August 5, 2006

Amelie மற்றும் City of God

ஆமிலீ பிரஞ்சு மொழிப்படம், மென்மையான காதல் கதையில் மெல்லிய கமெடி இழையுடன் அறுமையான படம். தனிமையிலேயே சிறுவயதைக்கழிக்கும் சுட்டிப் பெண் தன் காதலனை எப்படி அடைகிறாள் என்பதுபற்றிய படம்.

சிடாடெ டெ டூஸ் அல்லது City of God பிரேசிலிலிருந்து 2002ல் வெளிவந்த போர்துகீசிய மொழிப் படம். உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில், ரியோ டி ஜெனீரோ நகர சேரிகளில் வாழும் போதைப் பொருள் விற்கும் ரவுடிகள் பற்றிய கதையை அதே சேரியிலிருந்து வளர்ந்து வந்த ஒரு புகைப்படக்காரர் மூலமாகச் சொல்லப்பட்ட சீரியஸ் கதை.

சமீபத்தில் தான் இந்த இரண்டு படங்களையும் பார்த்தேன்...நிச்சயமாக இரண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அமிலீ கதைச் சுறுக்கம்:
ஆமிலி என்ற இளம் பெண் சிறுவயதிலிருந்து ஒரு வித ஏக்கத்துடனேயே வாழ்கிறார்ள். யாரும் கவனிக்காத அல்லது சாதாரணமாக விட்டுவிடும் விஷயங்களில் அதீத அக்கரை கொண்டவள். ஒரு கபே யில் வெயிட்ரஸாக பணிபுரியும் இந்தப் பெண் ஒரு நாள் தன் வீட்டுச் சுவறில் மறைத்துவைக்கப்பட்ட ஒரு சிறுவனின் விளையாட்டுப் பொருட்கள் நிறைந்த பெட்டியை கண்டுபிடிக்கிறாள். பிறகு அந்தப் பெட்டியின் சொந்தக்காரரை கண்டுபிடித்து அதை அவரிடம் வளங்கி அவரின் மகிழ்ச்சியால் தானும் சந்தோஷப்படுகிறாள். அப்போது அவளின் நினைவில் தட்டும் பொறி, ஏன் நாம் மற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்யக் கூடாது என்பது...இதனால் தன் சுற்றியுள்ளவர்களை எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்று நூதன முறையில் யோசித்துச் செய்யும் ஆமிலீ பக்கது ரயில் நிலயத்தில் போட்டோ எடுக்கும் பூத்தில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து கிழித்து போடப்பட்ட போட்டோக்களை சேகரிக்கும் தன் காதலனைச் சந்திக்கிறாள். அவனை எப்படி ஆமிலீ அடைகிறாள் எவ்வாறு தன் சுற்றாரை சந்தோஷப்படுத்துகிறாள் என்பதை மெல்லிய காமெடி கலந்த கதையாய் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் Jean-Pierre Jeunet.

படத்தில் வரும் ஒரு காமெடியான சம்பவம்.

சிறுவயதில் சேட்டை அதிகம் செய்கிறாள் என்று அமிலீயின் தாய் ஒரு பழய காமிராவை அவளிடம் கொடுத்துவிடுகிறாள். அதை வைத்துக் கொண்டு பிளாட்பாரத்தில் நின்று போட்டோ எடுக்கும் அமிலீ தன் கண்முன்னே இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளாவதைப் பார்த்து பயந்து விடுகிறாள். அந்த நேரத்தில் அவ்வளியாகச் செல்லும் பக்கத்து வீட்டுக்காரன் அமிலீயின் காமிராவால் தான் அந்த சம்பவம் நடந்தது என்று அமிலீயை பயமுறுத்தி நம்பபைத்து விடுகிறான். இதை சில நாட்கள் கழித்து உணர்ந்த அமிலீ, வஞ்சம் தீர்க்க ரேடியோவுடன் அந்த பக்கத்து வீட்டு அங்கிள் கூறையி அமர்ந்து Football மேட்சில் முக்கிய கட்டத்தை ஆண்டனா வயரை பிடுங்கி அந்த ஆசாமிக்கு எரிச்சல் வரவழைத்து பழி தீர்ப்பாள்.
இன்னொறு சம்பவம்,

படத்தில் சதா சர்வகாலமும் தன் காய்கரிக்கடையில் வேலைசெய்யும் பையனைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் முதலாளியை கஷ்டப்படச் செய்யவேண்டும் என்ற நீக்கத்தில் அமிலீ செய்யும் திருகல்கள் பயங்கர காமெடி. ஷெவிங் க்ரீமையும் பேஸ்டையும் இடம் மாற்றி வைப்பதில் துவங்கி பாத்ரூம் கதவு knob ஐ இடம் மாற்றம் செய்து வைத்து...அலாரம் கடிகாரத்தின் நேரத்தை மாற்றி வைத்து அடுத்த நாள் அந்த ஆசாமி படும் அவஸ்தையில் காமெடியோ காமடி.

2002ல் ஆஸ்கார் விருதுக்காக வெளி நாட்டுப் பட வரிசயில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

நிற்க.

City of God.



ஆறுபதுகளில் ரியோடி ஜெனீரோ நகரில் கட்டப்பட்ட ஏரியாவின் பெயர் தான் City of God. சேரிகளில் வசிக்கும் இந்த கறுப்பின மக்கள் போதைப்பொருள் கடத்தல், கொலை கொள்ளை அடிதடி சண்டைகளில் ஈடுபடும் திருடர்களாகவே வாழ்ந்தனர். அக்காலத்தில் நடை பெறும் சம்பவங்களை அதே சேரியில் பிறந்து வளரும் ஒரு பையன் தன் திறமையால் முன்னுக்கு வரவேண்டும், படித்து முன்னேரவேண்டும் என்று எண்ணுபவன், புகைப்படத் தொழிலில் ஈடு பாடு கொண்டவன் கண்ணோட்டத்தில் கதை சொல்லப்படுகின்றது. படத்தில், ஏகப்பட்ட உட் கதைகள், ஒவ்வொறு கதாபத்திரமும் ஒரு கைத போல் சொல்லப்படுகின்றது. கதாபாத்திரங்கள் தங்கள் கதை தனிக்கதையாக இருந்த போதிலும் அவர்கள் அடிக்கடி Intersect ஆவதும் அதை இந்த காமிரா மேன் (Rocket என்பது படத்தில் அவர் பெயர், Busca pe என்பதை மொழி பெயர்த்து அப்படிச் சொல்லியிருப்பார்கள் subtitile ல்) தன் கோணத்தில் எப்படிப் பார்க்கிறான் என்பது தான் கதை சொல்லப்படும் விதம். புதுமையானதும் கூட...சற்றே நம் விறுமாண்டிபோல்..!




படத்தில் ஒரே ரத்தக் காட்சிகள் தான். Gang war கள், துப்பாக்கிச்சூடுகள், கொளைகள், மிரட்டல்கள், லஞ்சம், போலீஸ், நீயா நானா, யார் தான் பெரியவன் போன்ற ஈகோ மோதல்களினால் ஏற்படும் கொலைகள், சதா சர்வ காலமும் கைதுப்பாக்கியுடனேயே சுற்றும் 10 வயது வாண்டுகள். கவலையே இல்லாமல் கொலை செய்யும் 13 வயதுப் பையன்கள். கொலை செய்தால் தான் சமூகத்தில் மதிப்பு என்று எண்ணி வாழ்பவர்கள் என்று ஏகப்பட்ட intricate network களால் பின்னப்பட்ட கதை. கதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதால் கடைசியில் உண்மையான பாத்திரங்கள் யார், என்பதையும் சொல்கிறார்கள்.

2004ல் ஆஸ்கார் விருதுக்கு பிரேஸிலிலிருந்து அனுப்பப் பட்ட படம். Foreign movies விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் ஒன்றும் கூட.

திருப்தியான படங்கள் இரண்டுமே....


இதை ஏன் பதிகிறேன் என்றால்,

நாம் இந்தியாவிலிருந்து ஆஸ்காருக்கு அனுப்பும் படங்களின் தரத்தையும் இவற்றையும் சற்றே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

பஹேலி, தேவதாஸ், ஜீன்ஸ், தேவர் மகன். இத்தகய படங்களே இந்திய அரசு இந்தியாவின் Official entry யாக அனுப்பியிருக்கிறது. நாம் ஆஸ்கார் வெல்லவேண்டாம், அது நம் நோக்கமுமாக இருக்கவேண்டாம்,

படத்தின் தரத்தைப் பாருங்கள். ஜீன்ஸ், பஹேலி எல்லாம் ஒரு படமா? ஆஸ்காருக்கு இந்தியா அரசு அனுப்பும் தரத்தில் உள்ள படங்களா?

அங்கே என்ன, பட்டிக்காட்டான்களா உட்கார்ந்து படம் பார்க்கிறார்கள், கலர் கலர் உடைகள், ஐஷ்வர்யா ராய் பார்த்தவுடன் ஜொள்ளு வடிவதற்கு.

இதுவரை, லகான், சலாம் பாம்பே, மதர் இந்தியா மட்டுமே நாமினேஷன் பெற்றிருக்கிறது.

7 comments:

சீனு said...

ஷங்கர்,
"ஆஸ்கார் என்பது உலகத் தரம் இல்லை. அது அமெரிக்கத் தரம்" என்று கமல் சொல்லியிருக்கிறார். அதுவே உண்மை.

வஜ்ரா said...

i perfectly agree...

உலகத் தர நிர்ணயம் ஆஸகார் என்பது இல்லை. ஆனால், நமக்கு நாமே ஒரு தரத்தை நிர்ணயம் செய்து கொள்ளக் கூடாதா..அப்படி செய்யப்பட்ட தரம் தான் ஜீன்ஸ், பஹேலி போன்ற படங்களா?

நிச்சயம் இல்லை. நாம் தரமான படங்கள் எடுப்பதில்லை. கமல் போன்றதொறு நல்ல நடிகரை வீணடிக்கிறோம்...

எத்தனை இயக்குனர்கள் ஹேராம் போல் படங்கள் இயக்க முடியும்...இயக்கி வெற்றி பெர முடியும்?

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமில்லாமல் கலையை வளர்க்கும் ஒரு ஊடகமாகவும் இருத்தல் அவசியம். Creativity என்பது தமிழ், இந்தி சினிமாக்களில் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது என்பது என் கருத்து.

நல்ல படம் என்று சொல்லப்படும் படங்கள் அனைத்தும் Copy அடிக்கப்பட்ட படங்களாக இருப்பது ஏன்..?

உண்மையான திறமையுள்ளவர்கள் இல்லையா?

Blogeswari said...

Hey ram - Ulagathtaram vaiynda padama? God!! please.
They way Shahrukh spoke tamizh - he had just mugged up the entire set of dialogues and was reciting it without any stress on the syllable, tone etc
And what were the scenes between Kamal and Rani mukherjee about? Nothing but a sheer "I-am-still-the-most-wanted Hero" show-off by Kamal's end

I agree with Shankar on Jeans and Paheli.. but in no way can you justify your argument with the mention of Hey ram.. please!

Sudhakar Kasturi said...

அன்பின் வஜ்ரா ஷங்கர்,
நல்ல பதிவு. சிட்டி ஆப் காட்ஸ் குறித்தான தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். பாலிவூட் படங்கள் விருதுக்காகவோ, புகழுக்காவோ எடுக்கப்படுவதில்லை ( கோலிவூட் டும் இதில் அடங்கும்). என்று திரைப்படங்கள் ஒரு தாக்கத்தின் வெளிப்பாடாக வருகின்றனவோ, என்று நாமும் தியேட்டருக்குப் போவது என்பது வெறும் நேரம் வீணடிக்கவல்ல எனப் புரிந்துகொண்டு தேர்ந்தெடுத்துத் திரைப்படம் பார்க்கிறோமோ, அன்றுதான் நல்ல திரைப்படங்கள் வரும். சில படைபாளிகளும், படங்களும் முத்திரை குத்தப்படாமல் வரவேற்கப்பட்டால் திரைத்துறையில் ஆரோக்கியம் வரும். இல்லையென்றால் சிம்ரம், ஐஸ்வர்யா ராய் என விடலை ஜொள்ளுகளிலேயே மிதந்து போகும்.
அன்புடன்
க.சுதாகர்.

வஜ்ரா said...

b. லோகேஸ்வரி அல்லது blog ஈஸ்வரி,

சரி,

ஹேராம் உலகத்தரம் என்று சொன்னது பஹேலி, ஜீன்ஸ் எல்லாம் ஒரு படம் என்று அனுப்பிய மாமேதைகளை நினைவில் கொண்டு பார்க்கவேண்டும்.

In comparision with such "கலர்" movies ஹே ராம் was far better.

I am not a fan of Shahrukh, thats his acting capacity and hey! what can we do about it!! and Kamal has this self indulgence in anything that he does and again, what can we do about it!!?

வஜ்ரா said...

//
நல்ல திரைப்படங்கள் வரும். சில படைபாளிகளும், படங்களும் முத்திரை குத்தப்படாமல் வரவேற்கப்பட்டால் திரைத்துறையில் ஆரோக்கியம் வரும்.
//

ஐயா, அதுக்காக ஓவரா, டம்ப்ளர்ல தண்ணி குடிக்கிறதக் காட்டி அரை மணி நேரம் படம் ஓட்டுனா யாரு பார்ப்பா!!? ஆர்ட் பிலிம் காடகிரி பற்றி நான் பேசவில்லை.

நல்ல படங்கள் எடுத்தால் மக்கள் நிச்சயம் பார்க்கிறார்கள்.

நாம் தான் அந்த திசை நோக்கி நகர வேண்டும்...அப்போது தான் உலகத் தரம் நமக்கு வரும்...

ஆட்டோகிராப் போன்ற படங்கள் ஓடவில்லையா? (சரி அது ஒன்றும் உஅலகத்தரம் எல்லாம் இல்லை..ஆனால் அந்த திசையில் நடந்தால் வரும் ஒரிஜினாலிடியில் தான் வரும் உலகத்தரம்...

க்விண்டின் டாரண்டினோ படங்களை உல்டா செய்து எடுத்தால் வராது!!)

enRenRum-anbudan.BALA said...

வஜ்ரா ஷங்கர்,
நல்ல பதிவு.

Pl. write more like this, too :)