June 2, 2006

தீவிரவாதியின் ஞாயம்.


நேற்று, நாக்பூரில், RSS தலமையகத்தைத் தாக்க வந்த இஸ்லாமியத்தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளிவந்த செய்தி இது.

தீவிரவாதிகள் செய்யும் கூத்தை ஞாயப்படுத்துவது போல் இருக்கிறது.

That hate, said intelligence experts, was fuelled by actions like Modi’s announcement on Thursday of a Rs 10-lakh reward — quickly matched by the Congress-run Maharashtra — to the police unit that shot dead the alleged terrorists in Nagpur. “This is an attack on our nation’s culture and challenges our patriotism,” Modi, known for his roots in the RSS, said in Ahmedabad.


மோடி இதைச் செய்தார், அதனால் தான் தீவிரவாதத் தாக்குதல் நடக்கிறது என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது இந்த வார்த்தைகள்.
"The terrorists, particularly the ones from Hyderabad, Maharashtra and Gujarat, have during interrogations pointed out how the Gujarat riots led them to believe that there was an anti-Muslim atmosphere in India," said Delhi's DCP (special cell) Ajay Kumar.
...
An intelligence official in Delhi said Gujarat under Modi is now closely watched by agencies in Pakistan and Bangladesh. "Every development impacting minorities is watched there and used to incite disgruntled members in the community… everything, even the decision not to screen the Amir Khan-starrer, Fanaa,"
...
In Uttar Pradesh, the demolition of the Babri Masjid is a fading motivation but Gujarat remains "a tonic", as an IB officer put it.


எங்கே திரும்பினாலும் எந்த இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கும் காரணம் குஜராத், மோடி. (செய்தியில் பேசும் intelligence experts காரணத்தை அறிகிறார்கள் அவ்வளாவே, அவர்களுக்கும் இந்த பதிவிற்கு சம்பந்தமில்லை.)

இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு இந்துக்களை அழிக்க காரணம் வேண்டும். அதற்கு மோடி, குஜராத் என்று ஞாயம் கற்பிக்கப் படுகிறது. அது தான் சரி, அவர்கள் மனம் கோனாமல் நடந்துகொள்வது தான் இந்துக்களுக்கு நலம் என்று நம் மதச்சார்பற்ற "ஜல்லி" கெசுகள் சொல்வதுதான் அபத்தம். (மோடி என்றாலே, குதிக்கும் செகுலர்வாதிகள் பதிவுகள், பின்னூட்டங்கள்)

மோடி இல்லை என்றால் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்கியிருக்க மாட்டார்களா?
(படத்தில் அக்ஷர்தாம் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்து குழந்தைகள்).

இன்று மோடி தான் தீவிரவாதத்திற்குக் காரனம் என்று கூப்பாடு போடு இவர்கள் நாளை சிறுபான்மையினர், இந்துக்கள் உயிருடன் இருப்பதே நாட்டிற்குக் கேடு என்று நினைத்தால், நாம் எல்லாம் தற்கொலை செய்து கொள்வதில் தான் சிறுபாமையினர் நலம் உள்ளது என்று சொல்லித் தற்கொலை செய்துகொள்ளச் சொல்வார்களோ?

இது போல் தீவிரவாதிகளின் அநியாயத்தை ஞாயப்படுத்துவது தான் திம்மித்துவம் என்று சொன்னேன். அதையே இப்பொழுதும் சொல்வேன்.

10 comments:

சிவமுருகன் said...

//நாம் எல்லாம் தற்கொலை செய்து கொள்வதில் தான் சிறுபாமையினர் நலம் உள்ளது என்று சொல்லித் தற்கொலை செய்துகொள்ளச் சொல்வார்களோ? //

ம் சொன்னாலும் சொல்வர்,

அப்போது டவின்ஸியை தடை செய்த அரசு என்ன சொல்லுமோ தெரியவில்லை.

ஜயராமன் said...

இந்த கூத்துதான் ஒவ்வொரு இஸ்லாம் தீவிரவாதத்து போதும் நடக்கிறதே.

மதச்சார்பின்மை வேஷம் போடுபவர்களுக்கு என்ன பண்ணுவது என்று தெரியாது. வழிசலாக வழிவார்கள். ஆனால், ஒன்னும் தீவிரமாக கண்டனம் இருக்காது.

அமெரிக்கா ஒரு 9/11 நடந்த போது என்ன மாதிரி பொங்கி எழுந்தது. ஆனால், இங்கே இந்த .... யற்ற அரசியல்வாதிகள்.

உடனே, பிரதமரிலிருந்து சோனியா அம்மையார் ஆரம்பித்து ஊரிலிருக்கும் எல்லா கரைவேட்டிகளும் 'இந்தியா தீவிரவாதத்தை வேறோடு அழிக்க உறுதி பூண்டிருக்கிறது' என்று ஸ்டேட்மண்ட் விட்டு காமெடி பண்ணுவார்கள்.

எங்கே நாம் ஏதாவது சொல்லி விட்டால், இந்த அரபு தேசத்து காவடிகளின் ஹோல்சேல் வோட் போயிடுமோ என்று பயந்து சத்தம் போடாமல் பூனை மாதிரி முனகுவார்கள்...

வடிவேலுவின் உதார் தேவலாம் போங்கள்....

நன்றி

கால்கரி சிவா said...

//நாம் எல்லாம் தற்கொலை செய்து கொள்வதில் தான் சிறுபாமையினர் நலம் உள்ளது என்று சொல்லித் தற்கொலை செய்துகொள்ளச் சொல்வார்களோ? //

:-0

மோடி மோடி மோடி அதற்கு பின் யார்? ஆளை தேடுவார்கள்.

கால்கரி சிவா said...

ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் சூலாயுதம் போன்ற அதி பயங்கரமான ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஆபத்தில்லாத சின்ன ஏகே47, வெடிகுண்டுகள் போன்றவற்றை எடுத்து சென்றனர். அவர்களை அவ்வாறு செய்ய தூண்டியது சூலாயுதம் என்ற அதி பயங்கர ஆயுதங்களே என ஒரு கோஷ்டி சொன்னாலும் சொல்லும்

S.L said...

"இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு இந்துக்களை அழிக்க காரணம் வேண்டும். அதற்கு மோடி, குஜராத் என்று ஞாயம் கற்பிக்கப் படுகிறது. அது தான் சரி, அவர்கள் மனம் கோனாமல் நடந்துகொள்வது தான் இந்துக்களுக்கு நலம் என்று நம் மதச்சார்பற்ற "ஜல்லி" கெசுகள் சொல்வதுதான் அபத்தம். (மோடி என்றாலே, குதிக்கும் செகுலர்வாதிகள் பதிவுகள், பின்னூட்டங்கள்)"

sariyaga sollikirirgal.

அசுரன் said...

இந்துத்தீவிரவாதிகளுக்கும், முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும் நடக்கும் பிரச்சனை அதில் பத்திரிகைகள் நடுநிலைமை வகிக்க வில்லை என்று வருத்தம் வேறு.

இதே முஸ்லீம் தீவிரவாதிகள் தான் சில நாட்கள் முன்பு மசுதியில் குண்டு வைத்தனர். ஏன் பாகிஸ்தானில் கூடத்தான் குண்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு இறந்தது எல்லாம் என்ன இந்துக்களா?(உங்கள் பார்வையில்).

இருவரும் மக்கள் விரோதிகள்தான். ஒருவர் மக்கள் விரோத தன்மையை மற்றொருவர் குற்றம்சாட்டியே தங்களது மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி வருபவர்கள்தான் இருவரும்.

அதனால்தான் முஸ்லீம் தீவிரவாதிகள் மோடியை காரண்ம் காட்டி தங்களது மக்கள் விரோத செயல்களுக்கு நியாயம் கற்பிப்பதும். இந்து திவிரவாதிகள் அவர்களின்(முஸ்லீம் திவிரவாதிகள்) மக்கள் விரோத நடவடிக்கைகளை காரணம் காட்டி தங்களுக்கு நியாயம் கற்பிப்பதும்.

இது சங்கரின் பதிவுகளுக்கும் பொருந்தும். தற்போதுதான் முஸ்லீம் திவிரவாதிகளுக்கு இணையாக CPI-maoist கள் வந்துவிட்டனரே(மன்மோகன் சிங் மற்றும் BJP, RSS தலைகளின் சமீபத்திய கருத்துக்களின்படி). எப்படி சமாளிக்கப் போகிறேர்கள் திரு வஜ்ரா சங்கர் அவர்களே?

இவர்கள் இருவருமே மக்கள் பிரச்சனைக்காக இதுவரை தங்களது மயிரைக்கூட பிடுங்கிப் போட்டது கிடையாது.

இவர்கள் இருவரையும் நிராகரித்து ஒதுக்கி வைப்பதுதான் மக்களுக்கு நல்லது.

இல்லையென்றால் ஒருவரை ஒருவர் காரண்ம் காட்டி மக்களை தொல்லைக்குள்ளாக்குவார்கள். ஏற்க்கேனவே மறுகாலனியாதிக்க சூழலில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கும் மக்களுக்கு இவர்களால் வேறு தொல்லை.

இவர்கள்(இந்து தீவிரவாதிகள்) தமிழ் நாட்டுக்குள் வாராதிருந்த வரை பெரிய அள்வில் பிரச்சனை இல்லை. ரதத்தை எடுத்துக் கொண்டு வந்தவுடன் பிரச்சனை ஆரம்பித்து விட்டது. நல்லவேளை தமிழ் சமூகச் சூழல் சிறிது முற்போக்கு(சங்கர் பாசையில் - வயிற்றுப் போக்கு) சூழலாக இருந்ததால் இருவருமே பெரிய அளவில் வளரமுடியவில்லை.


அப்புறம் சங்கர் ஒரு கேள்வி:

திம்மித்துவம் திம்மித்துவம் என்று சொல்லுகிறேர்களே. இடஒதுக்கீட்டில் அரசு ஒரு சிறுபான்மையினருக்காக செவிசாய்த்ததே அது கும்மித்துவமா? அதற்க்கு ஆதரவு தெரிவித்த நீங்களும் கும்மித்துவவிஸ்டா?

வஜ்ரா said...

bonaparte,

உங்கள் கருத்துக்கு நன்றி.


//
திம்மித்துவம் திம்மித்துவம் என்று சொல்லுகிறேர்களே. இடஒதுக்கீட்டில் அரசு ஒரு சிறுபான்மையினருக்காக செவிசாய்த்ததே அது கும்மித்துவமா? அதற்க்கு ஆதரவு தெரிவித்த நீங்களும் கும்மித்துவவிஸ்டா?
//

பதிவு இட ஒதுக்கீடு பற்றியது அல்ல. அதைப் பற்றி நான் பதிவு போடவே இல்லை.

Again lot of personal attacks.

I do not have anything against you. But, you seem to have only hatered towards others.

(last warning, stop hate speech, otherwise you are not welcome here).

அசுரன் said...

Dear Sankar,

I am really sorry, as I am unable to find which part of my argument have personal attacks.

As I again went through my argument I suspect only the below one:
//அதற்க்கு ஆதரவு தெரிவித்த நீங்களும் கும்மித்துவவிஸ்டா? //

And this also a question posed on your word 'Thimmithuvam'. Not to mean a personal attack.

Please clarify. That would help me betterment my argument style. and avoid any future missconception araising out my argument.

Thanks,
Bonapert.

Anonymous said...

I was unable to read your blog but the pictures of dead children are attrocious.
Thre will be not forgivness for whoever is responsible for this killings.
As a father myself, my heart goes to all those people who are crying over them.

வஜ்ரா said...

granoduro,

the blog is in tamil ( an Indian Language) and the picture shows dead hindu children from an attack on a hindu holy place by Islamic terrorists in India.

Thanks for visiting.