் நீர்மட்டம் உயருவதால் காடுகள் அழியும் அபாயம் உள்ளதாலும், என்ற கோரிக்கைகளை வலியுருத்தியே போராட்டம்.

மேதா பட்கர் கூறும் கருத்துக்களில் ஞாயம் இருப்பது உண்மையே, ஆனால், அவர் இந்த கோரிக்கைகளை வலியுருத்தித்தான் போராடுகிறார அல்லது, நாட்டின் முன்னேற்றதிற்கு முட்டுக்கட்டை போட நினைத்து ஒரு hidden agenda வுடன் போராடுகிறாரா?

சமீபத்தில் வெளியான செய்திகள் திகைப்பூட்டும் தகவல்களை அளித்துள்ளன,

தி பயனியர் (The Pioneer) ல் வெளியாகிருக்கும் செய்தி,

Patkar's people no saints, say 228 FIRs
Navin Upadhyay | New Delhi

Battered officials, labourers register their plight against NBA's bully boys and girls----- For an organisation that claims to spearhead a peaceful movement to help rehabilitate persons displaced by the Sardar Sarovar Project (SSP) on the Narmada river, the track record of the NBA is far from flattering.

In addition to a Gujarat High Court directive to the Centre seeking a ban on the NBA for running 'anti-national' activities to roadblock SSP, the Medha Patkar-led outfit is facing more than 200 criminal cases in Madhya Pradesh.

Police records reveal that in eight years, 228 FIRs were filed against the NBA activists for indulging in violent activities and terror tactics to stop the SSP construction.

The obstructive activities of the NBA are also part of the affidavit filed by the Madhya Pradesh Government in the Supreme Court, MP's vigilance department records and Devas police investigations. State Government officials lodged 52 FIRs alleging assault and obstruction at work by NBA activists.

The latest FIR lodged against NBA activists was on April 19, after the visit of the Central team led by Water Resources Minister Saifuddin Soz.

According to the FIR lodged at Dharampur under Dhar district, nearly two dozen activists invaded a rehabilitation centre, manhandled senior Government officials and pelted stones on the labourers.

Ten days before this incident, another FIR was filed against the activists on April 6 at Nisarpur in Dhar district in connection with the beating up of three senior Government officials who visited Bajrikheda village for survey work. NBA activists also shred their clothes.

Even as NBA leaders are beating their chests over the plight of the oustees, the FIRs shows that they made determined attempt to scuttle the rehabilitation exercise. In many cases, officials and workers of the rehabilitation centres were beaten, abused and terrorised. In other cases, Government officials were assaulted for supervising the SSP work and contractors met a similar fate.

Now, the National Council for Civil Liberties (NCCL), on the basis of whose petition the Gujarat HC had asked the Centre to ban the NBA, has approached Prime Minister Manmohan Singh to look into the grave charges of "criminal and seditious activities by the NBA."

In a letter to the Prime Minister on April 23, NCCL president VK Saxena has said that the NCCL fears that NBA is funded and supported by foreign institution to thwart the development in the Country.

Giving detail of the NBA activities, the NCCL has said that while Medha Patkar claims that her Andolan is non-violent, " the grassroot NBA is not only involved in violent activities but is also involved in gross human rights violation in Narmada Valley".

The NCCL letter further points out that though "Ms Patkar has claimed that the Govt. of Madhya Pradesh has failed to provide adequate rehabilitation package to the Project Affected People (PAPs), however we have proved that it is NBA, which is coming in the way of rehabilitation. Government officials engaged in the work of rehabilitation are mercilessly being beaten up by the activists and are prevented from conducting surveys of PAPs. NBA activists have banned entry of Govt. officials in several villages."

The letter also talks of the foreign funding of the NBA, a charge that also figured in Madhya Pradesh vigilance department and police reports.

The NCCL has also enclosed the Gujarat High Court order asking the Centre to consider ban on NBA under Unlawful Activities (Prevention) Act 1967.


Citing police and vigilance reports, the NCCL letter says that "documents established beyond doubt that NBA is merely a mask and the number of support groups working under its umbrella and foreign funds are channelised through these fictitious organisations to thwart the development in the country."





For any comments, queries or feedback, kindly mail us at feedback@dailypioneer.com or pioneerletters@yahoo.co.in


தமிழ்மணத்தில், மேதா பட்கர் ஐயும், அவரது போராட்டத்திற்கும் ஆதரவாக இருக்கும் பலர் உள்ளனர் என்பது தெர்திந்ததே. ஆனால், அவரின் NBA அமைப்பு வெளிநாட்டவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுகட்டை போடுகிறது என்பதை குஜராத் உயர் நீதிமன்றத்தில் சாட்சிகளுடன் நிரூபிக்கபட்டிருக்கிறது. இதற்கு அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? மேல் ஜாதிக்காரர்களின் சதியா?

இந்த நர்மதா பச்சாவ் ஆந்தோலனில், God of small things புகழ் அருந்ததி ராய் பங்கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர்.

31 comments:

-/பெயரிலி. said...

நீங்கள் என்ன சொல்லவருகின்றீர்கள்? அருந்ததி ராய் இந்த விவகாரத்தினால் தம்மீது போடப்பட்ட வழக்கின் பின்னணி குறித்து விளக்கமாக எழுதியிருக்கின்றார். அண்மையிலே காலச்சுவட்டிலும் வந்திருக்கின்றது. அதிலே உள்ள விபரங்களினைபடி என்ன நடந்தது என்பதற்கு மாற்றுப்பக்கப்பார்வையைக் காணலாம்.

ஆனால், எனக்குப் புரியாதது என்னவெனில், மேதா பட்கர் எதன் பொருட்டு நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடை போடமுயல்கின்றார் என்று சொல்கின்றீர்கள்/ என்ன ஆதாரம் அவர் வெளிநாட்டிலே பணம் பெற்றுக்கொண்டு இந்திய முன்னேற்றத்து எதிராகச் செயற்பட்டிருக்கின்றார் என்பதை நிரூபிக்க குஜராத்தின் நீதிமன்றத்திலே வைக்கப்பட்டிருக்கின்றதெனத் தருவீர்களா?

அதுசரி குஜராத்தின் மோடி நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய 'பணி'களிலும் (குறிப்பாக பட்கர் போல 'வன்முறையின்றி') விட மேதா ஏதும் செய்யவில்லை என்பது மெய்யே ;-)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

These are bunch of lies.Daily Pioneer is a pro-BJP pro-Modi paper. If there were so many
complaints against NBA how is that
these are mere FIRs.In how many cases NBA has been implicated or
convicted. The state in India is
so powerful and repressive that
those who attack govt. officials
physcically will not be left to
roam freely. In reality it is the
state that is terrorisning people and NBA.NBA has been the victim of
state supported violence. In gujrat is NBA has been harassed by pro-dam supporters many times.Their office at Vardoa had been attacked.Many times Medha had to leave after attending meetings in Gujrat with police support. The foreign funding is another big lie.No organisation can get funds in its name unless it is registered under FCRA.Medha was awarded a prize and
she donated it to NBA.Like that many have donated to NBA.Medha is
not living in posh house nor NBA is
a rich organisation. NCCL could be
a front organisation of the sangh
parivar.Such accusations are not new.See the reply by Ashis Kothari
in www.narmada.org

வஜ்ரா said...

வாங்க பெயரிலி,

//
அதுசரி குஜராத்தின் மோடி நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய 'பணி'களிலும் (குறிப்பாக பட்கர் போல 'வன்முறையின்றி') விட மேதா ஏதும் செய்யவில்லை என்பது மெய்யே ;-)
//

குஜராத் என்றாலே மோடியய்த் தவிர வேறு யாருமே இல்லாத ஊர் என்ற மாயையய் உண்டு பண்ண வேண்டாம், மேலும் இது மேதா பட்கர் விஷயம், மோடி விஷயம் அல்ல.

பட்கர் "வன்முறையின்றி" செயல் படுகிறார் என்பது, கேள்விக்குறியது. 228 FIRகள் அவர் நடத்தும் NBA மீது. நான் cut-paste செய்துள்ள செய்தியய் பார்க்கவும்.

//
ஆனால், எனக்குப் புரியாதது என்னவெனில், மேதா பட்கர் எதன் பொருட்டு நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடை போடமுயல்கின்றார் என்று சொல்கின்றீர்கள்/ என்ன ஆதாரம் அவர் வெளிநாட்டிலே பணம் பெற்றுக்கொண்டு இந்திய முன்னேற்றத்து எதிராகச் செயற்பட்டிருக்கின்றார் என்பதை நிரூபிக்க குஜராத்தின் நீதிமன்றத்திலே வைக்கப்பட்டிருக்கின்றதெனத் தருவீர்களா?
//

நான் கேள்வியய் தான் கேட்டேன். ஒரு உயர் நீதிமன்றம், NBA தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அதை கவனிக்க.

நாடு முன்னேறுவது நம் காம்ரேடுகளுக்கு பிடிக்காத ஒன்று. அவர்கள் வாழவெண்டும் என்றால், ஏழைகள் தேவை.

ஷங்கர்.

வஜ்ரா said...

வாங்க ரவிஸ்ரீனிவாஸ்,

//
These are bunch of lies.Daily Pioneer is a pro-BJP pro-Modi paper. If there were so many
complaints against NBA how is that
these are mere FIRs.In how many cases NBA has been implicated or
convicted.
//

அவரகள், Pro-BJP என்பதெல்லாம் அவரகள் Editorialல் தான், வெளியிடும் செய்தி, ஒரு சாதாரண செய்தியே.

//
Medha was awarded a prize and
she donated it to NBA.
//

ஹி... ஹி, அந்த பரிசு வாங்குவதே NBA வுக்கு பணம் கொடுக்கத்தான்.

//
NCCL could be
a front organisation of the sangh
parivar
//

சும்மா, அஸுக்கு, குமுக்கு என்று டென்ஷன் ஆகாமல், எதர்க்கெடுத்தாலும் சங் பரிவாரங்களை இழுக்காமல் பதில் சொல்லவும்.

//
Such accusations are not new.
//

இதில் accusation எல்லாம் முடிந்து, conviction ம் முடிந்து, உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸே அனுப்பிவிட்டது.


ஷங்கர்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

NBA is not left group.You dont even know this basic fact.An organisation can be banned by the
Centre under the Act.If the allegations against NBA are so true how come the NDA govt. or any
other govt. did not ban NBA.Human Rights groups have documented how the state unleashed repression
against NBA. Academics have
written about it.There are atleast half a dozen books on Narmada
project, the resistance and the
question of rehabilitation and
resettlement in big dam projects.
There is a study by a senior
bureucrat available on planning
commission site on big dams,
big projects and states indifference to the project
affected people. Try to understand the issues before indulging in copy and paste blogging.

NBA is there for about two decades.
It is not affiliated with any political party.It is obvious that you are biaed against the left.The left extended support to NBA much later.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

இதில் accusation எல்லாம் முடிந்து, conviction ம் முடிந்து, உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸே அனுப்பிவிட்டது

The news report did not say this.
When was NBA convicted and of what.
Can you give details. The prize money was awarded to her in her
individual capacity.

Have you heard of the Morse committee report.If not google
for that and you will know.

சாதாரணன் said...

அன்பு நண்பரே....
ஹிந்து நாளிதழில் வெளியாகும் செய்திகளையும் தயவு செய்து பார்க்கவும். இன்றைய தினம் வெளியான செய்தி இதோ.

NEW DELHI: A Sardar Sarovar Project Status Report submitted by the Union Water Resources Ministry to the Prime Minister's Office on March 22 — after Narmada Bachao Andolan activists went on an indefinite dharna here — nails the claims of the States concerned on rehabilitation of dam-displaced families.

The report reveals that 36,921 families in 226 villages in Gujarat, Madhya Pradesh and Maharashtra will be affected consequent to the raising of the height of the Narmada dam. Even at the existing height of 110.64 metres, 27,934 families were affected in 186 villages in the three States. The Hindu has obtained the report exclusively.

Even when the Centre was armed with this crucial, authentic information, it sought to put the burden of proving the number of displaced families on the NBA. The NBA protested against raising the height of the dam, saying about 35,000 displaced families between the heights of 110.64 and 121.92 metres remained to be rehabilitated.

The Narmada Control Authority on March 8 permitted the Gujarat Government to raise the height to 121.92 metres, based on the rehabilitation reports submitted by the States concerned.

The Status Report reveals that of the 27,934 families affected at the height of 110.64 metres, 3,578 were in Gujarat, 2,663 in Maharashtra and 21,693 in Madhya Pradesh. At 121.92 metres, 4,726 families in Gujarat, 3,453 in Maharashtra and 28,742 in Madhya Pradesh will be affected. It clearly shows that 13,233 families remained to be resettled in Madhya Pradesh at 110.64 metres. The number of families who will be affected at the proposed height of 121.92 metres is 11,638.

However, the Centre in its application filed in the Supreme Court on April 17, claimed that all the affected families up to the height of 121.92 metres were resettled in the three States.

The Narmada tribunal award and the Supreme Court held that families facing submergence should be rehabilitated at least six months ahead of raising the dam height, by December 31, 2005. The report says that of Rs. 20,546 crore spent on the project by December 2005, the Centre provided Rs. 4,302.75 crore, including Rs. 226.50 crore as grant, to Gujarat under the Accelerated Irrigation Benefit Programme . The other beneficiary States, Madhya Pradesh, Maharashtra and Rajasthan, together contributed Rs. 5,240 crore. In effect, Gujarat spent only Rs. 10,918 crore till December 2005.

The NBA has demanded suspension of construction of the dam until the rehabilitation of the displaced families is completed as per the law and not with cash compensation.

வஜ்ரா said...

வாங்க முருகன், வருகைக்கு நன்றி. செய்தியை லிங்காக கொடுத்திருக்கலாமே! ஒரு suggestion தான்!!

திரு. ரவிஸ்ரீனிவாஸ் அவரகளே, நான் கேள்வியை தான் கேட்டேன். சத்தியமாக.!

//
மேதா பட்கர் கூறும் கருத்துக்களில் ஞாயம் இருப்பது உண்மையே, ஆனால், அவர் இந்த கோரிக்கைகளை வலியுருத்தித்தான் போராடுகிறார அல்லது, நாட்டின் முன்னேற்றதிற்கு முட்டுக்கட்டை போட நினைத்து ஒரு hidden agenda வுடன் போராடுகிறாரா?
//

//
தமிழ்மணத்தில், மேதா பட்கர் ஐயும், அவரது போராட்டத்திற்கும் ஆதரவாக இருக்கும் பலர் உள்ளனர் என்பது தெர்திந்ததே. ஆனால், அவரின் NBA அமைப்பு வெளிநாட்டவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுகட்டை போடுகிறது என்பதை குஜராத் உயர் நீதிமன்றத்தில் சாட்சிகளுடன் நிரூபிக்கபட்டிருக்கிறது. இதற்கு அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? மேல் ஜாதிக்காரர்களின் சதியா?
//

இது தான் நான் கேட்ட கேள்வி. உடனே, என்னை ஒரு பக்கச் சாய்வு உள்ளவன், இடது சாரிகளின் எதிரி, என்று நீங்கள் பயங்கரமாக சத்தம் போடுகிறீர்கள். !! அது ஏனோ?

//
நாடு முன்னேறுவது நம் காம்ரேடுகளுக்கு பிடிக்காத ஒன்று. அவர்கள் வாழவெண்டும் என்றால், ஏழைகள் தேவை.
//

இதற்காகவா? NBA வுக்கு கம்மியூனிஸ்டுகள் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு நல்ல எண்ணத்துடன் துவக்கி இருக்கலாம், இப்போது நிலை வேறாக இருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.

ஷங்கர்.

வஜ்ரா said...

தெளிவான இந்த ஆங்கிலப் பதிவைப் பார்கவும்,

இருபக்கத்து ஞாயங்களையும், NBA விடம் என்ன தவறு இருக்கிறது என்ற விஷயத்தையும் அலசி எழுதப்பட்டிருக்கிறது.

ஷங்கர்.

வஜ்ரா said...

தலித் எழுத்தாளாரான, சந்திரபன் பிரஸாத்,

NBA is known as Patidar's [an equivalent of Thevars in Tamil Nadu, or Kammas of Andhra Pradesh] Land Bachao Andolan [PLBA] in the Valley, Rehabilitation Andolan in Delhi, and Save Environment Movement in London and elsewhere in Europe. NBA talks of Gandhism, it opposes modernity. It glorifies the past, in the same manner as the RSS does. For the Dalits, the past was more cruel, local institutions are more oppressive. Modernity has given Dalits some relief. NBA is supported by bored house-husbands/ bored housewives of Savarnas, and its cadres are the spoilt brats of the urban elite. Arundhati Roy and Medha Patkar represent the most ugly face of the Brahman world.

நர்மதா நதிக்கரையில் வாழும் நிலச்சுவாந்தார்களைக் காப்பாற்றத் தான் இந்த நர்மதாவை காப்பாற்றும் போராட்டம் என்கிறார்.

அருந்ததி ராய், மேதா பட்கர் போன்றவர்கள் பிராமணத்துவத்தின் மோசமான பரிமாணத்தைக் காட்டும் எடுத்துக் காட்டுகள் என்றும் சாடுகிறார்.

ஷங்கர்.

-/பெயரிலி. said...

"நான் கேள்வியய் தான் கேட்டேன்" என்கிறீர்கள். ஆனால், நீங்கள் கேள்வியாகக் கேட்டவை, 'இதற்கு அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? மேல் ஜாதிக்காரர்களின் சதியா?";

ஆனால், "ஆனால், அவரின் NBA அமைப்பு வெளிநாட்டவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுகட்டை போடுகிறது என்பதை குஜராத் உயர் நீதிமன்றத்தில் சாட்சிகளுடன் நிரூபிக்கபட்டிருக்கிறது" என 'வாக்குமூலமே'தான் கொடுத்திருக்கின்றீர்கள். "குஜராத் நீதிமன்றத்திலே சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறதே" என்று சொல்லி அதன்வழியே அதை முழுமையான எடுகோளாகக் கொண்டு தர்க்கம் செய்யும் நீங்கள், அந்தச்சாட்சியங்கள் எவையெனத் தெரிந்திருக்கவேண்டும். அதனாலேதான் அவற்றினை நீங்கள் எல்லோரின் முன்னாலும் வையுங்கள் எனக் கேட்கிறேன். இதிலே எதுவும் தவறில்லையென்பதை அறிவீர்கள். நீங்கள் அறியாத ஒன்றினை அப்படியாக ஒன்று இருக்கின்றதென வாசித்தவுடன் நம்பிமட்டும் எடுகோளாக்கிப் பதிவு போட்டுக் கேள்வி கேட்டிருப்பீர்கள் என நான் எண்ணவில்லை.

குஜராத் என்றவுடன் மோடி இங்கே ஞாபகம் வந்துதான் ஆகவேண்டும்; ஏனெனில், மேதா பட்கருக்கு எதிர் உண்ணாவிரதம் இருந்தவர் அவர்தான். இதனைக் குறிப்பிடுவதிலே என்ன தவறு?

அடுத்ததாக, மேதா பட்கரின் நர்மதா அணை குறித்த போராட்டத்துக்கும் சாதி குறித்த உங்கள் தொடரும் தொடர்புபடுத்தலுக்கும் என்ன சம்பந்தமோ? மேற்சாதியினர் குறித்த இட ஒதுக்கீட்டிலே மும்முரமாக இட ஒதுக்கீடு வேண்டாமென்கிற ரவி ஸ்ரீனிவாஸே உங்களுக்குத் தெளிவாக விளக்கம் சொல்லியிருக்கின்றார். (சீனிவாசு அண்ணே ஒரு வாதத்துக்குத்தான். அடிக்காதீங்கோ ;-) அவரையும் போய் மேற்சாதியினரின் சதியெனச் சொல்கின்றவர்கள் என்பதாக சட்டத்துள்ளே முகத்தைமாட்டிச் சுவரிலே தொங்கவிட்டுப் போகாதீர்கள்.

பிரமாண்டத்தின் அளவிலே இல்லாதபோதுங்கூட, ஒருவிதத்திலே சீனாவின் முக்கணவாய்த்திட்டமும் இந்தியாவின் நர்மதாத்திட்டமும் ஒத்துப் பார்க்கப்படக்கூடியவை. ஆனால், அவை செயற்படுத்தப்படும் விதத்திலும் அவற்றுக்கான எதிர்ப்பினைக் காட்டும் விதத்திலும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சீனாவிலே இப்படியாக எதிர்நடவடிக்கைகளெனப் பேசிக்கொண்டிருக்கமுடியாது - சட்ட ரீதியிலோ அல்லது சாதாரண மனித எதிர்ப்புப்போராட்டமாகவோ. குறுகிய காலகட்டத்திலே இந்நிலை சீனாவின் சிறப்பெனத் தோன்றினாலுங்கூட, நீண்டகாலகட்டத்திலே அப்படியாகத் தோன்றவில்லை. அணை கட்டுதலும் நீரைத் தேக்குதலும் திறந்துவிடுதலுமென்பது ஒரு நீர்ப்பிரதேசத்தின் நீர் சம்பந்தப்பட்ட இயல்பினைமட்டும் மாற்றும் விடயமில்லை. கூடவே, இயற்கை, உயிரங்கிகள், சமூகநிலை, பொருளாதார நிலை, தனிமனித உளநிலை எல்லாவற்றிலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற செயற்பாடு. இதுபோன்ற இலங்கையின் (அளவிலே சிறிதானது என்றாலுங்கூட) கொத்மலைத்திட்டம், பொல்கொல்ல திட்டத்தின் விளைவான சமூகமாற்றங்கள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேதா பட்கரை இதை நிறுத்தும்படி வசதிபடைத்த எந்த வெளிநாட்டிருந்தும் பணம் கொடுக்கப்போவதில்லை. ஏனெனில், அதனாலே பாதிக்கப்படப்போவது இக்கட்டுமானத்திலே ஈடுபடப்போகிற, இலாபம் பெறப்போகும் மேல்நாட்டு கட்டுமானநிறுவங்களே. இதற்கு சிறந்த உதாரணமாக, சீனாவிலே முக்கணவாய்த்திட்டத்திற்கான உதவியினை சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதத்தினை முன்னிறுத்தி உலகவங்கியும் சர்வதேச நிதியமைப்புகளும் நிறுத்தியபோது, கவலைப்பட்டவை பெருங்கட்டுமானநிறுவனங்களே. இதே நிலைதான் இந்தியாவிலும் (பெருங்கட்டுமான நிறுவனங்களின் பங்கு 'நடைமுறையிலேயிருக்கும்' சீனா போலில்லாது மட்டுப்படுத்தப்பட்டாலுங்கூட) இருக்கின்றது. இந்நிலையிலே, மேதா பட்கருக்கு வெளிநாடு நிதி கொடுத்து நிறுத்த விரும்புகின்றதென்பது நம்பமுடியாதது.

-/பெயரிலி. said...

இதுதொடர்பான தொடுப்புக்கு நன்றி. வாசித்துவிட்டு தொடர்ந்து எழுதவேண்டின், எழுதுவேன்

வஜ்ரா said...

ஆ ஊ என்றால், மேல் ஜாதிக்காரர்களின் சூழ்ச்சி, சதி என்பது, அடிக்கடி கேட்டதன் விளைவே அந்த வரி.

கோபப படவேண்டாம், நான் சொல்லவந்தது,

1985 ல் நுளைந்த மேதா பட்கர், அப்பொழுது உண்மையாகவே, கிராமத்து (பாதிக்கப் படக்கூடிய) மக்களுக்காக போராடினார். அதை நான் மறுக்கவே இல்லை.

1989 க்குப் பிறகு, அவருக்கு என்ன ஆயிற்றி என்றே தெரியவில்லை. திடீர் என்று, "In harmony with nature" ஆக வாழவேண்டும், கிராமத்து மக்கள், கிராமத்திலேயே வாழ வேண்டும், கீழ் தட்டு மக்கள் (முக்கியமாக தலீத் மக்கள்) அவர்கள் இப்பொழுது வழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே வாழவேண்டும் என்று ஒரு தீவிரமான கொள்கையய் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டார்.

பெரிய அணை கட்டுகளினால் சீரழிவே அதிகம் என்ற சித்தாந்தத்தைக் கடை பிடிக்க ஆரம்பித்து விட்டார். அவர்கள், இந்த நிலையய் நியாயப் படுத்தும் நோக்கில் செலவிடும் பணத்தையும், நேரத்தையும், உழைப்பையும் உண்மையாக இடம் மற்றம் செய்யப் படவேண்டிய மக்களுக்கு ஒழுங்காக Compensation வழங்கப் படுகிறதா என்று நோக்கில் செலவிட்டிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது.

//
ேமதா பட்கருக்கு வெளிநாடு நிதி கொடுத்து நிறுத்த விரும்புகின்றதென்பது நம்பமுடியாதது.
//
The HC had observed that the Centre should consider a ban on the NBA under the Unlawful Activities (Prevention) Act, 1967, for its alleged role in attempting to hamper the development of the country by opposing the Narmada and other dam projects.
..
Arrest of Rahul Banerjee, who is associated with the NBA, and his wife by the police and subsequent seizure of their computers showed the "NBA received foreign assistance from the Right Livelihood Foundation and the Goldman Foundation to run the Jan Sahyog Trust and the NBA Secretariat, and the money was given to other constituent organisations too. NBA used the amount received from the Goldman Foundation to meet huge expenses for lobbying in America."

The report further pointed out that while the "Goldman Foundation has been giving funds to Narmada Bachao Andolan, at the same time Rahul Bannerji's brother worked with the Goldman Investment Company in New Jersey, USA."

இதுவும் தி பயனியர் ல் வெளியான செய்திக்குறிப்பு தான். இதை, ஏதோ ப.ஜ.க கட்சியின் சூழ்ச்சி என்று சொல்லாமல், நிதானமாக யோசித்து பதில் எழுதுங்கள்.

இது The Tribune India வில் வந்த செய்திக் குறிப்பு.

ஷங்கர்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

If NBA has violated rules of FRCA let the govt. proceed against them.
The whole world knows the vindictive attitude of Gujrat
government against NBA.RSS hates
NBA, so does BJP.

To know about Goldman prize see this site
http://www.goldmanprize.org/

I dont think that this is anyway connected with goldman investments. You seem to be so
biased that you are unwilling to check facts or understand the issue.Some dalit intellectuals are
against NBA.NBA supports the cause of project affected people including tribals and others.
It does not work on caste lines.
You can check www.narmada.org for
details about the struggle in the
narmada valley. There are books and
articles.Both EPW and seminar have
carried many articles on NBA, big dams and displacement.If you want to know the facts and understand
the issues you better read.

As far as I know there has been no
recommendation to ban NBA under that Act.If NBA has violated the laws of the land and indulged in
unlawful activities the centre
would have banned it long ago.

Remember one fact, NBA has been
opposing this for about two decades and it has never been
supported by any of the governments
in the centre or states.

-/பெயரிலி. said...

/திடீர் என்று, "In harmony with nature" ஆக வாழவேண்டும், கிராமத்து மக்கள், கிராமத்திலேயே வாழ வேண்டும், கீழ் தட்டு மக்கள் (முக்கியமாக தலீத் மக்கள்) அவர்கள் இப்பொழுது வழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே வாழவேண்டும் என்று ஒரு தீவிரமான கொள்கையய் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டார்./

இது மிகவும் எளிய சூத்திரமாகவும் சுழிப்பாகவும் நீங்கள் உங்கள் சொற்களிலே தருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. "கிராமமக்கள் கிராமத்திலேயே வாழவேண்டும்; கீழ்த்தட்டுமக்கள் (குறிப்பாக தலித் மக்கள்) அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையிலேயே தொடரவேண்டுமென்பதாக எங்கே அவர் குறிப்பிட்டிருக்கின்றார் என்றால், காட்டுங்கள். நீங்கள் சொல்வதினை ஏற்றுக்கொள்கிறேன். ஆறு ஆண்டுகளாக நர்மதா- தேக்ரி, மேதா பட்கர், சுந்தர்லால் பகுகுணா பற்றி தொடர்ச்சியாக இல்லையெனினும், அவ்வப்போதாவது இந்திய-பிறநாட்டு ஊடகங்களிலே வாசித்தும் தொலைக்காட்சிவிவரணங்களைப் பார்த்தும் வருகின்றேன். என் நினைவுக்கு எட்டிய வகையிலே எந்த இடத்திலும் நீங்கள் சொன்னதுபோல அர்த்தத்திலே மேதா பட்கர் கருத்து வெளியிட்டதாக அறியேன். சம்பந்தப்பட்ட இடங்களிலே வாழும் மக்களின் விரும்பாத இடப்பெயர்வு என்பதுதான் நிதர்சனம்.

/பெரிய அணை கட்டுகளினால் சீரழிவே அதிகம் என்ற சித்தாந்தத்தைக் கடை பிடிக்க ஆரம்பித்து விட்டார். /

நெடுங்காலநோக்கிலே அதுதான் உண்மை. அமெரிக்காவின் ஹூவர் அணைக்கட்டு தொடக்கம் நேபாளம், இலங்கை ஆகியவற்றின் நீர்மின்சாரம், நதி திருப்புத்திட்டங்களின் நோக்கிலான அணைக்கட்டுகளின் பின்விளைவுகள் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தொடுப்புகள் கிடைப்பின் சுட்டுகிறேன்.

வெளிநாட்டுநிதி தொடர்பாக கருத்துகளிலே உங்கள் தொடுப்புகளிலே விபரமாக வாசித்தபின்னால், எழுதுகிறேன்.

-/பெயரிலி. said...

wide angle விவரணத்திலே இப்பிரதேசத்துக்கிராமவாசிகள் தமது பிரச்சனைகளைக் கூறுவது ஞாபகமிருக்கின்றது. இவ்விவரணம் கிடைத்தால் பாருங்கள்.

இன்னொன்று பாக்கிஸ்தானிய-பிரிட்டிஷ் இடதுசாரி(தான்) தாரிக் அலி ஆசிரியராக இருந்து நடத்தும் New left Review இலே வந்த நெடுங்கட்டுரை. இதிலே தங்கள் நிதி எங்கிருந்து வருகின்றதென்பது குறித்து NBA சொல்வதைக் கவனியுங்கள்.

தொடர்ந்து அவதானித்த ஊடகவிவரணங்கள், கட்டுரைகளிலே இவை இரண்டுமே எனக்கு விரிவான அறிதலைத் தந்தவை.

வஜ்ரா said...

//
நீங்கள் சொன்னதுபோல அர்த்தத்திலே மேதா பட்கர் கருத்து வெளியிட்டதாக அறியேன்.
//

சம்பந்தப்பட்ட மக்களே rehabilitation ஐ ஏற்றுக் கொள்ளும் போது, அதை NBA அமைப்பினர் ஏன் தடுக்க வேண்டும்? அவர்கள் அப்படி நினைப்பதினால் தானே!

//
சம்பந்தப்பட்ட இடங்களிலே வாழும் மக்களின் விரும்பாத இடப்பெயர்வு என்பதுதான் நிதர்சனம்.
//


நிச்சயமாக, சொந்த நிலமில்லாத கூலி வேலை பார்பவர்கள், நிலத்துடன் Rehabilitation கிடைக்கும் போது வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். கிராம மக்கள் முன்னேற வேண்டாமா? அதை தடுப்பதற்கு மெதா பட்கர் யார்?


//
நெடுங்காலநோக்கிலே அதுதான் உண்மை. அமெரிக்காவின் ஹூவர் அணைக்கட்டு தொடக்கம் நேபாளம், இலங்கை ஆகியவற்றின் நீர்மின்சாரம், நதி திருப்புத்திட்டங்களின் நோக்கிலான அணைக்கட்டுகளின் பின்விளைவுகள் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தொடுப்புகள் கிடைப்பின் சுட்டுகிறேன்.
//

முன்னேறிய நாடுகளில் நீங்கள் கூறுவது போல், பெரிய அணைக்கட்டுகள் அதிக பலன் தராமல் இருக்கின்றன என்ற கருத்து ஒரு fashion போல் படித்த மக்களிடையே இருப்பது உண்மை.

இந்திய முன்னேற்றத்திற்கு இந்த Fashion எல்லாம் தேவையில்லை, தேவை, அடிப்படை கட்டமைப்பு. அது அமைவதைத் தடுப்பவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பவர்கள்.

ஷங்கர்.

-/பெயரிலி. said...

/சம்பந்தப்பட்ட மக்களே rehabilitation ஐ ஏற்றுக் கொள்ளும் போது, அதை NBA அமைப்பினர் ஏன் தடுக்க வேண்டும்? அவர்கள் அப்படி நினைப்பதினால் தானே! /

மேதா பட்கருக்காக நான் எப்படியாகப் பேசமுடியாதோ, அதுபோலவே அவர் இப்படியாகத்தான் எண்ணுகிறார் என்பதாக நீங்களும் 'ஊகித்துக்கொண்டு' அதை அவர் கருத்தாகவே எழுத முடியாது.

நிவாரணம், மீள்குடியேற்றம், மக்கள் அவற்றினை 'ஏற்றுக்கொள்ளுதல்' என்பவற்றுக்கிடையேயான தொடர்புகள் குறித்து மிகவும் எளிதான கூட்டல்கழித்தற்சமன்பாடுகள் போடுகின்றீர்களோ எனத் தோன்றுகின்றது. "மக்களே மீள்குடியேற்றத்தை ஏற்றுக்கொள்ளும்போது" எனும்போது எதை வைத்துச் சொல்கின்றீர்கள்? அவர்களின் நேர்காணல்களைச் சுட்டுகின்றீர்களா? எச்சூழ்நிலையிலே ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று சுட்டமுடியுமா? இலங்கையின் பொல்கொல்ல திட்டத்தின் விளைவாக குண்டகசாலை என்ற இடத்தின் குறிப்பிட்ட பகுதி நீரிலே மூழ்கியபோது, இவ்வாறான இடப்பெயர்வுகள் எண்பதுகளிலே நிகழ்த்தப்பட்டன. அதன் விளைவாக அங்கே வாழ்ந்த சமூகத்தின்மேலே கவிந்த அழுத்தத்தின்மீதான ஆய்வு அவதானிப்புகளை வாசித்திருக்கிறேன். வயோதிபர்களின் தற்கொலை தொடக்கம் நிறையவே நிகழ்ந்திருக்கின்றன. இதற்குச் சமனான சீனாவின் முக்கணவாய்த்திட்டத்தின் விளைவுகளையும் வாசித்திருக்கிறேன். தொழில்நிமித்தம், ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குப் பெயர்ந்தும் ஏற்றுக்கொண்டும் (அதன்பிறகும் அவ்வப்போது பழையது எண்ணிக் கவிதை படைக்கும்) மத்தியகுடியினரின் பார்வையிலே இருந்து கொண்டு நாம் ஆதிவாசிகளினதும் இந்தியக்கிராமங்களினதும் உளப்போக்குகளையும் மகிழ்ச்சி என்பதனையும் நிர்ணயப்படுத்திவிடமுடியாது. இதற்காக, கிராமத்தான் கிராமத்திலேயே இருக்கவேண்டுமென நினைக்கிறேன் என்று என் கருத்தினைக் கோணற்படுத்திவிடாதீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையிலே சிலவற்றினை எதிர்பார்த்து வாழ்கிறார். கிராமத்திலே இருக்கின்றவனின் எதிர்பார்ப்பும் நகரத்திலே இருக்கின்றவனின் வாழ்க்கை குறிந்த்த எதிர்பார்ப்பும் முழுமை என்பது குறித்தான பார்வையும் ஒன்றல்ல. இயல்பாகவே ஒரு கிராமத்தான் விரும்பி, இடம் மாறிப்போகின்றான் என்பது ஒன்று; அணைக்கட்டின் காரணமாக நிர்ப்பந்திக்கப்படுத்தப்பட்டு இடம் பெயர்க்கப்படுகின்றான் என்பது இன்னொன்று. எதிர்க்க வலுவும் மாற்றுநிலையும் இல்லாதவனுக்கு ஏற்றுக்கொள்ளுதல்தான் இருக்கும் ஒரே வழி. இப்படியான நிலை வரும்போது அதை "சம்பந்தப்பட்ட மக்களே rehabilitation ஐ ஏற்றுக் கொள்ளும் போது, அதை NBA அமைப்பினர் ஏன் தடுக்க வேண்டும்" எனச் சுருக்கி முடிபாகக் காட்டாதீர்கள்.

/முன்னேறிய நாடுகளில் நீங்கள் கூறுவது போல், பெரிய அணைக்கட்டுகள் அதிக பலன் தராமல் இருக்கின்றன என்ற கருத்து ஒரு fashion போல் படித்த மக்களிடையே இருப்பது உண்மை./

ம்.... it is not only fashion in concept, but also the bread and butter for some bloggers ;-)

முன்னேறும் நாடுகளினதும் முன்னேறிக்கொண்டிருக்கும் (அதாவது, பின் தங்கிநிற்கும்) நாடுகளினதும் நோக்குகளும் தேவைகளும் வேறுபடுகின்றன என்பதை ஒத்துக்கொள்கிறேன். அவ்வகையிலே நீரணை என்பதன் தேவை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் வேறுவேறென ஒத்துக்கொள்கிறேன். (சொல்லப்போனால், அணைகளின் விளைவுகள்கூட அணையின் உயரம், கொள்ளளவு, அணையமையும்கூறு, சாய்வு, அதன் அமைவிடப்புவியியல் என்பதற்கேற்ப மாறுபடும்) ஆனால், அதற்காக அணைகளின் பின்விளைவுகளை இல்லையென மறுக்கத் தேவையில்லை.

வஜ்ரா said...

//
மேதா பட்கருக்காக நான் எப்படியாகப் பேசமுடியாதோ, அதுபோலவே அவர் இப்படியாகத்தான் எண்ணுகிறார் என்பதாக நீங்களும் 'ஊகித்துக்கொண்டு' அதை அவர் கருத்தாகவே எழுத முடியாது.
//

okay... நீங்கள் சொல்வது போல அது ஒரு யூகமாகவே இருக்கட்டும். ஆனால், NBA அமைப்பினர் மீள்குடியேற்றத்தை ( நன்றி, அந்த நல்ல தமிழ் வார்த்தைக்கு) தடுத்தது உண்மை தானே. அது ஏன். அவர்கள், மக்கள் நலனைப் பார்த்தால் இப்படி செய்திருக்க மாட்டார்கள் தானே! ஏற்றுக் கொள்ளாதவர்களுக்குச் சரி. ஏற்பவர்களை ஏன் தடுக்க வேண்டும். அல்லது கொடுக்கவரும் அரசு ஊளியர்களை ஏன் துன்புருத்த வேண்டும்? அது அவர்கள் வேலையா?

//
Even as NBA leaders are beating their chests over the plight of the oustees, the FIRs shows that they made determined attempt to scuttle the rehabilitation exercise. In many cases, officials and workers of the rehabilitation centres were beaten, abused and terrorised. In other cases, Government officials were assaulted for supervising the SSP work and contractors met a similar fate.
//

நீங்கள் சொல்வது போல் மீள்குடியேற்றம் சுலபமான விஷயம் அல்ல, மறுப்பதற்கில்லை. ஆனால், இன்றல்லது, நாளை முன்னேற நினைப்பவர்கள் இடம் பெயர்ந்து தானே ஆகவேண்டும். சும்மா, உள்ளிருந்து நாம் முன்னேறிவிடலாம் (development from inside) என்ற "உடான்ஸ்" எல்லாம் கேட்டு கேட்டு புளித்து விட்டது. :-)

//
it is not only fashion in concept, but also the bread and butter for some bloggers ;-)
//

நல்லா இருக்கே! "உங்க ஊத்துக்கு" நாட்டின் முன்னேற்றம் தான் "ஊறுகாயாக" வேண்டுமா!!!

ஷங்கர்.

நிச்சயமாக மாற்று ஏற்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை சாட்சியங்களுடன் விரைவிலேயே பின்னூட்டமாக இடுகிறேன்.

-/பெயரிலி. said...

/ஆனால், இன்றல்லது, நாளை முன்னேற நினைப்பவர்கள் இடம் பெயர்ந்து தானே ஆகவேண்டும். சும்மா, உள்ளிருந்து நாம் முன்னேறிவிடலாம் (development from inside) என்ற "உடான்ஸ்" எல்லாம் கேட்டு கேட்டு புளித்து விட்டது. :-)/

&

/நல்லா இருக்கே! "உங்க ஊத்துக்கு" நாட்டின் முன்னேற்றம் தான் "ஊறுகாயாக" வேண்டுமா!!! /

;-)
அவ்வளவுதான் என்னாலே சொல்லமுடிந்தது. நாட்டிலே எல்லோரின் முன்னேற்றத்தினையும் விருப்புவெறுப்பினையும் நீங்களே நிர்ணயிப்பதெனத் தீர்மானித்திருப்பதாகத் தோன்றுவதால், நாடு எந்தசேதமுமில்லாமல் முழு மாங்காயாகவே பெல்லிடான்ஸு ஆடிக்கொண்டே இருந்துவிட்டுப்போகட்டும். :-) ஆளை விடுங்கள். ;-)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

The harsh fact is rehabilitation has been a cruel joke in this project.The same is true of most big dam projects in India.You are
unwilling to read anything except what the opponents of NBA say.
There is no point in arguing with a biased person like you.

வஜ்ரா said...

//
அவ்வளவுதான் என்னாலே சொல்லமுடிந்தது. நாட்டிலே எல்லோரின் முன்னேற்றத்தினையும் விருப்புவெறுப்பினையும் நீங்களே நிர்ணயிப்பதெனத் தீர்மானித்திருப்பதாகத் தோன்றுவதால், நாடு எந்தசேதமுமில்லாமல் முழு மாங்காயாகவே பெல்லிடான்ஸு ஆடிக்கொண்டே இருந்துவிட்டுப்போகட்டும். :-) ஆளை விடுங்கள். ;-)
//

என்னங்க அனியாயமா இருக்கு. இதே மாதிரி, நாட்டின் முன்னேற்றத்தையும், மக்களின் விருப்பு வெறுப்பையும் மேதா பட்கரே அல்லது அவரது ஆதரவாளார்களே நிர்ணயிப்பது என்று தீர்மானித்து விட்டார்கள் என்று தோன்றுகிறது எனக்கு!! :-)

//
நாடு எந்தசேதமுமில்லாமல் முழு மாங்காயாகவே பெல்லிடான்ஸு ஆடிக்கொண்டே இருந்துவிட்டுப்போகட்டும். :-)
//

இது ஒரு விவாதத்திற்கு என்று தான் வைத்துக் கொண்டாலும், யோசித்துப் பார்த்தால், அத்தகய "Stalemate" வராமல் இருப்பது தானே நாட்டிற்கு நல்லது? அதில் உங்களுக்கு மற்று கருத்து இருக்காது என்று நம்புகிறேன்!! இந்த விஷயத்தில், அத்தகய "stalemate" க்கு காரணம் இருபக்கமும் இருக்கிறது.

ஷங்கர்.

வஜ்ரா said...

Ravisrinivaas,

Let me tell you one thing, We are not here to discuss why BJP or RSS is against NBA. So, do not bring it over and over again. If you have something against them, its not my problem.

//
There are books and
articles.Both EPW and seminar have
carried many articles on NBA, big dams and displacement.If you want to know the facts and understand
the issues you better read.
//

Definitely, i do..in that case, book knowledge alone will not suffice. The issue is, it has become now a days a very fashionable thing to speak of big dams and their environmental consequences, in post industrialized countries. Although i agree that the environmental changes caused by big dams are iminent, its a necessary evil for the modernization and progress of our poor folks. You do not apply the same standards as in the west, in a country like India where many house holds do not have electricity. Even Peyarili has agreement in this point. I guess, you better use your knowledge instead of just reading and reproducing what the "west" says.

The kind of "aggressive environemtalism" that Ms. Medha parkar and her ilks are following is not good.

ஷங்கர்.

வஜ்ரா said...

இன்ற்ய இந்தியன் எக்ஸ்பிரஸ் ல் வந்த இந்த செய்திவிமர்சனத்தைப் பார்கவும்.

//
The Indian Express tracked down the families of Nirbhaysingh, Mohansingh, Andisingh alias Ansingh, Shankarsingh, Sayasingh, Ramiyasingh, Revsingh, Bhagiyasingh, (they are all brothers, sons of Gulsingh) and Dhulsingh Kulariya to Bhitada in Alirajpur tehsil of Jhabua district.
They confirmed they had purchased land in Chikalda in Kukshi taluka of neighbouring Dhar district and these deals had even been registered on April 13.
Others in the village said they too were tempted to opt for the same package and would wait for word on what happens in the Supreme Court before deciding.
//

proof கேட்டவர்கள்! பதில் சொல்வார்களா? அல்லது நான் ப. ஜ. க ஆதரவாளான் என்று குற்றம் சாட்டிவிட்டுக் காணாமல் போய் விடுவார்களா?

ஷங்கர்.

Muse (# 01429798200730556938) said...

இரண்டு பக்கங்களிலும் நியாயம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் இந்த பிரச்சினை இழுத்தடித்துக்கொண்டு போகின்றது.

இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பே நியாயமான ஸொல்யூஷன் - "அணைகளைக் கட்டிக் கொள்ளுங்கள், ஆனால் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்துவிட்டு".

இதையெல்லாம் விட்டுவிட்டு தமிழர்களின் ஜாதிவெறியை இதில் காட்ட வேண்டாம் என்பதே என் கருத்து. இங்கே இவ்விஷயத்தில் இரு தரப்பாருமே பொறுப்பில்லாமல்தான் பேசுவதாக என் சிற்றறிவு கூறுகிறது. பிரச்சினை தீர்வதைவிட இந்த பிரச்சினைக்குக் காரணம் யார் என்று பழி சுமத்துவதோடு நமது பொறுப்பு முடிந்து விடுவதாகவே நீங்கள் கருதுகிறீர்கள். (அய்யோ, அம்மா ரெண்டு பக்கத்திலயிருந்தும் அடி விழப் போகிறது !!! )

ஒரு பிரச்சினையில் தேவையில்லாத மற்ற பிரச்சினைகளைக் கலப்பதால் அந்த பிரச்சினை சால்வ் ஆகாமல் போவதற்கான சாத்தியங்கள்தான் அதிகம்.

இந்த பிரச்சினையில் மக்களுக்குத் தேவையான நீர், மின்சக்தி, வாழ நிலம் ஆகியவை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இந்த பிரச்சினையால் நிலம் இழப்பவர்களுக்கு நிலமோ அல்லது அந்த நிலத்தின் மதிப்பிற்கு சமமான வேறேதேனும் ஒன்றோ வழங்கப்படவேண்டும். அதுவே தர்மம்.

அதே போல இதில் சம்பந்தப்பட்ட மூன்று மாநில மக்களுக்கும் நீர், எரி, மற்றும் மின் சக்திகளும் கிடைக்கவும் வேண்டும்.

இதில் தெளிவாக (எனக்கு) தெரிவது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை வழக்கம்போல இடது சாரிகள் எதிர்க்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதாக சொல்லிக்கொண்டு "மூன்று மாநிலங்களின் நன்மைக்காக ஒரு சில கிராமங்கள் அழிய (அவர்கள் பாஷையில் "தியாகம்") வேண்டும் என பாஜாக கூறுகிறது.

ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதிலாக அதை வளர்த்து விடுவது அரசியல் கட்சிகளுக்கு உதவும். உதாரணத்திற்கு அயோத்தி பிரச்சினை. வன்முறையான முடிவு மட்டுமே இப்போது சாத்தியம்.

இறுதியில் நடக்கப் போவது நான் கீழே சொல்லி இருக்கின்ற விஷயங்கள்தான்:

(இன்னுமொரு இருபது வருடங்கள் கழித்து)

1. அரசாங்கம் இந்த திட்டத்தை கைவிடாது. ஆனால் அணைகளும் கட்டப்படப் போவதில்லை.

2. இந்த அணை திட்டதிற்கு எதிராக போரடிவந்த மக்கள் விவசாயத்தையும், தங்களது பழைய வாழ்க்கை முறையையும் விட்டுவிட்டு வேறு வகையான வாழ்க்கை முறையை எற்றுக்கொண்டு பிழைப்பார்கள்.

3. அங்கனம் செய்யாதவர்கள் பிச்சை எடுத்தும், விபச்சாரம் செய்தும் அழிவார்கள்.

4. நீர் பற்றா குறையினாலும், எரி சக்தி குறையினாலும் அந்த மூன்று மாநிலங்களும் எதிரிகளாக மாறுகின்றன. வன்முறையும், வறுமையும் தாண்டவமாடுகிறது.

5. ஏழைகளாகி விட்ட இந்த மூன்று மாநிலங்களிலும் ஏழைகளின் பங்காளிகளான இடதுசாரி கட்சிகள் ஆட்சியை பிடிக்கின்றன.

6. மோடி ப்ரைம் மினிஸ்டராக செய்த முயற்சி தோல்வியடைந்து பாஜாக எனும் கட்சி முற்றிலும் அழிகிறது.

7. ரவி ஸ்ரீநிவாசனின் மகன் அணைத்திட்டத்திற்கு ஆதரவாகவும், சங்கர நாராயணனின் மகன் அணைத்திட்டத்திற்கு எதிராகவும் தங்களுடைய ப்ளாக்குகளில் சண்டையைத் தொடர்கிறார்கள்.

8. மேதா பட்கர் அமெரிக்கக் குடியுரிமை பெற்று அந்த நாட்டிலேயே செட்டில் ஆகிறார்.

Muthu said...

சங்கர்,

முழுதாக படித்தேன்..எதிர்ப்பு அரசியலை எதிர்ப்பதுதான் உங்கள் அரசியல்போல் தெரிகிறது...

எஃப்.ஐ.ஆர், கோர்ட், குற்ற நிரூபனம் என்பதில் எல்லாம் நீங்கள் தெளிவாக எழுதவில்லை...

சில பல திரித்தல் வாதங்களும் செய்ய முயல்கிறீர்கள்(தமிழ்மணம் எஃபக்ட்)..


வலதுசாரி பார்வையோடுதான் இடதுசாரி பார்வை வலுப்பெறும் என்பதால் உங்கள் பதிவை வரவேற்கிறென்.

Muthu said...

காஞ்சி இலையா பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தார் என்று சொன்ன நண்பர் ம்யூஸ்க்கு இது:

நேற்று 01.05.2006 டெக்கான் குரோனிக்கல் பார்க்கவும்.நன்றி.

Balaji-Paari said...

The following piece is just for your information.



May 1st, 2006

· NBA to challenge the defamation and 'official' propaganda on 'rehabilitating' the 'rehabilitated'!

The one month long agitation, including a dharna and fast was over, keeping the battle on, while the governments, disturbed with the 'polkhol' the 'expose' campaign of the governments' illegality and falsehood related to rehabilitation itself, resorted to a deliberate 'defamation' campaign against NBA involving their supporters.

These include a corporate man in Gujarat, associated with various politicians and trying to defame us by hook or by crook since years, without success. This man is also facing a criminal case for involvement in the attack on Medha Patkar and media persons (NDTV reporter, Pravin Joshi, and others) in the Sabarmati Ashram, during a peace meeting after Gujarat riots. His latest charges, as were the past ones made through advertisements in 2000, are false and ill-intended. He has charged NBA of foreign funding worth lakhs of rupees, which is a fake, manipulated allegation, which we are to contest in the court, filing a defamation case. As the same person (whose propaganda has received space on India TV) accuses, NBA is not a registered organisation and hence has no credibility.

We know, however, that never was Gandhi's or Bhagatsinghs or Jaiprakash Narayan's freedom movement ever 'registered' and so not NBA either. Our constructive activities, however, are run under registered organisations and we are open, transparent about our very limited resources, our voluntary donations, our free services received from advocates to owners of the office premises, our friends and families of oustees to activists. We are ready to take up the challenge of proving the false accusations and the motive behind them, since all this is a part of our struggle against the communal, criminal state and we will fight it out.

Another attempt to defame NBA and, by corollary, prove government officials, their claims and statistics, and their report, right is also on by way of stories planted in the newspapers, especially the Indian Express. While NBA can, if it decides, put in thousands of stories of officials resorting to corruption, violent repression, betrayal against Adivasis and farmers in relation to Sardar Sarovar, we have not done this so far. Nor are all cases of violations of the Narmada Tribunal Award and contempt of Supreme Court judgments filed in the Supreme Court by the thousands of oustees, facing injustice as yet.

But the story of nine Adivasis from Bhitada village, Alivajpur tehsil, Jhabua district, published on the front page of the Indian Express can be a highly interesting 'eye opener' only if the readers happen to investigate into the total reality with no biases and no half cooked evidence or 'inventions'.

Bhitada is one of the twenty-six Adivasi villages, of Jhabua district, to be affected by Sardar Sarovar and it has been partially affected since 1999, when houses and/or farms of at least 4 Adivasi families in Bhitada faced submergence and in later years all, that is almost 100, did face the same. What people should know is, these 100% Adivasi villages are generations old communities, mainly of Bhilala Adivasis, where the governments has never set – up any school, dispensary, ration shops or haven't even built a road over decades, and yet the Adivasis live a more or less self-reliant life with land, river and rain waters, forest produce and their own hard work. Bhitada has, today, a school run with NBA's help from 1st to 4th standard, started as the 15th Life School (Jeevanshaala) in the Valley, managed with voluntary donations and a local committee, a local teacher; a ration shop which NBA i.e. the Adivasis and activists together, got started after much struggle; while the villages have a successful, traditional water harvesting with gravity with no machine, for most of its agricultural land. The villages in Jhabua never wanted to be displaced and hence were worried, uninformed, and were never even consulted during the ten years long Tribunal sittings or, thereafter, till NBA with other local activists of Kedut Mazdor Chetna Sangh, reached them, enquired and informed. They were not for leaving their villages but slowly got to know about the dam.

Bhitada families, as hundreds of others in Jhuhua, were presumed to 'opt' for rehabilitation in Gujurat even without giving them the option to exercise their legal right to choose resettlement in their own state. This led to about 50 families of Bhitada to accept some land in two of Gujurat's resettlement sites, who all faced problems and at least 25 decided, under no influence of NBA, not to shift till land is exchanged. It is very clear that others in Bhitada always wanted to stay in Madhya Pradesh.

The government of Madhya Pradesh has shown all affected families in Bhitada as already rehabilitated, including those affected at 110m and 122m. None in Bhitada is 'non affected' as per the government even today while at least 50+ families, claimants, are yet to be declared as oustees and at least another 50 declared families are yet to be rehabilitated. It was from amongst the latter 50 that 15 Adivasis were taken to show the land in Chikalda village, Madhya Pradesh, one, which is known to be bad land. The worst is, the entire deal from identification of the seller to registration of sale, everything done by the officials has been a case of betrayal of the 9 adivasis who chose to take land (6 adivasis refused). All their monetary compensation for land, house, house plots, have been used by the government for purchasing the land. Now they have been told not to ask for anything more; no R&R site with all civic amenities, no houseplots, nothing... which is totally illegal.

Most shocking is that the farmers who sold the land have in collusion with the officials, removed their irrigation pumps and pipes, denying the adivasis irrigation, which was previously promised.

Six out of fifteen PAFs, therefore, have refused to take the 'deal' and nine who have accepted, are stunned. Even if the government succeeds, it is only through cheating. NBA is attacked by the 'story tellers' and 'story takers' since both of them are unconcerned of the tribal interests and are buying the argument of 'public interest at any cost'. NBA challenges this in favour of a humane, just paradigm but also honesty and integrity, by the state and the society, both.

வஜ்ரா said...

வாங்க முத்து சார்,

//
எதிர்ப்பு அரசியலை எதிர்ப்பதுதான் உங்கள் அரசியல்போல் தெரிகிறது...

எஃப்.ஐ.ஆர், கோர்ட், குற்ற நிரூபனம் என்பதில் எல்லாம் நீங்கள் தெளிவாக எழுதவில்லை...
//

கண்மூடித்தனமான எதிர்ப்பைத் தான் நான் எதிர்க்கிறேன்.

ஒத்துக் கொள்கிறேன், நான் ஒரு சில விஷயங்க்ளில் தெளிவாக எழுதவில்லை தான். தெளிவாக எழுதியவர்களின் பதிவுக்கு துடுப்பு கொடுத்துள்ளேன் எனது பின்னூட்டங்களில்.

//
வலதுசாரி பார்வையோடுதான் இடதுசாரி பார்வை வலுப்பெறும் என்பதால் உங்கள் பதிவை வரவேற்கிறென்.
//

வலது சாரி பார்வை என்று ஒன்று இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால் சரி. அதையே பார்க்கத் தவரிவிடுவது பல இடது சாரிக்கள் மத்தியில் நீங்கள் உள்ளீர்கள்.

வருகைக்கு நன்றி.

ஷங்கர்.

வஜ்ரா said...

Outlook ல் வெளிவந்துள்ள இந்த கட்டுரையைப் பார்கவும்

Obstruction as ideology

ஷங்கர்.

வஜ்ரா said...

எனது கருத்து இதில் கடைசியாக,

மேதா பட்கர் சரியான நோக்கத்துடன் தான் NBA ஆரம்பித்திருக்கிறார். ஆனால், இந்த புரட்சியை உயிருடன் வைதிருப்பதே இப்போதய நோக்கமாக மாறிவிட்டது போலும்.

காலம் மாற நாட்டின் தேவைகளும் மாறிவிட்டன, இன்னும் சும்மா கொடி பிடித்து கோஷம் போட்டு கூட்டத்தை இழுக்கும் வேலையை இவர்கள் விடுவதாகைல்லை.

இப்பொதைக்கு இவர்களது கொள்கை, எல்லாவற்றையும் எதிர்ப்பது தான்.

ஷங்கர்.