July 3, 2006

படங்காட்றேன்....!!-5



ஷுக் ஹ கார்மெல் (שוק ה כרמל) அதாவது கார்மெல் மார்கெட், அங்கே உள்ள ஒரு மிட்டாய் கடை. பல வண்ணங்களில் பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்தது போல் ஒரு படமெடுத்துவிட்டான் நண்பன் அனூப்.

கலர் கலர் குடை மிளாகாய்.


இஸ்ரேல் யூத நாடு, இஸ்லாமிய ஹலால் உணவு போல் இங்கே கோஷர் (Kosher כשר) உணவு தான் விரும்புவர். கோஷர் உணவு என்றால் சில கட்டுப்பாடுகள் கடை பிடிக்கப் படவேண்டும். பல முட்டாள் தனமான கட்டுப்படுகள் தான். உதாரணமாக இரைச்சிவகைகளுடன் பால் பொருட்கள் சேர்த்து உண்ணக்கூடாது. (மீன் மற்றும் முட்டையை வெஜிடேரியன் ஆக்கிவிட்டார்கள் நம் மேற்கு வங்காளர்கள் - போல்) அதனாலேயே, சில மெக் டொனால்ட்ஸ்லில் சீஸ் பர்கர் (Cheese burger) கிடைக்காது.


பன்றி இரைச்சிக்குத் தடை. ஆனால் சீனர்கள் வாழும் பகுதி, ரஷ்யர்கள் வைத்திருக்கும் மளிகைக்கடைகளில் தங்கு தடையின்றி சுவையான பன்றி இரைச்சி கிடைக்கும். டெல் அவீவ் மத்திய பஸ் ஸ்டாண்ட் (תחנה מרכזית - Tahana merkazith) பக்கத்தில் உள்ள Kingdom of Pork. போலி டோண்டு ரசிகர் மன்றத்தின் இஸ்ரேல் கிளையை, இந்த கடையின் முதல் மாடியில் ஆரம்பிக்கலாம்.!! ;D



Sheroot (שרות) இதற்கு அர்த்தம் Service. வெள்ளி மாலை முதல் சனி மாலை வரை ஷப்பாத் (שבת- Sabbath) கடைகள் மூடப்பட்டிருக்கும், பேருந்துகள் ஓடாது, அவசரத்திற்கு எங்காவது செல்லவேண்டும் என்றால் இந்த ஷெரூத் தான் கதி. 10 பேர் உட்காரக்கூடிய பெரிய வகை MUV. இஸ்ரேலில் எந்த நகரத்திலிருந்தும் வேரெந்த நகரத்திர்குச் சனியன்று ஊர் சுற்ற வேண்டும் என்றால் இதுதான் வெளியூர் நபர்களுக்கு. அல்லது international driving licence வைத்துக்கொண்டு வாடகைக் கார் எடுத்து ஊர் சுற்றலாம்.

13 comments:

கால்கரி சிவா said...

//வெள்ளி மாலை முதல் சனி மாலை வரை ஷப்பாத் (שבת- Sabbath) கடைகள் மூடப்பட்டிருக்கும், பேருந்துகள் ஓடாது,//

அரபிக் காரங்களெ விட மோசமா இருப்பாங்க போலிருக்கு

வஜ்ரா said...

எல்லாம் ஒரே குடும்பத்து அண்ணன் தம்பிங்க தானே... ஒரே மாதிரி தான் இருப்பங்க.

ஆனால் ஷப்பாத் என்றாலும், எல்லா கடைகளும் ஷப்பாத் கடைபிடிப்பதில்லை. அரபிக்காரர்கள் வைத்திருக்கும் ஹோட்டல்கள், திரந்துதான் இருக்கும். அரச விடுமுறை, நம்ம ஊரு ஞாயிற்றுக் கிழமை மாதிரி.

கோஷர் ஹோட்டல்கள் மூடியிருக்கும். கோஷர் அல்லாத ஹோட்டல்கள் திரந்திருக்கும்.

Amar said...

//போலி டோண்டு ரசிகர் மன்றத்தின் இஸ்ரேல் கிளையை, இந்த கடையின் முதல் மாடியில் ஆரம்பிக்கலாம்.!! //

தெடி ரொம்ப கரெக்ட்டான இடத்துல வச்சீங்களே ஆப்பு!

//அதனாலேயே, சில மெக் டொனால்ட்ஸ்லில் சீஸ் பர்கர் (Cheese burger) கிடைக்காது//

IDF வீராங்கனைகளுக்காகவாவது இஸ்ரேல் வரலாமுன்னு இருந்தேன்...ஸாரி..cheese burger கிடைக்காத இடத்தில் சமுத்ரா வாழ்வதில்லை..

சிறில் அலெக்ஸ் said...

கலக்கல் சீரிஸ். தொடர்ந்து நல்ல தகவல்கள். ஒரு நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றி வித்தியாமாய் தெரிந்துகொள்ள வைக்கிறீர்கள்.

நன்றி ஷங்கர்

ஜயராமன் said...

வஜ்ரா அவர்களுக்கு,

அழகான மற்றும் உபயோகமான ஒரு பதிவு. படங்கள் நன்றாக இருக்கின்றன. இயல்பான நடைமுறை வாழ்க்கையை படமாக்கி எங்களை தங்களுடன் அங்கெல்லாம் சென்று பார்த்ததுபோல் உணரச்செய்கிறீர்கள். மிக்க நன்றி

எனது சந்தேகங்கள்.

ஹலால் உணவில் தயாரிப்பில் விதிமுறை / கட்டுப்பாடு உண்டு. சாப்பிடுவதில் கட்டுப்பாடு இருக்கிறதா என்று தெரியவல்லை. இங்கு கோஷர் இறைச்சியில் தயாரிப்பிலும் விதிமுறைகள் உண்டா?

பன்றி இறைச்சிக்கு தடை என்றால் சீனர்கள் விற்பது சட்ட விரோதமா அல்லது அங்கு மட்டும் அனுமதியா. மத்தியகிழக்கு நாடுகள் சிலவற்றிலும் போர்க் சூபர் மார்க்கெட்டில் முஸ்லிம்கள் இல்லாதவர்களுக்கு என்று போர்ட் போட்டு விற்கப்படும். முஸ்லிம்கள் இல்லையா என்று எப்படி பார்ப்பார்கள் என்று தெரியாது. (நான் ஒரு சைவப்பிராணி). பேண்டை கழட்டச் சொல்லாமல் இருந்தால் சரி.

நன்றி

வஜ்ரா said...

//
பன்றி இறைச்சிக்கு தடை என்றால் சீனர்கள் விற்பது சட்ட விரோதமா அல்லது அங்கு மட்டும் அனுமதியா.
//

தடை என்பது உணவு பழக்கவழக்கத்தில் தான். வேண்டி உண்பவர்களுக்குத் தடையேதுமில்லை. விற்பதற்கும் தடையில்லை. கோஷர் சர்டிபிகேட் கிடக்கவேண்டும் என்றால் அது முடியாது.

இஸ்ரேல் ஒரு யூத நாடு என்றாலும், ஜனநாயக நாடு. இங்கே இதற்கு தடையேதுமில்லை.

//
இங்கு கோஷர் இறைச்சியில் தயாரிப்பிலும் விதிமுறைகள் உண்டா?
//

ஆம், உண்டு.

கோஷர் எனபது இரைச்சிக்கு மட்டுமல்ல. பாப்கார்ன் வாங்கினால் கூட உண்டு.

//
பேண்டை கழட்டச் சொல்லாமல் இருந்தால் சரி.
//

பேண்டை கழற்றினால் யூதருக்கும், இஸ்லாமியருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்கள் மதத்திலும் அது உண்டு.

என்ன, 13 வயதில் செய்யாமல், பிறந்த ஒரு வாரத்தில் செய்வார்கள்.

நன்றி

வஜ்ரா said...

நன்றி சிறில் அலெக்ஸ், மற்றும் சமுத்ரா,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

சமுத்ரா,

ஒரு சில மெக்டொனால்டில்தான் அது கிடைக்காது...எல்லா மெக் டொனாட்ஸிலும் அல்ல.

தாராளமாக வரலாம். சமுத்ராவுக்கு சீஸ் பர்கர் கிடைக்கும்.

வஜ்ரா said...

//
தெடி ரொம்ப கரெக்ட்டான இடத்துல வச்சீங்களே ஆப்பு!
//

நன்றி...இந்த ஊக்கத்திற்கு.

அவர்கள் எனக்கு வைத்திருக்கும் புதிய பெயர் "வக்கிர பஞ்சர்"

Hariharan # 03985177737685368452 said...

பெரும்பாலும் இஸ்ரேல் என்றாலே BBCல் காட்டப்படும் டெல் அவிவ், Haifa, Netanya நகரங்களில் நிகழ்த்தப்படும் பேருந்து குண்டு வெடிப்புகள், இதர ரத்தச் சகதியான காட்சிகள், விரையும் ஆம்புலன்ஸ் என்றறிந்திருந்தற்கு வித்தியாசமான "அமைதியான" காட்சிகள்

வஜ்ரா said...

ஹரிஹரன் அவர்களே,

இந்த படங்காட்றேன்...தொடரில் முந்தய பதிவுகளையும் பாருங்கள்.

முந்தய படங்கள் link 1, link 2, link 3

மற்றபடி, BBCயில் பார்க்கும் இஸ்ரேலும், நேரில் பார்க்கும் இஸ்ரேலும் முற்றிலும் வெவ்வேறு விதமாக இருக்கிறது என்பது என் கருத்து.

கடந்த 2-3 ஆண்டுகளாக அமைதி நிலை திரும்பி இருக்கிறது. ஆனால், சில நாட்களாக சற்றே போருக்குறிய அரிகுறிகள் தென்படுகின்றன. ஹமாஸ் தலமையிலான பாலஸ்தீன அரசு இஸ்ரேலிய படைவீரர்களைக் கடத்திய தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுவதும் அதன் காரணம்.

கார்த்திக் பிரபு said...

nalla padad katureenga pa

Unknown said...

ஷங்கர்

இஸ்ரேல் கலாச்சாரம் பற்றி அதிகம் அறிந்திராத எனக்கு பயனுள்ளதாக இந்த தொடர் இருக்கிறது.சந்தையியல் மாணவன் என்ற முறையிலும் பல கலாச்சாரங்களை அறிவது மிக பயன் தருகிறது

நன்றி

Hariharan # 03985177737685368452 said...

ஷங்கர்,

இணைப்பு 1,2,3 வழியாக தங்களது முந்தைய "படங்காட்டலை" கண்டுகளித்தேன். புதிய இன்ஸைட் இன்போ.

தற்போது சில நாட்களாக நிலவிவரும் போர்ச்சூழல் BBC மூலம் அறிகிறேன். பத்திரமாக, பாதுகாப்பாக இருக்கவும்.